• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
கிருபன்

ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்!

Recommended Posts

On 8/18/2019 at 3:40 PM, கிருபன் said:

ஹாண்ட்பாக் மீளக்கிடைக்கும் என்ற நம்பிக்கை வடிந்து உடலும் உள்ளமும்  சோர்ந்தது. எனினும் அந்த இடத்தின் GPS location ஐ உடனடியாக Google map இல் பதிவு செய்தேன். ஹாண்ட்பாக்கை எடுக்கமுடியாத இயலாமையோடு கனத்திருந்த மனத்துடன் இருந்த என்னைச் சுமந்துகொண்டு போலிஸ்கார் மீண்டும் ஹொட்டேலை நோக்கி நகரத் தொடங்கியது.

விடுமுறையை மகிழ்வுடன் கழிக்க போகும் இடத்தில் ஒரு பொருள் களவு போய் விட்டால் அதன் பின் மனம் அமைதி இழந்து விடும்.

தொடருங்கள்.

Edited by Lara
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Lara said:

விடுமுறையை மகிழ்வுடன் கழிக்க போகும் இடத்தில் ஒரு பொருள் களவு போய் விட்டால் அதன் பின் மனம் அமைதி இழந்து விடும்.

தொடருங்கள்.

மனம் அமைதியாக இருக்கவேண்டுமென்றால் சாமியாராக மடத்தில் இருந்தால்தான் முடியும்!😂🤣

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

மனம் அமைதியாக இருக்கவேண்டுமென்றால் சாமியாராக மடத்தில் இருந்தால்தான் முடியும்!😂🤣

சாமியாராக மடத்தில் இருங்கள். நித்தியானந்த சுவாமி மாதிரி ஆகி விடாதீர்கள். 😂

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்! - பாகம் 3

மூத்தவனின் ஃபோனிலுள்ள Life360 app ஊடாக நான் ஹாண்ட்பாக்கை மீட்காமலேயே திரும்புவது இணைக்குத் தெரிந்திருக்கும். எனினும் ஹொட்டேலில் போலிஸ்காரில் இருந்து இறங்கியதும் இணையிடம் சைகையாலேயே ஏமாற்றமான செய்தியைக் கூறினேன். போலிஸ்காரர் கிரெடிற் கார்ட்ஸை உடனேயே நிறுத்துவது நல்லது என்று சொல்லி சில அடிப்படை விபரங்களைக் கேட்டெழுதிக்கொண்டார்கள். எனது ஃபோன் Google map இல் பொலிஸ் ஸ்ரேசன் விலாசத்தைப் பதிந்து அங்கு வந்து விரிவான முறைப்பாடு கொடுக்கச் சொன்னார்கள்.

ஹொட்டேல் ரூமுக்குப் போய் வங்கியில் இருக்கின்ற சொற்பப் பணத்தை முதலில் காப்பாற்றவேண்டும் என்பதால் முதலில் இணையின் வங்கிக்குப் ஃபோன் பண்ணி debit card ஐ நிறுத்தினோம். கிரெடிற் காட்ஸ் கொம்பனிக்கும் கடனட்டைகள் களவு போனதைச் சொல்லி புதிய அட்டைகளை அனுப்புமாறு சொன்னோம்.  

ஹாண்ட்பாக் கிடைக்காவிட்டால் போலிஸ் ஸ்ரேசன் போய் சரியான தகவல்களைக் கொடுக்கவேண்டி வரலாம் என்பதால் என்னென்ன இருந்தன என்ற விபரங்களை இணையை எழுதச் சொன்னேன். Michael Kors (MK) brand இல் ஹாண்ட்பாக், MK purse, MK sunglasses 🕶, iPhone, credit cards, debit card, driving license என்று அத்தியாவசியமானவை எல்லாமே லிஸ்றில் இருந்தன. மொத்தத்தில் சொந்த சரித்திரத்தையே ஃபோனிலும் பேர்ஸிலும், wallet இலும் காவித் திரிகின்றோம். களவுபோகும்போது அல்லது தொலைந்துபோகும்போதுதான் அவை இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என்று தெரிகின்றது.

