Sign in to follow this  
ampanai

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் நெருக்கடிக்குள் ஐ.தே.க

Recommended Posts

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் நெருக்கடியை சந்தித்துள்ளன. 

வேட்பாளரை அறிவித்த பின்னர் தான் கூட்டணி குறித்து பேசப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பலர் குரலெழுப்ப கூட்டணிக்கான பங்காளி கட்சிகள் அதற்கு எதிரான நிலைப்பட்டில் செயற்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையடலின் போதும் கடும் வாதபிரதிவாதங்களே ஏற்பட்டுள்ளது. எனவே 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை அலரி மாளிகையில் கூட்டணிக்கான பங்காளி கட்சிகளின் தலைவர்கள் , ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இச் சந்திப்பில் கலந்துக்கொள்ளவுள்ளார். பொது இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வழங்க தயாராகவே தான் உள்ளதாக செவ்வாய்க்கிழமை சந்திப்பின் போது வெளிப்படையாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/62655

கட்சியில் பெரும்பான்மை ஆதரவு உள்ளவரே ஜனாதிபதி வேட்பாளர் - கபீர் ஹாசீம்

வெகு விரைவில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார். இப்போதே கட்சியின் அதிக பெரும்பான்மை ஆதரவு தெரிவிக்கும்  நபர் குறித்தே அக்கறை செலுத்தி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர்  அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார். 

கட்சியின் ஏகமனதான நிலைப்பாடுகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் நிலைப்பாட்டை புறக்கணித்து மாற்று அணியினை உருவாக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்ற கட்சியின் ஏகோபித்த நிலைப்பாடாக உள்ள நிலையில் கட்சியின் தலைமைத்துவம்  இன்னமும் எந்தவித கருத்துக்களும் முன்வைக்கவில்லை.  இந்நிலையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான கபீர் ஹசீமிடம் இது குறித்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

https://www.virakesari.lk/article/62660

Share this post


Link to post
Share on other sites

People in the north should be mindful when using their mandate: PM

People in the North should not give their mandate to those who completely neglected the area even though they ruled the country for five years after the war, Prime Minister Ranil Wickremesinghe said today.

Prime Minister who was speaking during the opening of the new accident ward in Vavuniya General Hospital said the people in the North should choose those who safeguarded their dignity and brought development to the area during the last four years.

“We have allocated Rs 20.5 billion for the development of Vavuniya alone. This amount does not include the amount that has been allocated to the nearest school is the best school programme. The previous regime completely neglected the North even though it ruled the country for five years since the completion of the war,” the Prime Minister said.

http://www.dailymirror.lk/top_story/People-in-the-north-should-be-mindful-when-using-their-mandate:-PM/155-172832

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எவரொருவர் இன்டர்நெட் இனுள் நுழைந்த கணத்தில் இருந்து அவரது செயல்பாடுகள் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது.  விடயம் தெரிந்த வேறு எவரொருவராலும் இந்த செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள  முடியும். பலான விடயங்களை தேடும் போது  ஆகக் குறைந்தது உங்கள் கணனியின் கமெராவையாவது  மறைத்து விடுங்கள்.  இல்லாவிடில் நீங்கள் தேடுவதை உங்கள் கணனியின் காமராவிலேயே படம் பிடித்து உங்களுக்கே அனுப்பி - நீங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வளைத்த தள விபரங்கள் உட்பட - பயமுறுத்தல் செய்தி அனுப்புவார்கள்;   கப்ப அழைப்பு கூட வரும்.  ,கவனிக்க விட்டால் கணணியை பிரீஸ் பண்ணி விடுவார்கள். un-freeze   பண்ணுவதற்கு கணனியின் root- டிரேக்டரி க்கு போய் சில கோப்புகளை சில விநாடித் துளிகள் அவகாசத்தில்  கொல்ல வேண்டியிருக்கும். அப்பாவி மனிதர்களுக்கு இந்த உலகத்தில்  தான் எவ்வளவு பிரச்சனைகள் ….  
    • கா  ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது!   பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/?fbclid=IwAR2EJ2kURzi8R0cktvyidX0iW4ah0E3Uvc7hYkLG-mg2tUddawwFRCtGVTI
    • மிண்டும் இந்த சிறுவன் இன்றும் கார் ஓடி விபத்துக்கு உள்ளனதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன
    • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...