Sign in to follow this  
ampanai

தனிருசி கொண்ட பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு

Recommended Posts

Dkn_Tamil_News_2019_Aug__400448024272919.jpg

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும். ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் 29வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம். புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தத்தம் முருகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொருளையும் இதில் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி கோரி, பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று ஜியாகரபிகல் இன்டிகேசன்ஸ் அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518022

 

புவிசார் குறியீடு?

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும்.

இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். 

https://ta.wikipedia.org/wiki/இந்திய_புவிசார்_குறியீடு

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • சவேந்திர சில்வா பற்றியும் அவர் செய்த கொலைகளை பட்டியல் இட்டதும்  ஹான்சட்டில் இதை பதிந்தன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு தார்மீக கடமையை செய்துள்ளார். 
    • நல்லது பொடியா நான் இங்கு ஓர் சிறிய அரச வேலையில் இருக்கிறன் நான் சும்மா பகிடிக்கு கேட்டது வரவா என முந்தய காலத்தில் ஐரோப்பா வருகிற ஐடியா இருந்தது திருமணம் ஆன பிறகு இல்லை நான் இங்கே இருக்க விரும்புகிறேன் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் 🙏   தற்போது இல்லை பையா நன்றிடா
    • 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 10:00   இந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான நீர் ஒப்பந்தத்தின் சரத்துக்களின் கீழ், குறிப்பிட்ட மட்டத்தை தாண்டியவுடன் மேலதிக தண்ணீர் வெளியேற்றத்தை நேற்று முன்தினமிரவு பாகிஸ்தானுக்கு அறிவித்ததாகக் கூறியுள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சுட்லெய் ஆற்றிலிருந்து எதிர்பாரதவிதமாக நீரை விடுவித்தமையானது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே நீண்ட காலமாகவிருக்கும் நீர் ஒப்பந்தத்தை மீறும் இந்தியாவின் முயற்சியொன்றின் அங்கமென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இராஜதந்திர ரீதியாக இந்தியா பாகிஸ்தான தனிமைப்படுத்த முயல்வதாகவும், பொருளாதாரத்தை சிதைக்க முயல்வதாகவும், நீர் வளங்களை சிதைக்க முயல்வதாகவும் தெரிவித்த பாகிஸ்தானின் நீர் மற்றும் சக்தி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் முஸம்மில் ஹுஸைன், பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனத்தில் நீர் தாக்கம் செலுத்துவதாகக் கூறியுள்ளார். இந்தியாவுக்கு, பாகிஸ்தானும் உரிமை கோரும் காஷ்மிர் பிராந்தியத்தின் தமது பகுதியிலுள்ள பிராந்தியத்தின் சிறப்புரிமையை நீக்கும் இந்தியாவின் முடிவைத் தொடர்ந்து ஏற்கெனவே கொதிகளமாகவுள்ள அயல் நாடுகளான இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த இந்தியாவின் முடிவுக்கு கோபமாகப் பதிலளித்த பாகிஸ்தான், போக்குவரத்து, வர்த்தகத் தொடர்புகளைத் துண்டித்ததுடன், இந்தியாவின் தூதுவரையும் வெளியேற்றிருந்தது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இந்தியாவும்-பாகிஸ்தானும்-முரண்படுகின்றன/50-237075   விமானி அபிநந்தனை சித்ரவதை செய்த பாகிஸ்தான் வீரர் சுட்டுக் கொலை! ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில், பிப்ரவரி 14-ம் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில், 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில், இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோர கிராமத்தில் கீழே விழுந்துள்ளது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைதுசெய்தது. அப்போது, விமானி அபிநந்தனிடம் பாகிஸ்தான் கமாண்டோ அஹமத் கான் விசாரணை நடத்தினார். மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு வகையில் அவரை சித்ரவதை செய்தனர். இதையடுத்து, உலக நாடுகளின் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விமானி அபிநந்தனை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. இந்த நிலையில், அபிநந்தனை சித்ரவதைசெய்த பாகிஸ்தான் கமாண்டோ அஹமத் கான், இந்திய ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லபட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டிய நாக்யால் என்ற பகுதிக்குள் ஊடுருவ முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். பாகிஸ்தான் வசம் இந்திய விமானி அபிநந்தன் சிக்கிக்கொண்டபோது, புகைப்படம் ஒன்று வெளியானது. அதில், அபிநந்தனுக்குப் பின்புறமாக அவர் நின்றுகொண்டிருந்தார். https://www.vikatan.com/news/india/pakistani-commando-who-captured-and-tortured-abhinandan-killed-by-indian-army-along-loc   காஷ்மீர் விஷயத்தில் அடங்காத பாகிஸ்தான்! இந்தியாவுக்கு எதிராக அடுத்த நடவடிக்கையில் இறங்கியது   இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செய்யும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. இந்தியா | Edited by Musthak (with inputs from Reuters) | Updated: August 20, 2019 21:57 IST   ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடும் அப்செட்டில் இருக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீர் தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டு நாசம் செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வந்தது. அத்துடன் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி தொந்தரவும் கொடுத்தது. இந்த நிலையில் கடந்த 5-ம்தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், அதனை காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக அமைக்கவும் அறிவிப்பு செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் ஐ.நா. சபையில் இந்த விவகாரத்தை கொண்டு சென்றது. அங்கு பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில் சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இந்தியா காப்பாற்றி வருகிறது. இதைப் போன்று சர்வதேச நீதிமன்றத்தை அணுக பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ndtv.com/tamil/kashmir-issue-pakistan-to-approach-world-court-against-indias-move-on-kashmir-reports-2087978?pfrom=home-topscroll   காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.,வுக்கு கொண்டு சென்ற பாகிஸ்தானுக்கு அங்கு மூக்குடைப்பே மிஞ்சியது. இந்நிலையில், இந்த விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்தில், முறையிட போவதாக, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா மெஹ்மூத் குரேஷி, தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2348941
    • டென்மார்க் மறுத்தால் கனடா பக்கம் உள்ள சில தீவுகளை வாங்கலாம் என்கிற யோசனையும் உள்ளதாம்  🙂  கூட்டமைப்பினரும் தமிழீழத்தில் உள்ள தீவை எடுத்துக்கொண்டு .... என ஒரு 'டீலை' போட்டு பார்க்கலாம் 🙄
    • தலைமை என்பது பல குணாதிசயங்களை உள்ளடக்கியது.  ஆளுமை அதில் முக்கியம் பெறுகின்றது. மேலும், நேரம் : எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் மற்றும் எதை செய்யக்கூடாது என்பது  அதைவிட முக்கியமாகின்றது. அடுத்து, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்திடும் தன்மை, தன்னை சுற்றி இருக்கும் ஆதரவாளர்கள் பற்றிய சரியான கணிப்பு என்பனவற்றையும் கூறலாம்.  சம்பந்தர் ஐயாவிடம் நிறைய அனுபவம் உள்ளது.   ஆனால் மக்கள் எதிர்பார்ப்புக்கள் பல நிறைவேறாமலும் அநாதைகள் போன்ற உணர்வும் உள்ளது. தன்னால் முடியாவிட்டால், முடியாததை செய்யக்கூடிய அடுத்த தலைமுறை தலைவர்களை இனம்கண்டு  அவர்களுடன் சில காலம் பயணிக்க வேண்டும். அப்பொழுது தான் அரசியல் தலைமை பூரணமடையும்.