Life360 app அப்போதும் இணையின் ஃபோன் location ஐ அது இருந்த இடத்தில் இருந்து மாறாமலேயே காட்டிக்கொண்டிருந்தது. ஆனால் பற்றரி 65% வீதத்திற்கு குறைந்திருந்தது. ஹாண்ட்பாக், ஃபோன் எல்லாவற்றையும் இழந்து ஹொலிடேயில் எஞ்சியிருக்கும் மூன்று நாட்களையும் நிம்மதியும் சந்தோஷமும் இல்லாமல் வீணாக்குவதா? என்ற கேள்வி மனதைக் குடைந்தது. இணையின் ஃபோன் வேறு “Last updated now” என்று Life360 app இல் காட்டியது. போலிஸ் ஸ்ரேசனுக்குப் போய் நேரத்தை வீணடிப்பதை விடுத்து மீண்டும் ஹாண்ட்பாக் இருக்கும் இடத்திற்குப் போய்த் தேடப்போகின்றேன் என்று இணையிடம் சொன்னேன். அப்படிப் போவதென்றால் பிள்ளைகளை ஹொட்டேலில் விட்டுவிட்டு தானும் வருகின்றேன் என்றார். நான் தனியே போய் ஏதாவது மோட்டுத்தனமான வேலை செய்தாலும் என்று இணை யோசித்திருக்கலாம் என்பதால் இருவரும் சேர்ந்துபோக சம்மதித்தேன். 

இளையவனிடம் அருகில் இருந்து சாப்பிட்டவன் எப்படி இருப்பான் என்று கேட்டேன். அவன் ஹாண்ட்பாக் எடுத்தவனாக இருந்திருந்தால் முரடனா இல்லையா என்பதை வைத்து அதற்கேற்ப என்னைத் தயார்படுத்தவேண்டும் என்ற முன்னேற்பாடுதான். இளையவன் அருகிலிருந்தவன் சாதாரணமானவன் என்று சொன்னான். அதுவும் தெம்பைக் கொடுத்தது. அதிக நேரம்  வெளியே நிற்கவேண்டி வந்தாலும் என்பதால் பிள்ளைகளை எக்காரணம் கொண்டும் ஹொட்டேல் ரூமை விட்டு வெளியே போகக்கூடாது என்று எச்சரித்து, power pack உட்பட தேவையானவற்றை backpack இல் எடுத்துக்கொண்டு ஹாண்ட்பாக் இருக்கும் இடத்தை நோக்கி பஸ் ஒன்றைப் பிடித்துக்கொண்டு போனோம். Google map இருந்தால் உலகில் எந்த மூலைக்கும் பிறரின் தயவின்றி போய்வரக்கூடியதாக உள்ளது மிகவும் வசதியாகப் போய்விட்டது.

Google map இல் பஸ் போகும் தடத்தைக் கவனித்தவாறே எப்படி ஹாண்ட்பாக்கை திரும்ப எடுக்கலாம் என்று மூளை திட்டங்களை வகுக்கத் தொடங்கியது. ஹாண்ட்பாக் நகராமல் இருப்பதால் அது வீட்டுக்குள் இருக்கலாம் அல்லது ஒரு வாகனத்திற்குள் இருக்கலாம். எனவே Life360, Find iPhone அப்ஸைப் பாவித்து அதன் location க்கு மிகவும் அண்மையாகப் போய் இடத்தை உறுதிப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உண்டானது. இரண்டுமே ஐபோன்கள். ஒரே நெற்வேர்க் என்பதால், GPS புள்ளிகளை ஒன்றின்மீது ஒன்று குவியச்செய்த பின்னர் call கொடுத்துப்பார்த்து ஹாண்ட்பாக்கின் இடத்தை கட்டாயம் கண்டுபிடிக்கலாம் என்று மனம் கணக்குப்போட்டது. அப்படி உறுதிப்படுத்தியவுடன் அவசர நம்பர் 112 க்கு ஃபோனடித்து போலிஸை வரவழைத்தால் எல்லாம் சுபமாக முடியலாம். ஆனாலும் இதனை முன்னரே செய்யாமல் காருக்குள்ளேயே இருந்த போலிஸ் இப்போது மட்டும் வந்து உதவுவார்களா என்ற சந்தேகமும் கூடவே இருந்தது. எதற்கும் ஹாண்ட்பாக் இருக்குமிடத்திற்கு அண்மையாக போலிஸ் ஸ்ரேசன் இருக்கின்றதா என்று Google map இல் தேடினால் அது 500 மீற்றர் முன்னுக்கு இருந்தது. 

