Jump to content

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்


Recommended Posts

மைத்திரி அவர்கள் சுதந்தர கட்சி சார்பாக சவேந்திர சில்வாவை  நிறுத்தக்கூடும்?

ஒரு மாதத்தில் இன்னொருவருவரை இராணுவ தளபதியாக நியமித்து , சவேந்திர சில்வாவை  கோத்தாவிற்கு சவாலாக நிறுத்தக்கூடும். அதேவேளை சஜித்தை தன்பக்கம் இழுத்து ஏமாற்றி ஐ.தே.க. வினை பலவீனப்படுத்தலாம்.    

Link to comment
Share on other sites

இலங்கையின் புதிய இராணுவத் தளபதி மீது போர் குற்றச் சாட்டை சுமத்துவதற்கு போதிய ஆதாரங்கள்.

இலங்கையினுடைய புதிய இராணுவத் தளபதியான, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினைப் பதவியில் இருந்து இடைநிறுத்தி அவரை போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதற்கு போதியளவு ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்காவை தளமாக கொண்ட விசாரணைக் குழுவானது 2008 – 9 போரின் போது முக்கிய களநிலை கட்டளைத் தளபதிகளில் ஒருவரான சில்வாவினுடைய பணியினை விபரிக்கும் 137 பக்க ஆணவக் கோவையை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணக் கோவையானது அவருக்கு எதிரான அல்லது இன்றைவரையான இலங்கையின் போர்க்கால கட்டளைத் தளபதிக்கு எதிரான மிகவும் விரிவான ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இது படங்கள் சமகால குறுஞ்செய்திகள், இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்ட சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் போர் முடிவடைந்த பின்னர் உண்மையை மறைப்பதற்காக இணையத்தில் இருந்து அழிக்கப்பட்டு நீக்கப்பட்ட உத்தியோகபூர்வ இராணுவ வெளியீடுகளின் ஆதாரங்கள் இவற்றுடன் கடந்த ஐ நா விசாரணை அறிக்கைகளின் கண்டுபிடிப்புகள் பற்றிய வரைபுகளையும் ஒன்று சேர்த்து தொகுத்துள்ளது.

“என்னுடைய அணியினால் பல ஆண்டுகளாக கவனமாகச் சேகரிக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் அளவிலான ஆதாரங்கள் இந்த ஆவணக் கோவையில் உள்ளது” என ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். “சர்வதேச நீதிமன்றங்களில் அல்லது சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் கூட இவ்வளவு ஆதாரங்கள் இருக்கவில்லை. இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை பதவியில் தொடர்ந்தும் இந்த மனிதர் இருப்பதற்கு சாக்குகள் எதுவும் சொல்லமுடியாது. அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டு குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.”

இலங்கையில் இறுதிப் போர் நடாத்தப்பட்ட முறை பற்றி ஆராய்வதற்கு 2010 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று சர்வதேச சட்ட நிபுணர்களில் ஒருவராக சூக்கா இருந்தார். இதனைத் தொடர்ந்து 2012 இல் இலங்கையில் ஐ.நாவின் பாரிய தோல்விகள் பற்றி உள்ளக மீளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது அத்துடன் அதன் பின்னர் உயர் ஸ்தானிகரின் மனித உரிமைகளுக்கான அலுவலகதத்தினாலும் ஒரு விசாரணை நடாத்தப்பட்டது.

"2015 ஆம் ஆண்டு தனது விசாரணைப் பணிகளை நிறைவு செய்த பின்னர் ITJP ஆனது போர் தொடர்பான ஆவணப்படுத்தலையும் அது தொடர்பான சாட்சியங்களையும் சேகரித்து வருகின்றது. இது எமது அரச சார்பற்ற அமைப்பானது இறுதிக்கட்ட சிவில் யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான மீறல்கள் தொடர்பான மிகவும் விரிவாக ஆவணப் படுத்தப்பட்டுள்ள சாட்சியங்களை இப்பொழுது கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது. இந்த ஆவணக் கோவையானது நாங்கள் வைத்திருக்கும் தகவல்களில் ஒரு சிறிய பகுதி மாத்திரமே என சூக்கா தெரிவித்தார். பல வருடங்களாகப் பெற்ற அறிவினைக் கொண்டு அர்ப்பணிப்பு மிக்க நிபுணர்கள் குழு செய்த வேலையில் முக்கியத்துவத்துவத்தை இது காட்டுகின்றது.”

2015 ஆம் ஆண்டு புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்த இலங்கையின் புதிய அரசாங்கமானது கலப்பு நீதிமன்றம் உட்பட்ட ஒரு உறுதியான இடைக்கால நீதித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஐ நாவின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது. பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்தது. கடந்த காலத்தில் வாக்குறுதிகள் வழங்கியிருப்பினும், பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த போரில் மூத்த இராணுவ அதிகாரிகள் எவரும் அவர்களது நடவடிக்கைகளுக்காக குற்றங்காணப்படவில்லை. பதிலாக குற்றஞ்சாட்டப்பட்ட பலர் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளார்கள்.

