Jump to content

தமிழக கார் நிறுவனங்களில் 10 லட்சம் பேர் வேலை பறிபோகும்?: அரசு நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை


Recommended Posts

தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10  லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தொழிற்சங்கங்கள் கோரிக்கை  விடுத்துள்ளன. பொருளாதார மந்தநிலை காரணமாக, ஆட்டோ மொபைல் துறை  கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாதிப்பை சந்திக்க தொடங்கியது. அந்த பாதிப்பின்  தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு, பணப்புழக்கம்  குறைந்தது,  ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு  காரணங்கள் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் வாகன விற்பனை  சரிந்தது. இதனால், வாகன விற்பனையில் ஈடுபட்ட 100க்கும்  மேற்பட்ட டீலர்கள்  தங்களது கம்பெனியை மூடி விட்டனர்.இந்நிலையில், விற்பனை சரிந்ததால்,  கார் நிறுவனங்கள் உற்பத்தி செய்த லட்சக்கணக்கான கார்கள் தேக்கம் அடைந்தன.  இதன் காரணமாக, தற்போது கார் உற்பத்தியை குறைக்க அந்த நிறுவனங்கள் முடிவு  செய்துள்ளன. இதை தொடர்ந்து  தொழிலாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது,  தற்காலிக பணியாளர்கள் குறைப்பு உள்ளிட்ட  பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு  வருகின்றன. மாருதி சுசுகி, டாடா மோட்டார், ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும்  டிவிஎஸ் உள்ளிட்ட  பல்வேறு நிறுவனங்கள் கார்  உற்பத்தியை நிறுத்தி  வைத்துள்ளன.

தற்போது ஹூண்டாய் நிறுவனமும் கார் உற்பத்தியை குறைக்க முடிவு  செய்துள்ளது. இதன் காரணமாக, இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் வேலையிழக்கும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கார் உற்பத்தி நிறுவனங்களை நம்பி  உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள்  வேலையிழக்கும் அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:மத்திய  அரசின் கொள்கைகள்தான் வாகன உற்பத்தி வர்த்தகத்தில் இருக்கக்கூடிய  நெருக்கடிக்கு காரணம். நாட்டில் 6 கோடியே 6 லட்சம் பேர் வருமான வரித்  தாக்கல் செய்கின்றனர். இவர்கள்தான் மார்க்கெட்டின் தந்தை. இவர்களில்  ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள் புதிய கார் வாங்க வேண்டும் என்று  நினைத்தால் இப்போது உற்பத்தியாகும் கார்களுக்கு எதிர்காலம் இல்லை என்கிற  மாதிரி நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலத்தில் எலக்ட்ரானிக் கார்தான் என்ற  நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது. ஹூண்டாய் கார் நிறுவனம் கூட எலக்ட்ரானிக்  கார்தான் உற்பத்தி செய்வோம் என்று முதன்முதலாக எல்க்ட்ரானிக் கார் உற்பத்தி  செய்ய உள்ளனர். இந்த பின்னணியில் எலக்ட்ரானிக் காருக்கு 12 சதவீதம் என்ற  வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இப்போது உற்பத்தியாகும்  மோட்டார் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதெல்லாம்  மோட்டார் வாகன தொழிலில் எந்த பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில்  உற்பத்தி நிறுவனங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. நுகர்வோருக்கும் பிரச்னை  ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவு கார் நிறுனங்களின் சந்தைகளுக்கு  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி தற்காலிகமாக மட்டும் இருக்குமா  என்பதில் சந்தேகம் உள்ளது.ஒவ்வொரு தொழிற்சாலைகளும், தொழிற்சங்கங்களை  அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மொத்தமாக கார் உற்பத்தி தயாரிப்பை  நிறுத்தாமல் குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டும் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.  இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த தொழிலில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தாது.  இருக்கிற வேலைவாய்ப்பு பறிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


