Jump to content

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

1. இந்த புத்தகத்தை பமிலா மிகவும் ஒளிவு மறைவு இல்லாமல் எழுதியுள்ளா. தனது தந்தை நேவிக்குப் போனதும், அவர்களது மாளிகைக்கு பல ஆண்கள் வந்து போனதையும். ஒரு சமயம் மாளிகைக்கு 5 ஆண் சிநேகிதர்கள் ஒரே நேரத்தில் வர - சிப்பந்திகள் யாரை, மற்றவருக்கு தெரியாமல் எந்த அறையில் வைப்பது என திணறினார்கள் என்பது வரை எழுதியுள்ளார். இவர்கள் அனைவரிடமும் எட்வீனா உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்ததை தெளிவாக சொல்கிறார் பமிலா. அது தவிர, தனது தாயின் நீண்டகால காதலன் எப்படி தம்முடன் ஒரே வீட்டில் வசித்தார், அவருடன் தாயார் எப்படி உலகம் எல்லாம் சுற்றினார், இது தந்தைக்கு தெரிந்திருந்தது, தாயின் பழக்கம் பற்றி முதலில் கோவித்த தந்தை எப்படி பின்னர் அதை சகஜமாக ஏற்றார் என்பது வரை இந்த புத்தகம் விபரிக்கிறது. தவிரவும் மவுட்ன் பேட்டெனின் பிரெஞ்சு காதலி - அவர்ருடன் எட்வீனாவின் நட்பு - என சகலதுமே சொல்லப்படுகிறது.

2. ஆகவே நேருவுக்கும்-எட்வீனாவுக்கும் இடையே உடலியல் தொடர்பு இருந்ததாக பமிலாவுக்கு தெரிந்தால் அதை பமிலா எழுதுவதை தவிர்க எந்த காரணமும் இல்லை.  சிறுவயது முதலே பமிலாவுக்கும் தெரிந்தே எட்வீனா தன் காதலர்களை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார், எனவே நேரு-எட்வீனா உறவை, எட்வீனா பமிலாவிடம் இருந்து மறைத்தார் எனவும் கொள்ள முடியாது.

3. ஆனால் நேரு-எட்வீனா மனதால் மிகவும் நெருக்கம் எனவும். அவர்கள் இருவரும் நடைபவனியின் போது சம்பாசணையில் திளைத்திருக்க, தானும் தந்தையும் சில அடிகள் பின்னே நடப்பதையும். எட்வீனாவும் நேருவும் பரஸ்பரம் கொடுத்த பரிசுகள், நீண்ட கடிதங்கள், எட்வீனாவின் உடல் நீரில் புதைக்கப்பட்டபோது, நேரு சொல்படி இந்திய நேவியின் கப்பல் போர்ட்ஸ்மத் கடலில் மலர் தூவியதையும் குறிப்பிடும் பமிலா, தனது தாய்க்கு, ஏனையோரை போல் நேருவும் ஒரு காதலனா? என தன்னை தானே கேள்வியும் கேட்கிறார். ஆனால் நேருவை சுற்றி எப்போதும் இருக்கும் கூட்டம், அவர்கள் இருவருக்கும் தனக்குமான நெருக்கம் இவற்றை வைத்து - அந்த உறவு உடல் உறவில்லாத ஆனா காதல் என்பதாகவேதான் கருதுவதாக எழுதுகிறார். கிருஸ்ண மேனனிடமும்தான் இதை கேட்டதாயும், இதே காரணங்களுக்காய் அவரும் தான் எண்ணியது போலவே எண்ணியதாகவும் எழுதுகிறார்.

4. மவுண்ட்பேட்டனுக்கு இந்தியா புதிது அல்ல- அவர் நேவியில் இருக்கும் போது இலங்கையிலும், இந்தியாவிலும் வாழ்ந்துள்ளார். 2ம் உலக யுத்த நேரத்தில், அவர்தான் supreme allied commander or South and Southeast Asia. அவரின் தலைமையகம் டெல்லியில்தான் இருந்தது. மவுண்ட் பேட்டனனை அவசரமாக இந்திய வைஸ்ரோய் ஆக்கி அனுப்பியது, அட்லி. சேர்சில் கடைசிவரை இந்தியாவை இழக்க தயாரில்லை. ஆனால் அட்லி இந்தியாவை இழக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். நீங்கள்தான் இந்தியாவின் கடைசி வைஸ்ரோய், இந்தியாவை ஒரு வருடத்துக்குள் கைகழுவி விட்டு வாருங்கள் என்பதே அட்லி, மவுண்ட் பேட்டனுக்க்கு கொடுத்த அசைண்ட்மெண்ட். அதையே அவர் செவ்வனே செய்தார்.

5. மவுண்ட் பேட்டன் இந்தியாவில் இறங்கி, காந்தி, நேரு, ஜின்னா, பட்டேல் என சகலருடனும் கதைக்கிரார். ஜின்னா தனிநாடு என்பதில் பிடிவாதமாக நிக்கிறார். கலவரங்கள் தொடர்கிறன, இறுதியில் காந்தி ஒப்புக்கொள்ள பிரிவினை எற்கப்படுகிறது. சிறில் ரட்கிளிப் லண்டனில் இருந்து வந்து மேப் வரைகிறார். மவுண்ட்பேட்டன் ராஜாக்கள் மகாநாட்டை கூட்டி, ராஜாக்களை பாகிஸ்தான் அல்லது இந்தியாவோடு செல்லுமாறு கூறி - எந்த நாட்டல் சூழப் பட்டீர்களோ அந்த நாட்டில் சேர்வதே நல்லம் என அட்வைசும் பண்ணுகிறார். கஸ்மீரும், ஹைறபாத்தும் இதை எற்க பின்னடிக்கிறன. காஸ்மீர்வரை போய் பேசிபாக்கிறார் மவுண்ட் பேட்டன். ஆனால் ராஜாஹரிசிங், காய்சால் எனச் சொல்லி, நன்றாக உபசரித்து அனுப்பிவிடுகிறார்.

6. ராஜா ஹரிசிங், இருபக்கமும் சேரமால், சுவிஸ்லாந்து போல நடுநிலை பேணும், நேப்பாளை ஒத்த ஒரு முடியாட்சியாகவே கஸ்மீரை வைத்திருக்க விரும்பினார். கஸ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியும் இதற்கு ஆதரவே. ஆகவே கஸ்மீரிகள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர் என்பது முற்றிலும் தவறானது. இது இந்துவாவின் புனைவு. முதல் சில மாதத்துக்கு கஸ்மீர் ஒரு முஸ்லீம் பெரும்பானமை, ஹிந்து அரசாட்ட்சியாகவே இருந்தது. பாகிஸ்தான் மட்டும் பதான் குழுக்களை அனுப்பி இருக்காவிட்டால், நேருவின் இந்தியா, கஸ்மீரை தனிநாடாகவே இருக்க விட்டிருக்கவும் கூடும். ஆனால் பாகிஸ்தானின் நடவடிக்கை, ராஜா, சேக் அப்துல்லா, இருவரையும் இந்தியா பக்கம் தள்ளிவிட்டது.

7. ஆனாலும் கஸ்மீரிகள் இந்தியாவோடு இன்னொரு மாநிலமாக இணையத் தயாராயிருக்கவில்லை. ஒரு தனிநாடாக இருந்து தம் இறையாண்மையை இந்தியாவோடு பகிர்ந்தனர், அப்படி அமைந்த இரு நாடுகளுகிகிடையான சர்வதேச ஒபந்தமே, இந்திய அரசியலமைப்பில் கஸ்மீருக்கான சிறப்புரிமை.

8. இந்த சிறப்புரிமையத்தான், நவநாஜிகளான சங் பரிவார் கூட்டம், இப்போ கிழித்தெறிந்துவிட்டு, அதற்கு 1200 ஆண்டு வரலாற்று பிழையை திருத்துகிறோம் என சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

முதலில் விரிவாக, பரந்த காலங்களை உள்ளடக்கி, பல வரலாற்று facts ஐ பொறுமையாக எழுதியதற்கு நன்றி.

இத்திரி நீண்டு செல்கிறது, இயன்ற அளவில், சுருக்கமாக  முடிவிற்கு கொண்டுவர முயற்சிக்கிறேன்.

6. இதில் கருத்து வேறுபாடு ஒன்றுமே இல்லை. நான் சொல்லியது, பாகிஸ்தான், இந்திய என்ற பிரிவு முற்றியபோது, காஸ்மீரிகள் இஸ்லாமிய அடையாளத்தை முதலில் எடுத்தது, வெளியாருக்கு  காஸ்மீரிகள் பாகிஸ்தானியரோடு இணைவது என்ற புரிதலை ஏற்படுத்தியது என்பதும்,  அந்நேரத்தில் காஷ்மீர் முஸ்லீம் பெரும்பான்மை என்ற காரணதினால் என்பதும்.

காஷ்மீரிகள் ஒரு போதும் தாமாக போராடவில்லை, பாகிஸ்தானியரோடு இணைவதற்காக. மாறாக, வெளியாரின் காஷ்மீர் பற்றிய புரிதலை, காஷ்மீரிகள் அடியோடு வெறுத்தனர். காஸ்மீர் தனி  நாடக இருப்பதையே ராஜாவும், மக்களும் விரும்பினர் என்பதுவும் உண்மை.

இவையெல்லாமே, வ்ரலாற்றைப் பொறுத்தவரையில்,   காஸ்மீரிகளின் விருப்பம், பாகிஸ்தானின் விருப்பம், கிந்தியாவின் விருப்பம் எல்லாமே தெளிவடைந்து விட்டது. அதனால், இதை பற்றி மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஆயினும்,  ஹிந்தியா, பாகிஸ்தான் இடையே,  காஸ்மீர் அப்பம் போல பிரிக்கப்படுவதற்கு, பாக்கிஸ்தான் தூண்டிய மஹாராஜாவின் ஆட்சிக்கு எதிரான முஸ்லிம் கிளர்ச்சியும்,  அனுப்பிய ஆப்கான் பஸ்தூன் ஆயுதக் கும்பல்களே ஆரம்பப் புள்ளி.

