Jump to content

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kadancha said:

நீங்கள் எழுதியவை facts.

இதை, நான் எழுதியதற்கு  பதிலாக ஏன் எழுத வேண்டும்?

அதன் மூலம் உங்கள் எண்ணம் என்ன?

ஒரே ஒரு திருத்தம், உத்தியோக பூர்வமாக இந்தியா பிரிந்து.

முன்னர் இணைத்த கட்டுரையில் உள்ளவைதான்.

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

முன்னர் இணைத்த கட்டுரையில் உள்ளவைதான்.

நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையை நீங்கள் சுட்டிக்காட்டும் வரையிலும் நான் காணவில்லை.

லாரா விற்கு அந்த கட்டுரை தெரியுமாயின், அதை சுட்டிக் காட்டி இருக்கலாம்.    

அந்த கட்டுரையின் தொனியிலும் போக்கிலும் , வரலாற்றை பொறுத்தவரை,  இந்திய பாகிஸ்தான் மற்றும் குறிப்பாக, இந்து தேசம், முஸ்லீம் தேசம்   எனும் பிரிவிற்கு முதலே காஸ்மீர் இன் தனி நாட்டு போராட்டம் வலுவற்றதான (1932) ஓர் கருத்தோட்டம் உள்ளது.

இந்திய, பாக்கிஸ்தான், குறிப்பாக, இந்து தேசம், முஸ்லீம் தேசம் எனும் பிரிவின் வரலாறு, ஜின்னாவை மட்டும் கருத்தில் கொண்டால், 1913 ம் ஆண்டே ஆரம்பித்து விட்டது.

ஆயினும்,    இந்திய, பாக்கிஸ்தான்,  இந்து தேசம், முஸ்லீம் தேசம் எனும் பிரிவு 1800 களின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டது.

1947 இல் பிரித்தானியரால், வடிவம் கொடுக்கப்பட்டது.

https://en.wikipedia.org/wiki/Two-nation_theory#Start_of_Muslim_self-awakening_and_identity_movement_(17th_century–1940s)

Link to comment
Share on other sites

On 8/31/2019 at 9:25 PM, Kadancha said:

நீங்கள் எழுதியவை facts.

இதை, நான் எழுதியதற்கு  பதிலாக ஏன் எழுத வேண்டும்?

அதன் மூலம் உங்கள் எண்ணம் என்ன?

காஷ்மீரிகள் ஆரம்பத்தில் முஸ்லிம் என்ற மத அடையாளத்துடன் போராடியது அவர்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதற்காக என நீங்கள் கூறியிருந்தீர்கள். அவர்கள் தமது பிரச்சினைக்காக போராடினார்களே தவிர பாக்கிஸ்தானுடன் இணைவதற்காக இல்லை, அந்நேரம் பாக்கிஸ்தான் என்ற நாடும் இல்லை என கூற வந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2019 at 1:35 AM, Lara said:

காஷ்மீரிகள் ஆரம்பத்தில் முஸ்லிம் என்ற மத அடையாளத்துடன் போராடியது அவர்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதற்காக என நீங்கள் கூறியிருந்தீர்கள். அவர்கள் தமது பிரச்சினைக்காக போராடினார்களே தவிர பாக்கிஸ்தானுடன் இணைவதற்காக இல்லை, அந்நேரம் பாக்கிஸ்தான் என்ற நாடும் இல்லை என கூற வந்தேன்.

நான் சொன்னவற்றை, உங்களின் விளக்கத்தை கொண்டு, நான் கூறியதாக எழுதியுளீர்கள்.

நான் எழுதியதின் எனது விளக்கம், காஸ்மீரிகள் எதற்காக போராடினார்கள் என்பது அல்ல, முதன் முதலில் அவர்கள் போராட்டம் வரித்துக் கொண்ட அடையாளம், காஷ்மீரி முஸ்லீம் அல்லாதவர்களால் எப்படி அதன் யதார்த்தம்  பார்க்கப்பட்டிருக்கும் மற்றும் விளங்கப்பட்டிருக்கும் என்பது.

உண்மை, பாகிஸ்தான் 1932 இல் உத்தியோக பூர்வகமாக இல்லை, ஆனால், இந்து, முஸ்லீம் எனும் பிரிவு, இந்து, முஸ்லீம் தேசமாக வளர்ந்து, இந்தியா என்று அழைக்கப்பபடும் அரசாகவும், பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் தேசமாகவும் முதிர்ச்சி நிலை அடைந்து விட்டது என்பதே உண்மை.

அந்த நேரத்தில், எவராயினும்  மத அடையாலயாளத்தை வரித்துக் கொண்டால், அவர்களின் (கஸ்மெரி முஸ்லிம்கள்) நோக்கம் எதுவாயினும், காஷ்மீரிகள் பாகிஸ்தானியருடன் முஸ்லிமாக இணைவதே என்றே புரியப்பட்டிருக்கும், ஏனெனில், காஷ்மீரின்  பெரும்பான்மை முஸ்லிகள்.

இவையெல்லாவற்றையும் விட்டுவிடுவோம், காஷ்மீர் இந்திய அரசுடன் வெளியாகமாக இணைந்த காஷ்மீர் , பாகிஸ்தான் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்  என்று  ஆகிய பின்,

1) பாகிஸ்தான் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் ஐ, பாகிஸ்தான் அசாட் காஷ்மீர் (அதாவது விடுதலை அடைந்த காஷ்மீர்) என்பதை, ஏன் காஸ்மீர் பள்ளத்தாக்கு நிர்வாகம் ஒரு போதுமே கண்டனம் செய்யவில்லை?

2) நான்  சுருக்கமாக எழுதியபோது தவிர்த்த, கோசான் ஆல் சுட்டிக்காட்டப்பட்ட, Aksai Chin ஐ பாகிஸ்தான் சீனாவிடம் தரை வர்த்த போது (1962 இல் சீனா  ஆக்கிரமித்ததாயினும்), காஷ்மீர் பள்ளத்தாக்கு நிர்வாகம் மௌனம் காத்தது, ஏன்?

3) கோசான் ஆல் சுட்டிக்காட்டப்பட்ட, பாகிஸ்தானால் சீனாவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்ட Trans Karakoram Tract, இதுவும் சீனா இந்த பிரதேசத்தின் வரைபடத்தை  Trans Karakoram Tract உள்ளடக்கி வெளியிட்ட பின்பே பிரச்சனையாக மாறி, 1963 இல் பாகிஸ்தானால் சீனாவிடற்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்திய அரசு இதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. கண்டித்து. காஷ்மீர் பள்ளத்தாக்கு நிர்வாகம், வாயே திறக்கவில்லை.

4) அண்மையில் பாகிஸ்தானால், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு, நேரடி பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் வந்த baltistan. காஷ்மீர் பள்ளத்தாக்கு நிர்வாகம், வாயே திறக்கவில்லை.

முன்பு நான் இவற்றை எழுதவில்லை, ஏனெனில், பிஜேபி எப்படி வரலாற்றை அடிப்படையாக வைத்து காஷ்மீர் பிரச்சனையை அணுகியிருக்கிறது என்பதின் முக்கியத்துவத்தையும், அந்த அணுகுமுறை எவ்வாறு ஈழத்தமிழ் பிரச்னையில் எம்பக்கம், வரலாற்றின் அடிப்படையில் இருக்கும், நியாயத்துக்கு ஒத்து வருகிறது என்பதையும், பிஜேபி எமது பக்க நியாயத்தை (அதுவே நீதியும் கூட, சிங்களவர் மனம் புண்பட்டாலும்) சிங்களத்துக்கு வலியுறுத்தி இருக்கிறது (இது அறிந்த செய்திகளின் படி) என்பதை முக்கியத்துவத்தையும் குறிப்பிடுவதற்காக.

