Jump to content

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்கள் பழுது.. பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

fault in Chennai Metro rail automatic ticket system

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்கள் பழுது.. பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ளதால் டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பல தடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இதேபோல் வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் வழங்கும் இயந்திரங்கள் தொழில்நுட்பக் கோளாறால் பழுதாகியுள்ளன.

காலை 6 மணி முதல் ஏற்பட்ட பாதிப்பால் பயணிகளுக்கு டோக்கன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள பழுதால் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில்களில் பயணிகள் இலவசமாக செல்கின்றனர். தானியங்கி டிக்கெட் சேவை பழுதால் பயணச்சீட்டு வழங்க தாமதமான காரணத்தால் மெட்ரோ நிர்வாகம் இலவச பயணத்திற்கு அனுமதியளித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, அரசினர் தோட்டம் ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் பழுதை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பழுது பிற்பகலில் தான் சரி செய்ய முடியும் என்பதால் அதுவரை பயணிகள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/fault-in-chennai-metro-rail-automatic-ticket-system-360351.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.