5. 7. 8.

இவையெல்லாமே வரலாற்று நிகழ்வுகள். இதில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஆனாலும், லாடக்கும், ஜம்முவும் விரும்பியே இறைமையை பகிர்ந்தன.

காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் கிந்தியவுடன் இணைந்த காஸ்மீர் பகுதிகள்,  வழியில்லாமல்,விருப்பமில்லாமல் இறைமையை பகிர்ந்து. ஆயினும், தற்போதைய, பாரிய கிந்திய ராணுவ கெடுபிடிகளும், ஒடுக்குதல்களுக்கும், சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள், மானிட குலத்திற்கெதிரான அட்டூழியங்கள்  மத்தியிலும், காஸ்மீரிகள் தமது வருத்தமாக கழித்த காலத்தை, எதிர்காலத்தில் பின்நோக்கிப் பார்க்கும் போது, பாகிஸ்தானுக்குள் தாம் உள்வாங்கப்படாதது, blessing in disguise ஆக பார்ப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏனெனில், பாகிஸ்தான் காஸ்மீரில் பஞ்சாபி முஸ்லிம்களை பாகிஸ்தான் குடியேற்றுகிறது.  கிந்தியா, கட்டாயமான குடியேற்றம் செய்யதாவிடத்து, காஷ்மீர், ஜம்மு, லடாக் இன் இனம் மற்றும் குடிப் பரம்பல் பாரிய அளவில் மாறுவது, மாற்றப்படுவது மிகவும் கடினமாகும்.                       

1. , 2. , 3. , 4.

நீங்கள் எழுதியதின் சாராம்சத்தையும், Independent, The Times அல்லது Telegraph இல் 2016/2017 (சரியான  நினைவு இல்லை) வாசித்துளேன்.

நான் குறிப்பிட்ட Edwina-Neru உறவு  பற்றி அன்றைய அபிப்பிராதையும், கோஸிப்பையும் சுட்டிக் காட்டி, Pamela இடம் இருந்து பெறப்பட்ட பேட்டியை ஒற்றி, setting the record straight எனும் பாணியிலும், தொனியிலும்  பிரசுரித்திருந்தது.    

ஆயினும், நேரு-Edwina உறவு பற்றியும், மவுண்ட் பட்டேன் பற்றியும் 2002 க்கு முன்பே வாய் வழியாகவோ அல்லது வாசித்தோ அறிந்துளேன். எப்படி, எங்கு, எவ்வாறு அந்த விடயத்திற்குள்   (நேரு-Edwina உறவு பற்றியும், மவுண்ட் பட்டேன் பற்றி) ஈர்க்கப்பட்டேன் என்பதை நினைவில் கொண்டுவர முடியாதுள்ளது. இதை அடிப்படையாக வைத்தே, லாராவின் கருத்துக்கு பதில் கருத்து எழுதினேன்.  

இதை இப்போது இணையத்தில் தேடும் போது கீழே உள்ள இணைப்பு  கிடைத்தது. இதிலும் இந்த முத்தலை உறவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஆயினும், இது Sun பத்திரிகை என்பதால் gossip, பரபரப்பும் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

https://www.thesun.co.uk/news/9752565/inside-lord-mountbatten-marriage/

இனி,  Pamela இன் daughter of the empire ஒற்றி நீங்கள் சொல்லியவற்றைப் பார்ப்போம்.

எனது அறிவுக்கு எட்டிய வரை,  Pamela சொல்வது அவர் அறிந்தது, அது உண்மையும் கூட.

ஆயினும், Pamela, Edwina, மவுண்ட் பட்டன் சேர்ந்தோ அல்லது தனித்தோ அறியாததும், பார்க்காததும்,    Edwina, மவுண்ட் பட்டன் சேர்ந்தோ அல்லது தனித்தோ  Pamela உடன்  வதியாததும் என்று என்று பல நீண்ட. தொடர்ச்சியான  காலங்கள் Pamela in வாழ்க்கையில் உண்டு.      

இதற்கு சுருக்கமான காரணம், பிரித்தானிய பேரரசின் Aristocrats, Civil Service Senior Officers/Administrators ஆகியோரின்  வாழ்க்கை முறை. பொதுவாக, இப்படியானவர்கள் பிரித்தானிய பேரரசின் காலனியில் சேவையாற்றும் போது (overseas posting), அவர்களின் பிள்ளைகளை பிரித்தானிய (அல்லது நட்பு Anglo நாடுகளில், குறிப்பாக US)   இல் உள்ள Public School (Eton, Harrow etc.) அல்லது Highly Privileged Private School இற்கே அனுப்புவார்கள். பொதுவாக, பிள்ளைகள் விடுமுறையை சில வேளைகளில் பெற்றோருடன் காலனியிலும், சில வேளைகளில் பிரித்தானியாவிற்கு பெற்றோர் வந்து பிள்ளைகளுடன் கழிப்பார்கள்.

Pamela வின் வாழ்க்கையிலும், கிட்டத்த்தட்ட இந்த வாழ்கை முறையையே மௌண்ட் பட்டன், Edwina கடைப்பிடித்ததாக தெரிகிறது.

https://en.wikipedia.org/wiki/Lady_Pamela_Hicks

இதன் காரணமாக, Pamela அறியாமல் Edwina - Neru - Mountbatten என்ற முத்தலை உறவு இருந்திருக்கலாம். மற்றும், Pamela அறியாமல், Mountbatten ஓரின வேட்பு உள்ளவராவாகவும் or bisexual , நேரு bisexual இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அத்துடன், Mountbatten, தனது கடற்படையை வேறு நாடுகள், சமுத்திரங்களில் வழிநடத்தும் போது, Edwina தனிமையில் தவிக்காதவாறு, நேருவின் care இல் விட்டிருக்கலாம். Edwina வே நேரடியாக நேருவின் care ஐ தேடி இருக்கலாம்.          

இந்த வாழ்க்கைமுறையை நான் முன்பு அறிந்திருந்தாலும், இந்த வாழ்கை முறையில் Highly Privileged Private School (with residential facilities) இல் வளர்ந்த சிறார்களை (இப்போது அவர்களில் ஒருவர் Home Office இல் Deputy Director ஆகவும், இன்னுமொருவர் Civil Service Senior Officer ஆகவும், தமது பிள்ளைகளை அதே வாழ்கை முறையிலேயே வளர்க்கிறார்கள்), அந்த பாடசாலையில் வைத்தே பாலியல் துற்பிரயோகம் செய்த அவர்களின் வதிவிட  ஆசிரியருக்கு (வயது 80) எதிரான வழக்கு விசாரணையில், அண்மையில்  Jury Service செய்யும் போதே இந்த வாழ்க்கை முறையின் யதார்த்தை உணர்வு பூர்வமாக பார்க்க முடிந்தது.

Pamela இன் நூலை  ஒற்றிய உங்கள் விபரணத்தை வாசிக்கும் போதே எனக்கு இது பொறி தட்டியது.

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
14 hours ago, goshan_che said:

லாரா,

மவுட்ண் பேட்டன் போகும் போது ஆளுனர் அல்ல, வைஸ்ரோய். பின்னர் சுதந்திர இந்தியாவின் ஆளுனர் நாயகம்.

1858 க்கு முன் Governor general of India என இருந்தது. 1858-1947 வரை Viceroy and governor general of India (சுருக்கமாக Viceroy of India) என மாறியது. ஆனாலும் Governor general என பல இடங்களில் பயன்படுத்தப்படுவதை பார்த்துள்ளேன். Viceroy என்பது கூடுதல் பொருத்தம் தான். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Lara said:

1858

????

Mountbatten பிறந்த ஆண்டு 1900.  இறப்பு: 1979

IRA தாக்குதலில் , Mullaghmore, County Sligo, Ireland இல் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அல்லது, typo. அல்லது வேறு நபர்.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

????

Mountbatten பிறந்த ஆண்டு 1900.  இறப்பு: 1979

IRA தாக்குதலில் , Mullaghmore, County Sligo, Ireland இல் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அல்லது, typo. அல்லது வேறு நபர்.

நான் எழுதியது governor general என்ற சொல் பயன்பாட்டில் இருந்த காலம் பற்றி. மீண்டும் வாசித்து பாருங்கள்.

17 hours ago, Kadancha said:

மறுபடியும், ஒரு சம்பவத்தில் பார்க்கிறீர்கள்.

மவுண்ட் பட்டேன் 1947 இல் viceroy ஆக நியமிக்கப்படத்தின்  காரணமே, இந்திய பிராந்தியத்தின் பரீட்சயமே.

மவுண்ட் பட்டன் - Edwina - நேரு - இந்திய  (அன்று) - தொடர்பு, அவர் viceroy ஆக வருவதன் முதலே ஆரம்பித்து விட்டது என்பது பொதுவாக அறியப்பட்ட உண்மை. இது ஒரு இடத்திலும் எழுத்தில் இல்லை. ஆயினும், அண்மையில் பிரித்தானிய பத்திரிகை, edwina டைரிகளின்  சாராம்சத்தை எழுதியது. அதில் மவுண்ட் பட்டன் கடற்படையை பல நாட்கள் வேறு நாடுகள், சமுத்திரத்தில் வழிநடத்தும் நேரத்தில் , எண்ணற்ற டதடவைகள்,    Edwina இன்  தனிமையை தவிர்பதற்கு, இந்தியாவில் வைத்து,  நேருவை துணையாக  விட்டு சென்றதாக. உண்மையில் Edwina உம்  இதை விரும்பினார் என்று. Edwina-நேரு  (பாலியல்) உறவு வெளிப்படையாகா அறியப்பட்டதாயினும் , ஏனெனில், mount பட்டன் ஒரு பாலின சேர்க்கை விருப்பு உள்ளவர் என்பது பொதுவாக அன்று தெரியப்பட்டாலும், நேரு, mount பட்டன் பாலியல் உறவு வைத்திருந்ததை Edwina இந்த டைரிகள் ஆங்காங்கே வரிகளுக்கிடையில் உணர்த்துவதாக.  ஆகவே நேரு, இருவருடனும், அதாவது Edwina, mount பட்டேன் உடன் (பாலியல்) உறவு கொண்டிருந்தார் என்றும், சிலதருணங்களில் இது முத்தலை புணர்ச்சியாகவும் இருந்தற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும்   செய்திகள் வெளியிட்டன.    