மேலே சொல்லிய 4 அம்சங்களும் அரசியலோடு சார்ந்தவை, காஷ்மீர் பள்ளத்தாக்கு நிர்வாகம் செய்தவையும் (ஆரம்ப இஸ்லாமிய அடையாளம்), செய்யாதவையும் (4 அம்சங்களும்), காஷ்மீர் மீது கிந்தியவிற்கு அரசியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் இருக்கும் பிடியை நிரந்தரமாகி விட்டது, காஷ்மீர் நிர்வாகத்தை விட.

எமக்கும் இது ஒரு விதத்தில் பொருந்தும். புலிகள் ஆயத்தங்களை மௌனித்தார்கள், ஈழத்தமிழரின் இறைமையையோ, நிலபுல ஒருமைப்பாட்டையோ, ஆயுதம் மீதான பிரத்தியேக உரிமையையோ தாம் அழியும் தறுவாயில் கூட ஒருவரிடம் கூட எழுதி கொடுக்கவில்லை.                    

இந்நிலையில், சாம்-சம் அல்லது tna எதாவது சிங்களத்துடன் கதைத்து உப்புச்சப்பற்ற தீர்வு என்று அழைக்கப்படும் ஒன்றிற்கு (அப்படி வரும் என்று நான் எண்ணவில்லை), ஒருமித்த நாடு என்பதன் மூலம், எமது இறைமையை தரை வார்க்காமல், இப்போதைய பிரச்சனைகளான, குடிப்பரம்பல், சிங்கள, முஸ்லீம் நில அபகரிப்பு, மற்றும் வளங்களையும், பொருளாதாரத்தையும் நிர்வகிக்கும் உரிமை, இந்து பெரும்பான்மை பிரதேசம். பௌத்த பெரும்பான்மை பிரதேசம் என்று வருமாயின், அதை பெற்றுக்கொள்வதற்கு  (ஏற்றுக்கொள்வது அல்ல), பிஜேபி ஐ ஆதரிப்பதிலும் தவறு இல்லை என்பதே எனது நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

On 8/31/2019 at 9:25 PM, Kadancha said:

ஒரே ஒரு திருத்தம், உத்தியோக பூர்வமாக இந்தியா பிரிந்து.

உத்தியோகபூர்வமில்லாமல் எப்ப பிரிந்து பாகிஸ்தான் உருவானது என சொல்லுங்கோ பார்ப்பம்.

Link to comment
Share on other sites

On 9/1/2019 at 12:22 AM, Kadancha said:

இந்திய, பாக்கிஸ்தான், குறிப்பாக, இந்து தேசம், முஸ்லீம் தேசம் எனும் பிரிவின் வரலாறு, ஜின்னாவை மட்டும் கருத்தில் கொண்டால், 1913 ம் ஆண்டே ஆரம்பித்து விட்டது.

ஆயினும்,    இந்திய, பாக்கிஸ்தான்,  இந்து தேசம், முஸ்லீம் தேசம் எனும் பிரிவு 1800 களின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டது.

1947 இல் பிரித்தானியரால், வடிவம் கொடுக்கப்பட்டது.

https://en.wikipedia.org/wiki/Two-nation_theory#Start_of_Muslim_self-awakening_and_identity_movement_(17th_century–1940s)

பாகிஸ்தான் உருவான வரலாறும் தெரியாது, ஜின்னாவின் வரலாறும் தெரியாது. நல்லவேளை 1800 களில் காஷ்மீரில் போராடிய மக்கள் பாகிஸ்தானில் இணைவதற்காக என சொல்லாமல் விட்டீர்கள். 🤣

ஜின்னா 1906 இல் காங்கிரஸில் இணைந்தவர். 1913 இல் அகில இந்திய முஸ்லிம் லீக்கில் உறுப்பினராக இணைந்தாரே தவிர அன்று தனிநாடும் கேட்கவில்லை, இருதேச கோட்பாட்டையும் கையில் எடுக்கவில்லை. முஸ்லிம்களுக்கு உரிமைகளை கேட்டார், இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக கதைத்தார். 1916 இல் லக்னோ ஒப்பந்தம் மூலம் காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக, இந்திய விடுதலைக்காக ஒன்றாக போராடுவதாகவும் முடிவெடுத்தார்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Lucknow_Pact

அத்துடன் இருதேசம் என்றால் அதை இரு நாடுகள் என கொள்ள வேண்டியதில்லை. ஒரு நாடு இரு தேசம் எனவும் கொள்ளலாம்.

காந்தி, நேரு, காங்கிரஸ், இந்தித்துவவாதிகளின் போக்கு தான் பின்னைய நாட்களில் ஜின்னாவை இருதேச கோட்பாட்டை கையில் எடுக்க வைத்தது. 

ஜின்னா விரும்பியது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதிகளை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவினுள் கூட்டாட்சி முறையில் மாகாணங்கள் அதிக அதிகாரங்களை கொண்டு சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பது.

ஆனால் நேரு விரும்பியது மத்தியில் அதிகாரம் குவிந்திருக்க வேண்டும் என்பது. அது கூட்டாட்சி போலல்லாமல் ஒற்றையாட்சி முறை போன்றது. இங்கு தான் பிரச்சினை உருவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

உத்தியோகபூர்வமில்லாமல் எப்ப பிரிந்து பாகிஸ்தான் உருவானது என சொல்லுங்கோ பார்ப்பம்.

தேசம் என்பதின் தோற்றத்தை ஒரு போதுமே திகதிகளில் வரையறுக்க முடியாது.

ஆயினும், பிரிவு என்பது, உத்தியோகபூர்வமாக (வேண்டுமாயின்), 1907 - 1932 இற்கு இடையில் பிரித்தானிய நிர்வாகத்தினால் ஏறத்தாழ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

இதை  https://en.wikipedia.org/wiki/Two-nation_theory#Start_of_Muslim_self-awakening_and_identity_movement_(17th_century–1940s) என்பதில் தெளிவாக காணலாம்.

முக்கியமாக, இந்தியா என்பதை தேசமாக பிரித்தானிய நிர்வாகமே ஏற்றுக்கொள்ளவில்லை

ஆயினும், மக்களை பொறுத்தவையில்,  இஸ்லாம்/முஸ்லீம் தேசம்  1800 களின் ஆரமபத்திலேயே வந்து விட்டது.

Sir John Cumming (1868-1958), a British administrator in the subcontinent, in his book Political India released in 1932, quotes the last part and gives the following commentary:

It is not only in the customs and usages which mark their external life that the two people differ; the sources of their moral and intellectual inspiration are different. The Muslim is inspired by the great literatures of Arabia and Persia, his conduct is influenced by the precepts of Sadi or of the great saints of Islam. The Hindu venerates myriads of gods, demi-gods, and demons of whose very name the Muslim is ignorant, and his daily life is governed by an elaborate code of rules the very reason of which is as unintelligible to the Muslim as to the Christian. Even their newspapers, their novels, and current literature are mutually unintelligible. The Muslim reads his script from right to left, the Hindu books and newspapers are printed from left to right. But it is useless to enumerate the grounds of difference between Hindu and Muslim; the only thing that matters is that they do in fact feel and think of themselves as separate peoples. In all disquisitions on nationality this is the only test which is found to cover all cases. If a certain body of persons think of themselves as one nation and are willing to endure tribulation and material losses in order to remain together, then they are one people; if they cannot pass this acid test, they are not. Judged by this standard the Muslims of India are a nation. Communal differences, as they are called, are really national jealousies. That is why Sir Muhammad Iqbal declared 'the problem of India is international, not national'.[39]

4 hours ago, Lara said:

ஜின்னா 1906 இல் காங்கிரஸில் இணைந்தவர். 1913 இல் அகில இந்திய முஸ்லிம் லீக்கில் உறுப்பினராக இணைந்தாரே தவிர அன்று தனிநாடும் கேட்கவில்லை, இருதேச கோட்பாட்டையும் கையில் எடுக்கவில்லை. முஸ்லிம்களுக்கு உரிமைகளை கேட்டார், இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக கதைத்தார். 1916 இல் லக்னோ ஒப்பந்தம் மூலம் காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக, இந்திய விடுதலைக்காக ஒன்றாக போராடுவதாகவும் முடிவெடுத்தார்கள்.

