poet

இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

இலங்கையில் யார் அடுத்த ஜனாதிபதி என்கிற விவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. இந்த சமயத்தில் சம்பந்தர் டெல்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள். இந்த தருணத்தில் சம்பந்தரின் டெல்கிப் பயணம் பிரபல விவாதப் பொருளாகியுள்ளது. இன்று இலங்கை தமிழருக்கு அணுக்கக்கூடியதாக இந்தியாவும் அமரிக்க-மேற்க்கு நாடுகள் அணியும் மட்டுமே  உள்ளது. ஏனைய உலக சக்திகள் எதிர் நிலையில் உள்ளன. இதுதான் நிலவும் சர்வதேச அரசியல் சூழல். முதல் எதிரியை தவிர்த்து வேறு நிரந்தரமான எதிரிகள் இல்லை. நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே.   என்பதையே என்றும் வலியுறுத்தி வருகிறேன். முதல் எதிரி மகிந்த அணிதான். இன்றைய சூழலில் இது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது.

இன்று நாம் எதிர் நோக்குவது அரசியல் இராஜதந்திர ம் பற்றிய சிக்கலாகும். வரலாறு முழுவதும் எங்கள் தோல்விகள் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

 இது. 2ம் உலக யுத்தத்தின்பின் தம்மை அழித்த நாடு என அமரிக்காவை ஜப்பானும் ஜெர்மனியும் புறக்கணிக்காமைக்கு என்ன காரணம்? ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் தெரிவு அமரிக்காவா சோவியத் யூனியனா என்றே அமைந்தது.  தங்கள் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பை காபாற்றுவது முக்கியமாக இருந்தது. மேலதிகமாக உலக யுத்ததின்போது ஜெர்மனி மற்றும் ஜப்பானின் பிரதேசங்களை சோவியத யூனியன் கைப்பற்றியிருந்தது.  எதிர்விமர்சனங்கள் இருந்தும் தமது அமைப்பைக் காப்பாற்றி யுத்த அழிவுகளில் இருந்து மேம்படுவதற்க்கு இருந்த சாத்தியமான  தெரிவு அமரிக்காவே என்கிற முடிவை மேற்படி நாடுகள் எடுத்தன. இத்தகைய இஅசதந்திர சிக்கல்களை உலக நாடுகள் அடிக்கடி எதிர்கொள்ளவே செய்கின்றன. வரலாற்றில் இத்தகைய இராஜதந்திரச் சிக்கல்கள் ஏற்பட்ட சந்தர்பங்களில் எடுக்கப்பட்ட பிழையான முடிவுகளே பெரும் தோல்விகளுக்கு வழிவகுத்துள்ளது. 

இன்று நாம் மீண்டும் இராஜதந்திர சிக்கல் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. . நமது அணி இந்தியா அமரிக்கா மேற்குலகமென சம்பந்தர் தெரிவு செய்தமைக்கும் அதுதான் காரணம். அவர் அத்தகைய ஒரு முடிவை எடுத்தமை சர்யானதே. இல்லாவிட்டால் வடகிழக்கு இன்னும் இராணுவ சப்பாத்துக்களின்கீழ் சோமாலியாவாகி இருக்கும்.

இன்று பிரச்சினை சம்பந்தர் இந்திய மேற்க்குலக முகாம்களை தெரிவு செய்தமையல்ல. பிரச்சினை இலங்கை அரசியலில் தொடர்பாக இந்தியா அமரிக்கா நட்ப்பு அணிக்குள்  இடம்பெறும் பனிப்போர்தான். இரு அணிகளையும் ஆதரிக்கும் நாம் இரு அணிகளின் பனிபோருக்குள் அகப்படாமல் தப்பிப்பது எப்படி? இந்திய அமரிக்க அணிகள் எங்களுக்கும் வாய்ப்புள்ள ஒரு பொது முடிவுக்கு  வருவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அந்த முதிற்சி குறைந்த பட்ச்சமாவது சம்பந்தருக்கு உள்ளது என்று நம்புகிறேன்.  