மிகவும்  நெருக்கமான, நீண்ட காலா இந்திய, நேரு உறவு.  இதில் தான் ஜின்னா , அதாவது இந்திய - பாகிஸ்தான் பிரிவு பற்றிய மௌன்ட் பட்டன் இன் நாடியை அறிந்திருப்பார்.      

நான் சொல்லியது, பிரிவின் இறுதி தறுவாயிலும், யதார்த்தத்தை, அதாவது முஸ்லீம் பாகிஸ்தான், இந்து, இந்திய  பிரிவை அனுபவத்தின் வாயிலாக கண்டு உணர்ந்த பின்பும், மௌன்ட் பட்டன் இந்திய அரசு, அடையாள பிரிவை விரும்பவில்லை, எதிர்த்தார் என்பது.   

குறிப்பாக, தனிப்பட்ட உறவுகளும் அன்றைய இந்திய, பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு செலுத்தின.

இப்போதும் அது உண்மை, நாடுகளுக்கு இடையிலான உறவில்.

கடஞ்சா, ஜின்னா முதலில் பாகிஸ்தானை கொள்கையாக எடுக்காததன் காரணங்களில் ஒன்றாக தான் மவுண்ட்பேட்டன் பற்றி எழுதினீர்கள். எழுதும் போது உங்களுக்கு தெரியாது மவுண்ட்பேட்டன் 1947 இல் தான் Viceroy ஆக நியமிக்கப்பட்டார் என்று. இப்பொழுது கதையை மாற்றுகிறீர்கள். 🤣

நேரு முதன் முதலில் மவுண்ட்பேட்டனையும் எட்வினாவையும் சந்தித்தது 1946 இல் சிங்கப்பூரில்.

பின் மவுண்ட்பேட்டன் 1947 இல் Viceroy ஆக நியமிக்கப்பட்டு இந்தியாவுக்கு வரும் போது எட்வினாவும் வந்தார். அதன்போது நேருவும் எட்வினாவும் நெருக்கமானார்கள்.

இதற்கும் ஜின்னா ஆரம்பத்தில் பாகிஸ்தானை கொள்கையாக எடுக்காததற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Lara said:

நான் எழுதியது governor general என்ற சொல் பயன்பாட்டில் இருந்த காலம் பற்றி. மீண்டும் வாசித்து பாருங்கள்.

நீங்களே எழுதியது. 

56 minutes ago, Lara said:

1858 க்கு முன் Governor general of India என இருந்தது. 1858-1947 வரை Viceroy and governor general of India (சுருக்கமாக Viceroy of India) என மாறியது.

1858 வருடத்தை குறிப்பிட்டேன்.  அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

45 minutes ago, Kadancha said:

நீங்களே எழுதியது. 

1858 வருடத்தை குறிப்பிட்டேன்.  அவ்வளவு தான்.

1858 க்கு முன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி Governor general என்ற சொல்லை பயன்படுத்தி வந்தது.

1857 சிப்பாய் கலகத்தை தொடர்ந்து விக்டோரியா ராணி இந்தியாவை தனது நேரடிக்கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தார். 1858 இல் சட்டம் மாற்றப்பட்ட போது viceroy என்ற சொல்லை சேர்த்து viceroy and governor general என பயன்படுத்தினார்கள். (அதை சுருக்கமாக viceroy என அழைப்பார்கள்). 1947 வரை இது நீடித்தது. (ஆனாலும் governer general என்றும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டது).

1947 இல் பிரிட்டிஷ் இந்தியா பாகிஸ்தான், இந்தியா என இரு டொமினியன் நாடுகளாக பிரிந்த போது viceroy என்ற சொல் நீங்கி governor general என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்தது. இதை தான் நான் சொல்ல வந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றை தூக்கம் வருகிற மாதிரி பாடம் நடாத்தி அறுப்பவர்களும் உளர் .. இவர்கள் முதலாம் வகை.. "வந்தார்கள் வென்றார்கள்" விகடன் மதன் போல சுவையுற சொல்பவர்கள் இரண்டாம் வகை .. இந்த திரி இரண்டாம் வகை.. விவாதங்கள் அருமை..👍

https://drive.google.com/file/d/1UU1jYXcfiiyuMOQtUFQI4rEZeHE_VFcu/view

டிஸ்கி :

சும்மா யாழுக்கு வாரத விட இங்கு கற்று கொண்டதை எழுதினாலே M.A ( History ) பாஸ் ஆகிடலாம் போல கிடக்கு..

டிஸ்கிக்கு டிஸ்கி :

எம்.ஜி.ஆர் பாடலை திருப்பி திருப்பி விடைத்தாளில் எழுதினாலே இங்கு தேர்ச்சி அடையலாம் எண்டது வேறு விடயம். ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

கடஞ்சா, ஜின்னா முதலில் பாகிஸ்தானை கொள்கையாக எடுக்காததன் காரணங்களில் ஒன்றாக தான் மவுண்ட்பேட்டன் பற்றி எழுதினீர்கள். எழுதும் போது உங்களுக்கு தெரியாது மவுண்ட்பேட்டன் 1947 இல் தான் Viceroy ஆக நியமிக்கப்பட்டார் என்று. இப்பொழுது கதையை மாற்றுகிறீர்கள். 🤣

நேரு முதன் முதலில் மவுண்ட்பேட்டனையும் எட்வினாவையும் சந்தித்தது 1946 இல் சிங்கப்பூரில்.

பின் மவுண்ட்பேட்டன் 1947 இல் Viceroy ஆக நியமிக்கப்பட்டு இந்தியாவுக்கு வரும் போது எட்வினாவும் வந்தார். அதன்போது நேருவும் எட்வினாவும் நெருக்கமானார்கள்.

இதற்கும் ஜின்னா ஆரம்பத்தில் பாகிஸ்தானை கொள்கையாக எடுக்காததற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

கதையை மாற்றுவதற்கு, இது நான் புனைவது அல்ல.

மவுண்ட் பேட்டன், Edwina  இன் நேரு, இந்தியா தொடர்பான முழு ஈடுபடும், காலமும்  உங்களுக்கு தெரியவில்லை என்பது வெளிப்படை.  
 
அதனால், சில சம்பவங்கள், அதுவும் பகிரங்கமாக தெரியும் சம்பவங்கள் உங்களுக்கு முக்கியமாக தெரிகிறது. அந்த சம்பவங்களை, மற்றும் கால வரையறையை மட்டும் வைத்து வரலாற்றை தீர்மானிக்கலாம் என்பதே உங்கள் கருத்தோட்டமாக உள்ளது என்பது எனது  அவதானம்.

1947 மவுண்ட் பட்டன் viceroy நியமனம் ஓர் symbolic நிகழ்வு.  இதற்கான படிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது.   

ஆயினும்,  ஜின்னா நீங்கள் நோக்குவது போன்று , அதாவது snapshot,  momentarily views and  decisions ஊடாக அணுகவில்லை என்பதும் எனது அவதானம்.

குறிப்பாக, ஜின்னா British இன் nuance and subtle diplomatic and political maneuvers ஐ  நன்றாகவே புரிந்து வைத்துள்ளார் என்பது அவரின் அணுகுமுறையில், இறுதிக்கட்டதிலும், தெரிகிறது.  

ஓர் சிறு உதாரணம். முதலில் இந்திய அரசை பிரிப்பது British government தெரிவில்லை, எதிரானது என்று வெளித்தோற்றம் காண்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் Crown அந்த முடிவை British government இடம் விட்டு விட்டதாக காண்பிக்கப்பட்டது. பிரிவிற்கு பின் தான் தெரிகிறது, அவ்வாறான தோற்றப்பாட்டை Crown ஏ தோற்றுவித்து,  British government   இன் தெரிவாக காண்பிக்கப்பட்டது என்று.

இதுவும் வேறு பல maneuvers ஐ ஜின்னா புரிந்ததுளார். அன்றைய நிலையில் (இன்று கூட) இவற்றை உத்தியோக பூர்வ சந்திப்பில் புரிய முடியாது. அத்துடன், முக்கிய அரசியல் மற்றும்  முடிவுகளின் வாதங்கள், கலந்துரையாடல்கள்  என்பது, பிரித்தானியா (இப்போதும்) பொறுத்தவரை, தனிப்பட்ட உறவுகளின் intimacy ஊடாக தவழ்ந்து,   எவ்வாறு drawing rooms அல்லது expensive restraurants இல் தீர்மானிக்கப்படுகிறது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெரிகிறது.

உங்களை பொறுத்தவரையில், மவுண்ட் பட்டேன், Edwina, Neru, இந்திய  உறவு, நீங்கள் சொல்லும் 1946 சந்திப்பில் தொடங்குகிறது.  முதலில் நீங்கள் சொல்லியது 1947 இல் மவுண்ட் பேட்டன் viceroy நியமனம். 1946 சந்திப்பு தகவல் கூட, பகிரங்கமாக  பிரித்தானிய பேரரசின், அரசின், அரச குடும்பத்தால்  உத்தியோகபூர்மாக வெளியிடப்பட்டது.

