Jump to content

செஞ்சோலை நினைவு தூபி அங்குரார்ப்பணம்


Recommended Posts

செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவான நிர்மாணக்கப்பட்ட நினைவுத் தூபி, பல்வேறு தடைகளுக்கு மத்தியில், இன்று (14) திறக்கப்பட்டது.

image_92c3a5f541.jpg

குறித்த நினைவுத் தூபியில், படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பொறிக்கவும் அவர்களுடைய பெயர்களை எழுதவும் தடைவிதித்திருந்த பொலிஸார், நினைவுத் தூபியை மட்டும் நிர்மாணிக்க அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், இன்று (14) குறித்த நினைவுத் தூபியில், நிரந்தரமாக மாணவர்களுடைய புகைப்படங்களை பதிக்க முடியாவிட்டாலும், தற்காலிகமாக மாணவர்களுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்டும் “செஞ்சோலை வளாக வீதி” என எழுதப்பட்ட நிலையிலும், குறித்த நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிவமோகன் உள்ளிட்டவர்கள் இணைந்து, நினைவுத் தூபியை திறந்து வைத்தனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/செஞ்சோலை-நினைவு-தூபி-அங்குரார்ப்பணம்/72-236732

Link to comment
Share on other sites

செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவேந்தல்

image_ddc722cab1.jpg

செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. 

இதன்போது, உயிரிழந்த மாணவிகள் நினைவுகூறப்பட்டதுடன், சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

image_33fa634a4f.jpgimage_672ac2ef62.jpgimage_9d470dbcd1.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/செஞ்சோலை-மாணவிகள்-படுகொலை-நினைவேந்தல்/46-236717

 

 

Link to comment
Share on other sites

55 minutes ago, ampanai said:

குறித்த நினைவுத் தூபியில், படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பொறிக்கவும் அவர்களுடைய பெயர்களை எழுதவும் தடைவிதித்திருந்த பொலிஸார், நினைவுத் தூபியை மட்டும் நிர்மாணிக்க அனுமதி வழங்கியிருந்தனர்.

பெயர்களும் புகைப்படங்களும் இல்லாமல் தூபி? ஏன்?

இதற்கு காரணம் சட்டமா? அதாவது, இவர்களின் படுகொலையை அரசே செய்தது என்பதற்கு இது ஆதாரமாகி விடும் என்ற பயமா?

இல்லை நாளை வேறு ஒரு அடையாள சின்னமாக மாற்றிவிட முயலும் வஞ்சகமா?    

Link to comment
Share on other sites

செஞ்சோலை படுகொலையின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில், அதன் அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில், இன்று (14) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டு, ஈகைச்சுடர் ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தினர்.

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நினைவேந்தல்/46-236742

image_a7e54bba5a.jpg

image_3b06a8dfcf.jpg

image_5638e312a0.jpg

Link to comment
Share on other sites

உலகத்தமிழர்கள்  தங்கள் குடும்பத்துடன் தாயகம் செல்லும்பொழுது இப்படியான இடங்களளையும் தாங்கள் தரிசிக்கும் பட்டியலில் இணைக்கவேண்டும் 

இப்படியான ஒரு பட்டியலை கூட ஒருவர் உருவாக்கி ஒரு தளம் அமைக்கலாம். 
 

Link to comment
Share on other sites

இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியலாகும்.😂 

 

மேலே குறிப்பிட்டதுபோல் தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களில்: நல்லவர்கள், வல்லவர்கள், கேடுகெட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது தமிழர்களின் சிறப்பியலாகும்.😲

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.