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
57 minutes ago, poet said:

நமது அணி இந்தியா அமரிக்கா மேற்குலகமென சம்பந்தர் தெரிவு செய்தமைக்கும் அதுதான் காரணம்

சம்பந்தர் ஐயா அலசி ஆராயந்து ஒன்றும் தெரிவு செய்யவில்லை. தனது மருத்துவ தேவைக்காக இந்தியாவுக்கு செல்வதற்கும், பிள்ளைகள், உறவினர்கள் நண்பர்களை மேற்கு நாடுகளில் காண்பதற்கும் உள்ள சொந்தத் தேவையால் இந்தியாவும், மேற்குநாடுகளும் சொல்வதைச் செய்கின்றார். இந்த நாடுகள் கோத்தாவை ஆதரி என்று சொன்னால் மறுக்காமல் தமிழர்களை கோத்தாவை ஆதரிக்கவும் கேட்பார். ஏற்கனவே இராணுவத் தளபதியாக இருந்து தமிழர்களை அழித்த பொன்சேகாவை ஆதரிக்கக் கேட்டவர்தானே! 

அத்தோடு கிழக்கு மாகாணசபையில் கூடிய உறுப்பினர்கள் இருந்தும் பெருந்தன்மையைக் காட்ட முஸ்லிம் முதலமைச்சருக்கு வழிவிட்டு கிழக்குத் தமிழரை காணிகளை இழக்கவும், அபிவிருத்தியில் பின்தங்கவும் சம்பந்தரின் “ராஜதந்திரம்” நன்றாகவே உதவியது.

Share this post


Link to post
Share on other sites

முதல் எதிரியை விழுத்தும் முயற்சியில் ஏனைய எதிரிகளை ஆதரித்தல் என்பது இராச தந்திரத்தின் முதல் பாடம். சில சமயங்களில் முதல் எதிரியை ஏனைய எதிரிகளின் பட்டியலுக்கு இறக்கி விடும் தவறுகள் நடந்துவிடுவதுண்டு.  அது நிகழாமல் பார்க்க வேண்டியது அவசியம். யுத்ததின்போது இயக்கம் பிரேமதாசவை ஆதரித்தது பற்றிய விடயம் பிரேமதாச முதல் எதியா இல்லையா என எதிர்கால அரசியல் மாணவர்களின் விவாதப் பொருளாக இருக்கும். மகிந்தவா பொன்சேகாவா முதல் எதிரி என்ற கேழ்வி குழந்தைகளும் பதில் சொல்லக்கூடிய கேழ்வியல்லவா? மேலும் சர்வதேச சமூகத்துக்கு இணங்கி யுத்தத்தில் நசிந்து சிதைந்திருந்த மக்களை ஒரு அணியாக்கி வாக்களிக்க வைத்ததன்மூலம்  ’தமிழர் அஞ்சி சரணாகதியாகவில்லை ஓரணியாக கட்டுபட்டு நிற்கிறார்கள்’ என்பதை உலகளாவ உணர்த்தியமை முக்கியமாகும். விவாதம் வேண்டாம். புரிந்துகொள்ள முயற்சிப்போம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, கிருபன் said:

இந்த நாடுகள் கோத்தாவை ஆதரி என்று சொன்னால் மறுக்காமல் தமிழர்களை கோத்தாவை ஆதரிக்கவும் கேட்பார்.

இதென்னவோ உண்மை தான். 😀

6 hours ago, கிருபன் said:

அத்தோடு கிழக்கு மாகாணசபையில் கூடிய உறுப்பினர்கள் இருந்தும் பெருந்தன்மையைக் காட்ட முஸ்லிம் முதலமைச்சருக்கு வழிவிட்டு கிழக்குத் தமிழரை காணிகளை இழக்கவும், அபிவிருத்தியில் பின்தங்கவும் சம்பந்தரின் “ராஜதந்திரம்” நன்றாகவே உதவியது.

பொயட் அவர்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்ததை சம்பந்தனின் சாணக்கிய அரசியல் என கருதுபவர். 😎

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
7 hours ago, poet said:

சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள்.

விக்னேஸ்வரன் சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக  இதுவரை கூறவில்லை.

இப்படியும் ஒரு செய்தி வந்திருக்கிறது.

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், எந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://yarl.com/forum3/topic/230994-எந்த-ஒரு-தமிழனும்-கோட்டாபய-ராஜபக்ஷவுக்கு-வாக்களிக்கக்கூடாது-விக்னேஸ்வரன்-கூறியதாக-வாசுதேவ-தகவல்/ 

Edited by Lara
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

உண்மைதான் Lara. இப்பதிவு எழுதும்போது அவர் தன்னை அழைக்கிறார்கள் என்கிற முதல் அறிக்கையை எவ்வித கருத்துமின்றி வெளியிட்டிருந்தார். பின்னர் நீங்கள் கூறும் அறிக்கை வந்தது. 