, in a 1883 conference precisely entitled "What is India?", at the University of Cambridge, he said:

There is no such country, and this is the first and most essential fact about India that can be learned. India is a name, which we give to a great region including a multitude of different countries. There is no general Indian term that corresponds to it... Scotland is more like Spain than Bengal is like the Punjab.... There are no countries in civilized Europe in which people differ so much as the Bengali differs from the Sikh, and the language of Bengal is as unintelligible in Lahore as it would be in London.

And also:

This is the first and most essential thing to learn about India—that there is not, and never was an India, or even any country of India, possessing, according to European ideas, any sort of unity, physical, political, social and religious; no Indian nation, no 'people of India,' of which we hear so much.... We have never destroyed in India a national government, no national sentiment has been wounded, no national pride has been humiliated; and this not through any design or merit of our own, but because no Indian nationalities have existed.[40]

More substantially and influentially than Justice Rahim, or the historiography of British administrators, the poet-philosopher Muhammad Iqbal (1877–1938) provided the philosophical exposition and Barrister Muhammad Ali Jinnah (1871–1948) translated it into the political reality of a nation-state.[41] Allama Iqbal's presidential address to the Muslim League on 29 December 1930 is seen by some as the first exposition of the two-nation theory in support of what would ultimately become Pakistan.[41"]

4 hours ago, Lara said:

பாகிஸ்தான் உருவான வரலாறும் தெரியாது, ஜின்னாவின் வரலாறும் தெரியாது. நல்லவேளை 1800 களில் காஷ்மீரில் போராடிய மக்கள் பாகிஸ்தானில் இணைவதற்காக என சொல்லாமல் விட்டீர்கள்.

வரலாற்றின் ஒரு புள்ளியை (பாகிஸ்தான் அரசு தோற்றம்), ஒரேயொரு முக்கிய நபரின் (ஜின்னா) செயல்களை, அதுவும் நீங்கள் சொல்லுவதற்கு வசதியான கால  வரையறுக்குள் நின்று கொண்டு, உண்மையான வரலாற்றை மறுதலிப்பவர்கள் எத்தனையோ தடவை பாத்தாகிவிட்டது. சிங்களமும், இந்த முறையிலேயே ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவில் பூர்விகம் அற்றவர்கள் என்கிறது.

5 hours ago, Lara said:

அத்துடன் இருதேசம் என்றால் அதை இரு நாடுகள் என கொள்ள வேண்டியதில்லை. ஒரு நாடு இரு தேசம் எனவும் கொள்ளலாம்.

நான் சொல்லியது, இந்திய அரசு, பாகிஸ்தான் (முஸ்லீம்) தேசம் ஆக முதிர்ச்சி அடைந்ததாக.

நீங்கள் கவனிக்காதது, 1947 இல் பாகிஸ்தான் அரசு உருவாக்கப்பட்ட போது, அந்த பகுதியில் பிரித்தானியரின் கட்டளையின் கீழ் இருந்த பாகிஸ்தான் ராணுவம் ஆகப் போகும்  இந்திய ராணுவத்தால் (ஏறத்தாழ 200 வருடங்கள்), ஓர் கிளர்ச்சியும் ஏற்படவில்லை.

இது நீங்கள் சொல்லிய, jinnah வின் இந்திய அடையாளத்தின் கீழ் ஒத்துழைப்பு, பின் பிரிதல் (1940 இல்), அதுவும் 7 வருடங்களில், ஜின்னாவின் கீழ் இராணுவமே இல்லை, சாத்தியமா?

வரலாற்றை, ஒரு (சில) புள்ளியில், சில முக்கிய பிரமுகர்கள், காலவரையறைக்குள், அதுவும் ஒரு கருத்தித்திற்கு வசதியாக வரும் கலவரையறைக்குள் மற்றும் நிகழ்வுகளிளின் சாளரத்தினூடாக, உண்மையான வரலாற்றை மாற்ற முடியாது.

Link to comment
Share on other sites

42 minutes ago, Kadancha said:

தேசம் என்பதின் தோற்றத்தை ஒரு போதுமே திகதிகளில் வரையறுக்க முடியாது.

ஆயினும், பிரிவு என்பது, உத்தியோகபூர்வமாக (வேண்டுமாயின்), 1907 - 1932 இற்கு இடையில் பிரித்தானிய நிர்வாகத்தினால் ஏறத்தாழ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

இதை  https://en.wikipedia.org/wiki/Two-nation_theory#Start_of_Muslim_self-awakening_and_identity_movement_(17th_century–1940s) என்பதில் தெளிவாக காணலாம்.

முக்கியமாக, இந்தியா என்பதை தேசமாக பிரித்தானிய நிர்வாகமே ஏற்றுக்கொள்ளவில்லை

கடஞ்சா, நான் கேட்டது ஏதோ நீங்கள் எழுதுவது ஏதோ.

இந்தியா என்பது ஒரு தேசம் அல்ல. அது பல தேசங்களை கொண்ட ஒரு ஒன்றியம். அதை பற்றி யார் இங்கு கேட்டது? 

நான் கேட்டது பாகிஸ்தான் எப்பொழுது உத்தியோகபூர்வமல்லாமல் பிரிந்தது என சொல்லுங்கள் என.

42 minutes ago, Kadancha said:

ஆயினும், மக்களை பொறுத்தவையில்,  இஸ்லாம்/முஸ்லீம் தேசம்  1800 களின் ஆரமபத்திலேயே வந்து விட்டது.

Sir John Cumming (1868-1958), a British administrator in the subcontinent, in his book Political India released in 1932, quotes the last part and gives the following commentary:

1800 களின் ஆரம்பத்தில் என கூறிக்கொண்டு 1932 இல் எழுதப்பட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டுகிறீர்கள். ஆங்கிலேயர்களின் கருத்தை நான் கேட்கவில்லை.

தவிர 1868-1958 என்பது John Cumming என்பவரது பிறந்த, இறந்த ஆண்டு.

Link to comment
Share on other sites

முகமது இக்பால் 1930 இல் கூறியது, 

In this address Iqbal outlined a vision of an independent state for Muslim-majority provinces in northwestern India, thus becoming the first politician to articulate what would become known as the Two-nation theory—that Muslims are a distinct nation and thus deserve political independence from other regions and communities of India.

Allama Iqbal defined the Muslims of India as a nation and suggested that there could be no possibility of peace in the country unless and until they were recognized as a nation and under a federal system, the Muslim majority units were given the same privileges which were to be given to the Hindu majority units. It was the only way in which both the Muslims and the Hindus could prosper in accordance with their respective cultural values. 

https://en.m.wikipedia.org/wiki/Allahabad_Address

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி தேவையில்லாமல் திசை திரும்புவதாக தெரிகிறது.

இங்கே ஒரே கேள்விதான். கஸ்மீரின் பூர்வ குடிகள் யார் ? பதில் 

1. பள்ளத்தாக்கில் - பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்துவாக இருந்து இப்போ முஸ்லீமாக இருக்கிற கஸ்மீரி முஸ்லிம்கள்.

2. லடாக்கில் - பெளத்தர்கள்

3. ஜம்முவில் இந்துக்கள் 

(இந்த 3 பகுதியிலும் சிறுபான்மை மதத்தில் இருப்பவரும் பூர்வீக குடிகளே).

இதில் யாரையும் யாரும் பூர்வீக குடிகள் இல்லை எனச் சொல்ல முடியாது.

அப்படி சொல்வது ஆ எஸ் எஸ் சின் வரலாற்றுப் புனைவு.

நான் முன்பே சொன்னது போல, இந்த ஹிந்துதுவா வரையறைய ஏற்றால் - இந்தியா முழுமைக்கும் திராவிடர்களே பூர்வ குடிகள் என்பதை ஏற்றுக் கொண்டு, சங்கிகள் மூட்டை முடிச்சோடு ஹைபர் கணவாய் வழியே வடக்கு, மேற்கு நோக்கி போக வேண்டியே வரும் 😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் கடைசியா ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்.