ஜனவரி 2019 இல் சவேந்திர சில்வா இராணுவப் பிரதானியபாக பதவியுயர்வு வழங்கப்பட்டமையானது மிகவும் அதிரிச்சியானதாக இருந்தது. இலங்கையின் பகுதிகளில் முன்னர் இடம்பெற்ற போரில் உயிர்தப்பி இன்னமும் வாழ்ந்துவரும் தமிழர்கள் மத்தியில் இது அச்சத்தையும் பயங்கரத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் தெற்கில் உள்ள சிலர் அவரை இன்னமும் ஒரு வீரராகவே கருதுகின்றனர்.

“சவேந்திர சில்வா தண்டனையிலிருந்து பாதுகாப்பை அனுபவிக்கும் வரை சர்வதேச சமூகம் சட்ட ஆட்சியின் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் பற்றி முழுமையாகப் பேசமுடியாது. இந்த நபர் இராணுவத்தை நிர்வகித்துவரும் வேளையிலும் அத்துடன் அது மோசமான சர்வதேச குற்றங்களை புறக்கணித்துவரும் வேளையிலும் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான ஐ நாவின் திணைக்களம் இலங்கையிலிருந்து அமைதி காக்கும் படையினரை எவ்வாறு பணியில் அமர்த்த முடியும். இலங்கை நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் இந்தப் பிராந்தியத்தில் இலங்கையுடன் நெருங்கிய இராணுவ உறவினைப் பேணிவரும் நாடுகள் சவேந்திர சில்வாவினுடைய நுழைவு அனுமதிகளை மறுதலிக்க வேண்டும் அல்லது பொதுவான சட்டவரையறையின் கீழ் கைது செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என சூக்கா தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு, இலத்தீன் அமெரிக்காவில் தூதுவராக இருந்த, போரின் போது சவேந்திர சில்வாவின் நேரடி கட்டளைத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவிற்கு எதிராக சர்வதேச சட்டவரையறையின் கீழ் தொடர்ச்சியான போர்குற்ற வழக்குகளை ITJP பதிவு செய்தது. இந்த வழக்குகளைப் பதிவு செய்வதற்கு முதல்நாள் ஜெயசூரியா நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். அத்துடன் பிறேசிலிற்கோ அல்லது சிலிக்கோ திரும்பி வந்து ஒரு சர்வதேச நீதிமன்றத்தில் தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை சோதித்துப் பார்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் ஜெகத் ஜெயசூரியா எடுக்கவில்லை.

https://www.tamilwin.com/community/01/223892

Link to comment
Share on other sites

சவேந்திர சில்வா பற்றிய இந்த ஆவணக் கோவையானது 2008 – 9 ஆண்டுகளில் அவர் கட்டளைத் தளபதியாக இருந்த 58 ஆவது படைப்பிரிவு இலங்கையின் வடக்கில் உள்ள தமிழரின் தொடர் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களை விபரிக்கின்றது. அந்த தாக்குதல்கள்
- - - பொதுமக்கள் மீது வேண்டுமென்றும் கண்மூடித்தனமாகவும் நடாத்தப்பட்ட தாக்குதல்கள்
- - - வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள்
- - - பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்கள்
- - - தடைசெய்யப்பட்ட மற்றும் கண்மூடித்தனமான ஆயுதப்பாவனை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Elugnajiru said:

ஆகவேதான் இனிமேல் இந்தியா ஈழத்தமிழர்விடையத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும் எனக்கூறும் காலம்வந்துவிட்டதாகக்கூறுகிறேன்.

இது சொல்லலாம். ஆனால், எந்த அளவு சிறிய சக்தி ஆயினும் விரும்பி தலை இடுவதை தவிர்க்க முடியாது.

கிந்தியவிற்கு உள்ள சக்தி பற்றி எழுத தேவை இல்லை.

ஆயினும், கிந்தியாவின் நிலைப்பாடு, தமிழீழம் என்பதை தவிர்த்து, ஆளும் கட்சியிலும் தங்கி இருக்கிறது என்பது இப்போது வெளித்தெரிய தொடங்கி இருக்கிறது.

பிஜேபி,  வெளிப்படடையாக அதிகாரத் தோரணையில் ராஜ்பக்சேவிற்கு, காஷ்மீரில் அவர்கள் செய்தின்  வரலாற்று அடிப்படையை, இலங்கைதீவிற்கும் பொருந்தி வரும் என்பதை அறிவுறுத்தி இருக்கிறது.

இப்படி சிங்களம் இது வரையில், கிந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கவும் இல்லை, கேட்கவும்  இல்லை.