Share this post


Link to post
Share on other sites
On 8/17/2019 at 12:56 AM, poet said:

முதல் எதிரியை தவிர்த்து வேறு நிரந்தரமான எதிரிகள் இல்லை. நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே.   என்பதையே என்றும் வலியுறுத்தி வருகிறேன். முதல் எதிரி மகிந்த அணிதான். இன்றைய சூழலில் இது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது.

" நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - என்பதை பல தமிழ் கட்சிகள் வெளிப்படையாக கூறும் ஒரு கருத்து. அதைக்கூறித்தான் ஆகவேண்டும். 

அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது.

முதல் எதிரி மகிந்த அணிதான் என்றும் அது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது என்றால், நாளை சம்பந்தரையும் மீறி மகிந்த அணி ஆட்சியை பிடித்துவிட்டால் சம்பந்தரால் அதற்கு என்ன மாற்று வழி? என்பதையும் அவர் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு என்றாலும் தெளிவு படுத்தி இருக்க வேண்டும்.  

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
31 minutes ago, ampanai said:

" நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - 

அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது.

 

நீங்கள் கூறுவதுபோல சம்பந்தர் பெரிய குடையை விரிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. சம்பந்தரின் இயலாமை அமைப்பு சார்ந்ததாகும். பெரிய குடை இல்லாவிட்டால் கிழக்கை நிச்சயம் இழந்துவிடுவோம்.

இலங்கை இந்தியா மற்றும் இயக்கம்  தொடர்பான நமது வரலாற்றின் இருண்ட பகுதிபற்றி நான்  சம்பந்தப்பட்ட அல்லது நான் கேழ்விபட்ட  சில விடயங்களை விரைவில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை உணர்கிறேன். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 8/17/2019 at 5:47 PM, Lara said:

இதென்னவோ உண்மை தான். 😀

பொயட் அவர்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்ததை சம்பந்தனின் சாணக்கிய அரசியல் என கருதுபவர். 😎

இது பல தளங்களை கொண்ட விடயம். சம்பந்தர் முன் கூட்டமைப்பு முதல்வரா முஸ்லிம் முதல்வரா என்கிற கேழ்வி இருக்கவில்லை. அவர் முன்னம் இருந்த கேழ்வி முஸ்லிம் முதல் அமைச்சரா மகிந்த அணி முதல் அமைச்சரா என்பதுதான். இது இலகுவான கேழ்வியல்ல. 

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, poet said:

நீங்கள் கூறுவதுபோல சம்பந்தர் பெரிய குடையை விரிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. சம்பந்தரின் இயலாமை அமைப்பு சார்ந்ததாகும். பெரிய குடை இல்லாவிட்டால் கிழக்கை நிச்சயம் இழந்துவிடுவோம்.

தலைமை என்பது பல குணாதிசயங்களை உள்ளடக்கியது.  ஆளுமை அதில் முக்கியம் பெறுகின்றது. மேலும், நேரம் : எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் மற்றும் எதை செய்யக்கூடாது என்பது  அதைவிட முக்கியமாகின்றது. அடுத்து, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்திடும் தன்மை, தன்னை சுற்றி இருக்கும் ஆதரவாளர்கள் பற்றிய சரியான கணிப்பு என்பனவற்றையும் கூறலாம். 

சம்பந்தர் ஐயாவிடம் நிறைய அனுபவம் உள்ளது.  

ஆனால் மக்கள் எதிர்பார்ப்புக்கள் பல நிறைவேறாமலும் அநாதைகள் போன்ற உணர்வும் உள்ளது. தன்னால் முடியாவிட்டால், முடியாததை செய்யக்கூடிய அடுத்த தலைமுறை தலைவர்களை இனம்கண்டு  அவர்களுடன் சில காலம் பயணிக்க வேண்டும். அப்பொழுது தான் அரசியல் தலைமை பூரணமடையும்.  