கஸ்மீரை போல இந்தியா இலங்கையில் அதிரடியாக தமிழர் சார்பு நிலை எடுக்கும், சிங்களத்துக்கு இடித்துரைத்தது என்பதெல்லாம் முன்பு “திவாரி வாறா” “பூரி வாறார்” “நட்வர்சிங் வாறார்” போன்ற கோல்மால் கதைகளின் தொடர்சியே.

சிங்கள அரசின் ராஜதந்திர நண்டுப்பிடிக்குள் இருக்கிறது இந்தியாவின் உயிர் உறுப்பு - ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது 😂.

அண்மையில் மாலைதீவில் ரணிலும், கொழும்பில் சம்பிக்கவும் சொன்னது போல. கஸ்மீர் அணுகுமுறை இலங்கையின் தமிழர்க்கும் பொருந்தும். இதுவே இலங்கையின் நிலைப்பாடு.

எப்படி மோடி எல்லா இந்தியரையும் சமமாக நடத்துகிரரோ, அப்படித்தான் இலங்கையும். யாருக்கும் சிறப்புரிமை தேவையில்லை.

மோடியை எப்படி கட்டுக்குள் வைப்பது, என்பது இந்தியாவில் யாருக்கும் கைப்படாத கலையாக இருக்கலாம், ஆனால் இலங்கையில் எப்பவோ ஸ்கெட்ச் போட்டாகி விட்டது.

இதில் மோடி சொல்லி இலங்கை தமிழருக்கு அள்ளித் தரப்போகிறது என்பது

1. தமிழர் மத்தியில் மோடியை வெள்ளை அடிக்க

2. கோத்தா இக்கு வாக்குபோடுமாறு தமிழரை தூண்ட 

உதவுமே ஒழிய வேறு ஒரு மாங்காயும் விளையாது.

Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

நான் சொல்லியது, இந்திய அரசு, பாகிஸ்தான் (முஸ்லீம்) தேசம் ஆக முதிர்ச்சி அடைந்ததாக.

நீங்கள் கவனிக்காதது, 1947 இல் பாகிஸ்தான் அரசு உருவாக்கப்பட்ட போது, அந்த பகுதியில் பிரித்தானியரின் கட்டளையின் கீழ் இருந்த பாகிஸ்தான் ராணுவம் ஆகப் போகும்  இந்திய ராணுவத்தால் (ஏறத்தாழ 200 வருடங்கள்), ஓர் கிளர்ச்சியும் ஏற்படவில்லை.

இது நீங்கள் சொல்லிய, jinnah வின் இந்திய அடையாளத்தின் கீழ் ஒத்துழைப்பு, பின் பிரிதல் (1940 இல்), அதுவும் 7 வருடங்களில், ஜின்னாவின் கீழ் இராணுவமே இல்லை, சாத்தியமா?

வரலாற்றை, ஒரு (சில) புள்ளியில், சில முக்கிய பிரமுகர்கள், காலவரையறைக்குள், அதுவும் ஒரு கருத்தித்திற்கு வசதியாக வரும் கலவரையறைக்குள் மற்றும் நிகழ்வுகளிளின் சாளரத்தினூடாக, உண்மையான வரலாற்றை மாற்ற முடியாது.

1940 லாகூர் பிரகடனத்துடன் பாகிஸ்தான் உத்தியோகபூர்வமில்லாமல் பிரிந்து விட்டதாக நினைத்து விட்டீர்கள் போல. 😎

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிளெமென்ட் அட்லி பிரதமராக வந்தார். அவர் 1946 இல் இந்தியாவிற்கு அனுப்பிய கபினட் தூதுக்குழு ஒன்றிணைந்த இந்தியாவினுள் முஸ்லிம் லீக்கின் விருப்பத்தையும் உள்வாங்கி அரசியலமைப்பு திட்டம் ஒன்றை முன் வைத்தது. அதை ஜின்னா ஏற்றுக்கொண்டார். காங்கிரஸும் ஏற்றுக்கொண்டது. 

பின் நேரு அதை மாற்றியமைப்பதற்கான உரிமையை காங்கிரஸ் கொண்டிருக்கிறது என கருத்து தெரிவித்ததும் ஜின்னா அதிலிருந்து விலகுவதாக கூறினார். பின் நேரடி நடவடிக்கை நாள் என குறிப்பிட்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தார். ஊர்வலமும் நடந்தது. அதன்போது இந்து, முஸ்லிம் கலவரங்கள் உருவாகி, வன்முறைகள் உருவாகி பல மக்கள் கொல்லப்பட்டார்கள், பாதிக்கப்பட்டார்கள்.

In 1946, the Indian independence movement against the British Raj had reached a pivotal stage. British Prime Minister Clement Attlee sent a three-member Cabinet Mission to India aimed at discussing and finalizing plans for the transfer of power from the British Raj to the Indian leadership. After holding talks with the representatives of the Indian National Congress and the All India Muslim League the two largest political parties in the Constituent Assembly of India on 16 May 1946, the Mission proposed a plan of composition of the new Dominion of India and its government. The Muslim League demand for 'autonomous and sovereign' states in the northwest and the east was accommodated by creating a new tier of 'groups of provinces' between the provincial layer and the central government. The central government was expected to handle the subjects of defence, external affairs and communications. All other powers would be relegated to the 'groups'.

Muhammad Ali Jinnah, the one time Congressman and Indian Nationalist, and now the leader of the Muslim League, had accepted the Cabinet Mission Plan of 16 June, as had the central presidium of the Congress.

On 10 July, however, Jawaharlal Nehru, the Congress President, held a press conference in Bombay declaring that although the Congress had agreed to participate in the Constituent Assembly, it reserved the right to modify the Cabinet Mission Plan as it saw fit. Fearing Hindu domination in the Constituent Assembly, Jinnah rejected the British Cabinet Mission plan for transfer of power to an interim government which would combine both the Muslim League and the Indian National Congress, and decided to boycott the Constituent Assembly. In July 1946, Jinnah held a press conference at his home in Bombay. He proclaimed that the Muslim league was "preparing to launch a struggle" and that they "have chalked out a plan". He said that if the Muslims were not granted a separate Pakistan then they would launch "direct action". When asked to be specific, Jinnah retorted: "Go to the Congress and ask them their plans. When they take you into their confidence I will take you into mine. Why do you expect me alone to sit with folded hands? I also am going to make trouble."

The next day, Jinnah announced 16 August 1946 would be "Direct Action Day" and warned Congress, "We do not want war. If you want war we accept your offer unhesitatingly. We will either have a divided India divided or a destroyed India."

https://en.m.wikipedia.org/wiki/Direct_Action_Day 

இதன் பின்னும் இன்னும் பல விடயங்கள் நடந்து 1947 ஜூன் மாதம் இந்தியா, பாகிஸ்தான் பிரிவு திட்டத்தை மவுண்ட்பேட்டன் முன்வைத்தார். 1947 ஓகஸ்ட் மாதம் பிரிந்தன.

இரு நாடுகளும் டொமினியனாக தான் பிரிந்தன. பின்பே குடியரசு நாடுகளாயின.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்களில் 2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். 14 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். முஸ்லிம்கள் பலர் பாகிஸ்தானுக்கும் இந்துக்கள், சீக்கியர்கள் பலர் இந்தியாவுக்கும். (இராணுவ வீரர்களும் உள்ளடக்கம்).

பி.கு: இத்துடன் பாகிஸ்தான் கதையை விட்டு விடுவோம். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, Lara said:

ஆங்கிலேயர்களின் கருத்தை நான் கேட்கவில்லை.

ஆகப் பிந்தியது, வெளியாரால் கூட அவதானிக்கப்பட்டது (1932).

