Jump to content

தன்னுடன் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராகப் பெண் முறைப்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடன் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராகப் பெண் முறைப்பாடு

தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமை யாற்றும்  பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை மாலை (16) மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தன்னுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதாகவும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்படுத்து வதாகவும் கூறி தனக்கும் தனது குடும்பத்திற்கும் உரியப் பாதுகாப்பை வழங்குமாறு  கோரி குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். 

தலைமன்னார் கிராமப்பகுதியில் வசிக்கும் எனது கணவர் ஒரு நாள் நள்ளிரவு அவசர முச்சக்கர வண்டி சவாரிக்குச் சென்ற போது வாகன அனுமதி பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வீட்டிலே விட்டுச் சென்று விட்டார்.   

இந்த நிலையில்  உடனடியாக எனது தம்பியிடம் குறித்த ஆவணங்களை கொடுத்து அனுப்பினேன். 

சற்று நேரம் கழித்து எனது தம்பி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தொலைப்பேசி அழைப்பு வந்தது.

 என்னையும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்தனர்.  பொலிஸ் நிலையம் சென்ற போது தம்பி மாடு திருட முயன்றதால் கைது செய்ததாகவும் உன் தம்பியை விட வேண்டும் என்றால் நான் அழைக்கும் இடத்திற்குத் தனியாக வர வேண்டும் என குறித்த பொலிஸ் அதிகாரி ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.

 அதனால் தான் கோபம் அடைந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவே வெளியே வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

 சற்று நேரத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி அப் பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டு தன்னுடைய நிபந்தனைக்கு அடிபணியுமாறு கோரியுள்ளார். 

mannar.jpg

குறித்த பெண் தனது கணவனின் அறிவுரையின் படி குறித்த பொலிஸ் அதிகாரியின் உரையாடலை பதிவு செய்துள்ளார்.

பின்னர் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த உரையாடல்களை ஒப்படைத்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் மாற்றம் செய்வதாக வாக்குறுதி அழித்தனர்.

 ஆனால் குறித்த அதிகாரி தொடர்சியாக எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்றார். 

குறித்த பொலிஸ் அதிகாரியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்ததால் தொடர்சியாக இரவு நேரங்களில் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக செயற்படுவதாகவும் பழிவாங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

எனவே மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த விடையத்தில்  தலையிட்டு நீதியை பெற்று தந்து எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தறுமாறு குறித்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கோரிக்கையை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

https://www.virakesari.lk/article/62824

Link to comment
Share on other sites

"குறித்த பெண் தனது கணவனின் அறிவுரையின் படி குறித்த பொலிஸ் அதிகாரியின் உரையாடலை பதிவு செய்துள்ளார்." 

துணிவிற்கும் தொழில்நுட்பத்தை சரியான வழியில் பாவித்தமையும் …. மகிழ்ச்சி  !

இந்த செய்தியை மற்றைய பெண்கள் ஒரு பாடமாக மனத்தில் எடுக்கலாம். 

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

பின்னர் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த உரையாடல்களை ஒப்படைத்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் மாற்றம் செய்வதாக வாக்குறுதி அழித்தனர்.

இந்த சிங்கள-பௌத்த போலீஸ் காடையனை இதுவரை கைது செய்யவும் இல்லை இடமாற்றம் செய்யவில்லை. இதிலிருந்து இவை திட்டமிட்ட செயற்பாடு என்பது புலனாகிறது.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பு நிகழ்ச்சி நிரல்களில் இது போன்ற பாலியல் துஸ்பிரயோக விடயங்களும் அடங்கும். சிங்கள-பௌத்த பயங்கரவாதி கோட்டாபய ராஜபக்ச தமிழ் பெண்களை சீரழிக்குமாறு சிங்கள இராணுவத்துக்கு பகிரங்கமாக வழிகாட்டியதை மறந்திருக்க முடியாது.

இந்த பின்னணியில் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் என்ன செய்கின்றனர்? மன்னாரைப் பிரதிநித்துவப்படுத்தும் அடைக்கலநாதன் என்ன செய்கிறார்? அடைக்கலநாதன் தனது சட்டவிரோத செயல்களுக்கு பாதிப்புகள் வந்துவிடக் கூடாது என்று கண்ணை மூடிக்கொண்டிருக்கிறாரா?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.