என்னைப் பொறுத்தவரையில், அந்த உறவு 1930 களில் London இல் மொட்டு  விட்டு அரும்பியது .  பின்பு இந்தியாவில் செழிப்பாக வளர்ந்தது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

எதுவாயினும், நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள். நான் எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.

வாசிப்பவர்கள்  தீர்மானிக்கட்டும் .

Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

நீங்கள் பாகிஸ்தான் என்ற நாடு முன்னர் இல்லை என்பது தெரியாமல் காஷ்மீரிகள் ஆரம்பத்தில் முஸ்லிம் என்ற மத அடையாளத்துடன் போராடியது பாகிஸ்தானுடன் இணைவதற்காக என கூறி விட்டு இப்ப வரைக்கும் விட்டுக்கொடுக்காமல் வாதாடுவது போல் தான் இதுவும்.

ஆங்கிலேயர்கள் ஆரம்பம் முதலே தமது பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டவர்கள். முஸ்லிம்கள், இந்துக்களை பிரிக்கும் வகையில் பல கருத்துகளை தெரிவித்து பிரிவினை காட்டி வந்தார்கள்.

தவிர 1905 இல் தமது நிர்வாக வசதிக்காக என கூறி வங்காள மாகாணத்தை இரண்டாக பிரித்த போது மேற்கு வங்காளம் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்டும் கிழக்கு வங்காளம் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டும் அமைந்தது. அந்நேரம் வங்கப்பிரிவினைக்கெதிராக காங்கிரஸ், இந்துக்கள் போராட்டங்களையும் செய்தார்கள். முஸ்லிம் எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். (வங்காளம் 1911 இல் மீண்டும் ஒரு மாகாணமாக்கப்பட்டது).

https://en.m.wikipedia.org/wiki/Partition_of_Bengal_(1905) 

இதன் மூலம் முன்னரேயே இந்தியாவையும் இந்து நாடு, முஸ்லிம் நாடு என இரண்டாக பிரிக்கும் நோக்கம் ஆங்கிலேயர்களுக்கு இருந்ததை அறிய முடியும்.

Link to comment
Share on other sites

4 hours ago, Kadancha said:

உங்களை பொறுத்தவரையில், மவுண்ட் பட்டேன், Edwina, Neru, இந்திய  உறவு, நீங்கள் சொல்லும் 1946 சந்திப்பில் தொடங்குகிறது.  முதலில் நீங்கள் சொல்லியது 1947 இல் மவுண்ட் பேட்டன் viceroy நியமனம். 1946 சந்திப்பு தகவல் கூட, பகிரங்கமாக  பிரித்தானிய பேரரசின், அரசின், அரச குடும்பத்தால்  உத்தியோகபூர்மாக வெளியிடப்பட்டது.

என்னைப் பொறுத்தவரையில், அந்த உறவு 1930 களில் London இல் மொட்டு  விட்டு அரும்பியது .  பின்பு இந்தியாவில் செழிப்பாக வளர்ந்தது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

எதுவாயினும், நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள். நான் எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.

வாசிப்பவர்கள்  தீர்மானிக்கட்டும் .

1946 சந்திப்பு பற்றி நான் சொல்லும் வரை உங்களுக்கு தெரியாது. 

இப்ப அச்சந்திப்பு பற்றி பகிரங்கமாக பிரித்தானிய அரச குடும்பம் உத்தியோகபூர்வமாக கூறியதாக சொல்கிறீர்கள். அச் சந்திப்பில் என்ன நடந்தது என தெரிந்தால் எழுதுங்கள், வாசிப்போம்.

நீங்கள் பிரித்தானிய பத்திரிகை எட்வினாவின் டயறியிலுள்ளதை வெளியிட்டதாக சொன்னவற்றில் பல விடயங்கள் உண்மையில்லை. அது போல் தான் 1930 களில் அவர்கள் உறவு மொட்டு விட்டு அரும்பியது என கூறுவது.

///மவுண்ட் பட்டன் - Edwina - நேரு - இந்திய  (அன்று) - தொடர்பு, அவர் viceroy ஆக வருவதன் முதலே ஆரம்பித்து விட்டது என்பது பொதுவாக அறியப்பட்ட உண்மை. இது ஒரு இடத்திலும் எழுத்தில் இல்லை. ஆயினும், அண்மையில் பிரித்தானிய பத்திரிகை, edwina டைரிகளின்  சாராம்சத்தை எழுதியது. அதில் மவுண்ட் பட்டன் கடற்படையை பல நாட்கள் வேறு நாடுகள், சமுத்திரத்தில் வழிநடத்தும் நேரத்தில் , எண்ணற்ற டதடவைகள்,    Edwina இன்  தனிமையை தவிர்பதற்கு, இந்தியாவில் வைத்து,  நேருவை துணையாக  விட்டு சென்றதாக. உண்மையில் Edwina உம்  இதை விரும்பினார் என்று.///

இதை எந்த பிரித்தானிய ஊடகத்தில் வாசித்தீர்கள்? அதுவும் 1947 இற்கு முன்னம் இடம்பெற்றதாக. செய்தி இணைப்பை தாருங்கள். பார்ப்போம்.

Link to comment
Share on other sites

On 8/19/2019 at 7:22 PM, Kadancha said:

தற்போதையா நிலையில், ஜம்முவில் 67% இந்து டோக்ராஸ், மிகுதி,  பஞ்சாபி இந்துக்கள், மேற்கு பஞ்சாபில் இருந்து பிரிவின் பொது ஜம்முவிற்கு வந்தவர்கள், 1980 துரத்தப்பட்ட காஸ்மீரி இந்துக்களும் ஜம்முவில் உள்ளார்கள், சில மாவட்டங்களில் காஸ்மீரி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள்.

1947 இல் ஜம்மு 61% முஸ்லிம்களை கொண்டிருந்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து ஜம்முவில் மன்னர் ஹரிசிங் மற்றும் RSS இணைந்து 2 லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். 5 லட்சம் வரையான முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தார்கள். அதன் பின்பே ஜம்மு இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதியாக மாறியது.

தவிர 1980 களில் காஷ்மீரிலிருந்து வெளியேறிய இந்துக்களில் ஒருபகுதியினர் மட்டுமே உண்மையில் அகதிகள். இன்னொரு பகுதி, காஷ்மீர் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு வசதியாக இந்துத்துவவாதிகளால் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

See the source image

See the source image

(இந்த படங்களை பார்க்கும்போது தயவு செய்து அந்தக்கால காமராவையும் கருத்தில் கொள்ளுங்கள் 
இது ஏற்கனவே நீங்கள் எல்லோரும் பார்த்த படங்கள்தான். அந்த கமராக்கள் பற்றிய தெளிவுதான் இந்த உறவு பற்றி தெளிவு படுத்த கூடியது) 

எரியும் நெருப்பில் என்னால் முடிந்தளவு .....
என் பங்குக்கு பெட்ரோலை ஊற்றி விடுகிறேன். 

எட்வீனா உடல் உறவை நேருவோடு மட்டும் வைத்திருக்கவில்லை 
ஜின்னாவோடும் வைத்து இருந்தார் என்பது இன்னொரு செய்தி 
எட்வீனாவை பொறுத்தவரை அரசியல் தாக்கமோ அரசியலோ அவருடைய மூளையில் இருக்கவில்லை 
ஏதாவது வலிமை உள்ள (அரசியல்  அதிகாரம்  வீரம்) ஆண்களை தனது கட்டிலில் படுத்துவது என்பதுதான் 
அவரது மூளைக்கு எட்டியது. அதை அவரது இளமை காலத்தில் இருந்தே செய்து வந்து இருக்கிறார். ஆனாலும் மௌன்பேட்டேன் இவரை உபயோகித்தார் என்பதும் இவருடைய கட்டில் உறவு ஆடவரின் தொடர்புகள் அவருக்கு உதவுவதால் இவர் பலருடன் கட்டில் உறவை தொடர இவருக்கு அது உதவியது என்பதுதான் புரியக்கூடியது. 

இது வெறும் கொன்சிபிரசி கதையாக இருக்கலாம் 
இப்போது கடிந்தங்கள் மட்டுமே ஆதாரம் ....
இந்த ஆதாரத்தில்தான் .... இன்னுமொரு ஆதாரமும் இருக்கிறது 
பல கடிதங்களை நேருவுக்கும்  எட்வீனாவுக்கும் இடையில் பரிமாறியது ஜின்னாதான் 
இது இருவரின் கடிங்களிலும் இருக்கிறது. ஆகவே ஜின்னாவுக்கும் எட்வீனாவுக்கும் இடையிலான உறவு என்ன?என்ற கேள்விக்கு பதிலாக இதுக்குள் ஜின்னாவையும் சிலர் இழுத்து விட்டிருக்கலாம்.  

இந்து முஸ்லீம் சண்டைகள்..........
கேடு கெட்ட இந்து பிராணிகளால்தான் நடந்து வந்து இருக்கிறது (1800-1947)
அதுக்கு அக்பர் கஜனி முகமது போன்றவர்களின்  படையெடுப்பும் இந்து கோவில்களின் கொள்ளையடிப்பும் 
இஸ்லாம் மதம் சார்ந்த மசூதிகளின் வடிவெடுப்பும் உறுதுணையாக அமைந்து  இருக்கலாம்.
இது ஒரு ஆயிரம் வருட கால பகைமை உணர்வு 

தமிழ் சேர மன்னர்கள் இமயம் வரை ஆண்டவர்கள் என்பது வரலாறு. இவர்கள் பெரும் படையெடுப்புடன் போர் புரிந்து ஆண்டிருப்பார்கள் என்று நான் கருதவில்லை அதற்கு அந்த கால நேரம்தான் காரணம். ஒன்றில் ஏற்கனவே  அங்குவரை ஒரே மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும் இல்லையேல் பொருள் பூகோள அறிவு வேண்டி  நகர்ந்து இருக்க  வேண்டும். தமிழ் மொழி எப்போதோ வளர்ச்சி கண்டதால் நாம் அதிர்ஷ்டசாலிகள்  எமக்கு  படிக்க  கிடைத்த சேர மன்னன் செங்குட்டுவனின் சிலப்பதிகார காலத்தில் கூட மற்ற இடங்களில் என்ன நடந்து கொண்டு இருந்தது என்பது  பெரிதாக எழுதில் இல்லை. இதை ஏன் எழுதுகிறேன் என்றால்  இப்போவரை  இப்போதைய இந்திய எல்லைக்குள் இஸ்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதால். இஸ்லாம் என்ற மதமே  இதன் பின்னர்தான் உருவாக்கி இருக்கலாம் என்றால் கூட ஆதாரம் கொண்டு மறுக்க முடியாது . 