காஞ்சிபுரம்  மாவட்டத்தில் 3,500 தொழிற்சாலைகள் உள்ளன. மொத்த உற்பத்தி செலவில் 10  சதவீதத்தை குறைக்க நிர்வாகம் கூறியுள்ளது. அப்படியெனில் ஒரு மாதத்திற்கு 5  நாட்கள் விடுமுறை விட சொல்கின்றனர். அதன் மூலம் செலவு குறையும் என்றாலும்,  20 சதவீதம் உற்பத்தி குறைகிறது என்றுதான் அர்த்தம். தற்போது, 1 வாரம் வரை  விடுமுறை விட அந்த கார் உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஹூண்டாய்  கார் நிறுவனத்தில் 2,400 பேர் வேலை செய்கின்றனர். இதை தவிர்த்து 8 ஆயிரம்  தற்காலிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஹூண்டாய் கார் உற்பத்திக்காக  உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 600 உள்ளது. தற்போது இந்த  நிறுவனமும் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், பலர்  வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் உதிரிபாகங்கள்  தயாரிக்கும் தொழிற்சாலை கூட்டமைப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால், இதே  நிலை தொடர்ந்து நீடித்தால் 10 லட்சம் பேரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும்  என்று தெரிவித்துள்ளது.

நிசான் கார் நிறுவனம் 1,500 நிரந்தர  தொழிலாளர்களை குறைக்க போவதாக அறிவித்துள்ளன. போர்டு நிறுவனம் புதிய  உற்பத்தி செய்வதில்லை. இதேபோன்று எல்லா கார் உதிரிபாகங்கள் நிறுவனங்கள்  முடிவெடுத்தால் பலர் வேலையிழப்பார்கள். நாட்டிலேயே தமிழகத்தில்தான் 40  சதவீதம் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் செயல்படும்  கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைப்பது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. கார் மட்டுமின்றி டயர் தொழிற்சாலைகளில் 50  சதவீதமான தொழிற்சாலைகள் மொத்த உற்பத்தியை குறைத்துள்ளன. தமிழகம் முழுவதும்  அப்போலோ, ஜேகே டயர் என 6 டயர் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், அப்போலோ டயர்  கூட மாதம் 15 ஆயிரத்தில் இருந்து 5,500 ஆக தனது டயர் உற்பத்தியை  குறைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும். மத்திய அரசு  ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழில்  நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு தொழில் வர்த்தகர்கள்,  தொழிற்சங்கங்களை அழைத்து பேச ேவண்டும். யாருக்கும் பிரச்னை ஏற்படாதாவறு  இதற்கு தீர்வு காண வேண்டும். இருப்பினும் இந்த நெருக்கடி தொடரும் என்றுதான்  தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* மாருதி சுசுகி, டாடா மோட்டார், ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கார்  உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,500 தொழிற்சாலைகள் உள்ளன. மொத்த உற்பத்தி செலவில் 10 சதவீதத்தை குறைக்க நிர்வாகம் கூறியுள்ளது.
* கார் மட்டுமின்றி டயர் தொழிற்சாலைகளில் 50 சதவீதமான தொழிற்சாலைகள் மொத்த உற்பத்தியை குறைத்துள்ளன.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519423

Link to comment
Share on other sites

பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!

`அரசு இந்த விஷயத்தில் எங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கவில்லை எனில், 8000 - 10,000 பணியாளர்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்’.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளதார மந்தநிலை படிப்படியாக அனைத்து துறைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிசான், டாடா, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் ஆள் குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்தியாவின் மிகப் பெரிய பிஸ்கட் உற்பத்தி நிறுவனமான பார்லேவும் பொருளாதார மந்தநிலையால் பாதிப்படைந்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பார்லே நிறுவனத்தின் அதிகாரி மாயங்க் ஷா கூறுகையில், ''சேவை வரியைக் குறைக்க மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். அரசு இந்த விஷயத்தில் எங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கவில்லை எனில், 8000 - 10,000 பணியாளர்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்'' என்றார் வேதனையுடன்.

