Sign in to follow this  
கிருபன்

ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

Recommended Posts

ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள்

காணாமல்போனோர் விடயத்திற்கு இன்றுவரை தீர்வு கிட்டாத நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல்போன உறவின் தாயார் கந்தசாமி தவமலர்  தெரிவித்தார்.

Image result for à®à®¾à®£à®¾à®®à®²à®¾à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®°à®¿à®©à¯Â  à®à®±à®µà¯à®à®³à¯

நிலைமாறுகால நீதிக்காய் எங்களின் குரல்கள்'என்னும்  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் வடக்கு கிழக்கு மாவட்டப் பெண்கள் சமாசங்கள் இணைந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரச்சினைகளினைப் பகிர்தல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை  திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள  லட்சுமி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதன்போது  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இங்கே இது தொடர்பில் குறித்த பெண்மணி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனையானது மிகப் பெரியது.  நான் கணவரை இழந்து இரு பிள்ளைகளை இழந்து தனிமையில் வாடுகின்றேன். 3 பேர் காணாமல் போன நிலையில் நான் தனிமையில்  உள்ளேன். எனது உறவுகளையும் அதேபோன்ற உறவுகளையும் தேடும் ஆயிரக் கணக்கானோரில் நானும் ஒருவர்.

காணாமல்போனோர் சான்றிதழ் தருவதானால் முதலில்  காணாமல் ஆக்கப்பட்டவர் எனப் பதிய வேண்டும். எமக்கு எங்கள் உறவுகள் வேண்டும். எமது வேதனையை யாரிடம் கூருவது என்றுகூட  தெரியாமல் இன்று நிலமை உள்ளது. அடுத்து ஓ.எம்.பி நிறுவனம்  வேண்டும். அரசு எம்மை ஏமாற்றியவாறே உள்ளது.

ஓ.எம்.பி வேண்டும் உடனடியாக அந்த அலுவலகம் இங்கே உடனடியாக அமைக்கப்பட வேண்டும். என்றார்.

 

https://www.virakesari.lk/article/62882

Share this post


Link to post
Share on other sites

உங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை சிங்கள அரசு தெரியப்படுத்த வேண்டும், தெரியப்படுத்த வைக்க வேண்டும். 

இது பற்றிய வழக்கு ஏதும் உள்ளதா என தெரியவில்லை. ஆனால், இலங்கையின் அரசியல் அமைப்பின் சட்டங்களுக்கு அமைய ஒரு வழக்கை முன்னெடுக்கலாம், இல்லை இருக்கும் வழக்கை சட்டமா அதிபரின் கவனம் வரை எடுத்து செல்லலாம். 

"காணாமல்போனோர் சான்றிதழ் தருவதானால் முதலில்  காணாமல் ஆக்கப்பட்டவர் எனப் பதிய வேண்டும். எமக்கு எங்கள் உறவுகள் வேண்டும். எமது வேதனையை யாரிடம் கூருவது என்றுகூட  தெரியாமல் இன்று நிலமை உள்ளது. அடுத்து ஓ.எம்.பி நிறுவனம்  வேண்டும். அரசு எம்மை ஏமாற்றியவாறே உள்ளது."