கிந்தியா எதாவது சொன்னால், சிங்களத்தின் வழமையான,  நக்கல்களோ, நளினங்களையோ சிங்களம் வெளிப்படுத்தவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எங்கள் கைகளில் எதுவுமிருந்தால்தான் இந்தியாவைக்கண்டு பயப்படுவினம்  பயப்படவேண்டும் அவர்களிடமிருந்து நாம் எதுவுமே பெற்றதுமில்லை இனிமேல் பெற்றுக்கொள்ளப்போவதுமில்லை . எம்மை இன்னமும் அழிவுக்குக்த்தான் கைகோர்த்து அழைத்துச்செல்வார்கள் அது இன்னுமொரு முள்ளிவாய்க்காலைவிட மிகவும் மோசமாக இருக்கும். 

சுமந்திரன் சம்பந்தன் தாங்கிப்பிடித்த மைத்திரி கூட்டம்தான் இப்போ சவேந்திரசில்வாவை தளபதியாக்கியிருக்கு. இங்கு கருத்தெழுதும் அனைவரும் ஏந்தான் இந்தியாவைக்கண்டு பயப்படுகிறியள் எனத் தெரியவில்லை. அட எங்கள் கைகளில் இழப்பதற்கு எதுவுமில்லை நாம் ஏன் பயப்பட வேண்டும், ஆரம்பத்திலிருந்து ஒரு புதிய சித்தாந்தத்துடன் எமது அரசியலை முன்னெடுத்துச்செல்லவேண்டும் அதில் இந்தியாவைப் புறந்தள்ளுதல் என்பதும் உள்ளடக்கப்படல்வேண்டும்.

அனைத்துத் தளங்களிலும் மேற்கூறிய விடையத்தை விவாதப்பொருளாக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

21 minutes ago, Elugnajiru said:

ஆரம்பத்திலிருந்து ஒரு புதிய சித்தாந்தத்துடன் எமது அரசியலை முன்னெடுத்துச்செல்லவேண்டும் அதில் இந்தியாவைப் புறந்தள்ளுதல் என்பதும் உள்ளடக்கப்படல்வேண்டும்.

கூட்டமைப்பே இந்தியாவின் கைப்பொம்மையாக உள்ளது இதற்குள் இந்தியாவை புறந்தள்ளுதல் என்பது எப்படி நடக்கும்? 😀

நான் இன்னொரு திரியில் எழுதியிருந்தேன், கூட்டமைப்பு சீனாவுடன் பேச்சு வார்த்தைகளை வைத்துக்கொண்டால் இந்தியா தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச முன்வரலாம் என்று.

சீனாவும் எம்மை அழித்த நாடு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு யார்,, இந்தியாவின் நிகழ்சித்திட்டத்தை செயற்படுத்தும் அவர்களது கைக்கூலிகள் அவர்களது ஆயிரமாயிரம் வெளிவராத இரகசியங்கள் இந்தியாவிடம் இருக்கலாம் அதை வைத்து அவர்களை இந்தியா தங்களுக்குச் சாதகமான காரியத்தைச் சாதிக்கலாம். இந்தியாவைப் புறமொதுக்குதல் என்பது கூட்டமைப்பையும் சேர்த்தே புறமொதுக்குதல் என்பதாகும்.

Link to comment
Share on other sites

சர்வதேச சட்டங்களையும் உரிமைகளையும் பின்பற்றினோம்- இறுதி யுத்தம் குறித்து சவேந்திர சில்வா

யுத்தத்தின் போது பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மக்களை படையினர்  மீட்டெடுத்தமை அவர்களது மனிதநேயத்திற்கு சான்று என இலங்கையின் புதிய இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். 

நாட்டை அது எதிர்கொள்ளும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களில் இருந்தும் பாதுகாக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்நாட்டின் இறைமை பிரதேச  ஒருமைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகியவற்றினை பாதுகாப்பதில் இராணுவத்திற்கு இராணுவதளபதி என்ற அடிப்படையி;ல் உரிய தலைமைத்துவத்தை வழங்குவேன் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அனைத்து அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமும் இந்த நாட்டின் அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதி;ப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் இராணுவங்கள் நாட்டின் மக்களின் பிரித்துபார்க்கமுடியாத உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஜனநாயக வழிமுறையிலான வாழ்க்கை சூழலை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளன என சவேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை உள்நாட்டு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான  தயார் நிலையில் இராணுவங்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால மனிதாபிமான நடவடிக்கையின் போது எந்த நாடும் ஏற்றுக்கொள்ளகூடிய இந்த வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றினோம் சர்வதேச மனிதாபிமான மற்றும் உரிமைகளை பின்பற்றியே நாங்கள் நடந்துகொண்டோம் எனவும் இலங்கையின் புதிய இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

New_Army_Commander_assumes_office_201908

யுத்தத்தின் போது பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மக்களை படையினர்  மீட்டெடு;த்தமை அவர்களது மனிதநேயத்திற்கு சான்று என இலங்கையின் புதிய இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்

https://www.virakesari.lk/article/63171

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.