ampanai

கோத்தபாய மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் ; வரதராஜப்பெருமாள்

Recommended Posts

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

varatharaja_perumal.jpg

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் போர்க் குற்றத்தில் கோத்தபாய மட்டும் ஈடுபடவில்லை.போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறி வருகின்றது.

ஆனால் எதோ கோத்தபாய மட்டும் தான் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது.இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான குற்றச் சட்டே.எனவே தமிழ் மக்கள் இவற்றை மறந்து மன்னித்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும்.

நாம் தமிழ்த் தேசியம் தனி நாடு என்ற விடுதலை கோரிய காலம் போய்விட்டது.இப்போது ஒரு நாட்டில் சகல இன மக்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய காலமாகும்.அதனை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும்.இங்குள்ள சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசியத்தை காத்தவர் என்றும் கோத்தபாய அதனை அழித்தவர் என்ற கருத்தை பரப்பி வருகின்றனர்.கடந்த காலங்களில் இதே ஐக்கிய தேசியக் கட்சியினர் எவ்வளவு கொலைகளை செய்தவர்கள் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக வரப்போறவர் தனி சிங்கள வாக்குகளினால் மட்டும் வந்தால் அது தமிழ் மக்களை பாதிக்கும்.எனவே தான் நாம் ஆதரவு கூடவுள்ள தரப்புக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.தமிழ் மக்களின் ஆதரவு கோத்தபாயவுக்கு கிடைக்க வேண்டும்.என்றார்.

https://www.virakesari.lk/article/62944

Share this post


Link to post
Share on other sites

ஐயா பெருமாளு உங்களையே தமிழ் மக்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியலை.
அப்புறம் எப்படி கோத்தாவை?
அதுசரி வடகிழக்கில் உங்க நாட்டு புலனாய்வு வைத்தது தானே சட்டம்.
அவங்க தான் இப்படி சொல்லச் சொன்னாங்களோ?

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

கொத்தபாஜமீதான போர்க்குற்றச்சாட்டுகளை மன்னிப்பது பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட விடையம். 

கூட்டமைப்பு ஆதரவளித்து ஜனாதிபதியாக்கப்பட்ட மைத்திரி இப்போ சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக பதவி கொடுக்கப்போகிறார்.

இப்போ தெரிகிறதா எமக்கான எதிரிகள் யார் என்பதை.

Share this post


Link to post
Share on other sites

பத்திரிகைகளுக்கும் தர்மம் உள்ளது. இப்படிப்பட்ட அவமானச் சின்னங்களின் செய்திகளை வெளியிடாதிருப்பது பெரும் தர்மமாகும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கீழே உள்ள கருத்துக்களை, கருத்து கூறியவர் யார், அவர் பிழையான நபர் என்று ஏற்றுக்கொண்டு பார்ப்போம் :

  1. நாம் தமிழ்த் தேசியம் தனி நாடு என்ற விடுதலை கோரிய காலம் போய்விட்டது.இப்போது ஒரு நாட்டில் சகல இன மக்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய காலமாகும்.அதனை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும்.
  2. நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக வரப்போறவர் தனி சிங்கள வாக்குகளினால் மட்டும் வந்தால் அது தமிழ் மக்களை பாதிக்கும்.

இன்று எமது மக்களுக்கு முன்னால் உள்ள பிரச்சனைகள் என்ன? அடுத்த தலைமுறை வாழ நாம் இன்று என்ன முடிவு எடுக்க வேண்டும்?

கடந்ததை, நடந்ததை மறக்கவோ இல்லை மறுக்கவோ கூடாது, ஆனால், அதையே எண்ணி எதிர்காலத்தை அழிக்கவும் கூடாது. 

எந்த சனாதிபதி வேட்ப்பாளரும் ஒரு கோத்தா தான். அந்த கோத்தாக்களுக்குள் ஒரு ஒப்பீடளவில் நம்பகத்தன்மை உள்ள கோமகனை தேட வேண்டிய கடமை எனது தமிழ் அரசியல் தலைமைகளுக்கு முன்னாளல் உள்ளது. பின்னர் அதை தமிழ் மக்களுக்கு முன்னால் வைத்து விளங்கப்படுத்த வேண்டிய கடமையும் உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

புலிகள் போர்க்குற்றம் செய்திருந்தால்.. அவர்களை சர்வதேசம் விசாரித்து தண்டிக்கலாம். அதுபோல்.. எவர் போர்க்குற்றம் செய்திருந்தாலும்.. ஹிந்திய அழிப்புப்படை.... மண்டையகுழு மண்டை.. யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் படுகொலை மன்னர்கள்.. மற்றும் சொறீலங்கா இனப்படுகொலையாளிகள்.. போர்க்குற்றவாளிகள்.. நீதியின் பிடியில் இருந்து குறிப்பாக.. சர்வதேச நீதியின் பிடியில் இருந்து தப்பவே கூடாது.

முதலில் உந்த ஹிந்திய வால்பிடியை பிடிச்சு சர்வதேசம் தண்டிக்க முன்வர வேண்டும்.

மன்னிப்பும் மண்ணாங்கட்டியும். 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.