Jump to content

எங்க‌ வீட்டு போராளிக‌ளும் , அவ‌ர்க‌ளுட‌னான‌ என‌து நினைவுக‌ளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20190818-211138.png
 

( வ‌ண‌க்க‌ம் யாழ் உற‌வுக‌ளே )

எம் த‌மிழீழ‌ போராட்ட‌த்தில் 25000 ஆயிர‌ம் மாவீர‌ செல்வ‌ங்க‌ளை இழ‌ந்து இருக்கிறோம் /

எம் போராட்ட‌த்தில் என‌து ம‌ச்சான் மான் மூன்று பேர‌ இழ‌ந்து இருக்கிறேன் , அவ‌ர்க‌ளுட‌ன் சிறு வ‌ய‌தில் ப‌ழ‌கின‌ அன்ப‌னா நினைவுக‌ளை சுறுக்க‌மாய் எழுதுகிறேன் 😓/

என‌து முத‌லாவ‌து ம‌ச்சான் 1990ம் ஆண்டு போராட்ட‌த்தில் த‌ன்னை இணைத்து கொண்டார் , ம‌ச்சானுக்கு மூன்று வய‌தாய் இருக்கும் போது அத்தை இற‌ந்து விட்டா , தாயில்லா பிள்ளை என்று சொந்த‌ங்க‌ள் ம‌ச்சான் மேல் அள‌வு இல்லா பாச‌மும் அன்பையும் காட்டி வ‌ள‌த்து விட்ட‌வை / 
1990ம் ஆண்டு யாருக்கும் சொல்லாம‌ த‌ன்னை போராட்ட‌த்தில் இணைத்து கொண்டார் , ம‌ன‌ வேத‌னையுட‌ன்  உற‌வின‌ர்க‌ள் ஏன் ம‌ச்சான்  இப்ப‌டி செய்தார் என்று த‌ங்க‌ளுக்குள் அழுது கொண்டு இருந்தார்க‌ள் க‌வ‌லையில் , 

1991ம் ஆண்டு ஆனையிற‌வுவில் சிங்க‌ள‌ இர‌ணுவ‌த்தின‌ருட‌னான‌ நேர‌டி மோத‌லின் போது , சிங்க‌ள‌ இர‌ணுவ‌ம்  த‌ந்திர‌மாய் வைச்ச‌ மிதிவெடியில் கால‌ வைச்சு இர‌ண்டு கால்க‌ளையும் இழ‌ந்து அந்த‌ இட‌த்திலே வீர‌ச்சாவு அடைந்தார் ம‌ச்சான் 😓😓😓

போராளிக‌ள் எங்க‌ வீட்டுக்கு வ‌ந்து சொல்லிச்சின‌ம் ( திருவேர‌க‌ன் ஆனையிற‌வில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில் வீர‌ச்சாவு அடைந்து விட்டார் என்று 😓

அம்மா அப்ப‌ம்மா அத்தை மார் எல்லாரும் க‌த‌றி அழுதிச்சின‌ம் ம‌ச்சானின் இற‌ந்த‌ செய்தி கேட்டு 😓 /

போராளிக‌ளின் பேருந்து வீட்டுக்கு முன்னுக்கு வ‌ந்து நின்ற‌து , ம‌ச்சானின் உட‌ல் கோப்பாய் துயிலும் இல்ல‌த்தில் வைக்க‌ ப‌ட்ட‌து உற‌வின‌ர்க‌ளின் பார்வைக்கு 😓 , ம‌ச்சானுட‌ன் சேர்ந்து இன்னும் ஜ‌ந்து போராளிக‌ளின் உட‌லும் வைக்க‌ ப‌ட்டு இருந்த‌து 😓

ம‌ச்சானின் இர‌ண்டு கால் இல்லா  இட‌த்தை போராளிக‌ள் அதிக‌ பூ போட்டு இருந்தார்க‌ள் 🌹🌻🌼/

பின்னாளில் அம்மா சொல்லி 
சொல்லி அழுவா ம‌ச்சானின் பிரிவை நினைத்து , தூக்கி வ‌ள‌த்த‌வைக்கு தானே பிள்ளைக‌ளின் பிரிவு  தாங்க‌ முடியாத‌ வ‌லியை குடுக்கும் 😓/

பின்னாளில் போராளிக‌ள் 
(ம‌ச்சான் ந‌ட‌ந்து திரிந்த‌ சாலைக்கு ) செனித் வீதி என்று பெய‌ர் வைச்ச‌வை 🙏 , (செனித் ம‌ச்சானின் இய‌க்க‌ பெய‌ர் 🙏)

இர‌ண்டாவ‌து ம‌ச்சான் 
இவ‌ன் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌கி இருக்கிறேன் , ப‌ய‌ம் என்ன‌ என்று தெரியாம‌ வ‌ள‌ந்த‌வ‌ன் , சிறு வ‌ய‌திலே ந‌ல்லா நீந்துவான் ,