பார்லே நிறுவனம், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. பார்லே நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 10 பிளான்ட்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. முன்னதாக, 100 கிலோ கிராம் பிஸ்கட் பாக்கெட்டுக்கு 12 சதவிகித சேவை வரி விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி அறிமுகம் செய்த பிறகு, 18 சதவிகிதமாக வரி வசூலிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் பிரீமியம் ரக பிஸ்கட்டுகளுக்கு 12 சதவிகித வரியும் குறைந்த விலைகொண்ட பிஸ்கட்டுகளுக்கு 5 சதவிகித வரியும் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 18 சதவிகித வரி விதிக்கப்பட்டதால், வேறு வழியில்லாமல் 5 சதவிகிதம் விலையை உயர்த்தியது பார்லே நிறுவனம். விலை உயர்வும் பிஸ்கட் விற்பனை சரிவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது.

பார்லே நிறுவனம், பார்லே ஜி மற்றும் மாரி ரக பிஸ்கட்டுகளை விற்பனைசெய்கிறது.

பார்லே நிறுவனத்தைப் போல, மற்றொரு பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வருண் பெரி, '' இந்தியப் பொருளாதாரத்தில் ஏதோ சீரயஸாக எடுத்துக்கொள்ளக்கூடிய தொய்வு ஏற்பட்டுள்ளது. 5 ரூபாய் பிஸ்கட்டை வாங்கக்கூட வாடிக்கையாளர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கின்றனர்'' எனக் கவலை தெரிவித்திருக்கிறார்.

https://www.vikatan.com/business/investment/parle-company-could-lay-off-10000-workers

Link to comment
Share on other sites

8 மாதங்களில் இல்லாத அளவு அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எட்டு மாத‍ங்களில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய நாளின் தொடக்கத்தில் 71.65 ரூபாயுடன் தொடங்கி 71.97 ரூபாயை எட்டி 71.81 ரூபாயில் நிறைவடைந்த‍து. 

இன்றைய நாளில் ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்தற்கான காரணங்கள்:

1. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.90 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத‍த்திலிருந்து ரூபாயின் மதிப்பு அதிகபட்ச சரிவை எட்டியுள்ளது. 

2. அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரின் காரணமாக சீனாவின் பணமான யுயான்(yuan), 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது.

3.அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் யுயான் மதிப்பு 0.34 சதவீத‍ சரிவையடைந்து, 7.0875 ஆக அதிகரித்துள்ளது. 2008-ம் ஆண்டு மார்ச்சுக்கு பிறகு இந்த அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. 

4. சீனாவின் யுயானின் மதிப்பு சரிவைச் சந்தித்தாலும் உள்நாட்டு பங்கு சரிவடைந்த‍தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்த‍து. 'இந்த நிதியாண்டை ஊக்கமளிக்க தேவையில்லை' என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் தெரிவித்த‍தாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

5. டாலருக்கான அளவீடுகள், டாலரின் மதிப்பு ஆறு நாட்டு பணத்துக்கு எதிராக 0.02 சதவீத‍ம் முதல் 98.31 சதவீத‍ம் வரை அதிகரித்துள்ளதைக் குறிப்பிடுகிறது. 

6. கச்சா எண்ணெயின் விலை அளவு 0.75 சதவீத‍ம் அதிகரித்துள்ளது. உலக அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் அளவு 60.75 அமெரிக்க டாலராக உள்ளது. 

7. சந்தை மூலதனத்திலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 902.99 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர் என்று தேசிய பங்குச் சந்தையின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 

8. விற்பனை அழுத்தத்தின் காரணமாக கடந்த ஆறு மாத‍ங்களில் உள்நாட்டு பங்குச் சந்தைகள் கடுமையாக சரிவைச் சந்தித்துள்ளன. 

9. சென்செக்ஸ் 587 புள்ளிகள் குறைந்து 36,473 முடிவடைந்த‍து. மார்ச் 5-ம் தேதியிலிருந்து இதுதான் மிகக் குறைந்த அளவு. நிப்டி 177 புள்ளிகள் குறைந்து 10,741 புள்ளிகளில் நிறைவடைந்த‍து. பிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து இதுதான் மிக‍க் குறைந்த அளவு. 

10. 10 ஆண்டு அரசுப் பத்திரம் 6.56 சதவீத‍ சரிவைச் சந்தித்துள்ளது.

https://www.ndtv.com/business/tamil/inr-vs-usd-rupee-vs-dollar-exchange-rate-rupee-closes-lower-at-this-much-against-dollar-on-august-22-2089058?News_Trending

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.