ஆக முந்தியது, " Akbar Ahmed also considers Haji Shariatullah (1781–1840) and Syed Ahmad Barelvi (1786–1831) to be the forerunners of the Pakistan Movement, because of their purist and militant reformist movements targeting the Muslim masses, saying that "reformers like Waliullah, Barelvi and Shariatullah were not demanding a Pakistan in the modern sense of nationhood. "

இறுதி ஆண்டு கூட 1840. 

அதனால், பாகிஸ்தான் எனும் தேச-அரசு கருப்பொருள் ஆகப் பிந்தியது 1950 களில் உருவாககி விட்டது என்பது இப்போதைய பாகிஸ்தானியரின் சிந்தனை.

ஆனால் இதற்கு முதலே, முஸ்லீம் தேசம் (அல்லது பிரிவு) சிந்தனை எழுச்சி, விழ்ப்புணர்வு உருவாகிவிட்டது.

நீங்கள் எழுதிய facts ஐ, மறுக்கவில்லை.  

ஆனால், ஜின்னா 1940 இல் பிரிவு என்று ஆரம்பிக்கும் போது, பாகிஸ்தான் தேசம் மற்றும் அரசு எனும் கருப்பு பொருள் முற்றி, விடுதலை வேண்டி, காலம் மற்றும் களம் கொதிநிலையில் இருந்தது.  

நீங்கள் சொன்னது, 1930 அலகாபாத், முகமட் இக்பால்  அரசியல் எழுச்சி. இதுவும் காஷ்மீரிகள் முதலில் வரித்துக்கொண்ட முஸ்லீம் அடையாளம்  காஷ்மீரிகள் பாகிஸ்தான்  தேசத்தோடு இணைகிறர்கள் என்ற புரிதலை  வெளியாருக்கு ஏற்படுத்தியது.

வரலாற்றாசிரியர்களிடம் ஜின்னா வின் தந்திர பக்க பார்வையும் உள்ளது. அதாவது, ஜின்னா, பிரித்தானியரிடம் இருந்து பயின்ற கூடிப் பிரிக்கும் தந்திரத்தை கையாண்டார் என்பது.

ஜின்னா, 1940 இல் இருந்து 1947 கிடையில் பாகிஸ்தானை உருவாக்கினார் என்றால், ஜின்னா வரலாற்று அற்புதத்தை ஆக்கியவர்  ஆவர். அனால், வரலாறு அப்படி ஜின்னாவை பார்க்கவில்லை.

.

Link to comment
Share on other sites

42 minutes ago, Kadancha said:

ஆக முந்தியது, " Akbar Ahmed also considers Haji Shariatullah (1781–1840) and Syed Ahmad Barelvi (1786–1831) to be the forerunners of the Pakistan Movement, because of their purist and militant reformist movements targeting the Muslim masses, saying that "reformers like Waliullah, Barelvi and Shariatullah were not demanding a Pakistan in the modern sense of nationhood. "

இறுதி ஆண்டு கூட 1840. 

நான் விட்டாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல.

பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகிய பின் ஒன்றையொன்று தொடர்புபடுத்தி பலரும் எழுதுவார்கள். 🤣

பாகிஸ்தான் என்ற பெயரே 1933 இல் ரஹ்மத் அலியால் உருவாக்கப்பட்டது. அதை ஜின்னா அந்நேரம் கணக்கில் கொள்ளவில்லை. 😎

Link to comment
Share on other sites

14 hours ago, Kadancha said:

வரலாற்றாசிரியர்களிடம் ஜின்னா வின் தந்திர பக்க பார்வையும் உள்ளது. அதாவது, ஜின்னா, பிரித்தானியரிடம் இருந்து பயின்ற கூடிப் பிரிக்கும் தந்திரத்தை கையாண்டார் என்பது.

1928 இல் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் நோக்கில் மோதிலால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமைத்த குழு “நேரு அறிக்கை” வெளியிட்டது. 

https://en.m.wikipedia.org/wiki/Nehru_Report 

அது முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது என கருதி 1929 இல் ஜின்னா 14 அம்ச திட்டத்தை வெளியிட்டார். அதில் தனிநாடு கோரவில்லை.

The form of the future constitution should be federal, with the residuary powers vested in the provinces;

A uniform measure of autonomy shall be guaranteed to all provinces;

https://en.m.wikipedia.org/wiki/Fourteen_Points_of_Jinnah

Link to comment
Share on other sites

14 hours ago, Kadancha said:

ஜின்னா, 1940 இல் இருந்து 1947 கிடையில் பாகிஸ்தானை உருவாக்கினார் என்றால், ஜின்னா வரலாற்று அற்புதத்தை ஆக்கியவர்  ஆவர். அனால், வரலாறு அப்படி ஜின்னாவை பார்க்கவில்லை.

1946 இலும் ஜின்னா ஒன்றிணைந்த இந்தியாவினுள் கூட்டாட்சி முறைக்கு சம்மதித்திருந்தார்.

மத்திய அரசு அயலுறவுக் கொள்கை, பாதுகாப்பு, தகவல் தொடர்பு போன்றவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எஞ்சிய அதிகாரங்களை மாகாணங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பது.

அதை குழப்பியது நேரு.

ஆங்கிலேயர்கள் ஆரம்பம் முதலே தமது பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டார்கள். அவர்கள் இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்கியது மேற்குலகின் தேவைக்காக. 😎

Link to comment
Share on other sites

15 hours ago, Kadancha said:

ஆனால், ஜின்னா 1940 இல் பிரிவு என்று ஆரம்பிக்கும் போது, பாகிஸ்தான் தேசம் மற்றும் அரசு எனும் கருப்பு பொருள் முற்றி, விடுதலை வேண்டி, காலம் மற்றும் களம் கொதிநிலையில் இருந்தது.  

இது தவறு. 1937 தேர்தலில் காங்கிரஸ் பெரு வெற்றியடைந்ததும் நடந்த பல விடயங்கள் தான் 1940 லாகூர் பிரகடனத்துக்கு காரணம்.

1940 லாகூர் பிரகடனத்தின் பின்பே முஸ்லிம்களுக்கு தனி தேசம் வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்தது.

1946 இலிருந்து தான் அது தனிநாடு தான் தீர்வு என்ற நிலைக்கு சென்றது.

Link to comment
Share on other sites

15 hours ago, Kadancha said:

நீங்கள் சொன்னது, 1930 அலகாபாத், முகமட் இக்பால்  அரசியல் எழுச்சி. இதுவும் காஷ்மீரிகள் முதலில் வரித்துக்கொண்ட முஸ்லீம் அடையாளம்  காஷ்மீரிகள் பாகிஸ்தான்  தேசத்தோடு இணைகிறர்கள் என்ற புரிதலை  வெளியாருக்கு ஏற்படுத்தியது.

கவிஞர் முகமது இக்பால் கூட்டாட்சி முறை பற்றியே குறிப்பிடுகிறார். அவர் தனிநாடு கேட்கவில்லை.

பாகிஸ்தான் என்ற நாடு உருவாக முன்னம் பாகிஸ்தானுடன் இணைய யாரும் போராட முடியாது. 

காஷ்மீரில் போராட்டம் 1932 இல் உருவானதல்ல. 1932 என்பது “அனைத்து ஜம்மு மற்றும் முஸ்லிம் மாநாட்டு கட்சி” உருவாக்கப்பட்ட ஆண்டே தவிர போராட்டம் ஆரம்பித்த ஆண்டு கிடையாது. போராட்டம் என்பது ஷேக் அப்துல்லா அரசியலுக்கு வர முன்னைய காலங்களிலும் நடந்தது. மன்னர் ஹரிசிங்கிற்கு முன்பு மன்னர் பிரதாப் சிங் காலத்திலும் நடந்தது. அதற்கு முன்னரும் நடந்தது. மதசார்பற்று மாற்றும் நோக்கில் முஸ்லிம் என்ற பெயரை நீக்கி 1939 இல்“ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி” என மாற்றி மன்னராட்சிக்கு எதிராக மக்களாட்சி வரவேண்டும் என போராடினார்கள் என்றும் குறிப்பிட்டேன்.