நாம் இறங்கவேண்டிய பஸ் தரிப்பிடம் ஒரு Lidl supermarket க்கு முன்னால் இருந்தது. பஸ் தரிப்பிடத்தை அண்மிக்கும்போதே adrenaline உடலில் ஏறத்தொடங்கி இதயத் துடிப்பு அதிகமாகியது. பஸ்ஸில் இருந்து நாம் இருவரும் இறங்கி Google map ஐப் பார்த்தவாறே ஹாண்ட்பாக் இருக்கும் திசை நோக்கி வீதியில் நடக்க ஆரம்பித்தோம். Supermarket இருந்தும் அதிகளவு ஆள் நடமாட்டம் இல்லாமல் வீதி வெறிச்சோடி இருந்தது. பிரதான வீதியை விட்டிறங்கி குடியிருப்புப்பகுதிக்குள்ளால் குறுக்கறுத்து ஓடும் உள்வீதிக்குள் வந்தோம். முன்னர் போலிஸுடன் வந்து நின்ற 'T' வடிவில் இரு வீதிகள் சந்திக்கும் இடத்திற்கு வந்தாயிற்று. ஹாண்ட்பாக்கின் location மாறாமல் அதே இடத்தைக் காட்டியது. ஏதோ டெலிவரி செய்யும் ஒரு வானைத் தவிர்த்து ஆளரவம் ஏதுமில்லாத பரிச்சயமற்ற குடியிருப்புப் பகுதி சிறிய அச்சவுணர்வைத் தந்தது. அதனை வெளிக்காட்டாமல் இணையினதும் எனதும் GPS புள்ளிகளை ஒருங்கச் செய்யவதில் முனைப்புக்காட்டி  வீதிகள் சந்திக்கும் முனையில் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தோம். இரு GPS புள்ளிகளும் குவியும் தறுவாயில் இருந்ததை இணைக்குக் காட்டி சரியான இடத்தில்தான் நிற்கின்றோம் என்று சொன்னேன்.

இணையின் ஃபோனின் GPS புள்ளியை துல்லியமாக அறிய Life360 app இல் மேலும் zoom பண்ணினால் அது நாம் நின்றிருந்த முடக்கில் உள்ள மூன்றடுக்குத் தொடர்மாடிக் குடியிருப்பின் மூலையைக் காட்டியது. அந்தக் குடியிருப்பில் உள்ள மூன்று வீடுகளில்தான் ஒன்றில்தான் இருக்கக்கூடும் என்று இணையிடம் கூறியவாறு குடியிருப்பின் வாசலை நோக்கி நடந்தேன். Code entry security உள்ள வீடுகளாக இருந்தன. இப்படியான குடியிருப்பு வீடுகளுக்குள் உள்நுழைய எல்லா வீட்டுக்குமான பட்டன்களை அழுத்தினால் யாராவது ஒருவர் அசட்டையீனமாகக் கதவைத் திறக்கக்கூடும். அல்லது யாராவது உள்ளே போகும்போது சட்டென்று உள்ளே போய்விடலாம். இந்த உத்திகளை இலண்டனில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்களில் முன்னர் பாவித்த அனுபவம் இருந்தததால் கட்டடத்தின் உள்ளே சுலபமாக நுழையலாம் என்ற நம்பிக்கை வந்தது. உள்ளே போனால் கட்டட மூலைப்பக்கமாக இருக்கும் மூன்று வீடுகளுக்கும் முன்னால் நின்று இணையின் ஃபோனுக்குக்கு call எடுத்துப் பார்த்து ring வரும் இடத்தைக்கொண்டு வீட்டை அடையாளம் செய்து போலிஸைக் கூப்பிடலாம் என்ற எண்ணம் வந்தது.

கட்டடத்தின் உள்ளே போகும் முயற்சியைப் பற்றி இணையிடம் கூறலாம் என்று திரும்பியபோது Life360 app இல் இணையின் ஃபோனின் GPS புள்ளி சில மீற்றர்கள் சற்று நகர்ந்து வீதியில் இருப்பதாகக் காட்டியது. சற்றுக் குழப்பம் வந்தது. ஹாண்ட்பாக் தொடர்மாடிக் குடியிருப்பின் முன்னாலுள்ள கார்களுக்குள் இருக்கக்கூடுமா என்று மேலும் துல்லியமாக இடத்தைக் கண்டுபிடிக்க Find iPhone app க்கு மாறினேன். அதுவும் கட்டடத்தை ஒட்டி மிகவும் நெருங்கி வீதியோரம் இருப்பதாகவே காட்டியது. ஹாண்ட்பாக் காருக்குள் இருக்கலாம் என்று இணையிடம் சொல்லி கார்க்கண்ணாடியூடாக ஒவ்வொரு கார்களாக உள்ளே பார்த்துக்கொண்டு வந்தோம். எதிலும் ஹாண்ட்பாக் இருப்பதற்கான அறிகுறிகள் தட்டுப்படவில்லை. நாங்கள் நகரும்போது எனது GPS புள்ளி சரியான திசையில் நகர்ந்து இணையின் GPS புள்ளியைத் தாண்டியது. ஹாண்ட்பாக் காரின் bootக்குள் இருக்கக்கூடும் என நினைத்து call பண்ணிப் பார்ப்போமா என்று இணையிடம் கேட்டேன். சிலவேளை வீட்டுக்குள் இருந்தால் எடுத்தவர் ஃபோனை switch off பண்ணினால் அதன் பிறகு track பண்ணமுடியாது என்பதால் முதலில் வீடுகளுக்குள் இல்லை என்பதை உறுதிசெய்யாமல் call எடுக்கவேண்டாம் என்றார். அதுவும் சரியாகப்பட்டது.