Share this post


Link to post
Share on other sites

இந்த மக்களுடைய வேதனை தெரியாம, புரியாம தான் சுமந்திரன், மாவை, சம்பந்தன், சரவணபவன் எல்லாரும் ரணில் என்ற ஏமாற்றுப் பேர்வழி பின்னால சுத்திக்கொண்டிருக்கீனம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தலைவா, நீங்களோ, உங்கள் வம்சமோ, ஜனாதிபதியாக முடியாது என்பது நிதர்சனம் என்பதால், ஒரு சுவிஸ் அரசியல் வாதி அதனை மினக்கட்டு சொல்லப்போவதில்லை. அடுத்து, நீங்கள் தப்பித்தவறி ஜனாதிபதியாகி, நாட்டினை கொள்ளையடித்து, உங்கள் வம்சமே அடுத்த தலைவராக வரவேண்டும் என நடந்தால், சுவிஸ்காரர்கள் எதிர்த்தால், அதனை இனவாதம் என்று சொல்வீர்களா? ஒபாமா ஜனாதிபதி ஆகியது அவரது மிகச்சிறந்த பேச்சு வன்மை. ஒபாமா கென்யா வம்சாவளி அல்ல. அமெரிக்க வெள்ளை தாய்க்கும், கல்வி கற்க வந்த கென்யக்காரர் ஒருவருக்குமான சிலநாள் தொடர்பு. அவர் தாயின் வெள்ளைக் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட அமெரிக்க பிரஜை. தந்தை ஓடி விட்டார், கென்யாவுக்கு.  ஹிட்லர், வெள்ளைத்தோல், அவரது மிகச்சிறந்த பேச்சு வன்மை. நிக்ளோஸ்  வெள்ளைத்தோல்  
  • நான் தெளிவாக கூறியும் நீங்கள் தான் குழம்புகின்றீர்கள் அல்லது நடிக்கின்றீர்கள். எனவே மீண்டும் தெளிவாக கூறுகின்றேன்.  தமிழனாகிய எனது வம்சாவளியில் பிறந்த  எனது நான்காம் அல்லது ஐந்தாம் தலைமுறைப் பிள்ளை ஒன்று தமிழ் வம்சாவளி என்ற ஒரே காரணத்திற்காக சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாக முடியாது என்று இங்கு சுவிற்சர்லாந்தின்  ஒரு அரசியல் தலைவர் வெளிப்படையாக கூறுவரானால் இங்கு அது இனவாதமாகத் தான்  இங்கு உள்ள மக்களால்  பார்க்கப்படும். அது இனவாதம் தான்.  கெனிய நாட்டு வம்சாவளி ஒபாமா எப்படி அமெரிக்க ஜனாதிபதியானார்?  ஹங்கேரி வம்சாவளி நிகோலோஸ் சார்கோசி எப்படி பிரெஞ்ச் ஜனாதிபதியானார்?
  • எதிர்பார்த்த எதிர்வினைதான் வந்துள்ளது. நாம் மற்றவர்கள் எப்படிச் சிந்திப்பார்கள் என்று உய்த்தறியும்நுண்ணறிவையும் கொண்டுள்ளோம் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.😎 சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கின்றார்கள் என்ற கருத்தியலை விதைத்து பெரும்பான்மையானவர்களை கோர்ப்பரேட் உலகம் அடிமையாக வைத்திருக்கின்றது என்று நாளை புலம்பக்கூடாது. இலுமினாட்டி, freemasons போன்ற அமைப்புக்களில் இருப்பவர்கள்தான் உலகை ஆளுகின்றார்கள் என்றும் நம்பக்கூடாது. ஆமா!
  • எல்லோரும் சிங்களவன் எப்படி எம்மை ஆளலாம் என்று புலிகளை ஆதரித்தார்களாம். சிலர் இயக்கத்திலும் இருந்தார்களாம். தமிழனை, தமிழனே ஆளவேண்டும் என்று சீமான் சொல்வது இனவாதமாம். நல்லா இருக்குது நியாயம், நியாமாரே.   அடேங்கப்பா விளக்கம் !! 500 வருசத்துக்கு முன்னம் வந்த தெலுங்கன் இன்னும் தமிழ் பேசி ஆளலாம். 72 வருசத்துக்கு முன்னம் ஆளத்தொடங்கிய சிங்களவன் தமிழ் இன்னும் பேசாததால், ஆளப்படாது. அதுதான் நம்ம இனவாத தத்துவம்.
  • கேள்வியிலேயே பதில் இருந்ததால் பதிலளிக்கவேண்டி இருந்திருக்கவில்லை! தெலுங்கு நாயக்கர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டார்கள் என்றாலும் அவர்களின் பரம்பரையினர் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களாக இனமாகவும் உணர்வாகவும் கொண்டுள்ளனர். அவர்களை தெலுங்கன் என்று சொல்லுவதுதான் நியாயம் என்றால் எங்கேபோய் முட்டிக்கொள்ள? இதைத்தான் கடைந்தெடுத்த இனவாதம் என்பது. சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழரை தனக்கும் கீழானவர்கள் என்று சொல்கின்றான். சிங்களவனுக்கு தமிழும் தெரியாது (கொன்னைத் தமிழ் சேர்ப்ப்பில்லை), தமிழுணர்வும் கிடையாது. இது பச்சைப்புள்ளைக்கும் தெரியும் என்பதால் கேள்வி மப்பில் வந்ததாக்கும் என்று நினைத்திருந்தேன். இரண்டாம் தரமும் கேட்டதால் ஒன்றில் மப்பில்லை. அல்லது இரண்டு தரமும் மப்புத்தான்😜   இனங்களை பற்றி ஆராயவெளிக்கிட்டால் சிங்களவனை தமிழரின் பரம்பரையினர் என்றும் நிறுவலாம்.😀 தலைவர்  பிரபாகரனை மலையாளி என்றும் நிறுவலாம்.🤒