இப்போது நேரு_ ஜின்னாவுக்கு வருகிறேன் ...
தென் ஆப்பிரிக்காவில் இருந்துவந்த காந்தியை இந்தியாவில் அறிமுக படுத்தியதே ஜின்னாவும் அவரது சகோதரியும்தான். ஏற்கனவே இந்துக்களின் ஆதிக்கத்தால் மனமுடைந்து இருந்த ஜின்னா... காந்தி ஒரு நடுநிலையாளராக  இருப்பார் என்று கருதினார்கள். அதனால்தான் ஜின்னா காந்தியை ஏற்றுக்கொண்டு இரவு பகலாக உழைத்தார் ......... காந்தி பற்றிய நல்லெண்ணத்தை ஜின்னா மனதில் உருவாக்கியது அவரது சகோதரி பாத்திமாதான். ஜின்னாவை பற்றி நான் வாசித்ததில் (பெரும்பாலும் இந்தியர்கள் எழுதியது) 
அவர் எப்போதும் இந்து- முஸ்லீம் சண்டைகளை வெறுத்தே வந்தார் ....... அதுக்கு இன்னொரு காரணம் ஜின்னா  குடும்பம் முஸ்லிம்கள் இல்லை என்பதாகவும் இருக்கலாம் ..... இவர்கள் இடையில் எமது இசைப்புயல் ரகுமான்  போல முஸ்லீம் ஆனவர்கள்....... அதுக்கு முக்கிய காரணம் சாதிவெறிதான்  ஜின்னாவின் தந்தை குடும்பம் குஜராத்தில்  பெரும் மீன்பிடி வியாபாரம் மூலம் செல்வந்தர் ஆனவர்கால்  ..... இவர்கள் மீனவர்கள் என்பதால் இவர்கள் தாழ்த்தப்படுவதை விரும்பாததால் முஸ்லிம்களாக மாறினார்கள். இதனால் ஜினாவுக்கு  இந்து இஸ்லாம்  இரண்டும் ஒன்று போலவே இருந்து இருக்கலாம் ..... ஆனால் வெறி பிடித்த இந்துக்கள்  தொடர்ந்தும்  ஆதிக்க அதிகாரம் செய்வதை பொறுக்காமலேயே அகில இந்திய முஸ்லீம் அமைப்பை உருவாக்கினார்கள்.

மேலே லாரா எழுதிவருதுதான் உண்மை நிலை (அதுக்காக கடஞ்சா எழுதுவது பொய் இல்லை)
சிலவற்றை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஒரே விடயம்தான் இருவரும் எழுதுவது. பாகிஸ்தான் பிரிவை கூட ஜின்னா முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை ..... கசுமாளாம்  காந்தியின் அசமந்த போக்கும் மிருதுவான இந்து ஆதரிப்பும்தான் ஜின்னாவை பாகிஸ்தான் நோக்கி செல்ல தூண்டியது. 
இப்போதைய மோடியின்  இந்துவாதா மற்றும் ஹிந்தி மொழி திணிப்பும் ஒருவேளை இந்தியாவை இன்னும் பிரிக்கலாம்  இந்திய பிரிவு என்பது அமெரிக்க - சீன இரு வல்லரசுக்கும் சாதகமானது என்பது இப்போதைய அரசியல் சூழலாகவும்  இருக்கிறது. 

மௌன்பேட்டேன் குறித்து ஜின்னா பெரிதும் அக்கறைபடுத்தி இருக்க வாய்ப்பு இல்லை 
எட்வீனாவுடன் நெருக்கமான உறவு ஜின்னாவுக்கும் இருந்து இருக்கிறது. அவர்களுடைய கோமாளித்தனம் பற்றி அவர்  ஏற்கனவே அறிந்துகொண்டு இருப்பர் என்றுதான் நான் நம்புகிறேன். 

See the source image

See the source image

See the source image

NEHRU WITH PAMELA MOUNTBATTEN AT PALAM ; 1948.

NEHRU,INDIRA GANDHI, AND LORD MOUNTABTTEN.

ஜின்னு குட்டி ...

See the source image

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மவுண்ட் பேட்டன் பிரபு குடும்ப விடுப்பு (நானும் எழுதினேன்) சுவரசியமான ஆனால் தேவையற்ற விடயம்.

தேவையான கேள்விகளும் பதிலும் பின்வருவனவே:

1. கஸ்மீரி முஸ்லீம்கள் கஸ்மீரின் பூர்வகுடிகளா? ஆம்

2. இந்தியா கஸ்மீரில் எடுத்த நடவடிக்கை நம்பிக்கை மீறலா? ஆம். மட்டுமில்லாமல் ஒரு சர்வதேச ஒப்பந்த முறிப்பும் கூட.

அவ்வளவுதான் மேட்டர்.பாவம் மவுண்ட் பேட்டன், தோச்சு காயப்போட்டது போதும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இங்கே மவுண்ட் பேட்டன் பிரபு குடும்ப விடுப்பு (நானும் எழுதினேன்) சுவரசியமான ஆனால் தேவையற்ற விடயம்.

என்னை பொறுத்தவரையில், நாம் தோற்றுவிட்டது என்றால் இதில் தான், அதாவது தனிப்பட்ட உறவுகளுக்கூடாக அரசியலை, நலன்களை நகர்த்த பழகாதது. சிங்களம் இதில் கை தேர்ந்தது என்பது சொல்லத் தேவையில்லை. 

என்னை பொறுத்தவரையில், இந்திய - பகிஸ்தான் பிரிவில் இந்த உறவே உயிர் நாடி. மிகுதி எல்லாமே side show, அழிவுகள் எவ்வளவு பெரிதாக இருப்பினும்.

ஆயினும், ஜின்னா வும் தனிப்பட்ட உறவை நாடி பிடித்து கையாள்வதில் சளைத்தவர் அல்ல, இந்திய அரசை பிரிக்க விரும்பாத, எதிர்த்த Crown ஐ, எதிர் வளமாக,  பிரிவை விட்டது. மருதங்கேணி சொல்லியது கூட காரணமாக இருக்கலாம். ஜின்னா MI6, பிரிட்டிஷ் Civil Service தனது கைக்குள் வைத்திருந்தலா, Britsh Crown பிரிவுக்கு விட்டது?

மருதங்கேணி சொல்லிய, மவுண்ட் பட்டன் edwina ஊடக நேருவின் சிந்தனையோட்டத்தை (உளவு) அறிய, நேருவும் edwina ஊடக மவுண்ட் பட்டன், Crown சிந்திப்பதை (உளவு) அறிந்திருப்பர். edwina mi6 உளவாளி?      

ஆனாலும், மவுண்ட் பட்டன் - edwina - நேரு என்று இருந்த உறவு, நேரு - edwina - பட்டன்  special relationship ஆக மாறியதில் ஒரு சந்தேகமும் இல்லை.  

அப்படி ஒரு கேவலமான நிலைக்கு எமது மன்னர்களோ தலைவர்களோ இறங்கியதில்லை 

80களில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு உதவியாக 
இரண்டு அழாகான சிங்கள பெண்களை சிங்கள அரசு விட்டுவிடும் .... உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் 
இவர்களை கேளுங்கள் என்றும் சொல்லி விடுவார்கள் ..... அந்த பெண்களுக்கும் அவர் எதை கேட்டாலும் செய்துவிடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு நாட்டு நடப்பை பார்த்துக்கொண்டே அவர்கள் செய்தி எழுதுவார்கள். 

நாம் பேச்சுவார்த்தை என்று ஜெனிவா போனாலும் மக்கள் இறந்தார்கள் என்பதை 
வாதிட்டுதான் நிரூபிக்க வேண்டியதாக இருந்தது. 

என்னை பொறுத்தவரையில் இந்த கேவலத்தில் வெல்லுவதைவிட தோற்பது மேல்.

இங்கு அமெரிக்காவில் கூட பொருளாதார ரீதியாக கொடிகட்டி பறந்தார் ஈழத்தமிழர் ராஜரத்தினம் என்பர் முதன்மை நிறுவனங்களில் வேலைபார்க்கும் ... அல்லது வேலைபார்க்க இந்திய பெண்களை அனுப்பி அவர்களை மேலதிகாரிகளின்  படுக்கைக்கு அனுப்பி உள்வீட்டு தகவல்களை திரட்டி பங்குசந்தையில் பணம்பார்த்து வந்தார் .... இவருடைய கையாளான ஒரு பெண் இன்டெல் கொம்பனியின் (Intel) மூன்றாம் தரம் வரை உயர்ந்து சென்றார்  ...........  பெரிய படிப்பு .... அதிகளவான சம்பளம் ......பெரிய வங்களா வீடு வசதி   எல்லாம் இருந்தவர்கள் இன்று சிறையில் இருக்கிறார்கள்... இதிலும்விட இருந்த வசதியுடன் இருந்து இருக்கலாம் எல்லோரும் மிகுந்த திறமைசாலிகளும் கூட 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Lara said:

நீங்கள் பாகிஸ்தான் என்ற நாடு முன்னர் இல்லை என்பது தெரியாமல் காஷ்மீரிகள் ஆரம்பத்தில் முஸ்லிம் என்ற மத அடையாளத்துடன் போராடியது பாகிஸ்தானுடன் இணைவதற்காக என கூறி விட்டு இப்ப வரைக்கும் விட்டுக்கொடுக்காமல் வாதாடுவது போல் தான் இதுவும்.

