Jump to content

அந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்

 

நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் தமிழர்களால் அனுப்பப்படுகின்றது என்று வடக்குமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார்.

ragavan.jpg

வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்..

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கூட்டுறவு என்ற இயக்கம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாகரிகத்தைகொண்ட ஒரு இயக்கமாக இருக்கிறது. அது மனிதாபிமான ரீதியான நுண்கடன்களை வழங்கி மக்களிற்கு உதவி செய்திருந்தது. ஆனால் இப்போதும் நுண்கடன் நிறுவனங்கள் இருக்கிறது அவற்றிடம் மனிதாபிமானத்தை காணவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் கூட்டுறவின் மூலமான செயற்பாடுகள் தற்போதும் நடைபெற்ற வண்ணமே இருக்கிறது.

எனது அனுபவத்தின் பிரகாரம் கூட்டுறவிற்கு பின்னால் இருக்கும் மாபெரும் சக்தி பெண்களின் சக்தியாகவே இருக்கும். எனவே இந்த கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் இணைந்து வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி என்ற தாய்வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியினை இன்னும் வலுவாக செய்து கொள்வதற்கான தேசிய, சர்வதேச ரீதியாலான வழிமுறைகள் உங்களிற்கு கிடைக்கும். 

இலங்கையின் பிரதான வருமானமாக தற்போது அமைந்திருப்பது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அங்கு உழைத்து அனுப்பும் அந்நிய செலாவணி பணமே. அது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. அந்த தொகையில் 40 சதவிகிதமானது தமிழர்கள் அனுப்பி வைக்கும் பணமாக இருக்கிறது. 

இந்ததொகையில் ஒரு சதவீதத்தையாவது, எமது வங்கிமூலம் பராமரிக்க முடியுமாக இருந்தால் அது தேசிய அளவிலான வங்கியாக மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக நாம் மத்தியவங்கி ஆளுனருடன் கதைத்து வருகிறோம். எனவே எதிர்காலத்தில் வணிக வங்கிகளை விட கூட்டுறவு வங்கிகள் பெருவளர்சியை அடையும் அதனுடாக மக்களிற்கு கிடைக்கும் சேவைகள் அதிகரிக்கும்.

முன்னதாக நிகழ்வு நடைபெற்ற மேடையில் தொங்க விடப்பட்டிருந்த பதாதை தனி தமிழ் மொழியில் அச்சிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுனர் மூவினமக்களும் ஒன்றாக வாழும் நல்லுள்ளங்கள்‌ கொண்ட மாவட்டம் வவுனியா. எனவே இனிவரும் காலங்களில் சாராம்சமாகவேனும் சிங்கள மொழியிலும் பதாதைகளை அமைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். 

அப்பொழுது தான் நாங்கள் கேட்டுகொண்டிருக்கும் உரிமையை நாம் அடுத்தவருக்கு கொடுக்கும் போது தான் எங்கள் உரிமை ஸ்தாபிக்கபடும் என மேலும் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/62890

 

Link to comment
Share on other sites

இலங்கை வங்கிகளை மொத்தமாக புறக்கணிக்கும் வரையில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன.  

அவை பற்றிய அறிவும் தெளிவும் இருந்தால் இலங்கையின் ஏமாற்று வங்கிகளை தவிர்க்கலாம். அவர்களுக்கு தரும் வருமானத்தை குறைத்து  தாமே அதிகம் பணம் பெறலாம். 
 

இலங்கையின் பிரதான வருமானமாக தற்போது அமைந்திருப்பது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அங்கு உழைத்து அனுப்பும் அந்நிய செலாவணி பணமே. அது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. அந்த தொகையில் 40 சதவிகிதமானது தமிழர்கள் அனுப்பி வைக்கும் பணமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

"அந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்" 

இதனுடன் மலைநாட்டு மக்களின் கடின உழைப்பை உறிஞ்சும் சிங்கள பொருளாதாரத்தில் தேயிலையும் சேர்த்தால் ......  

அந்த மக்களின் வருமானத்தில் ஒரு வெறும் 50 ரூபாவை சேர்த்து கொடுக்க மறுக்கும் மனிதாபிமானம் அற்ற சிங்களம், சிங்கள மக்கள், சிங்கள பொருளாதாரம்  !

Link to comment
Share on other sites

உலகத்தில் இன்று பிரபல்யம் அடைந்து வ்ருவது, பணமே இல்லாத சமூகம். 

எவ்வாறு வளர்ந்தது வரும் நாடுகள் வளர்ந்த நாடுகளில் உள்ள 'கேபிள்' தொழில்நுட்பத்தை விடுத்து ( பின்தங்கியதால் வந்த நன்மை) ' வயர்லெஸ் ' தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனவோ அவ்வாறே  பணம்  இல்லாத சமூகத்தை கட்டி எழுப்பலாம். 

இணையத்தில் தேடியபொழுது அறிந்த சில தளங்கள் ... 

(பொறுப்புத்துறப்பு : இவை தகவல் மட்டுமே ) 

https://www.xoom.com/sri-lanka/send-money

https://remitbee.com/send-money-to-sri-lanka

https://www.worldremit.com/en/sri-lanka

https://transferwise.com/ca/send-money/send-money-to-sri-lanka

Link to comment
Share on other sites

Quote

அது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. அந்த தொகையில் 40 சதவிகிதமானது தமிழர்கள் அனுப்பி வைக்கும் பணமாக இருக்கிறது

 

ரனிலும் இதனை கூறியதாக நினைவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.