Jump to content

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார் இராணுவ தளபதி


Recommended Posts

யாழ் விஐயம் மேற்கொண்டுள்ள இரானுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நல்லூர்க்கந்தன் ஆலய உற்வசகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.

இதன் போது இராணுவத்தளபதியுடன் யாழ் மாவட்ட இராணுவ தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட இராணுவத்  தளபதி ஆலயத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தார்

நல்லூரிற்கான வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை நாளையத்தினம் பிரதமரின் வருகையை முன்னிட்டு தொடர்ந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2a4f9266-9897-46ec-a674-c6191cc01994.JPG

 

7f0e1da5-abcf-41ec-ae7a-ec9ca018da7a.JPG

a258b3ff-59b3-4221-96c7-d456ee451d54.JPGஇரானுவத் தளபதியின் ff7f973c-3d8e-4078-9976-a61344c63fca.JPG

https://www.virakesari.lk/article/62615

Link to comment
Share on other sites

அரக்கர்கள் அங்கை போனாலும் முருகன் தலை கொய்யிற வேலையை விடமாட்டார்! 

Link to comment
Share on other sites

26 minutes ago, ampanai said:

நல்லூரில் தற்போதுள்ள பாதுகாப்புச் சோதனைகள் கடுமையாக உள்ளது. தங்களிடம் எதுவும் இல்லை என்று காட்டவே மேலங்கியை கழற்றியுள்ளனர், பக்தியாலல்ல. 😯 

இரானுவத் தளபதி மகேசு சேனாநாயக்காவின் தொப்புள் மறைந்து தெரிகிறது. அதற்குள் என்னத்தை மறைத்துக் கொண்டுசென்றாரோ...?? 😲

Link to comment
Share on other sites

’பாதுகாப்பு கெடுபிடிக்கு பயங்கரவாத தாக்குதலே காரணம்’

மக்களின் பாதுகாப்புக்காகவே முப்படையினரும் செயற்பட்டு வருவதுடன், மக்களுக்கு இடையூறு விளைவிக்க அல்ல என, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, தெரிவித்தார்.

நல்லூர்க் கந்தன் ஆலய உற்வச கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை அங்கு சென்றிருந்த நிலையில், பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.

மக்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி, பாதுகாப்பினை வழங்குவதற்கு முப்படையும்  நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை சற்று அதிகமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது என, சுட்டிக்காட்டிய இராணுவ தளபதி, பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபடவேண்டும் என்பதுதான் பாதுகாப்பு படையினரின் நோக்கம் என்றும் கூறினார்.

இதேவேளை, பாதுகாப்பு தொடர்பாக போதியளவு தெளிவுப்பெற்றுள்ள பாதுகாப்பு துறையினர் தமது கடமையை சரிவர நிறைவேற்ற இடமளிக்குமாறும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கேட்டுக்கொண்டார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பாதுகாப்பு-கெடுபிடிக்கு-பயங்கரவாத-தாக்குதலே-காரணம்/150-236755

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.