என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே திரும்பவும் Life360 app க்கு மாற்றினால் அதில் மூத்தவனின் ஃபோனின் battery life 1% வீதமாகக் காட்டியது. மூத்தவனின் ஃபோனில் தொடர்ச்சியாக Life360 app ஐப் பாவித்ததால் அல்லது அவன் வழமைபோன்று games இல் பிஸியாக இருந்திருக்கலாம் என்பதால் battery வேகமாக இறங்கிவிட்டிருக்கலாம். ஹொட்டேலை விட்டும் வெளிக்கிடும்போது எம்மிடம் இருந்த இரண்டு USB charging cables ஐயும் backpack இல் எடுத்துவந்தது நினைவுக்கு வந்தது. ரூமை விட்டு வெளியே போகக்கூடாது என்று சொல்லி தனியேவிட்டுவேறு வந்திருக்கின்றோம். எவ்வளவு நேரம் ஹாண்ட்பாக் தேடுவதில் செலவழிக்கப்போகின்றோம் என்றும் தெரியாது. இதற்குள் மூத்தவனின் ஃபோனின் battery வேறு dead ஆனால் பிள்ளைகளைத் தொடர்புகொள்ளமுடியாமல் போகும். பாதுகாப்பான ஹொட்டேலில் இருந்தாலும் அவர்களும் எம்முடன் கதைக்கமுடியாமல் தவிக்க நேரலாம் என்று சிந்தனைகள் சுழன்றடித்து மூளையைத் தடுமாறச் செய்தன. Battery dead ஆக முன்னர் குறுக்கு வீதியில் நடந்தவாறே அவசர அவசரமாக மூத்தவனுக்குக் call எடுத்தேன். மூத்தவன் வழமையாக answer பண்ணாமல் விடுவதால் இப்போதும் அப்படி நடக்கக்கூடும் என்று பதற்றம் தொற்றிக்கொண்டது. நல்லவேளை இரண்டாவது ரிங்கிலேயே பதிலளித்தான். அவனது ஃபோனின் battery இறங்கியுள்ளதைச் சொல்லி அது dead ஆகுமுன்னர் இருவரும் கீழே reception க்குப் போய் battery ஐ charge செய்யுமாறும் ஃபோனுக்கு அருகிலேயே இருக்குமாறும் வேகமாகச் சொல்லிமுடித்தேன்.

மீண்டும் Life360 app ஐப் பார்த்தால் இணையின் ஃபோனின் GPS புள்ளி சந்திமுனையில் இருந்து விலகி மேலும் நகர்ந்து வீதியில் நிற்பதாகக் காட்டியது. உடனே Find iPhone app க்கு மாற்றினால் அதுவும் நகர்ந்ததை உறுதிப்படுத்தியது. நாங்கள் அருகில் நிற்குபோதே திடீரென்று இணையின் ஃபோன் நகர்ந்ததாகக் காட்டியதால் பரபரப்பாகி நான் ஃபோன் கதைக்கும்போது யாராவது வெளியே போய்வந்தார்களா என்று இணையைக் கேட்டேன். ஒருவன் குடியிருப்பு வீட்டுக்குள் போனதாகவும் உள்ளேயிருந்து எவரும் வெளியே வரவில்லை என்றும் சொன்னார். இணையின் ஃபோனின் GPS புள்ளி நகர்ந்ததைக் காட்டி ஹாண்ட்பாக் நிச்சயமாக பார்க்கிங்கிலுள்ள கார் ஒன்றினுள்தான் இருக்கின்றது என்று சொல்லி ஒவ்வொரு காராக முதலிலிருந்து இறுதிவரை தேடுவோம் என்றேன். ஹாண்ட்பாக் உள்ளே இல்லாவிட்டால் கடைசிக் காரில் இருந்து திரும்ப வரும்போது call செய்து பார்த்தால் எந்தக் காருக்குள் இருக்கின்றது என்றாவது தெரியும் என்றேன். 

