Jump to content

ஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்குநாடு -- தனி மாநிலம் அமைக்க கோரிக்கை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன் கோரிக்கை.!

manikandan1212-1566202883.jpg

சென்னை: கொங்கு நாடு என்ற பெயரில் 12 மாவட்டங்களை உள்ளடக்கி ஈரோட்டை தலைநகராகக் கொண்டு தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என அமமுக நிர்வாகி பொங்கலூர் மணிகண்டன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பொங்கலூர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை:

நீ லகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்,, கரூர், திருச்சி,சேலம், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களை இணைத்து கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணும் கொங்கு நாடே.

கொங்கு நாட்டின் ஒரு பகுதியான மலபார் ஜில்லா, பாலக்காடு கேரளாவுடன் மொழிவாரியாக மாநிலப் பிரிவினை நடைபெற்ற போது இணைக்கப்பட்டு விட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட மக்கள் நிறைந்ததே கொங்குநாடு.

1994 ல் ஜெயலலிதா ஆட்சியின் போது கரூரில் நடைபெற்ற கொங்கு மக்கள் 10 லட்சம் பேர் திரண்ட மாநாட்டில் கோவை செழியன் பேசும் போதும் போது, கொங்கு நாடு தனி மாநிலம் ஆக்கப்பட வேண்டும். என்பதை வலியுறுத்தி அதற்கான காரணங்களையும் விளக்கிப் பேசினார். அவரது எண்ணம் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

கொங்கு மைந்தர் எம்ஜிஆர்

எம்.ஜி.ஆர் நேசித்த மண். அவரது பூர்வீகம் கொங்கு நாடு மட்டுமல்ல, மன்னாடியார் எனும் பட்டப் பெயர் கொண்ட கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் அவர் என்பதை கோவை செழியன் வெளிப்படையாக எம்.ஜி.ஆரை நிறுவனராகக் கொண்டு வெளி வந்த அண்ணா என்ற பத்திரிக்கையில் எழுதியும், பேசியும் வந்தார். எம்.ஜி.ஆரை மலையாளி என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும் திமுகவினரும் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் கோவை செழியன் எழுதிய கட்டுரையால் அகமகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

கொங்குநாடு தலைநகர்

ஈரோடு கொங்கு நாடு தனி மாநிலம் ஆக்கப்பட அனைத்து தகுதிகளும், வளங்களும், வாய்ப்புகளும் நிறைந்தே இருக்கிறது. இந்தியாவில் பல பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு நகரத்தை தலைநகராகக் கொண்டு தனி மாநிலம் உருவாக்கி அதற்கு கொங்கு நாடு என்று பெயரிட வேண்டும். கொங்கு நாடு என்பது மண்ணுக்குரிய பெயர்.

உழைக்கும் மக்களின் மண்

சாதி, மதம், இனம், மொழி, நிறம் என எந்தப் பாகுபாடுமின்றி அனைவரையும் அரவணைத்து மரியாதையுடன் அன்புடன், சண்டை சச்சரவுகளின்றி அமைதிப்பூங்காவாக வாழும் மக்களை கொண்டது. அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தொழில்வளம் நிறைந்து உலகிற்கே உணவளிக்க உழவுத் தொழில் காக்க உழைக்கும் மக்களை கொண்ட மண்.

தனி மாநில கனவு

தேனினும் இனிய அழகிய கொங்கு தமிழில் பேசி தனித்துவம் கொண்ட தமிழ் மக்கள் நிறைந்ததே கொங்கு மண். இந்த மண்ணில் .உழைப்பு, உழைப்பும் உழைப்பு இவற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்ட கொங்கு நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவான தனி மாநிலமாவதன் மூலம் பெரும் வளர்ச்சியை கொங்கு நாடு அடையும். அதன் மூலம் தேசம் வலிமை பெறும்.நிர்வாக ரீதியாகவும் மக்களின் நலன் கருதியும் மாநில பிரிவினை அவசியமாகும். சென்னை தமிழகத்தின் தலைநகர் என்பதற்கான அனைத்து தகுதியையும் இழந்து வருகிறது.

மாநிலமாக பிரிக்க வலியுறுத்தல்

மக்கள் வாழத் தகாத ஊராக சென்னை மாறி வருகிறது. நிலப்பரப்பு, மக்கள் தொகை, நிர்வாக அமைப்புகள் என தமிழகம் பெரிய சுமையில் சிக்கித் தவிக்கிறது. மக்களின் நலன் கருதி மாநிலம் பிரிப்பு, மாவட்டங்கள் பிரிப்பு என்பது குற்றமோ, தவறோ இல்லை என்பதால் தமிழ்நாடு மாநிலப் பிரிவினையும், மாவட்டங்கள் பிரிவினையும் மிகவும் அவசியமாகும். எனவே ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட தனி மாநிலக் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்று செயல்படுத்த வேண்டும்.

அரசியல் கட்சிகள் ஆதரவு தர கோரிக்கை

தனி மாநிலம் கேட்பதால் மற்ற மாவட்டத்து மக்கள் எங்கள் எதிரியல்ல. தமிழ் தான் உயிர் மொழி. தாய் மொழி. தமிழர்கள் எல்லோரும் உற்ற சகோதர உறவுகளே. இந்தப் பாசம் எப்போதும் இருக்கும்.இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், மக்கள் என அனைவரும் ஆதரவு தர வேண்டும் இவ்வாறு பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/western-tn-demands-kongu-nadu-separate-state-360524.html

டிஸ்கி :

காசுமீர் === கிந்தியவின்ர சூழ்ச்சி குறித்து  நாமதான் முன்னாடியே சொன்னம்ல ..😊

Link to comment
Share on other sites

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை இருந்தால் நன்மையே ?

"நீ லகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்,, கரூர், திருச்சி,சேலம், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களை இணைத்து கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணும் கொங்கு நாடே. "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை  தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு.!

seeman23424-1566196951.jpg

மதுரை: காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்த மாநில பிரிவினைக்கு தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் உள்ளிட்டோர் காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டது மிகவும் துணிச்சலானது என பாராட்டியிருந்தார். அது போல் கமல்ஹாசனோ காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேடிக்கை

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கண்டன கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில் தமிழகத்தை இந்த மோடி அரசு சேர, சோழ, பாண்டிய நாடு என 3-ஆக பிரித்தாலும் அதை அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கும் என்றார்.

பிரித்தாலும் பிரிப்பார்கள்

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காஷ்மீரை போல் தமிழகத்தையும் மோடி அரசு இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள். தென் தமிழகம் வட தமிழகம் என இரண்டாக பிரித்துவிடுவார்கள். புதுவை போல் சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம், ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது என்றார் சீமான்.

https://tamil.oneindia.com/news/madurai/seeman-accuses-central-government-may-split-tn-into-2-360509.html

டிஸ்கி:

கரு நாட்டுடன் தண்ணீருக்கு சண்டையிட்டது போக இனி கொங்கு நாட்டுடன் சண்டை பிடிக்க போகினம்..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது...
பாட்டாளி  மக்கள் கட்சியின் தலைவரான ராமதாஸின் விருப்பம் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது...
பாட்டாளி  மக்கள் கட்சியின் தலைவரான ராமதாஸின் விருப்பம் என நினைக்கின்றேன்.

👍

"தமிழகத்தை இரண்டாக்கும் கோரிக்கை: விரைவில் விளக்கமளிப்பேன் - ராமதாஸ்"

https://tamil.oneindia.com/news/2002/07/21/ramdoss.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.