யாருக்கு எது தெரியும், தெரியாது என்பதை எடை போடவோ அல்லது கரிசனை கொண்டோ  நான் இங்கு எழுதவில்லை. 

மேலும் வரலாற்றை ஓரிரு சம்பவங்கள் ஊடாகவோ பார்க்கவில்லை.

விளக்கமாக சொல்கிறேன். 

நான் சொன்னது, பாகிஸ்தான் கருப்பொருள் மற்றும் அடையாளம், இஸ்லாம் மத அடிப்படையில், 19ம் நூற்றாண்டு (1850 ஆகப் பிந்திய அளவில்) வந்துவிட்டது.

முஸ்லீம் - இந்து எனும் பிரிவு முற்றி, கொதி நிலை அண்மிக்கும் சூழலில் (இது சொல்லவில்லை ஆனால் வெளிப்படையானது, context),   1932 இல் (1931 இல் ஹரி சிங் ஆட்சியின் ராணுவத்தால் கொடூரமாக ஓடுப்பட்ட காஷ்மீரி முஸ்லிகளின் போராட்டம் தொடர்ந்து) , காஷ்மீரி முஸ்லிம்களின் உரிமைப் போரத்திட்டற்காக இஸ்லாமிய அடையாளத்தை முதலில் எடுத்ததால், காஸ்மீரிகள் தவிர, வெளியார்களின் புரிதல் (அந்த நேரத்தில்), காஷ்மீரிகள் பாகிஸ்தான் எனும் மத அடிப்படியிலான அடையாளத்தோடு சேர்வதற்கே, ஏனெனில், காஷ்மீரின் பெரும்பான்மை முஸ்லிம்கள்.

எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் கருத்துக்களை, விதண்டா வாதம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஆயினும், காஷ்மீரிகள் வெளியாரின் புரிதலை வெறுத்தனர், ஏனெனில்  காஷ்மீரிகள் முஸ்லிம்கள்  போராடியது தமது உரிமைக்காக மன்னராட்சியை எதிர்த்து. 

இவ்வளவு சண்டையின் பின்பும்,  தமிழ் நாடு ஓர்  தனி நாடு இல்லாமலும், ஏறத்தாழ இதே வாதத்தை (மொழி, மதம் பற்றி) சிங்களம் பல வெளிநாட்டு டிப்ளோமட்ஸ் இடம், தமிழ் நாடு, வட-கிழக்கு பற்றி வைத்ததை,  ஏறத்தாழ அனைவருமே ஏற்றுக் கொண்டனர். இது எனது நட்பு வட்டாரித்திடம்  நான் அறிந்தது.

நீங்கள் இதை அறிந்திருந்தால், வெளியார் எப்படி மத, மொழி அடையாளங்கள் பக்கத்தில் வேறு வேறாக இருபின்னும், 21ம் நூறாண்டிலும்,  அவை ஒண்றிணையாக் கூடிய சாத்தியங்களை அதன் விளைவுகளை நோகிக்கிறார்கள் என்பதின் தாக்கத்தை புரிந்திருப்பீர்கள்.             

உங்களுக்கே, உங்களின்  கருத்தான பாகிஸ்தான் எனும் கருப் பொருள் (நீங்களே சொல்லிய பாகிஸ்தான் எனும் சொல்லே அல்லது பெயரே) 20ம் நூற்றாண்டில்  வந்தது என்பதை முதலில் எல்லோரையும் (முக்கியமாக பகிரங்க தரவுக் கற்றையான விக்கிபீடியா) ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டிய அவசியம் உண்டு. இதை அன்றே சொல்லிவிட்டேன்.

பாகிஸ்தான், இந்திய அரசுகள் காஸ்மீர் ஐ பங்கு போட்ட பின், Azad காஸ்மீர் பல மொழி, இன வேறுபாடுகளுடன் முஸ்லீம் அடையாளத்தோடு  பாகிஸ்தானோடு பொதுவாக அமைதியாகவே இருக்கிறது. Azad காஷ்மீர் என்பது விடுதலை அடைந்த காஷ்மீர் எனும் பொருள்.

கில்கிட்-பல்டிஸ்டான் பகீதநாடு இணைய விரும்பியும், அதை பாகிஸ்தான் அண்மைய வரை செய்யவில்லை.

ஹரி சிங் எவ்வாறு காஷ்மீர் முஸ்லிகளை ஒடுக்கி, வறுமையாக, தாழ்த்தி வைத்திருந்தாரோ, அது போலவே  பாகிஸ்தான் கில்கிட்-பல்டிஸ்டான் 1990 ஐ வைத்திருந்தும் (crime regulation), பாகிஸ்தானிலோ அல்லது Azad காஸ்மீர் இல் இருக்கும் உரிமைகள் கூட இல்லாமல் வைத்திருந்தும், ஷியா இஸ்லாம் கில்கிட்-பல்டிஸ்டான், சுனி இஸ்லாம் பாகிஸ்தானோடு  இணைவதேயே விரும்பியது. அது அண்மையில் கைகூடியது.  

1947 இல் கூட, காஷ்மீர் பிரச்னையை வெளியார், காஸ்மீர் வேறு, ஹிந்தியா  வேறு, பாகிஸ்தான் வேறு என்று தெரிந்தும், எவ்வாறு விளங்கி கொண்டனர்?

எல்லாவற்றிலும், இந்து-முஸ்லீம் என்ற பிரிவும்,  முஸ்லீம் என்ற மத அடையாளமே மேலோங்கி முடிவுகளுக்கு இட்டுச் சென்றது.

Link to comment
Share on other sites

21 hours ago, Kadancha said:

மருதங்கேணி சொல்லிய, மவுண்ட் பட்டன் edwina ஊடக நேருவின் சிந்தனையோட்டத்தை (உளவு) அறிய, நேருவும் edwina ஊடக மவுண்ட் பட்டன், Crown சிந்திப்பதை (உளவு) அறிந்திருப்பர். edwina mi6 உளவாளி?      

ஆனாலும், மவுண்ட் பட்டன் - edwina - நேரு என்று இருந்த உறவு, நேரு - edwina - பட்டன்  special relationship ஆக மாறியதில் ஒரு சந்தேகமும் இல்லை.  

மவுண்ட்பேட்டன் எட்வினாவை பயன்படுத்தி நேருவை கையாண்டார். இதை பமீலாவே கூறியிருந்தார்.

ஆனால் நேரு எட்வினாவை பயன்படுத்தி எதையும் சாதிக்கவில்லை.

நேரு பிரியாத இந்தியா, அதில் மத்தியில் அதிகாரம் குவிந்திருக்க வேண்டும், சுதந்திரம் கிடைக்கும் போது முழுமையாக கிடைக்க வேண்டுமே தவிர டொமினியன் நாடாக இருக்க கூடாது என்றெல்லாம் விரும்பினார். ஆனால் நடந்தது தலைகீழாக.

காஷ்மீர் விடயத்திலும் மவுண்ட்பேட்டன், எட்வினா தலையீடு இருந்தது. 

தவிர எட்வினா சொன்னதுக்காக காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா வரை கொண்டு சென்று அதை இன்னும் பூதாகரமாக்கியது தான் நடந்தது. 

இங்கு நேரு வெறும் puppet.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

அப்படி ஒரு கேவலமான நிலைக்கு எமது மன்னர்களோ தலைவர்களோ இறங்கியதில்லை

ஆனால், காமம் / பாலியல் என்பதை தவிர்த்தும், எமது மன்னர்கள், தலைவர்கள் தனிப்பட்ட உறவுகள் ஊடாக நலன்களை நகர்த்தியது இல்லை என்றே சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Lara said:

ஆங்கிலேயர்கள் ஆரம்பம் முதலே தமது பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டவர்கள். முஸ்லிம்கள், இந்துக்களை பிரிக்கும் வகையில் பல கருத்துகளை தெரிவித்து பிரிவினை காட்டி வந்தார்கள்.

23 hours ago, Lara said:

இதன் மூலம் முன்னரேயே இந்தியாவையும் இந்து நாடு, முஸ்லிம் நாடு என இரண்டாக பிரிக்கும் நோக்கம் ஆங்கிலேயர்களுக்கு இருந்ததை அறிய முடியும்.

ஆங்கிலேயருக்கு, ஒரே அரசாகவா   கொடுத்தார்கள் (இந்தப் பிராந்தியத்தின் அன்றய ஆட்சியாளர்கள்), அவர்கள் அப்படியே ஒன்றான இந்திய அரசாக திருப்பி தருவதற்கு?   

ஆங்கிலேயர் அன்று பிரித்துவிட்டிருந்தால், எப்படி நிம்மதியாக , திருப்தியாக  வாழ்ந்திருப்போம் என்று இன்றும் ஏக்கப் பெருமூச்சு  விடும் தேசங்கள் இந்திய அரசின், சொறி சிங்கள அரசின்  கீழ் இல்லையா?  

ஜின்னாவை விட பாகிஸ்தானியர் அதிஷ்டசாலிகள், ஜின்னாவை விட பாகிஸ்தானியர் அதிஷ்டசாலிகள், ஆங்கிலேயர் (பிரிட்டிஷ் civil  service) முஸ்லிம்களை வேறு தேசமாக விளங்கியமையால்.

