Jump to content

‘தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பு பின்நிற்காது’

Recommended Posts

image_b5c2102690.jpg

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது நாட்டுக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியமில்லை எனத் தெரிவித்த அவர், புதிய அரசமைப்பே தேவை. இதனைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் துணிச்சல் இல்லையெனக் குற்றஞ்சாட்டினார்.  

அம்பாறை, திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பின் போதே, இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சிங்கள, முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் கொண்டு, நாட்டில் சண்டையிட்டுக் கொண்டு தமிழ் மக்கள் வாழ விரும்பவில்லை எனவும் இன நல்லிணக்கத்துடன்தான் வாழ்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பதைத் தவிர, தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு எதையும் செய்யவில்லை எனப் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை அப்பட்டமான பொய் எனவும் அவர் தெரிவித்தார்.  

80 சதவீதமான காணி விடுவிப்பு, ஒரு தொகுதி அரசியல் கைதிகளின் விடுவிப்பு, தமிழ்ப் பிரதேச அபிவிருத்திகள், புதிய அரசமைப்புக்கான பேச்சுகள் எனப் பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் எனவும், சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

மேலும், புதிய அரசமைப்பை உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் பின்நிற்கின்றார்கள் எனவும் இதனை நிறைவேற்றிவிட்டால் எங்கே தேர்தலில் தோற்றுவிடுவோம் என அவர்கள் அச்சுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/அம்பாறை/தமிழ்-மக்களின்-தீர்வு-விடயத்தில்-கூட்டமைப்பு-பின்நிற்காது/74-236723

Link to comment
Share on other sites

56 minutes ago, ampanai said:

மேலும், புதிய அரசமைப்பை உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் பின்நிற்கின்றார்கள் எனவும் இதனை நிறைவேற்றிவிட்டால் எங்கே தேர்தலில் தோற்றுவிடுவோம் என அவர்கள் அச்சுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கூற்றை நம்ப முடியாமல் உள்ளது. இது பற்றி வேறு யாரும் பேசினார்களா என தெரியவில்லை.

58 minutes ago, ampanai said:

80 சதவீதமான காணி விடுவிப்பு, ஒரு தொகுதி அரசியல் கைதிகளின் விடுவிப்பு, தமிழ்ப் பிரதேச அபிவிருத்திகள், புதிய அரசமைப்புக்கான பேச்சுகள் எனப் பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் எனவும், சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

காணி விடயத்தில் வீதத்தை கூறியவர் ஏன் அரசியல் கைதிகளின் விபரத்தை தருகிறார் இல்லை?

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இங்கே சில சொற்களைக் காணவில்லை. அதனால் செய்தி பிழையாகிவிட்டது/

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழினக் கொலைகாரர்களின் பின்னால் தான் நிற்கும் என்று சுத்துதுமாத்து சுமந்திரன் கூறியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வரும் நேரம் என்றால் 
இனி சின்னராசுவை கையிலேயே பிடிக்க முடியாது.
ஒரே தீர்வுதான் .... தமிழர்கள் போதும் போதும் என்றாலும் 
சின்ராசு விடமாட்டான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

உங்களத்தான் நம்புது இந்த பூமி..

இனி எங்களுக்கு நல்ல வழி காமி..!

👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.