" அந்த உருளை வடிவ பீப்பாய்களை நிறுவி, அதன் மேலேயே காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பீப்பாயும் 80 அடி நீளமானது. ஒன்றின் மேல் ஒன்றாக 3 பீப்பாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மேலேயே காற்றாடி அமைக்கப்படவுள்ளது. "
"அந்த பகுதியில் எல்.எம்.எல் என்ற தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது"
இது சீன உளவு அமைப்பு? இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் முயற்சி ??😎
காற்றாலை சூரிய ஒளி மின் உற்பத்திவாய்ப்புகள் மாகாணசபையின் கட்டுப்பாட்டில் அமைவது வரவேற்கப்படவேண்டியதே. தெற்க்கில் இருந்து கொண்டுவராமல் வடகிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அனல் மின் நிலையம் எங்கள் நெய்தலை அழித்துச் சிதைத்துவிடும். அனல்மின் நிலையம் வேண்டாம்.
மேற்கத்திய நாடுகள் பிரான்ஸ் போன்றவை மற்றய சக்தி பிறப்பாக்கிகளை விட காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன வன்னியர் சொல்வது போல் வடகிழக்கில் மக்கள் அற்ற வெளிகளில் அமைக்கப்படுவதால் சத்தம் போன்ற பயம்கள் தேவையற்ற ஒன்று அனல் மின் மூலம் வெளி விடப்படும் காபனீர் ஓட்ஸைட் போன்ற தொல்லைகள் காற்றாலைகளில் இல்லை
இந்தியாவில் உள்ள முறை எனக்கு தெரியாது இங்கு ஒரு வரையறைக்கு மேல் பலமான காத்து வீசினால் தானாகவே அதன் இயக்கம் நிறுத்துகின்ற முறை உள்ளது .
உங்கள் கேள்வி நியாயமே அதுக்கு தமிழர் விடயத்தில் நடைப்பிணமாக இருக்கும் சம்பந்தரை ஏன் கூப்பிடுகிறீர்கள் ?
“தலைக்கவசம் போட்டு வெங்காயம் விக்கிறான்… என்னத்த சொல்ல”
Seeman News - இந்திய அளவில் வெங்காயத்தின் விலை, கிலோவுக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. நாடாளுமன்றம் வரை இது பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அது குறித்து கறாரான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் இது குறித்துப் பேசிய சீமான், “நம் நாட்டின் அரசு அனைவருக்கும் வாகனத்தையும் அலைபேசியையும் கொடுப்பதற்குத் திட்டம் வைத்துள்ளது. ஆனால் நீரையும் சோறையும் எல்லோருக்கும் வழங்குவதற்கு அதனிடம் திட்டம் கிடையாது. வெங்காயத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்த காரணத்தினால்தான் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக சொல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கே வெங்காயம் இல்லாத போது அதை எப்படி ஏற்றுமதி செய்யலாம். இது ஒரு அடிப்படை அறிவு இல்லையா?
சில இடங்களில் பார்க்கிறோம், வெங்காயத்தை தலைக்கவசம் போட்டுக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். தலைக்கவசம் இல்லையென்றால், அடித்து நொறுக்கிவிட்டு எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற பயம்தான். அதேபோல, செல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று விளம்பரம் வைக்கிறார்கள். இதுவெல்லாம் காலக் கொடுமை…” என்றார்.
முன்னதாக வெங்காய விலை உயர்வு பற்றி, நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வியெழுப்பியபோது, “நான் அதிகம் வெங்காயம், பூண்டு சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவர். எனக்கு அதன் நிலை குறித்து பெரிதாக தெரியாது,” என்றார். அதற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம், “நிதி அமைச்சர் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றால் என்ன அவகோடா பழம்தான் சாப்பிடுவாரா?,” என கேலிக் கேள்வியெழுப்பினார்.
https://www.ndtv.com/tamil/seeman-takes-on-onion-price-rise-2145570