Jump to content

மோடி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் - கடுமையாக சாடிய இம்ரான் கான்


Recommended Posts

காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மோடி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இம்ரான் கான், 

பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் ஏற்படுத்த நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு பதிலடி தருவோம்.

18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இனஅழிப்பு இனி நடக்காது என்று கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்கிறது.

ஹிட்லருக்கு இருந்த அகங்காரமும், நரேந்திர மோடியின் அகங்காரத்துக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், ஹிட்லர் அழிக்கப்பட்டார் என வரலாறு சொல்கிறது. நெப்போலியன் அழிக்கப்பட்டார். போர் என்பது தீர்வல்ல. அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் நீதிபதிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஊடகங்கள் முடக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அஞ்சுகிறார்கள்.

இந்த முடிவால் அதிக அழிவு இந்தியாவுக்கே. அரசமைப்பை சேதப்படுத்தி உச்சநீதிமன்ற மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும்போது, அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும்.

இந்திய அமைச்சர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் தீவிரவாத மனநிலையை. பாபர் மசூதி சம்பவம், முஸ்லிம்களை கொல்வது, காஷ்மீரில் செய்யும் அட்டூழியங்கள் என ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம் இந்தியாவில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

தற்போது காஷ்மீருக்கு மோடி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது எனறும் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/62662

Link to comment
Share on other sites

’முட்டுக்கட்டையான சங்கிலி அறுந்தது’

ஜம்மு - காஷ்மிர் மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்காட்டையாக இருந்த சங்கிலி உடைந்து விழுந்துவிட்டது என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காஷ்மிர் குறித்த முடிவில் எதிர்ப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

தயவு செய்து காஷ்மிர் பற்றிய முடிவுகளை எதிர்த்த நபர்களின் பட்டியலைப் பார்க்குமாறு கோரினார்.

குடும்ப அரசியல்வாதிகள், பயங்கரவாதத்துக்கு அனுதாபம் காட்டுபவர்கள், சுய நல குழுக்கள் ஆகியோரே, தனது அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

அரசியல் பாகுபடின்றி இந்திய மக்கள் இந்த முடிவைப் பாராட்டியுள்ளனர் என்றும் அவசியமானது, ஆனால் சாத்தியமற்றது என்று மக்கள் கருதியவை தற்போது மெய்யாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

370ஆவது, 35 ஏ பிரிவால் மக்களின் வளர்ச்சி தடைபட்டிருந்தது என்றும் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலி உடைந்து விழுந்தன என்றும் கூறியுள்ளார்.

இனி, மக்கள் தங்களின் நோக்கத்தை தானே வடிவமைப்பார்கள் என்றும் இனி அவர்களுக்கு வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பை வழங்குவோம் என்றும் கூறிய அவர், லடாக், ஜம்மு காஷ்மிரிலுள்ள தனது சகோதர, சகோதரிகள் சிறப்பான எதிர்காலத்தை விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.

அதன்பிரகாரம், ஜம்மு-காஷ்மிரில் தேர்தல் நடைபெறும்; தங்கள் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுக்க முடியும் என்பதை , ஜம்மு-காஷ்மிர் மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/முட்டுக்கட்டையான-சங்கிலி-அறுந்தது/50-236751

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கான்: "இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது"

இம்ரான்படத்தின் காப்புரிமைAAMIR QURESHI

இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறார் என்றும், மோதி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் சாடினார்.

மேலும், "நான் நரேந்திர மோதிக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் மூட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு அதிகமாக பதிலடி தருவோம்," என்றார்.

தற்போது காஷ்மீருக்கு மோதி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது என்றும் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்

'ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும் நாஜிக்களின் சித்தாந்தமும் ஒன்று'

தொடர்ந்து பேசிய அவர், "18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும்" என்று எச்சரித்தார்.

ஆர்எஸ்எஸ்ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இனஅழிப்பு இனி நடக்காது என்று கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

ஹிட்லரின் ஆணவப் போக்கிற்கும், நரேந்திர மோதியின் ஆணவப் போக்கிற்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், ஹிட்லர் அழிக்கப்பட்டார் என வரலாறு சொல்கிறது. நெப்போலியன் அழிக்கப்பட்டார். போர் என்பது தீர்வல்ல. அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும்," என்றார்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியை கொன்றது என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார்.

'அழிவு இந்தியாவுக்கே...'

”இந்தியாவில் நீதிபதிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஊடகங்கள் முடக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அஞ்சுகிறார்கள்.

இந்த முடிவால் அதிக அழிவு இந்தியாவுக்கே. அரசமைப்பை சேதப்படுத்தி உச்சநீதிமன்ற மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும்போது, அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும்.

இந்திய அமைச்சர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் தீவிரவாத மனநிலையை கொண்டிருக்கிறார்கள்." என்று அவர் விமர்சித்தார்.

பாபர் மசூதி சம்பவம், முஸ்லிம்களை கொல்வது, காஷ்மீரில் செய்யும் அட்டூழியங்கள் என ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தம் இந்தியாவில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது காஷ்மீருக்கு மோதி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது எனறும் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

'பாகிஸ்தான் அனைத்துக்கும் தயாராக இருக்கிறது'

"நாங்கள் இருக்கும் சூழலை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். பாகிஸ்தான் அனைத்திற்கும் தயாரா இருக்கறிது, எங்கள் ராணுவம், எங்கள் மக்கள் அனைவரும் ஒரே எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறார்கள், எந்த அத்துமீறலையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்."

https://www.bbc.com/tamil/global-49346602

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்கு  சண்டை தொடங்கினாலும் மோடிக்கு வலிக்காது  சண்டையில் அதிகமாய் முன் நின்று மடிவது தென்னிந்தியர்களும் சிங்கு களும் தான் கிந்தியர்கள் எப்போதும் பின்னுக்குத்தான் நிப்பார்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.