நிறுத்தத்திலுள்ள கார்களின் முன்பக்கம் நானும் பின்பக்கம் இணையுமாகத் தேடத் தொடங்கினோம். ஐந்தாறு கார்களைத் தாண்டியதும் ஒரு கறுப்புநிற ஹொண்டா காரின் கீழ்ப்புறமாக தார்ச்சூட்டுக்காக படுத்திருக்கும் பூனையின் வால் போல ஏதோ தெரிய என்னவென்று பார்ப்பதற்கிடையில் இணை ஓடிப்போனார்.  அது ஹாண்ட்பாக்கின் strap. இணை கண்ணிமைக்கும் நேரத்தில் “என்ரை ஹாண்ட்பாக்” என்று கூவியவாறே  strap ஐ இழுத்து ஹாண்ட்பாக்கை வெளியே எடுத்தார். ஹாண்ட்பாக் திறக்கப்படாமலேயே காரின் அடியில் வீசப்பட்டிருந்தது. இணை அதனைத் திறந்து எல்லாவற்றையும் சரிபார்த்து அவை எல்லாமே அந்த அந்த இடத்திலேயே இருக்கின்றன என்று சொல்லி ஹாண்ட்பாக்கை தோளில் மாட்டினார். இப்போது ஹாண்ட்பாக் இருக்குமிடத்தில் இருந்துகொண்டது!

நான் ஹாண்ட்பாக் கிடந்த காரைப் படமெடுக்க மினக்கெட "ஒரு நிமிஷமும் இங்கு நிற்கவேண்டாம். உடனேயே போவோம்” என்று அவசரப்படுத்தினார். நானும் “உனக்கு இன்றைக்கு நல்ல லக் அடிச்சிருக்கு! ஏன் என்னை இலண்டனில் கண்ட முதல்நாளிலிருந்தே உனக்கு லக்தான்” என்று கூறியவாறே வெற்றிக் களிப்புடன் பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடந்தோம்.

..

திரும்ப ஹொட்டேலுக்குப் போய் ரிஷப்சனில் ஹாண்ட்பாக்கைக் காட்டி எப்படி எடுத்தோம் என்று பெண் பணியாளரிடம் சொன்னோம். “நீங்கள் தைரியமாகத்தான் detective வேலை பார்த்திருக்கின்றீர்கள்” என்று சொல்லி CCTV இல் ஹாண்ட்பாக் எடுத்தவரை அடையாளம் கண்டு அதனைப் போலிஸுக்கு சற்றுமுன்னர்தான் தெரிவித்ததாகச் சொன்னாள். அசட்டுத்
துணிச்சலில் திரும்பப் போயிருந்தாலும் பிரபஞ்சம் தற்செயலாக உருவாகி, அதில் இந்தப் பூமியும் மனிதர்களும் தோன்றியதுபோல் எல்லா நிகழ்வுகளுமே ஒரு ஒழுங்கில் விபத்தாக நடந்ததால்தான் ஹாண்ட்பாக் திரும்பக் கிடைத்தது என்றே நினைக்கின்றேன். ஹாண்ட்பாக் எடுத்தவர் போலிஸ்கார் அவர் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு விரைவாக வந்ததால் ஹாண்ட்பாக்கில் tracking device இருப்பதை அறிந்து பயத்தில் காருக்கு அடியில் எறிந்திருக்கலாம். போலிஸ் இறங்கித் தேடாமல் கைவிட்டபின்னர் நாம் தேடிப் போகாவிட்டால் அவர் மீண்டும் ஹாண்ட்பாக்கை எடுத்திருக்கலாம். அதிர்ஸ்டவசமாக இந்த அட்வெஞ்சர் மூன்று மணித்தியாலங்களில் Smartphone technology apps களின் உதவியுடன் முடிந்ததால் வேறு தடங்கல்களின்றி ஹொலிடே சந்தோஷமாகக் கழிந்தது. என்னுடைய பிறந்தநாளை காற்றாலைகளை காண Kinderdijk க்கும் போகமுடிந்தது.