1947 இல் பாகிஸ்தான், இந்தியா என  இரு நாடுகள் உருவான பின் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதா இந்தியாவுடன் இணைவதா தனித்த சுதந்திர நாடாக இருப்பதா என்பதை அம்மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஹைதராபாத் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்டது, ஆட்சி செய்தவர் முஸ்லிம் என்பதால் பாகிஸ்தானுடன் இணைவதாக அறிவித்தார். இந்தியா இராணுவ நடவடிக்கை மூலம் ஹைதராபாத்தை கைப்பற்றியது.

காஷ்மீர் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டது. எனவே அவர்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினாலும் அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. விரும்பினால் ஜம்மு, லடாக் பகுதியை மட்டும் அம்மக்கள் விரும்பினால் இந்தியாவுடன் இணைக்கலாம்.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி கிடையாது. இந்திய இராணுவத்தின் உதவியை பெறுவதற்காக தற்காலிகமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீரை, மக்கள் வாக்கெடுப்பின் பின்னே இந்தியாவுடன் நிரந்தரமாக இணைக்கப்படும் என கூறி விட்டு பொது வாக்கெடுப்பு நடத்தாமல் காஷ்மீரை இந்தியா தனது மாநிலமாக்கியது பச்சை துரோகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி அடிப்படையில் இஸ்லாமிய எதிர்ப்பாளர். குஜராத்தில் முஸ்லிம்கள் மீது ஒரு பெரும் இன வன்முறையையே கட்டவிழ்த்து விட்டவர். இன்று உலகெங்கும் குஜராத் முஸ்லிம்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் என்றால் அது மோடி என்ற அரசபயங்கரவாதியால் தான். இவருக்கும் மகிந்த கோத்தா கும்பலுக்கும் ஒரு வேறுபாடும் கிடையாது. இந்த அடிப்படையில் இருந்து தான் இந்த விடயத்தை நோக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Lara said:

பாகிஸ்தான் என்ற பெயரே 1933 இல் ரஹ்மத் அலியால் உருவாக்கப்பட்டது. அதை ஜின்னா அந்நேரம் கணக்கில் கொள்ளவில்லை.

இந்த திரி வேறு திசையில் செல்கிறது.

நான் ஏற்கனவே சொல்லி விட்டேன், நீங்கள் எழுதும் facts ஐ மறுக்கவில்லை என்று.

நீங்கள் எழுதுபவை, வரலாற்றில் முக்கிய சம்பவங்கள், பிரமுகர்கள் போன்றவை. இவை வெளிப்படையாக, கிடைக்கும் தரவுகள்.

பாகிஸ்தான் எனும் கருப்பொருளிள் மற்றும் அடையாளத்தின் தோற்றம், 1800 களில் (19ம் நூற்றாண்டு) வந்துவிட்டது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கானஆதாரங்களை தான் குறிப்பிட்டேன்.

இதை, இங்கு கீழ் உள்ள தரவிலும்,   இலை மறை காயக சொல்லப்பட்டுள்ளது ("but the concept of Pakistan came in 19th century.")
https://en.wikipedia.org/wiki/Pakistan#Islamic_conquest  

இந்நிலையில், பாகிஸ்தான் கருப்பொருள் மற்றும் அடையாளம் மதத்தின் அடிப்படையிலேயே இருந்தது.

இது வெறும் அச்சு வடிவில் உள்ளவற்றை அறிந்து நான் வந்த முடிவல்ல. பாகிஸ்தான் இல் இருந்து நேரடியாக வந்த பல வேறுபாட்டை தலைமுறை நண்பர்களுடன் பாகிஸ்தான் வரலாறு பற்றி ஆராய்ந்ததில் நான் அடைந்த முடிவு.

இதை, நீங்கள், விக்கிப்பீடியா இல் மாற்றி எழுதலாம். அதாவது, பாகிஸ்தான் கருப்பொருள்  20ம் நூற்றாண்டில் தோன்றியதாக.  ஏற்றுக் கொள்ளப்பட்டால், உங்களின் கருத்து வரலாற்றில் நடந்ததாக ஏற்றுக் கொள்ளப்படும்.

பாகிஸ்தான் கருப் பொருள் மற்றும் அடையாளம் என்பது காஷ்மீர் முஸ்லீம் அடையாளத்திற்கு பின்பு வந்தது (அதாவது ஜின்னா முதலில் பாகிஸ்தானை கொள்கையாக எடுத்த பொது) என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டால், காஷ்மீரிகளை தவிர, காஸ்மீரிகள் பாகிஸ்தானியராக (மதத்தின் அடிப்படையிlல்) ர்வதற்கு என்ற புரிதலும் தவறு (அதாவது, இதுவரை வரலாற்றாசிரியர்கலாலும், ஏனையோர்களாலும்  ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தும் தவறு) என்பதும் ஏற்றுக் கொள்ளப்படும்.   

ஆயினும், காஸ்மீரிகள் தம்மை பாகிஸ்தானியராக எண்ணவில்லை, பாகிஸ்தானியராக வெளியாரால்  விளங்கப்படுவதை வெறுத்தனர் என்பதுவும் உண்மை.   

ஜின்னா, உடனடியாக பாக்கிஸ்தானை கொள்கையாக எடுக்கவில்லை, ஏனெனில் அரசுப் பிரிவு, முடியாது,  இது ஜின்னா இற்கும், சட்ட வல்லுனராக, வெளிப்படையாக தெரிந்த விடயம். sedition குற்றத்தில் பிரித்தானிய பேரசு ஆயுள் கைதியாக அந்தமானில் தள்ளிவிடும். மற்றது, மவுண்ட் பட்டன் இந்திய அரசுப் மற்றும் அடையாளம் பிரிவை சூட்சுமமாக எதிர்க்கிறார் என்பதையும் ஜின்னா புரிந்து கொண்டிருப்பார். மவுண்ட் பட்டன் மற்றும் edwina உடனான, நேருவின் தனிப்பட்ட பால்ய உறவு கூட காரணமாக இருக்கலாம்.  இதை, இந்திய அரசுப் பிரிவை  மவுண்ட் பட்டன் எதிர் என்பதையும், பாகிஸ்தான் அரசு  பிரிவின் பின்பு மவுண்ட் பட்டன் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார்.

ஜின்னாவும் முதலில் மதம் சார்ந்த பாக்கிஸ்தானை கொள்கையாக கையில் எடுத்தார். பின்பு, மதத்தின் முக்கியத்துவத்தை நீக்கி,  பாகிஸ்தான் தேசியவாதமாக முன்வைத்தார்.  

இதில், பிரிவுக்கு முன்,  ஜின்னாவின் கொள்கையும், அதன் மாற்றமும், மவுண்ட் பட்டன் எதிர்ப்பும்   தெரிகிறது.

https://en.wikipedia.org/wiki/Two-nation_theory

ஆயினும், பாகிஸ்தான் அரசுப் பிரிவை யார் பின்னிருந்து நடத்தியது என்பது இன்னமும் தெளிவில்லாமலேயே இருக்கிறது. பெரும்பாலும் பிரித்தானிய civil service ஆக இருப்பதற்கே வாய்ப்புகள் உண்டு.   

இத்துடன் பாகிஸ்தான் தோற்றம், காஷ்மீர் பற்றிய வெளியாரின் புரிதல் பற்றிய வாதங்களை முடிக்கிறேன்.

ஆயினும், பாகிஸ்தான் அரசுப் பிரிவை யார் பின்னிருந்து நடத்தியது என்பது இன்னமும் தெளிவில்லாமலேயே இருக்கிறது. பெரும்பாலும் பிரித்தானிய civil service ஆக இருப்பதற்கே வாய்ப்புகள் உண்டு.   

இத்துடன் பாகிஸ்தான் தோற்றம், காஷ்மீர் பற்றிய வெளியாரின் புரிதல் பற்றிய வாதங்களை முடிக்கிறேன்.