இந்த‌ ம‌ச்சானும் போராட்ட‌த்தில் தானா விரும்பி தான் த‌ன்னை இணைந்து கொண்டார் , 2000ம் ஆண்டு ஆனையிற‌வு மீட்பு பேரில் த‌ள‌ப‌திக‌ளின் வ‌ழி ந‌ட‌த்த‌லில் சிங்க‌ள‌ ஆமியை ச‌க‌ போராளிக‌ளுட‌ன் சேர்ந்து விர‌ட்டி அடிச்ச‌வ‌ன் , 2001ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ தீச்சுவாலை ச‌ண்டையில் ஆமி அடிச்ச‌ செல் பீஸ் ம‌ச்சானின் ஒரு க‌ண்ணை காவு கொண்டு போன‌து 😓, போர் க‌ள‌த்தில் இருந்து அப்புற‌ ப‌டுத்த‌ ப‌ட்டார் ம‌ச்சான் / ஒரு க‌ண்ண‌ போர் க‌ள‌த்தில் இழ‌ந்த‌தால் ம‌ச்சான் வீடு வ‌ந்து சேர்ந்தார் போராட்ட‌த்தில் இருந்து வில‌கி 🙏/

எத்த‌னையோ போர் க‌ள‌த்தில் ச‌ண்டை பிடிச்சு போகாத‌ உயிர் , 2006ம் ஆண்டு க‌ண் குடுத்து பார்க்க‌ முடியாத‌ ஒரு விப‌த்தில் இற‌ந்து போனார் 😓😓( அந்த‌ நாள் நான் புல‌ம் பெய‌ர் நாட்டில் த‌னிமையில் இருந்து அழுத‌ நாள் 😓

போர் க‌ள‌த்தில் ம‌ச்சானின் உயிர் போய் இருந்தா ம‌ச்சானின் ப‌ட‌த்தை இந்த‌ இர‌ண்டு ம‌ச்சான் மாரின் ப‌ட‌த்தோடு இணைத்து இருப்பேன் /

மூன்றாவ‌து ம‌ச்சான் , 
த‌மிழீழ‌ போராளிக‌ளின் உடையில் நிப்ப‌வ‌ர் தான்  மூன்றாவ‌து ம‌ச்சான் , சின்ன‌னின் ஒன்றாய் ப‌டுப்போம் ஒன்றாய் விளையாடுவோம் , ஒன்றாய் கோயிலை கூட்டி சாமியை க‌ழுவுவோம் , இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் என‌து மூன்றாவ‌து ம‌ச்சானுட‌னான‌ நினைவுக‌ளை /

2005ம் ஆண்டு தானாக‌ விரும்பி போராட்ட‌த்தில் த‌ன்னை இணைத்து கொண்டார் , 2008ம் ஆண்டு ம‌ன்னாரில் சிங்க‌ள‌ இர‌ணுவ‌த்துட‌ன் ஏற்ப‌ட்ட‌ மோத‌லின் போது வீர‌ச்சாவு /

மச்சான் மாருக்கும் ம‌ற்றும் ம‌ச்சான் மாருட‌ன் வீர‌ச்சாவை த‌ழுவிய‌ ச‌க‌ போராக‌ளுக்கும் வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏/

ப‌திவு பைய‌ன்26 😓/
 

Edited by பையன்26
  • Like 3
  • Thanks 2
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு விடுதலைக்காகப் போராடி மரணித்த வீரர்களுக்கு  வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்!

எனக்கும் இது போல சிலர் இருக்கிறார்கள். (நம்மில் பலருக்கும் இருப்பார்கள்). உங்கள் எழுத்து அந்த நினைவுகளையும் கிளரிவிட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

வீரவணக்கங்கள்!

எனக்கும் இது போல சிலர் இருக்கிறார்கள். (நம்மில் பலருக்கும் இருப்பார்கள்). உங்கள் எழுத்து அந்த நினைவுகளையும் கிளரிவிட்டது.

உண்மை தான் பிரோ அதில் மாற்று க‌ருத்துக்கு இட‌ம் இல்லை/
வ‌வுனியாவில் ஒரு ஜ‌யாவுக்கும் அம்மாவுக்கும் ஏழு பெண் பிள்ளைக‌ள் / ஏழு பெண் பிள்ளைக‌ளும் போராளிக‌ள் , அதில் ஒரு பிள்ளை க‌ரும்புலி , இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்த‌வா /

என‌து முத‌ல் ம‌ச்சான் வீர‌ச்சாவு அடையும் போது , எம் போராட்ட‌ம் ப‌ற்றி என‌க்கு ஒன்றும் தெரியாது , ஆனையிற‌வு எந்த‌ திசையில் இருக்கு என்று கூட‌ தெரியாது / உற‌வின‌ர்க‌ள் சொன்ன‌தை தான் ம‌ன‌சில் வைச்சு அப்ப‌டியே எழுதினான் 😓 ,
ம‌ற்ற‌ இர‌ண்டு ம‌ச்சான் மார் போராட்ட‌த்தில் இணையும் போது எம் போராட்ட‌ வ‌ர‌லாறு ந‌ல்லாவே தெரியும் 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் சங்கர் குடும்பமும் இப்படித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

கேணல் சங்கர் குடும்பமும் இப்படித்தான்.

