Sign in to follow this  
கிருபன்

ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி

Recommended Posts

ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி

வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ananthsangari.JPG

யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாண சபை ஆட்சியில் இருந்த போது அதில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த நிர்வாகத்திலேயே இந்த குற்றச் சட்டு வைக்கப்பட்டது.

அப்படியானால் முதலில் அவர் தனது பதவியிலிருந்து விலகி நீதியான விசாரணைக்கு இடமளித்திருக்க வேண்டும்.விசாரணைக்கு பதவியில் இருந்து ஒதுங்கி ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பார்.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் செய்த தவறினால் இப்போது நீதிமனரத்தின் ஊடாக அவரது நிர்வாக பிழைகள் வெளியில் வந்துள்ளன.

இவ்வற்றை செய்யாமல் விட்டுவிட்டு தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க போகின்றோம் என எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.இவர்களின் பேரணியால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.என்றார்.

https://www.virakesari.lk/article/62881

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, கிருபன் said:

வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

என்னவொரு லிங்க் எழுக பேரணிக்கும் எவனோ செய்த ஊழலுக்கும். எவனோ ஊழல் செய்தா முதலமைச்சர் ஏன் பதவி விலகோணும்? 

இப்பிடி எல்லாம் லிங் பண்ண முடிஞ்சா ஆனந்தசங்கரி எப்பவோ தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் பதவியை துறந்திருக்கோணுமே!

இதனால, ஆனந்தசங்கரி தனது இந்திய எஜமானர்களின் தாளத்துக்கு ஆடத் தொடங்கிருக்கார்னு அர்த்தம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணத்தில் தூய தமிழில் அழகான அறிவிப்பு..
    • கடல் குதிரை படத்தின் கதாநாயகியை காவல் துறை  சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், உச்ச நீதிமன்றில்  தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:- காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளேன். கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். 1993-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா வந்த சந்திரன் என்பவரது மகள் பிரசாந்தி என்ற 20 வயது இளம் பெண் அறிமுகமானார். இவரது பெற்றோர் இலங்கை அகதி என்று முறையாக தமிழக அரசிடம் பதிவு செய்துள்ளனர். முதலில் ஊரபாக்கத்திலும், பின்னர் வளசரவாக்கத்திலும் வசித்தனர். பிரசாந்தி என்னுடைய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் பிரசாந்தியும், அவரது தாயாரும் எனக்கு போன் செய்து அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழுதனர். நான் அவர்களை மெரினா கடற்கரை, காந்திச்சிலை முன்பு சந்தித்து பேசியபோது, கியூ பிரிவு பெண் காவல் துறை  அதிகாரி தனக்கு போன் செய்து, பேசி விட்டு, கடைசியில் மாதவிலக்கு திகதி குறித்து விசாரித்தார் என்று பிரசாந்தி கூறி அழுதார். இனிமேல் அந்த அதிகாரி போன் செய்தால், என்னிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என்றும் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.   பாலகணேசன் என்பவருக்கு எதிராக பிரசாந்தி கடந்த ஜூன் மாதம் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்த, பிரசாந்தி நேரில் வரவேண்டும் என்று வடபழனி சப்-இன்ஸ்பெக்டர் கடந்த ஆகஸ்டு மாதம் சம்மன் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் கியூ பிரிவு காவல் துறை , வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பிரசாந்தியிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்டுள்ளனர். இதுகுறித்து என்னிடம் தொலை பேசியில்  பிரசாந்தி கூறினார். அவரை நேரில் வரும்படி கூறினேன். அதன்பின்னர் அவரையும், அவரது பெற்றோரையும் காணவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, பல மாதங்களாக பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் சட்டவிரோதமாக கியூ பிரிவுகாவல் துறை  பிடித்து, மர்மமான இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக கியூ பிரிவு காவல் துறை  பிடியில் உள்ள பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த தமிழக டி.ஜி.பி., கியூ பிரிவு காவல் துறை  சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. http://eelamurasu.com.au/?p=23125&fbclid=IwAR18Oq4Jw-u5EiRfgcqPAImxNjICZFp4DIsQm5KbMUPOa5KGTUMNT737NkQ
    • நீங்கள் அவரின் இடத்தில் இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பீர்கள்? ஒரு மாதிரி கடிதம் எழுதுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்ளலாம்.