Link to comment
Share on other sites

55 minutes ago, Kadancha said:

ஜின்னா, உடனடியாக பாக்கிஸ்தானை கொள்கையாக எடுக்கவில்லை, ஏனெனில் அரசுப் பிரிவு, முடியாது,  இது ஜின்னா இற்கும், சட்ட வல்லுனராக, வெளிப்படையாக தெரிந்த விடயம். sedition குற்றத்தில் பிரித்தானிய பேரசு ஆயுள் கைதியாக அந்தமானில் தள்ளிவிடும். மற்றது, மவுண்ட் பட்டன் இந்திய அரசுப் மற்றும் அடையாளம் பிரிவை சூட்சுமமாக எதிர்க்கிறார் என்பதையும் ஜின்னா புரிந்து கொண்டிருப்பார். மவுண்ட் பட்டன் மற்றும் edwina உடனான, நேருவின் தனிப்பட்ட பால்ய உறவு கூட காரணமாக இருக்கலாம்.  இதை, இந்திய அரசுப் பிரிவை  மவுண்ட் பட்டன் எதிர் என்பதையும், பாகிஸ்தான் அரசு  பிரிவின் பின்பு மவுண்ட் பட்டன் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார்.

கடஞ்சா,

மவுண்ட்பேட்டன் இந்திய தலைமை ஆளுனராக 1947 இல் தான் பதவியேற்றார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

வுண்ட்பேட்டன் இந்திய தலைமை ஆளுனராக 1947 இல் தான் பதவியேற்றார்.

மறுபடியும், ஒரு சம்பவத்தில் பார்க்கிறீர்கள்.

மவுண்ட் பட்டேன் 1947 இல் viceroy ஆக நியமிக்கப்படத்தின்  காரணமே, இந்திய பிராந்தியத்தின் பரீட்சயமே.

மவுண்ட் பட்டன் - Edwina - நேரு - இந்திய  (அன்று) - தொடர்பு, அவர் viceroy ஆக வருவதன் முதலே ஆரம்பித்து விட்டது என்பது பொதுவாக அறியப்பட்ட உண்மை. இது ஒரு இடத்திலும் எழுத்தில் இல்லை. ஆயினும், அண்மையில் பிரித்தானிய பத்திரிகை, edwina டைரிகளின்  சாராம்சத்தை எழுதியது. அதில் மவுண்ட் பட்டன் கடற்படையை பல நாட்கள் வேறு நாடுகள், சமுத்திரத்தில் வழிநடத்தும் நேரத்தில் , எண்ணற்ற டதடவைகள்,    Edwina இன்  தனிமையை தவிர்பதற்கு, இந்தியாவில் வைத்து,  நேருவை துணையாக  விட்டு சென்றதாக. உண்மையில் Edwina உம்  இதை விரும்பினார் என்று. Edwina-நேரு  (பாலியல்) உறவு வெளிப்படையாகா அறியப்பட்டதாயினும் , ஏனெனில், mount பட்டன் ஒரு பாலின சேர்க்கை விருப்பு உள்ளவர் என்பது பொதுவாக அன்று தெரியப்பட்டாலும், நேரு, mount பட்டன் பாலியல் உறவு வைத்திருந்ததை Edwina இந்த டைரிகள் ஆங்காங்கே வரிகளுக்கிடையில் உணர்த்துவதாக.  ஆகவே நேரு, இருவருடனும், அதாவது Edwina, mount பட்டேன் உடன் (பாலியல்) உறவு கொண்டிருந்தார் என்றும், சிலதருணங்களில் இது முத்தலை புணர்ச்சியாகவும் இருந்தற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும்   செய்திகள் வெளியிட்டன.    

மிகவும்  நெருக்கமான, நீண்ட காலா இந்திய, நேரு உறவு.  இதில் தான் ஜின்னா , அதாவது இந்திய - பாகிஸ்தான் பிரிவு பற்றிய மௌன்ட் பட்டன் இன் நாடியை அறிந்திருப்பார்.      

நான் சொல்லியது, பிரிவின் இறுதி தறுவாயிலும், யதார்த்தத்தை, அதாவது முஸ்லீம் பாகிஸ்தான், இந்து, இந்திய  பிரிவை அனுபவத்தின் வாயிலாக கண்டு உணர்ந்த பின்பும், மௌன்ட் பட்டன் இந்திய அரசு, அடையாள பிரிவை விரும்பவில்லை, எதிர்த்தார் என்பது.   

குறிப்பாக, தனிப்பட்ட உறவுகளும் அன்றைய இந்திய, பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு செலுத்தின.

இப்போதும் அது உண்மை, நாடுகளுக்கு இடையிலான உறவில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kadancha said:

நீங்கள் கூறிய the daughter of the empire எனும் புத்தகம், இந்த விடுமுறையில்தான் வாசித்தேன். எட்வீனா, மவுண்ட்பேட்டனின் மகள் பமிலா ஹிக்ஸ் எழுதியது. இதில் நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் எல்லாமே அந்த புத்தகத்தில் எதிர்புறமாகவே இருக்கிறது. 

பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

லாரா,

மவுட்ண் பேட்டன் போகும் போது ஆளுனர் அல்ல, வைஸ்ரோய். பின்னர் சுதந்திர இந்தியாவின் ஆளுனர் நாயகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நீங்கள் கூறிய the daughter of the empire எனும் புத்தகம், இந்த விடுமுறையில்தான் வாசித்தேன். எட்வீனா, மவுண்ட்பேட்டனின் மகள் பமிலா ஹிக்ஸ் எழுதியது. இதில் நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் எல்லாமே அந்த புத்தகத்தில் எதிர்புறமாகவே இருக்கிறது. 

ஆம், அவர் அதை ஸ்பெஷல் relationship என்று சொல்லியிருந்தார்.

ஆனால், மகள் எவ்வாறு உண்மையை ஏற்றுக்கொள்ள முடியும்?

ஆயினும், நேரு-edwina உறவும், mount பட்டேன் இந்த ஒரு பாலின வேட்பும் அன்றே சந்தேகிக்கப்பட்டன பிரித்தானிய ஊடகங்களால்.

ஏனெனில், மிகவும் நெருக்கமான உறவு.

நான் புதிதாக அறிந்தது, நேரு-mount பட்டேன் உறவு.

ஆம், இதில் உண்மை எது என்பது ஒருவருக்கும் தெரியாது தான்.
 
ஆனால், மவுண்ட் பட்டேன் 1947 மாசி இல், மிகவும் பதற்றமான நேரத்தில் நியமனம் பெற்று, ஏறத்தாழ 6 மாதத்தில், அதாவது 1947 ஆவணி, , அதுவும் ஆட்சியாளர் என்ற முறையில், நேருவுடன் இவ்வளவு நெருக்கமாக வந்திருக்க முடியுமா, முன்பு ஒரு தொடர்பும் இல்லாமல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

ஆம், அவர் அதை ஸ்பெஷல் relationship என்று சொல்லியிருந்தார்.

ஆனால், மகள் எவ்வாறு உண்மையை ஏற்றுக்கொள்ள முடியும்?

ஆயினும், நேரு-edwina உறவும், mount பட்டேன் இந்த ஒரு பாலின வேட்பும் அன்றே சந்தேகிக்கப்பட்டன பிரித்தானிய ஊடகங்களால்.

ஏனெனில், மிகவும் நெருக்கமான உறவு.

நான் புதிதாக அறிந்தது, நேரு-mount பட்டேன் உறவு.

ஆம், இதில் உண்மை எது என்பது ஒருவருக்கும் தெரியாது தான்.
 
ஆனால், மவுண்ட் பட்டேன் 1947 மாசி இல், மிகவும் பதற்றமான நேரத்தில் நியமனம் பெற்று, ஏறத்தாழ 6 மாதத்தில், அதாவது 1947 ஆவணி, , அதுவும் ஆட்சியாளர் என்ற முறையில், நேருவுடன் இவ்வளவு நெருக்கமாக வந்திருக்க முடியுமா, முன்பு ஒரு தொடர்பும் இல்லாமல்?