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

முப்பது வருட போரில் இழந்தவற்றை ஒரு இனக்கொலையின் பின்னர் எதிரியிடமிருந்து இராஜதந்திர அழுத்தங்களால் மட்டும் பெறுவது என்பது இலகுவான கலையல்ல. இனக்கொலையின் கையறு நிலையில் ஆரம்பித்த எங்களிடம் அதற்கான வல்லவர்களோ வளங்களோ குறைவு. போராட்டத்தால் நிமிர்ந்த புலம்பெயர் சமூகத்தின் உண்மையான பங்களிப்பு குறைவு. புலம்பெய்ர்ந்த நாடுகளில் படுபாவிகளான கொள்ளையர் குடும்பங்களால் அமுக்கபட்ட குல நாசமென நம்பப்படுகிற  தமிழர் இரத்தமும் சாபங்களும் தோய்ந்த பணத்தை மீட்டு போரில் ஈடுபட்ட பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு ஏழைக் கிரமங்களுக்கு திருப்பிவிடுவதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு ரீதியாக அக்கறை  காட்டவில்லை. அமைப்புக்குள்ளும் சம்பந்தர்போல செயல்படுகிறவர்களை அதிகம் காணமுடியவில்லை. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு  சம்பந்தரை மதிப்பீடு செய்ய முடியுமா?  

