• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி - பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Recommended Posts

அர­சாங்­கத்­தினால் சிறந்த ஆட்சி நிர்­வாகம் மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை உள்­ளிட்­ட­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு குறிப்­பி­டத்­தக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்தி இலங்கை மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­வ­தாக பதவி முடிந்து செல்லும் இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் பத­வி­யி­லி­ருந்து விடை­பெ­ற­வுள்ள நிலையில் தொலைக்­காட்சி சேவை­யொன்­றுக்கு வழங்­கிய அவ­ரு­டைய இறுதி நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

 சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்கம் போன்ற விட­யங்­களில் அர­சாங்­கத்­தினால் சில முன்­னேற்­ற­க­ர­மான நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன என்று குறிப்­பிட்ட அவர், தகவல் அறியும் உரி­மையை அடிப்­படை உரி­மை­யாக்­கு­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பில் மேற்­கொள்­ளப்­பட்ட மாற்­றங்­களைச் சுட்­டிக்­காட்­டினார்.

மேலும் உயிர்த்த ஞாயி­று ­தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட உயர்ஸ்­தா­னிகர், தற்­போ­தைய நவீன பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொள்­வ­தற்கு சர்­வ­தே­சத்­துடன் இணைந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அத­ன­டிப்­ப­டையில் தம்­மி­ட­முள்ள புல­னாய்வுத் தக­வல்­களை பரஸ்­பரம் பரி­மா­றிக்­கொள்­ளத்­தக்க வகையில் நாட்­டிற்குள் வெவ்­வேறு புல­னாய்வு முகவர் நிலை­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­ட­மைப்பு மாற்­றங்கள் குறித்தும் வலி­யு­றுத்­தினார்.

அத்­தோடு உரிய தரு­ணத்தில் தேர்தல்களை நடத்துவது நாடொன்றின் ஜனநாயக செயற்பாட்டில் முக்கியமான விடயமாகும் எனக் கூறிய ஜேம்ஸ் டோரிஸ், மாகாணசபைத் தேர்தல்கள் தாமதிக்கப்படுகின்றமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/62611

Share this post


Link to post
Share on other sites

கடைசியாக இலங்கையை ஆண்டு அதை சிங்களவர்களிடம் ஒற்றையாட்சி முறையில் சிறுபான்மை மக்களின் அழிவிற்கு வித்திட்டது பிரித்தானியா. தொடரும் இனவழிப்பிற்கு அவர்களும் ஒரு காரணம்.

இலங்கையில், குறிப்பாக தமிழர் தாயகத்தில் நடப்பது ஒரு இராணுவ ஆட்சி. அதை இவர் குறிப்பிடாதது அவரும் இதற்கு உடந்தை என  பார்க்கப்படுகின்றார்.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this