Jump to content

பறவை மோதியதால் 2 இன்ஜின்களும் செயலிழப்பு விமானத்தை திறமையாக தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய பைலட்


Recommended Posts

Dkn_Tamil_News_2019_Aug15__177700221538544.jpg

ரஷ்யா தலைகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் என்ஜீன்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள காட்டில் தரையிறக்கி 226 உயிர்களை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு 226 பயணிகளுடன் யுரல் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 321 விமானம் புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை மோதியது.

இதனால் இரண்டு என்ஜீன்களும் பழுதானது. அத்துடன் லேண்டிங் கியரும் வேலை செய்யவில்லை. இதனால், விமானத்தை உடனடியாக, மாஸ்கோ புறநகரில் உள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் விமானி தரையிறக்கினார். இதில், 23 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 226 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில்; விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தில் இருந்த விளக்குகள் அணைந்து அணைந்து எரிய துவங்கின. கருகும் வாசனை வந்தது. விமானம் தரையிறங்கிய உடன் அனைவரும் ஓடிவந்துவிட்டனர் என கூறியுள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518362

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

226 பேரின் உயிரை காப்பாற்ற.... சாமர்த்தியமாக செயல் பட்ட  விமானிக்கு பாராட்டுக்கள்.  
அவசரமாக  எடுத்த முடிவு மெச்சத் தக்கது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.