Edited by poet

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ந‌ன்றி உட‌ன் பிற‌ப்பே 🙏🙏😍, உங்க‌ள் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து , எம்ம‌வ‌ர்க‌ள் இல்லை என்ற‌ துனிவில் ஊரில் ப‌ல‌ அசிங்க‌ங்க‌ள் ந‌ட‌க்குது அண்ணா, ஏன் புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து போன‌ ஒருத‌ர் பெண்க‌ளுட‌ன் உல்லாச‌மாய் இருக்கும் இட‌த்துக்கு கூட்டிட்டு போய் விடுங்கோ என்று கேட்டார் , அவ‌ர் அது முன்னால் போராளிக‌ள் என்று தெரியாம‌ கேட்டு போட்டார் , பிற‌க்கு என்ன‌ ஏறுங்கோ கொண்டு போய் விடுகிறோம் என்று போராளிக‌ள் கூட்டிட்டு போய் ர‌கிசிய‌மான‌ இட‌த்தில் வைச்சு அவ‌ரின் க‌தையை முடிச்சு விட்டின‌ம் 👏👏👏/  இந்த‌ 60வ‌ய‌து முதிய‌வ‌ர் செய்த‌ சேட்டை உண்மையில் ம‌ன்னிக்க‌ முடியாத‌ ஒன்று அண்ணா 😠😉,  2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் த‌ன‌து பெற்றோர‌ இழ‌ந்த‌ சின்ன‌ பிள்ளைக்கு 60 வ‌ய‌து மாம‌ன் 19வ‌ய‌து சின்ன‌ பிள்ளையை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து ம‌ன்னிக்க‌ முடியாத‌ ஒன்று 😓 , அதுக்கு தான் மேல‌ விப‌ர‌மாய் எழுதினான் , என்ர‌ ந‌ண்ப‌ன் அந்த‌ முதிய‌வ‌ருக்கு கை வைக்க‌ முத‌ல் கேட்ட‌ கேள்வி எங்க‌ட‌ த‌லைவ‌ர் இருந்து இருந்தா இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ செய‌லை செய்து இருப்பியா என்று  🤞💪,  உண்மை தான் அண்ணா த‌மிழீழ‌ காவ‌ல்துறை அவ‌ர்க‌ளின் க‌ட‌மையை ச‌ரியாய் செய்வார்க‌ள் , நீங்க‌ள் மேல‌ எழுதின‌து எல்லாம்  சின்ன‌னிலே கேள்வி ப‌ட்ட‌ நான் 🤞 ,  த‌மிழீழ‌ காவ‌ல்துறையை போல‌ ந‌ல்ல‌ காவ‌ல்துறையை நான் பார்த்த‌து இல்லை , எல்லாம் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரின் ந‌ல்ல‌ வ‌ள‌ப்பு 👏👏👏,  எம் க‌லாச்சார‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அழிஞ்சு கொண்டு வ‌ருது , இத‌ சொன்னால் கேட்டும் கேக்காது போல் ந‌டிக்குங்க‌ள் , நீங்க‌ள் நாங்க‌ள் ஊரில் வாழ்ந்த‌ கால‌த்தில் எங்க‌ளுக்கு க‌ஞ்சா என்றாலே என்ன‌ என்று தெரிந்து இருக்காது 🤞, இப்ப‌த்த‌ சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு இல‌ங்கை காவ‌ல்துறையே வேண்டி குடுக்குது  க‌ஞ்சாவை 😠/ த‌லைவ‌ர் போராளிக‌ள் இல்லை என்ற‌ துனிவில் ப‌ல‌ அசிங்க‌மான‌ வேலைக‌ள் ப‌ல‌ர் செய்யின‌ம் , ஏன் இந்த‌ திரியில் ச‌ட்ட‌ம் அது இது என்று எழுதும் ஆட்க‌ள் த‌மிழ் பெண்க‌ள‌ த‌வ‌றான‌ முறையில் வ‌ழி ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஏன் த‌ய‌ங்கின‌ம் 😉, இவ‌ர்க‌ளின் வீர‌ப்பு வெட்டி பேச்சு எல்லாம் இந்த‌ யாழ் ஓட‌ தான் , செய‌லில் துனிஞ்சு இற‌ங்க‌ மாட்டின‌ம் , ஆனால் ஊரில் இருக்கும் ந‌ல்ல‌ முன்னால் போராளிக‌ள் த‌ங்க‌ளால் முடிஞ்ச‌த‌ ர‌க‌சிய‌மாய் செய்யின‌ம் , அவ‌ர்க‌ளுக்கு எப்ப‌வும் த‌னி ம‌ரியாத‌ உண்டு 👏👏👏🙏🙏 பின் குறிப்பு  நாங்க‌ள் இங்கை ர‌வுடித்த‌ன‌ம் செய்வ‌து இல்லை அண்ணா , சில‌ ச‌மைய‌ம் சில‌ பிராடுக‌ளுக்கு புரியும் ப‌டியாய் சொன்னால் தான் புரியும் எல்லாம் அந்த‌ த‌லைவ‌ர் மேல் கொண்ட‌ ப‌ற்றால் 🤞😍😍😍 , 
  • இவர் கல்லூரியை வைச்சு எப்படி காசு பார்க்கலாம் என்பதான நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக பழைய மாணவர் சங்கங்களை ஒருங்கிணைப்பதாகச் சொல்லிக் கொண்டு.. ஒரு அமைப்பின் ஊடாக மொத்த அன்பளிப்புக்களையும் சொந்தமாக்க முனைந்ததோடு.. பழைய மாணவர்கள் எல்லோரும் காசு கொடுத்து ஆயுட்கால உறுப்பினத்துவம் பெற வேண்டும் என்றும் காசு பார்க்கும் சட்டங்களை இயற்ற வெளிக்கிட்டிருந்தார். யாழ் இந்துக்கல்லூரியின் சிறப்புக்காக உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் பலர் உண்டு. இப்படியான சிலரும் யாழ் இந்து சார்ந்தோராக இருப்பது துரதிஷ்டம். இப்படிச் சிலர் காலத்துக்கு காலம் வந்து போகவே செய்கின்றனர். அது எமது சமூகத்தில் என்றில்லை உலகில் எங்குமே காணக்கூடிய பொதுக்காட்சியாகவே உள்ளது.  பெற்றோரும் மாணவர்களும் பழைய மாணவர்களும் விழிப்புணர்வாக இருப்பதும்... அதிபர்களின் ஆசிரியர்கள் மாணவர்களின் சட்டத்துக்கு சமூகத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் கண்டு உடனடி நடவடிக்கைகளை பாடசாலை மட்டத்தில் சமூக மட்டத்தில் எடுப்பதன் வாயிலாக மட்டுமே பாடசாலையின் நற்பெயர் அதிபர்கள் ஆசிரியர்கள் சில சண்டிக்கூட்ட மாணவர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை எதிர்காலத்தில் உறுதி செய்து கொள்ள முடியும். 