எனது கற்பனையை ஓடவிட்டுப் பார்த்தேன் அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லாரா பாப்ஸும் கடஞ்சாவும் பாகிஸ்தான் வரலாற்றை புட்டுப்புட்டு வைப்பதை பிரதமர் இம்ரான்கானுக்கு தெரியப்படுத்தினால், அவர் கட்டாயம் தமிழைப் படித்து தன்நாட்டு வரலாற்றை சரியாக அறிந்துகொள்வார்😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ko.png😄

Link to comment
Share on other sites

3 hours ago, Kadancha said:

ஆங்கிலேயருக்கு, ஒரே அரசாகவா   கொடுத்தார்கள் (இந்தப் பிராந்தியத்தின் அன்றய ஆட்சியாளர்கள்), அவர்கள் அப்படியே ஒன்றான இந்திய அரசாக திருப்பி தருவதற்கு?   

ஆங்கிலேயர்கள் ஆண்ட பிரித்தானிய இந்தியாவும் இன்று நாம் பார்க்கும் இந்தியாவும் வேறு.

ஆங்கிலேயர் காலத்தில் முக்கியமான பகுதிகளை பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களாகவும் முக்கியமற்ற பகுதிகளை மன்னர் சமஸ்தானங்களாவும் (562) வைத்திருந்தார்கள். 

பிரித்தானிய இந்திய மாகாணங்களாக ஆளப்பட்ட பகுதிகளையே இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக பிரித்து விட்டு மன்னர் சமஸ்தானங்களை பாகிஸ்தானுடனோ, இந்தியாவுடனோ இணையுமாறு அல்லது தனி நாடாக இருக்குமாறு கூறினார்கள்.

இன்றைய இந்தியா மன்னர் சமஸ்தானங்களையும் தனது பகுதியாக கொண்ட ஒன்றியம்.

3 hours ago, Kadancha said:

ஆங்கிலேயர் அன்று பிரித்துவிட்டிருந்தால், எப்படி நிம்மதியாக , திருப்தியாக  வாழ்ந்திருப்போம் என்று இன்றும் ஏக்கப் பெருமூச்சு  விடும் தேசங்கள் இந்திய அரசின், சொறி சிங்கள அரசின்  கீழ் இல்லையா?  

ஏக்கப்பெருமூச்சு விடும் தேசங்கள் உள்ளன தான். ஆனால் அனைத்தையும் பிரித்து வைப்பதற்கான தேவை ஆங்கிலேயர்களுக்கு இல்லை.

1937 இல் பர்மாவை பிரித்தார்கள். விடுதலையின் போது பூட்டானையும் சுதந்திர நாடாக இயங்க அனுமதித்தார்கள். (பூட்டான் ஏற்கனவே தனி நாடு தான். 1910 இல் செய்த ஒரு ஒப்பந்திலிருந்து விடுதலை). இப்படி ஒரு சில உள்ளன.

3 hours ago, Kadancha said:

ஜின்னாவை விட பாகிஸ்தானியர் அதிஷ்டசாலிகள், ஜின்னாவை விட பாகிஸ்தானியர் அதிஷ்டசாலிகள், ஆங்கிலேயர் (பிரிட்டிஷ் civil  service) முஸ்லிம்களை வேறு தேசமாக விளங்கியமையால்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்கியது பிரித்தானியா, அமெரிக்காவின் தேவைக்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kadancha said:

என்னை பொறுத்தவரையில், நாம் தோற்றுவிட்டது என்றால் இதில் தான், அதாவது தனிப்பட்ட உறவுகளுக்கூடாக அரசியலை, நலன்களை நகர்த்த பழகாதது. சிங்களம் இதில் கை தேர்ந்தது என்பது சொல்லத் தேவையில்லை. 

என்னை பொறுத்தவரையில், இந்திய - பகிஸ்தான் பிரிவில் இந்த உறவே உயிர் நாடி. மிகுதி எல்லாமே side show, அழிவுகள் எவ்வளவு பெரிதாக இருப்பினும்.

ஆயினும், ஜின்னா வும் தனிப்பட்ட உறவை நாடி பிடித்து கையாள்வதில் சளைத்தவர் அல்ல, இந்திய அரசை பிரிக்க விரும்பாத, எதிர்த்த Crown ஐ, எதிர் வளமாக,  பிரிவை விட்டது. மருதங்கேணி சொல்லியது கூட காரணமாக இருக்கலாம். ஜின்னா MI6, பிரிட்டிஷ் Civil Service தனது கைக்குள் வைத்திருந்தலா, Britsh Crown பிரிவுக்கு விட்டது?

மருதங்கேணி சொல்லிய, மவுண்ட் பட்டன் edwina ஊடக நேருவின் சிந்தனையோட்டத்தை (உளவு) அறிய, நேருவும் edwina ஊடக மவுண்ட் பட்டன், Crown சிந்திப்பதை (உளவு) அறிந்திருப்பர். edwina mi6 உளவாளி?      

ஆனாலும், மவுண்ட் பட்டன் - edwina - நேரு என்று இருந்த உறவு, நேரு - edwina - பட்டன்  special relationship ஆக மாறியதில் ஒரு சந்தேகமும் இல்லை.  

இந்தியப் பிரிவினைக்கு, சுதந்திரத்துக்கு இதை விட பல வலுவான காரணிகள் உளன.

1. அமெரிக்காவின் பிரித்தானிய சாம்ராஜ்ய எதிர் நிலைப்பாடு. 2ம் யுத்ததின் போதே படிபடியாக சம்ராஜ்யம் உடைக்கபட வேண்டும் என்பதை வலியுறுத்திய அமேரிக்கா, போரின் பின் வங்குரோத்தாகிவிட்ட பிரித்தானியாவை கிட்டத்தட்ட இது நோக்கி முட்டித்தள்ளியது.

2. லேபர் ஆட்சிக்கட்டில் ஏறியது. லேபர்பாட்டி சாம்ராஜ்யம் ஒரு சுரண்டல் பொறிமுறை என நம்பிய பல முற்போக்குவாதிகளால் வழிநடத்தப் பட்டது. ஆகவே இந்தியாவை எப்படியும் கைகழுவுவது என்பது கொள்கை முடிவு.

3. உண்மையில் இந்தியா பிரிவதை விட, ஒன்றாய் இருப்பதையே பிரிட்டன் விரும்பியது. நல்லெண்ணம் ஒன்றும் இல்லை. முஸ்லீம்கள், ஹிந்துக்கள் சமமாக இருக்கும் இந்தியா தமக்குள் அடிபட்டு, ஒரு போதும் ஒரு வல்லரசாக வராது என்பதே அவர்கள் கணிப்பு. இது உண்மையும் கூட. காஸ்மீர் பிரச்சனையை தவிர்த்துப் பார்த்தால், பிரிவினைக்கு பின் இந்தி-பாக் உறவில் வேறெந்த விரிசலும் இல்லை. ஒன்று பட்ட நாடாய் இருந்திருந்தால்- யூகோஸ்லாவியாவை விட நீண்ட கொடிய உள்நாட்டு யுத்தம் நடந்திருக்கும்.

4. ஜின்னா ஒரு கட்டத்தில், அனுபவம் மூலம், ஹிந்துக்களோடு சேர்ந்து வாழ்வது தன் மக்களை காலாகாலம் 2ம் தர குடிகளாக ஆக்கிவிடும் என்ற உண்மையை உணர்கிறார். அதன் பின் எப்பாடு பட்டாவது பாகிஸ்தானை அடைவது என்ற முடிவெடுக்கிறார். ஜின்னாவின் முழுவாழ்வும் பம்பாய், லண்டனில்தான். பம்பாயில் மிகப்பெரிய மாட மாளிகை, இவை எல்லாவற்றையும் துறந்து, தன் மக்களின் எதிர்கால சுதந்திர வாழ்வை மட்டுமே குறியாக கொண்டு ஜின்னா அழுங்கு பிடி பிடித்தன் விழைவே இந்தியப் பிரிவினை. தனது பதவியை விட்டுத்தாரேன் என நேரு பேரம் கூடப் பேசினார். ஆனால் ஜின்னா மசியவில்லை. இதே தூரநோக்கும், கறுவா தோட்ட மாளிகளை தியாகம் செய்யும் பற்றுறுதியும் எம் தலைவர்களிடம் அன்றில்லை. அதுதான் நாம் இன்றுவரை 2ம் தர குடிகளாக உழல்கிறோம்.

5. இந்த வரலாற்றின் பிண்ணனி இதுதான். நேரு-எட்வீனா இடையே நெருக்கமான உறவு இருந்தது உண்மை. அது பாலியல் உறவா இல்லையா என்பது விவாதத்துக்குரியது. ஆனால் ஜின்னா எட்வீனா இடையே உறவு இருந்தது என்பதுக்கு ஒரு ஆதாரமும் இல்லை. எது எப்படி இருப்பினும் 1946-1948 வரையான துணைக்கண்ட வரலாறு எட்வீனாவின் உள்ளாடையில் தீர்மானிக்கப் பட்டது என்பது வெறும் sensationalization. இந்திய சுதந்திரத்துக்கு, பாகிஸ்தான் பிரிவினைக்கு பல முக்கிய காரணிகள் துணைக் கண்டத்துள்ளேயும் வெளியேயும் இருந்தன. இதில் எட்வீனாவும் மவுண்ட்பேட்டனும் வெறும் காற்புள்ளிகள் (footnotes).

6. தனிமனிதர்கள் ஊடான அணுகுமுறையை, புலிகளின் உள்ளக அமைப்புகள் செய்யவில்லை எனிலும் கேபி குழுவுக்கு இந்த சுதந்திரம் இருந்தது.

16 hours ago, Maruthankerny said:

அப்படி ஒரு கேவலமான நிலைக்கு எமது மன்னர்களோ தலைவர்களோ இறங்கியதில்லை 

80களில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு உதவியாக 
இரண்டு அழாகான சிங்கள பெண்களை சிங்கள அரசு விட்டுவிடும் .... உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் 
இவர்களை கேளுங்கள் என்றும் சொல்லி விடுவார்கள் ..... அந்த பெண்களுக்கும் அவர் எதை கேட்டாலும் செய்துவிடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு நாட்டு நடப்பை பார்த்துக்கொண்டே அவர்கள் செய்தி எழுதுவார்கள். 