- முற்றும்

 

large.48200887-8FBB-4B36-9999-44AECA47FC3F.jpeg.faffdf0e90ed12771e254491277ccd50.jpeg

 

 

 • Like 7

Share this post


Link to post
Share on other sites

நல்ல விறுவிறுப்பான பதிவு கிருபன். அமஸ்ரடாமில் படகுச் சவாரி ஆனந்தமான ஒன்றுதான். life 360 எத்தனை நன்மையானதோ அத்தனை பிள்ளைகள் வீடு வந்து சேருமட்டும் டென்சனும் தான்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல விறுவிறுப்பான பதிவு கிருபன். அமஸ்ரடாமில் படகுச் சவாரி ஆனந்தமான ஒன்றுதான். life 360 எத்தனை நன்மையானதோ அத்தனை பிள்ளைகள் வீடு வந்து சேருமட்டும் டென்சனும் தான்.

Life360 app மூலம் பிள்ளைகள் எங்கு நிற்கின்றார்கள் என்று தெரியும்தானே. அது ரென்சனைக் குறைக்கவல்லவா வேண்டும்!

Share this post


Link to post
Share on other sites

உங்களை எப்படி இன்னும்  ஸ்கார்ட்லாண்ட் யார்ட் கண்ணில் படாமல்  விட்டு வைத்திருக்கு என்று தெரியவில்லை......!  👍

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, கிருபன் said:

Google map இல் பஸ் போகும் தடத்தைக் கவனித்தவாறே எப்படி ஹாண்ட்பாக்கை திரும்ப எடுக்கலாம் என்று மூளை திட்டங்களை வகுக்கத் தொடங்கியது.

உங்கள் வர்ணனைகள் எனக்கு பிரபல துப்பறியும் நாவல்கள் வாசிக்கும் உணர்வை ஏற்படுத்தியது. 😊

ஹான்ட்பாக் மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி. 😀

Edited by Lara
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, கிருபன் said:

மொத்தத்தில் சொந்த சரித்திரத்தையே ஃபோனிலும் பேர்ஸிலும், wallet இலும் காவித் திரிகின்றோம். களவுபோகும்போது அல்லது தொலைந்துபோகும்போதுதான் அவை இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என்று தெரிகின்றது.

உங்களது இணையின் handbag கிடைத்தது சந்தோஷமே..

ஒரு துப்பறியும் நாவலை வாசித்தது போல நன்றாக இருந்து உங்களது Amsterdam adventure .

 நீங்கள் கூறியது போல எங்களது சரித்திரம் இந்த phone, walletலும்தான் காவித்திரிகிறோம்

Edited by பிரபா சிதம்பரநாதன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, கிருபன் said:

துணிச்சலில் திரும்பப் போயிருந்தாலும் பிரபஞ்சம் தற்செயலாக உருவாகி, அதில் இந்தப் பூமியும் மனிதர்களும் தோன்றியதுபோல் எல்லா நிகழ்வுகளுமே ஒரு ஒழுங்கில் விபத்தாக நடந்ததால்தான் ஹாண்ட்பாக் திரும்பக் கிடைத்தது என்றே நினைக்கின்றேன். ஹாண்ட்பாக் எடுத்தவர் போலிஸ்கார் அவர் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு விரைவாக வந்ததால் ஹாண்ட்பாக்கில் tracking device இருப்பதை அறிந்து பயத்தில் காருக்கு அடியில் எறிந்திருக்கலாம். போலிஸ் இறங்கித் தேடாமல் கைவிட்டபின்னர் நாம் தேடிப் போகாவிட்டால் அவர் மீண்டும் ஹாண்ட்பாக்கை எடுத்திருக்கலாம். அதிர்ஸ்டவசமாக இந்த அட்வெஞ்சர் மூன்று மணித்தியாலங்களில் Smartphone technology apps களின் உதவியுடன் முடிந்ததால் வேறு தடங்கல்களின்றி ஹொலிடே சந்தோஷமாகக் கழிந்தது. என்னுடைய பிறந்தநாளை காற்றாலைகளை காண Kinderdijk க்கும் போகமுடிந்தது.

தொழில் நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருந்ததால் இவ்வளவும் செய்து பணப்பையை மீட்க முடிந்திருக்கிறது.

மனநிம்மதியுடன் மிகுதி பயணமும் முடிந்திருக்கும்.
மறக்க முடியாத பிறந்தநாள்.
வாழ்த்துக்கள்.

6 hours ago, suvy said:

உங்களை எப்படி இன்னும்  ஸ்கார்ட்லாண்ட் யார்ட் கண்ணில் படாமல்  விட்டு வைத்திருக்கு என்று தெரியவில்லை......!  👍

சும்மா போங்க சுவி.
ஆள் அங்கே தான் வேலையே.

