Sign in to follow this  
ampanai

பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் வளர்ந்த நாடுகள்: உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது...டிரம்ப் பேட்டி

Recommended Posts

இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலக  வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளது. அதாவது 2017-ம் ஆண்டு பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்த இந்தியா 2018 பட்டியலின் படி 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018 பட்டியலின் படி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பாக 20.5 ட்ரில்லியன் டாலர்களை கொண்ட அமெரிக்கா  முதலிடத்தில் உள்ளது. 13.6 ட்ரில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 ட்ரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளது. 2.7 ட்ரில்லியன் டாலர்களுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

ஆனால், பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கணிப்பின்படி, 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய  பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா  ஆகியவை இனியும் வளரும் நாடுகள் அல்ல. அதனை கூறிக்கொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது.
 

ஆனால், இரண்டு நாடுகளும், வளரும் நாடுகள் எனக்கூறிக்கொண்டு, சலுகைகளை அனுபவித்து வருகின்றன. இதனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றன. உலக வர்த்தக மையம், அமெரிக்காவை சமமாக நடத்த வேண்டும்.  இந்தியா, சீனாவை வளர்ந்த நாடுகளாக பார்க்க வேண்டும். இந்த இரண்டு நாடுகளும் உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது. அவர் கூறினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518138

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கூட்டமைப்பு யார்,, இந்தியாவின் நிகழ்சித்திட்டத்தை செயற்படுத்தும் அவர்களது கைக்கூலிகள் அவர்களது ஆயிரமாயிரம் வெளிவராத இரகசியங்கள் இந்தியாவிடம் இருக்கலாம் அதை வைத்து அவர்களை இந்தியா தங்களுக்குச் சாதகமான காரியத்தைச் சாதிக்கலாம். இந்தியாவைப் புறமொதுக்குதல் என்பது கூட்டமைப்பையும் சேர்த்தே புறமொதுக்குதல் என்பதாகும்.
    • தமிழர்களின் ஆதரவு இல்லாது அரசாங்கம் அமைக்க முயற்சி செய்யுங்கள் என்று இந்தியாவும் ஆலோசனை கொடுத்திருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. அந்த கிந்தியனின் கைப்பொம்மையாக இருந்து தன் இனத்தையே காவுகொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப். தானும் அதற்குச் சார்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று அதற்குள் மூக்கை நுளைத்திருக்கிறது. கோத்தபாயாவுக்கு தமிழர்கள் மட்டுமல்ல அனேக சிங்கள மக்களும் வாக்களிக்கமாட்டார்கள் என்பது, இன்றும் சிங்களவரோடு பழகும் தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை.
    • கொச்சியை  பற்றி நிறைய தகவல்கள்.....நன்றி கிருபன்.....!  👍
    • கூட்டமைப்பே இந்தியாவின் கைப்பொம்மையாக உள்ளது இதற்குள் இந்தியாவை புறந்தள்ளுதல் என்பது எப்படி நடக்கும்? 😀 நான் இன்னொரு திரியில் எழுதியிருந்தேன், கூட்டமைப்பு சீனாவுடன் பேச்சு வார்த்தைகளை வைத்துக்கொண்டால் இந்தியா தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச முன்வரலாம் என்று. சீனாவும் எம்மை அழித்த நாடு தான்.
    • அண்ணா , ஜ‌ரோப்பாவில் இருக்கும் குட்டி நாடுக‌ள் அபிவிருத்து அடைஞ்சு முன்னேறிட்டு போராங்க‌ள் ,  இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் / அணுகுண்டு வைச்சு இருப்ப‌து பெருமை இல்லை , பெருத்த‌ ஆவ‌த்து , சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் , இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் / உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் /  சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி /  இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு நான் ப‌தில் அளிக்கிறேன் அண்ணா