நாம் பேச்சுவார்த்தை என்று ஜெனிவா போனாலும் மக்கள் இறந்தார்கள் என்பதை 
வாதிட்டுதான் நிரூபிக்க வேண்டியதாக இருந்தது. 

என்னை பொறுத்தவரையில் இந்த கேவலத்தில் வெல்லுவதைவிட தோற்பது மேல்.

இங்கு அமெரிக்காவில் கூட பொருளாதார ரீதியாக கொடிகட்டி பறந்தார் ஈழத்தமிழர் ராஜரத்தினம் என்பர் முதன்மை நிறுவனங்களில் வேலைபார்க்கும் ... அல்லது வேலைபார்க்க இந்திய பெண்களை அனுப்பி அவர்களை மேலதிகாரிகளின்  படுக்கைக்கு அனுப்பி உள்வீட்டு தகவல்களை திரட்டி பங்குசந்தையில் பணம்பார்த்து வந்தார் .... இவருடைய கையாளான ஒரு பெண் இன்டெல் கொம்பனியின் (Intel) மூன்றாம் தரம் வரை உயர்ந்து சென்றார்  ...........  பெரிய படிப்பு .... அதிகளவான சம்பளம் ......பெரிய வங்களா வீடு வசதி   எல்லாம் இருந்தவர்கள் இன்று சிறையில் இருக்கிறார்கள்... இதிலும்விட இருந்த வசதியுடன் இருந்து இருக்கலாம் எல்லோரும் மிகுந்த திறமைசாலிகளும் கூட 

Link to comment
Share on other sites

On 9/11/2019 at 1:50 AM, Kadancha said:

ஆயினும், ஜின்னா வும் தனிப்பட்ட உறவை நாடி பிடித்து கையாள்வதில் சளைத்தவர் அல்ல, இந்திய அரசை பிரிக்க விரும்பாத, எதிர்த்த Crown ஐ, எதிர் வளமாக,  பிரிவை விட்டது. மருதங்கேணி சொல்லியது கூட காரணமாக இருக்கலாம். ஜின்னா MI6, பிரிட்டிஷ் Civil Service தனது கைக்குள் வைத்திருந்தலா, Britsh Crown பிரிவுக்கு விட்டது?

உளவுப்பிரிவுகள் ஒருவரை கைக்குள் வைத்திருக்கலாம். ஒருவர் உளவுப்பிரிவுகளை கைக்குள் வைத்திருக்க முடியாது.

ஜின்னாவுக்கு உளவுப்பிரிவுகளை கைக்குள் வைத்திருக்கக்கூடிய சக்தி இருந்திருந்தால் ஜின்னாவை 1948 ஆம் ஆண்டு மேலுலகத்திற்கு அனுப்பி இருக்க மாட்டார்கள். (Tuberculosis காரணமாக மரணமடைந்தார் என கூறப்பட்டாலும் அவர் கொல்லப்பட்டார் என நினைக்கிறேன்).

ஜின்னா உயிருடன் இருந்து பாகிஸ்தானின் அரசியலமைப்பை உருவாக்கவில்லை என வருத்தப்படும் பல பாகிஸ்தானியர்கள் உள்ளார்கள்.

லியாகத் அலி கானும் (அவரும் பாகிஸ்தான் உருவாக்கத்தில் பங்கு பற்றியவர், பிரதமராக பதவியேற்றவர்) 1951 இல் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார்.

1956 இல் பாகிஸ்தான் குடியரசுக்கான ஒரு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. 1958 இல் அயூப் கான் இராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்ததும் அவ் அரசியலமைப்பு செயற்பாடு தடைப்பட்டது. அவர் 1962 இல் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தார். அதை யஹ்யா கான் பதவிக்கு வந்ததும் தடை செய்தார். பின் பூட்டோ 1973 இல் புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தார்.

பாகிஸ்தானின் தலைநகரத்தை கராச்சியிலிருந்து இஸ்லாமபாத்தாக மாற்றினார்கள்.

ஜின்னா விரும்பிய பாகிஸ்தானும் இன்றைய பாகிஸ்தானும் வேறுபட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

நான் அறிந்தவரையில், பாக் பிரிவினையின் போதே மிகவும் மோசமான நோயிந்தாக்கத்து ஆளாகிவிட்டார் ஜின்னா. ஆனால் ஜின்னா தன் இறுதிகாலாத்தில் இருக்கிறார் என்ற உண்மை அவரின் வைத்தியருக்கும், சகோதரி (காரியதரிசி போல செயல்பட்டவர்) மட்டுமே, பாகிஸ்தான் பிரியும் வரை தெரிந்திருந்தது. 

தான் விரைவில் இறக்கப்போவது தெரிந்தால் - பிரிட்டிசாரும், காங்கிரசும் தன் இறப்பு வரை சுதந்திரத்தை தள்ளிப் போட்டு, அதன்பின் ஒரு வலுவற்ற முஸ்லீம் லீக் தலைமையை பாகிஸ்தானை கைவிடும் முடிவுக்கு தள்ளுவார்கள் என ஜின்னா பயந்தார். இதனாலே தன் மூச்சு அடங்கும் முன் நாட்டை பிரித்துவிட விழைந்தார்.

காந்தியின் ஆயுதம் அகிம்சை என்றால், ஜின்னா கையில் எடுத்த ஆயுதம் கலவரம். அவராக தூண்டியதாகா ஆதாரம் இல்லை, ஆனால் ஒவ்வொருமுறை பிரிவினை கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோதும் கலவரம் வெடித்தது. காந்தி சுதந்திரக் கோரிக்கையை தற்காலிகமாக கைவிட்டு, கலவரத்தை அடக்க போராட, நோன்பிருக்க வேண்டி வந்தது.

1. பிரிட்டிசாருக்கு அவசர அவசரமாக இந்தியாவை கை கழுவ வேண்டி இருந்தது. போருக்கு பின்னான பிரிட்டன் தன் சொந்த மக்களுக்கு சோறு போடவே கஸ்டப்பட்டது. இந்திய வர்த்தகர்கள் விழித்துக் கொள்ள, உலக விழிப்புணர்வும் அதிகரிக்க( காந்திக்கு அமெரிக்காவில் அமோக வரவேற்பு) முன்பை போல இந்தியாவை சுரண்டுவது இயலாமல் போனது. எப்படி 1989 இல் திடீரென ஏற்பட்ட சூழல் மாற்றத்தால் இந்திய படைகள் அவசர அவசரமாக வெளியேறினவோ அப்படித்தான் பிரிட்டனும் இந்தியா, இலங்கையில் இருந்து வெளியேறியது. இந்த அவசரத்தை ஜின்னா கச்சிதமாக பயன்படுத்தினார். நீங்கள் வெளியேறும் போது பாகிஸ்தானை தந்துவிட்டுப் போகிறீர்களா, அல்லது ஒரு ரணகளத்தை விட்டு தப்பி ஓடப் போகிறீர்களா என்பதே பிரிட்டிசாருக்கு ஜின்னா போட்ட கிடுக்கிபிடி.

2. மறுவழமாக நேரு காந்திக்கு - உங்களுக்கு சுதந்திரம் வேண்டுமா? அல்லது தொடர் பிரிடிஸ் ஆட்சி வேண்டுமா? அல்லது ரத்தக்களரி வேண்டுமா என்பதே ஜின்னாவின் நெருக்குவாரமாக இருந்தது.

3. பிரிவினையில் ஏற்பட்ட உயிர் உடமை சேதத்தைவிட பல மடங்கு கொடிய தொடர் கலவர வன்முறை வடக்கு, கிழக்கு, மேற்கு இந்தியா பூராவும் வெடிக்க தயாராக இருந்தது. இந்த நிலையில் வேண்டா வெறுப்பாக காந்தியும் நேருவும், கிடைத்தவரை லாபம் என்ற நோக்கில், மேலும் சேதம் வேண்டாம் என்ற எண்ணத்திலும், யதார்த்த தீர்வாக பிரிவினையை ஏற்றனர். பிரிட்டிசார், மவுண்ட் பேட்டனை 1 வருடத்தில் இந்தியாவை கை கழுவுமாறு கூறி அனுப்பினர், ஜின்னா-காந்தி பிரிவினைக்கு ஓம்பட்டதும், “பிச்சை வேண்டாம் நாயை பிடி” என்பதாக நாட்டை பிரித்து கொடுத்து விட்டு கப்பல் ஏறினர். 

4. அந்த நேரத்தில் பிரிடிசார் விரும்பி இருந்தால் இலங்கையை கையில் வைத்திருந்திருக்கலாம், குறைந்த பட்சம் சைபிரசில் செய்தது போல திருமலையில் ஒரு ராணுவ வலையத்தையாவது அமைத்திருக்கலாம் - ஆனால் லேபர் அரசுக்கு போரின் பின் தம்நாட்டை கட்டி எழுப்பும், welfare state எனும் சோசல் காசு கொடுக்கும் அமைப்பை சிருஸ்டிக்கும், NHS எனும் இலவச மருத்துவ சேவையை தாபிக்கும் தேவை இருந்தது. இவற்றிற்கு பெரும் பணம் தேவை படும் போது, அதை வீணே சாம்ராஜ்ஜத்தில் செலவிட அவர்கள் விரும்பவில்லை. அன்றைய லேபர் அரசு சாம்ராஜ்யத்தை கொள்கை அளவில் முடிவுக்கு கொண்டுவரவே தீர்மானித்தது. இதுதான் இலங்கை இந்தியாவை விட்டு பிரிட்டிசார் கடுகதியில் வெளியேறிய பிண்ணணி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.