  • இந்த சுண்டகாய் இராணுவத்தின் பாதுகாப்புக்காக தமிழர்கள் காணிகளை ஆக்கிரமிக்க இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. உலகில் தமிழர்கள் ஒரு பலமான நாட்டின் பின்புறத்தில் தடவிக் கொடுத்திருந்தால்.. இன்று.. தமிழர் தாயகம் பிறந்திருக்கும். உந்த இராணுவம் சின்னாபின்னமாகி இருக்கும். ஆனால் அதனை சிங்களவர்கள் செய்து கொண்டது மட்டுமன்றி..  தமது இனக்கொலை இராணுவத்தைக் கொண்டு.. தமிழர்களின் தன்மானத்தை இழிவுபடுத்திக் கொண்டு தொடர்ந்து தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து நிற்க யாருமே அனுமதிக்கக் கூடாது. இவர்களின் இந்த ஆக்கிரமிப்புப் பற்றி சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்ல வேண்டுமே தவிர.. இந்த இனக்கொலை சிங்கள இராணுவத்தோடு.. சமரசத்துக்கு செல்பவர்கள் தமிழ் மக்களுக்கானவர்கள் கிடையாது. 
  • இதே காரணத்துக்காக தமிழீழ அரசு காலத்தில் மரண தண்டனை அனுபவித்த வயதானவர்கள் பற்றிய செய்திகள் பல உண்டு. இப்போது அந்த அரசும் இல்லை.. நடப்பில் உள்ள சட்டத்தை உள்ளபடி அமுலாக்க எதுவும் சொறீலங்கா நாட்டில் இல்லை. அந்தத் துணிவில் குறிப்பாக புலம்பெயர் நம்மவர்கள் தாயகத்தில் சொந்த இன மக்களையே பல்வேறு வழிகளில் பலிக்கடா ஆக்கி வருகின்றனர்.  எமது தேவை இப்படியான சந்தர்ப்பங்களை சம்பவங்களை எப்படி தடுப்பது.. என்பது தான். அதில் முக்கியமானது.. 1. சிறுவர் சிறுமியர்களுக்கு பாலியல் அறிவூட்டுவதோடு.. எவை பாலியல் நோக்கம் கொண்ட அணுகுமுறைகள் என்பதை பகுத்தறியும் புரிந்து கொள்ளும் அவற்றில் இருந்து விலகிச் செல்லும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே.  2. இதையே வயதான ஆண் பெண்களுக்கும் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புக்கள் விழிப்பூட்டல் திட்டங்களை தீட்டி அமுல்படுத்த வேண்டும். 3.இப்படியானவர்களால் பாதிப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை சமூக அமைப்புக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெண்கள் அமைப்புக்கள் செய்ய முன் வர வேண்டும். 4.சந்தேக நபர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப முடியாத வகைக்கு அவர்கள் எங்கு போயினும் சட்டத்தின் பிடிக்குள் அவர்களை கொண்டு வருதல் வேண்டும்.  5. சந்தேக நபர்கள் குற்றம் செய்திருந்தால்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியை அமுலாக்க வேண்டும். நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லது சரியான வாழ்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். 6. இவர்கள் மீது சட்டத்தை சண்டித்தனத்தை எம் கையில் எடுத்து.. நாம் வன்முறையை உபயோகித்து செயற்படுவோம் ஆனால்.. நாம் தான் குற்றவாளிகள் ஆவோம். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டத்தின் பிடிக்குள் செல்லாமலே தப்பிக்க வைக்கப்பட்டு விடுவார்கள். 7. இவர்கள் மீது வன்முறையை காட்டுவதிலும் ஊரில் உள்ள இளைய சமூகத்தை கொண்டு உள்ளூர் சமூகத்தில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய வயதினரை நோக்கி விழிப்புணர்வு பிரச்சாரங்களைக் கொண்டு செல்வது அவசியம். காரணம் இப்படியான குற்றவாளிகளை சதா கண்காணிக்க முடியாது. பல நல்லவர்கள் என்று நடிப்போரும்.. சந்தர்ப்பத்திற்கு அமைய குற்றவாளிகள் ஆகக் கூடிய பலவீனமான சட்ட அமுலாக்கமே தாயகத்தில் இன்று ஆக்கிரமிப்பில் உள்ளோரால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகுவது சர்வசாதாரணமே. காரணம் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே பெரும் குற்றவாளிகளாக உள்ள நாடு அது. அங்கு சரியான சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமே மக்களை விழிப்பூட்டும்.. குற்றவாளிகளிடம் இருந்தும் குற்றவாளிகளின் அணுகுமுறைகளை இனங்கண்டு கொள்வதன் மூலம் குற்றவாளிகள் வெற்றி பெறுதலில் இருந்தும் மக்களை பாதுகாக்கும்.   
  • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...