15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல விறுவிறுப்பான பதிவு கிருபன். அமஸ்ரடாமில் படகுச் சவாரி ஆனந்தமான ஒன்றுதான். life 360 எத்தனை நன்மையானதோ அத்தனை பிள்ளைகள் வீடு வந்து சேருமட்டும் டென்சனும் தான்.

 

6 hours ago, கிருபன் said:

Life360 app மூலம் பிள்ளைகள் எங்கு நிற்கின்றார்கள் என்று தெரியும்தானே. அது ரென்சனைக் குறைக்கவல்லவா வேண்டும்!

அவர்கள் ஓன் பண்ணி இருந்தால்த் தானே.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தார்ச்சூட்டுக்காக படுத்திருக்கும் பூனையின் வால் போல ஏதோ தெரிய அருமையான உவமானம்.உங்கள் சொத்து கிடைச்சது மகிழ்ச்சி.அருமையான பதிவு கிருபன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 8/24/2019 at 8:55 AM, suvy said:

உங்களை எப்படி இன்னும்  ஸ்கார்ட்லாண்ட் யார்ட் கண்ணில் படாமல்  விட்டு வைத்திருக்கு என்று தெரியவில்லை......!  👍

ஒருமுறை அவர்களின் போலிஸ்காரில் போன அனுபவம் இருக்கு. அதற்குப் பிறகு அவர்கள் என்னைக் காண்பதில்லை🤓

On 8/24/2019 at 9:23 AM, Lara said:

உங்கள் வர்ணனைகள் எனக்கு பிரபல துப்பறியும் நாவல்கள் வாசிக்கும் உணர்வை ஏற்படுத்தியது. 😊

ஹான்ட்பாக் மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி. 😀

நன்றி. ஹாண்ட்பாக் கிடைத்திருக்காவிட்டால் கதை எழுதியிருக்கமாட்டேன்! முதல் பாகத்தை இது நடந்த அன்றே எழுதிவிட்டிருந்தேன்😀

Share this post


Link to post
Share on other sites
On 8/24/2019 at 2:47 PM, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களது இணையின் handbag கிடைத்தது சந்தோஷமே..

ஒரு துப்பறியும் நாவலை வாசித்தது போல நன்றாக இருந்து உங்களது Amsterdam adventure .

 நீங்கள் கூறியது போல எங்களது சரித்திரம் இந்த phone, walletலும்தான் காவித்திரிகிறோம்

உண்மைதான். Phone உம் wallet உம் இல்லாமல் நாம் எதுவும் செய்யமுடியாதவர்களாக இருக்கின்றோம். எதிர்காலத்தில் எமது உடலிலேயே இவை எல்லாம் ஏதோ ஒரு வடிவத்தில் வந்து நாம் cyborgs ஆகிவிடுவோம்😮

On 8/24/2019 at 3:02 PM, ஈழப்பிரியன் said:

தொழில் நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருந்ததால் இவ்வளவும் செய்து பணப்பையை மீட்க முடிந்திருக்கிறது.

மனநிம்மதியுடன் மிகுதி பயணமும் முடிந்திருக்கும்.
மறக்க முடியாத பிறந்தநாள்.
வாழ்த்துக்கள்.

சும்மா போங்க சுவி.
ஆள் அங்கே தான் வேலையே.

Smartphone தொழில்நுட்பம்தான் உண்மையிலேயே உதவியது! இல்லாவிட்டால் பொலிஸில் ஒரு entry ஐ போட்டுவிட்டு வெறுங்கையோடுதான் வந்திருப்போம்.

On 8/24/2019 at 3:38 PM, சுவைப்பிரியன் said:

தார்ச்சூட்டுக்காக படுத்திருக்கும் பூனையின் வால் போல ஏதோ தெரிய அருமையான உவமானம்.உங்கள் சொத்து கிடைச்சது மகிழ்ச்சி.அருமையான பதிவு கிருபன்.

நன்றி. இது கதை எழுதும்போது பாவித்திருந்தாலும் அந்தத் தருணத்தில் பூனையின் வாலாகத்தான் தோன்றியது😸

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, கிருபன் said:

உண்மைதான். Phone உம் wallet உம் இல்லாமல் நாம் எதுவும் செய்யமுடியாதவர்களாக இருக்கின்றோம். எதிர்காலத்தில் எமது உடலிலேயே இவை எல்லாம் ஏதோ ஒரு வடிவத்தில் வந்து நாம் cyborgs ஆகிவிடுவோம்

உண்மைதான்..