1. இந்த புத்தகத்தை பமிலா மிகவும் ஒளிவு மறைவு இல்லாமல் எழுதியுள்ளா. தனது தந்தை நேவிக்குப் போனதும், அவர்களது மாளிகைக்கு பல ஆண்கள் வந்து போனதையும். ஒரு சமயம் மாளிகைக்கு 5 ஆண் சிநேகிதர்கள் ஒரே நேரத்தில் வர - சிப்பந்திகள் யாரை, மற்றவருக்கு தெரியாமல் எந்த அறையில் வைப்பது என திணறினார்கள் என்பது வரை எழுதியுள்ளார். இவர்கள் அனைவரிடமும் எட்வீனா உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்ததை தெளிவாக சொல்கிறார் பமிலா. அது தவிர, தனது தாயின் நீண்டகால காதலன் எப்படி தம்முடன் ஒரே வீட்டில் வசித்தார், அவருடன் தாயார் எப்படி உலகம் எல்லாம் சுற்றினார், இது தந்தைக்கு தெரிந்திருந்தது, தாயின் பழக்கம் பற்றி முதலில் கோவித்த தந்தை எப்படி பின்னர் அதை சகஜமாக ஏற்றார் என்பது வரை இந்த புத்தகம் விபரிக்கிறது. தவிரவும் மவுட்ன் பேட்டெனின் பிரெஞ்சு காதலி - அவர்ருடன் எட்வீனாவின் நட்பு - என சகலதுமே சொல்லப்படுகிறது.

2. ஆகவே நேருவுக்கும்-எட்வீனாவுக்கும் இடையே உடலியல் தொடர்பு இருந்ததாக பமிலாவுக்கு தெரிந்தால் அதை பமிலா எழுதுவதை தவிர்க எந்த காரணமும் இல்லை.  சிறுவயது முதலே பமிலாவுக்கும் தெரிந்தே எட்வீனா தன் காதலர்களை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார், எனவே நேரு-எட்வீனா உறவை, எட்வீனா பமிலாவிடம் இருந்து மறைத்தார் எனவும் கொள்ள முடியாது.

3. ஆனால் நேரு-எட்வீனா மனதால் மிகவும் நெருக்கம் எனவும். அவர்கள் இருவரும் நடைபவனியின் போது சம்பாசணையில் திளைத்திருக்க, தானும் தந்தையும் சில அடிகள் பின்னே நடப்பதையும். எட்வீனாவும் நேருவும் பரஸ்பரம் கொடுத்த பரிசுகள், நீண்ட கடிதங்கள், எட்வீனாவின் உடல் நீரில் புதைக்கப்பட்டபோது, நேரு சொல்படி இந்திய நேவியின் கப்பல் போர்ட்ஸ்மத் கடலில் மலர் தூவியதையும் குறிப்பிடும் பமிலா, தனது தாய்க்கு, ஏனையோரை போல் நேருவும் ஒரு காதலனா? என தன்னை தானே கேள்வியும் கேட்கிறார். ஆனால் நேருவை சுற்றி எப்போதும் இருக்கும் கூட்டம், அவர்கள் இருவருக்கும் தனக்குமான நெருக்கம் இவற்றை வைத்து - அந்த உறவு உடல் உறவில்லாத ஆனா காதல் என்பதாகவேதான் கருதுவதாக எழுதுகிறார். கிருஸ்ண மேனனிடமும்தான் இதை கேட்டதாயும், இதே காரணங்களுக்காய் அவரும் தான் எண்ணியது போலவே எண்ணியதாகவும் எழுதுகிறார்.

4. மவுண்ட்பேட்டனுக்கு இந்தியா புதிது அல்ல- அவர் நேவியில் இருக்கும் போது இலங்கையிலும், இந்தியாவிலும் வாழ்ந்துள்ளார். 2ம் உலக யுத்த நேரத்தில், அவர்தான் supreme allied commander or South and Southeast Asia. அவரின் தலைமையகம் டெல்லியில்தான் இருந்தது. மவுண்ட் பேட்டனனை அவசரமாக இந்திய வைஸ்ரோய் ஆக்கி அனுப்பியது, அட்லி. சேர்சில் கடைசிவரை இந்தியாவை இழக்க தயாரில்லை. ஆனால் அட்லி இந்தியாவை இழக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். நீங்கள்தான் இந்தியாவின் கடைசி வைஸ்ரோய், இந்தியாவை ஒரு வருடத்துக்குள் கைகழுவி விட்டு வாருங்கள் என்பதே அட்லி, மவுண்ட் பேட்டனுக்க்கு கொடுத்த அசைண்ட்மெண்ட். அதையே அவர் செவ்வனே செய்தார்.

5. மவுண்ட் பேட்டன் இந்தியாவில் இறங்கி, காந்தி, நேரு, ஜின்னா, பட்டேல் என சகலருடனும் கதைக்கிரார். ஜின்னா தனிநாடு என்பதில் பிடிவாதமாக நிக்கிறார். கலவரங்கள் தொடர்கிறன, இறுதியில் காந்தி ஒப்புக்கொள்ள பிரிவினை எற்கப்படுகிறது. சிறில் ரட்கிளிப் லண்டனில் இருந்து வந்து மேப் வரைகிறார். மவுண்ட்பேட்டன் ராஜாக்கள் மகாநாட்டை கூட்டி, ராஜாக்களை பாகிஸ்தான் அல்லது இந்தியாவோடு செல்லுமாறு கூறி - எந்த நாட்டல் சூழப் பட்டீர்களோ அந்த நாட்டில் சேர்வதே நல்லம் என அட்வைசும் பண்ணுகிறார். கஸ்மீரும், ஹைறபாத்தும் இதை எற்க பின்னடிக்கிறன. காஸ்மீர்வரை போய் பேசிபாக்கிறார் மவுண்ட் பேட்டன். ஆனால் ராஜாஹரிசிங், காய்சால் எனச் சொல்லி, நன்றாக உபசரித்து அனுப்பிவிடுகிறார்.

6. ராஜா ஹரிசிங், இருபக்கமும் சேரமால், சுவிஸ்லாந்து போல நடுநிலை பேணும், நேப்பாளை ஒத்த ஒரு முடியாட்சியாகவே கஸ்மீரை வைத்திருக்க விரும்பினார். கஸ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியும் இதற்கு ஆதரவே. ஆகவே கஸ்மீரிகள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர் என்பது முற்றிலும் தவறானது. இது இந்துவாவின் புனைவு. முதல் சில மாதத்துக்கு கஸ்மீர் ஒரு முஸ்லீம் பெரும்பானமை, ஹிந்து அரசாட்ட்சியாகவே இருந்தது. பாகிஸ்தான் மட்டும் பதான் குழுக்களை அனுப்பி இருக்காவிட்டால், நேருவின் இந்தியா, கஸ்மீரை தனிநாடாகவே இருக்க விட்டிருக்கவும் கூடும். ஆனால் பாகிஸ்தானின் நடவடிக்கை, ராஜா, சேக் அப்துல்லா, இருவரையும் இந்தியா பக்கம் தள்ளிவிட்டது.

7. ஆனாலும் கஸ்மீரிகள் இந்தியாவோடு இன்னொரு மாநிலமாக இணையத் தயாராயிருக்கவில்லை. ஒரு தனிநாடாக இருந்து தம் இறையாண்மையை இந்தியாவோடு பகிர்ந்தனர், அப்படி அமைந்த இரு நாடுகளுகிகிடையான சர்வதேச ஒபந்தமே, இந்திய அரசியலமைப்பில் கஸ்மீருக்கான சிறப்புரிமை.

8. இந்த சிறப்புரிமையத்தான், நவநாஜிகளான சங் பரிவார் கூட்டம், இப்போ கிழித்தெறிந்துவிட்டு, அதற்கு 1200 ஆண்டு வரலாற்று பிழையை திருத்துகிறோம் என சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.