வான் ப‌டையை ஆர‌ம்பிச்சு வைச்ச‌ ச‌ங்க‌ர் அண்ணாவின் குடும்ப‌மா பிரோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனையோ மாவீரர்களை இழந்தும்...
கடைசியில்.. ஒரு பலனும் இல்லாமல் போனது,  கொடுமையானது.
மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஆம்

த‌க‌வ‌லுக்கு நன்றி பிரோ 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👍🏿 

1 hour ago, பையன்26 said:

த‌க‌வ‌லுக்கு நன்றி பிரோ 🙏

/

1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக ‘சயனைட்’ அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார்.

2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார்.

/

http://www.errimalai.com/?p=15100 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இப்படி எத்தனையோ மாவீரர்களை இழந்தும்...
கடைசியில்.. ஒரு பலனும் இல்லாமல் போனது,  கொடுமையானது.
மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.

ஒன்ரா இர‌ண்டா எம் இன‌ம் இழ‌ந்த‌து /
நாடு கிடைச்சு இருந்தாலாவ‌து ம‌ன‌ம்  ஆறுத‌ல் அடைஞ்சு இருக்கும் , மாவீர‌ர்க‌ளின் நினைவு வ‌ரும் போது அவ‌ர்க‌ளின் க‌ல்ல‌றைக்கு ப‌க்க‌த்தில் ஆவ‌து இருந்திட்டு வ‌ர‌லாம் / 
மாவீர‌ர்க‌ளின் ஒரு அடையால‌மும் ஈழ‌ தேச‌த்தில் இப்போது இல்லை சிறி அண்ணா 😓/

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரச்சாவுகள் ஆனபோதும் மனதில் வலி கொடுக்கும் நினைவுகள் பையா......ஈழத்தின் எல்லா குடும்பங்களின் மீதும் இந்த துன்பத்தின் நிழல் படிந்தேயுள்ளது......அவர்களுக்கு  ஆழ்ந்த இரங்கல்கள்.....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

வீரச்சாவுகள் ஆனபோதும் மனதில் வலி கொடுக்கும் நினைவுகள் பையா......ஈழத்தின் எல்லா குடும்பங்களின் மீதும் இந்த துன்பத்தின் நிழல் படிந்தேயுள்ளது......அவர்களுக்கு  ஆழ்ந்த இரங்கல்கள்.....!

உண்மை தான் சுவி அண்ணா /
பிள்ளைக‌ளை பெத்த‌ தாய் மாருக்கு தான் , பிள்ளைக‌ளின் பிரிவு தாங்கி கொள்ள‌ முடியாத‌ வ‌லியையும் வேத‌னையையும் குடுக்கும் /

ஏன் இந்த‌ ப‌திவு எழுதும் போது கூட‌ என் க‌ண்க‌ள் க‌ல‌ங்கின‌து 😓, கார‌ன‌ம் ம‌ச்சான் மார் மீது உள்ள‌ பாச‌த்தினாலும் சிறு வ‌ய‌தில் அவ‌ங்க‌ளுட‌ன் ப‌ழ‌கின‌ நினைவுக‌ளினாலும்  😓/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1991 ஆனையிறவு சமரின் பின்னரே மாவீரர் மயானம் அமைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நந்தன் said:

1991 ஆனையிறவு சமரின் பின்னரே மாவீரர் மயானம் அமைக்கப்பட்டது.

கோப்பாய் துயிலும் இல்ல‌த்தில் ம‌ச்சானின் உட‌ல் எரிக்க‌ ப‌ட்ட‌து த‌மிழீழ‌ போராளிக‌ளின் துப்பாக்கி சூட்டுட‌ன்  / 
ம‌ச்சான் வீர‌ச்சாவு அடைந்த‌ ஆண்டும் 1991ம் ஆண்டு தான்  /

க‌ல்ல‌றைக‌ள் எந்த‌ ஆண்டில் இருந்து க‌ட்ட‌ ப‌ட்ட‌து என்று என‌க்கு தெரியாது / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது செம்மனியாகவே இருக்க வாய்ப்புள்ளது. உறவுகளிடம் விசாரியுங்கள். தவறான வரலாறு வேண்டாம் என்பதே என் நிலை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நந்தன் said:

அது செம்மனியாகவே இருக்க வாய்ப்புள்ளது. உறவுகளிடம் விசாரியுங்கள். தவறான வரலாறு வேண்டாம் என்பதே என் நிலை

 விசாரிக்கிறேன் அண்ணா /
 நான் தான் த‌வறாக‌ விள‌ங்கி கொண்டேனோ தெரியாது 😓 /

Edited by பையன்26
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேல‌ ந‌ந்த‌ன் அண்ணா , எழுதின‌து போல் 1991ம் ஆண்டு ம‌ச்சானின் இறுதி ச‌ட‌ங்கு உற‌வின‌ர்க‌ள் ம‌ற்றும்  போராளிக‌ள் முன் நிலையில் செம்ம‌ணியில் எரிக்க‌ ப‌ட்ட‌து /

த‌வ‌றாக‌ எழுதிய‌மைக்கு யாழ் உற‌வுக‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேக்கிறேன் 😓😓/

  • Thanks 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.