அத்தோடு இதேமாதிரி பொருளை தொலைத்து மீண்டும் கிடைத்த அனுபவம் எனக்கும் உண்டு..ஆனால் உங்களுடையது போன்ற thrilling அனுபவம் இல்லை.

4 வருடங்களுக்கு முன்பு ஊருக்கு சென்றிருந்தபோது, எனது iPadனை எனது விமான இருக்கையின் முன்புறம் உள்ள pocketல் மறந்துவைத்துவிட்டு வந்தாயாயிற்று. அனேகமாகSingapore airlines, சிட்னியிலிருந்து கட்டுநாயாக்க வந்தடைவது நடுநிசியில், நித்திரைமயக்கத்தில் iPadனை மறந்து வீட்டிற்குவந்தாயிற்று.. அடுத்தநாள் காலைதான் iPadஐ காணவில்லை என்பதேதெரிந்தது..பின்புSingapore Airline customer service போன் போட்டு அவர்களுடன் கதைத்தபோது சொல்லிவிட்டார்கள்.. இரவு9 மணிக்கு பின்புதான் கட்டுநாயக்கவிமானத்தில உள்ள அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளமுடியும் அவர்களுடன் தொடர்பு கொள்ளும்   வரை நான்பட்டஅவஸ்தை, வீட்டில் உள்ளவர்கள் வேறு கடுப்பேத்திக்கொண்டேஇருந்தார்கள்.. பொறுமையாக எல்லாவற்றையும் கேட்கவேண்டியதாயிற்று..

ஒருவாறு 9 மணிக்கு தொடர்பு கொண்டபோது.. இருங்கள் பார்த்து சொல்கிறோம் என Singapore Airlines விமானஊழியர் கூறினார்.  காத்திருந்த நிமிடங்கள் யுகங்களாக தோன்றின..

15/20 நிமிடங்களில் திருப்ப எடுத்து, உங்களது iPad  என்பதை உறுதிப்படுத்த passwordஐ கூறுங்கள என கேட்டார்கள்.. இவர்களுக்கு எப்படி என் passwordனை கூற முடியும். அத்தோடு அவர்கள் passwordஐ கேட்டதிலேயே எனக்கு விளங்கிவிட்டதுiPad அவர்களிட ம் உள்ளது என்று. நான் கேட்டேன் passwordனை எல்லாம் உங்களுக்கு எப்படி தரலாம் என்று?, வேறு அடையாளங்களை கூறுகிறேன் என்று iPadன் நிறம் முகப்பில் உள்ளபடம் எல்லாம் கூறியபின்பு, அவர்கள். கூறினார்கள் உங்களது iPad எங்களிடம் உள்ளது மறுநாள் காலை வந்து எடுங்கள் என்று.. 

நான் யாழ்ப்பாணம் அன்றிரவே போகவேண்டி இருந்ததாலும், iPadனை அவர்களிடம் இதற்கு மேலும் விட்டுவைக்க விரும்பாதாலும் அவர்களிடம் நான் யாழ்ப்பாணம் உடனேயே போகவேண்டும் அதனால் இப்பவே வந்து அதை எடுக்கலாமா என கேட்டு, பின்னிரவு 1 மணியளவில்  கட்டுநாயக்க சென்று iPadஐ பெற்றுக்கொண்டு ஊருக்கு போய்விட்டேன்..

Singapore Airlines என்பதால் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்து கொண்டு வந்தது, அதை உறுதிப்படுத்திவிட்டார்கள்..   

அந்த அனுபவத்திற்கு பிறகுiPadனை கொண்டு போனாலும் ஊர் போய் சேரும் வரை hand luggageல் இருந்து வெளியே எடுப்பதில்லை.. நேரத்தை போக்க எனக்கு விரும்பிய புத்தகத்தை எடுத்துசெல்வது வழமையாகிவிட்டது..

என்iPadஐ பார்த்தபிறகுதான் நிம்மதியே வந்தது..ஏனெனில்அந்தiPad எத்தனையோ இரகசியங்களையும் நினைவுகளையும்  தனக்குள் வைத்திருக்கிறது..பொதுவாக கூறினால்  இந்த devices சரித்திரத்தையே  வைத்திருக்கிறது எனலாம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் அனுபவமும் தொலைத்தவர்கள் படும் அவஸ்தைதான். தொலைந்த பொருளைத் தேடுவதால் ரென்சனாகி, ஏற்கனவே ஒழுங்கு செய்த திட்டங்கள் குழம்பி நிம்மதி குலைந்துபோகும். ஆனால் எல்லாமே ஒரு பாடம்தான்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.