• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
வல்வை சகாறா

சாதிப்பது வெறி... சாதி இப்போது வெறி

Recommended Posts

இது விசப்பரீட்சைதான்

கடந்த பத்தாண்டும் நாங்களும் நம்முடைய சாதிகள் பற்றிய எண்ணங்களும்…

இதுவரை பேசாப்பொருளாக இருந்ததாய் கொள்ள முடியாது. பேசும் பொருளாகவே இருந்திருக்கிறது. ஈழத்தைப் பொருத்தவரை இந்த சாதி  என்ற சாபக்கேட்டிற்கு விடை கொடுத்தவர்களாக  இருந்தது ஒரு காலகட்டத்தில் உண்மையாகவே இருந்தது…… ஆனால்………

கடந்த பத்தாண்டில் நமக்குள் மிகவும் செழிப்பாக வளர்ந்திருப்பது சாதி என்பதை அடித்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்று இருக்கிறோம். புலம் பெயர்ந்த தேசத்தில் தலைமுறைகளைக் கடந்து கொண்டிருக்கிறோம்  இருப்பினும் சாதியப்புண் புரையோடிக்கிடக்கிறது.

அடிப்படைத் தொழிலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குழும அமைப்பு  உயர் சாதி  தாழ்ந்த சாதி என்று  அதிலும் தூய என்ற ஒரு ஒட்டுண்ணி வார்த்தையும் சேர்ந்து நமக்குள் முழி பிதுங்க வைக்கிறது. சாதிகள் இல்லையடி பாப்பா என்று தமிழ் பாடசாலைகளில் கற்பித்துவிட்டு வந்து தன் வீட்டில் சாதியை காத்திரமாக கட்டிக் காப்பவர் பலர்….

சில விடயங்கள் எல்லோரும் ஒருமித்துப் பேச வேண்டும். சாபங்கள் தொலைகிறதா பார்ப்போம்.

Edited by வல்வை சகாறா
 • Like 7

Share this post

Link to post
Share on other sites

கவனிப்பு 1.

புலம்பெயர்ந்த நாடு (கனடா)

அவனுக்கு அவளைப் பிடித்திருந்தது. அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது.

பல்கலைக்கழகம் முதலாம் வருடம் முடிந்து இரண்டாம் வருடம் ஒரே துறை

நட்பு, சிறிது கால அவகாசத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் திருட்டுத்தனமாக இரசிப்பு, சின்னச் சின்ன பரிசுப்பரிமாற்றங்கள்... வாய்கள் பேச கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது....

திடீரென ஒருநாள்

தனித்துப் பேசும் சந்தர்ப்பம் உருவானது. உன்னை எனக்குப் பிடிக்கும்.. என்னை உனக்குப் பிடிக்குமா என்று பெண் தன்னை வெளிப்படுத்தி அவனைத் திக்கு முக்காட வைத்து நீ என்ன சாதி என்றாள். அவனும் நான் ஆண் சாதி என்றான் கம்பீரமாக... அது எனக்குத் தெரியும்தானே உன்ர சாதி என்ன சொல்லு உன்னை எங்க வீட்டில் அறிமுகப்படுத்த சாதி முக்கியம் என்றாள். எனக்குப் புரியவில்லையே என்றான் அவன் அப்பாவித்தனமாக...

ஊரில நீ உயர்சாதியா..?.........நீ உயர் சாதி என்றால்தான் உன்னை என் வீட்டில் அறிமுகப்படுத்த முடியும். எனக்குத் தெரியாது என்றான் அவன். எப்படிச் சாதியை அறிவது என் வீட்டில் சாதி பற்றி யாரும் கதைப்பதில்லை என்றான். நீ ஒரு குறிப்புச் சொல்லேன் அதை வச்சு நான் என்ன சாதி என்று சொல்றேன் என்றான். எனக்கும் தெரியாது வீட்ல கேட்டுச் சொல்றேன் என்றாள் அவள்.......  அவள் கேட்டு வருமட்டும் நாங்கள் எங்கள் அபிப்பிராயங்களைப் பதிவோமே.....

Share this post

Link to post
Share on other sites

நிறைய கல்லெறி வாங்கப் போறீங்கள்! என்றாலும் பேச வேண்டிய விடயம்! அமெரிக்காவில் பதின்ம வயது வெள்ளையின ஆண்கள் இனத் துவேசம் பற்றி மனந்திறந்து பேச இயலாமல் போகும் போது, தமக்குள் மட்டுமே பேசிக் கொள்வதும் 4 chan, 8 chan போன்ற இருண்ட இணையங்களில் பேசிக் கொள்வதும் நடக்கிறதாம். அவர்களிடையே இருந்து தான் இந்த வெள்ளையின வெறி கொண்ட கொலைகாரர்கள் உருவாகிறார்கள், இப்படியொரு கருத்தை ஒரு ஆசிரியர் கூறியிருந்தார். நாம் கொலைவெறி வரையில் போக சாதி புலத்தில் காரணம் இல்லையாயினும், பிற்போக்கு தனங்களில் ஊறிக்கிடக்கும் அடுத்த சந்ததியை உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. பேசுவதால் தீருமா என்று பார்ப்பதில் ஒரு தவறும் இல்லை! தொடருங்கள்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, Justin said:

இங்கு போலீஸ் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள் என்பதும் ஒரு காரணம் 
குழுச்சண்டைகள் குறைந்ததுக்கும் அதுதான் காரணம் ..
நீ இவரை அடித்தியா? என்று போலீஸ் தனியே தண்டனை கொடுப்பதால் 
குழுவாக இருந்தும் பெரிதாக பாதுகாப்பு இல்லை என்பதுதான் முக்கிய காரணம். 
வாளுகள் பொல்லுக்களையும் இலங்கையிலும் இரண்டு தலைமுறை காணாமல்தான் வாழ்ந்தார்கள்.

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, Maruthankerny said:

இங்கு போலீஸ் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள் என்பதும் ஒரு காரணம் 
குழுச்சண்டைகள் குறைந்ததுக்கும் அதுதான் காரணம் ..
நீ இவரை அடித்தியா? என்று போலீஸ் தனியே தண்டனை கொடுப்பதால் 
குழுவாக இருந்தும் பெரிதாக பாதுகாப்பு இல்லை என்பதுதான் முக்கிய காரணம். 
வாளுகள் பொல்லுக்களையும் இலங்கையிலும் இரண்டு தலைமுறை காணாமல்தான் வாழ்ந்தார்கள்.

அதையே தான் நானும் இடக்கரடக்கலாகச் சொன்னேன்! பொலிஸ் பயத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னால் "இதை கிறிஸ்தவன் சொல்லக் கூடாது!" என்று சண்டைக்கு வந்து விடுவார்களே ஐயா? மற்றபடி "நாங்கள் எல்லாரோடையும் சேருறதில்லை!" என்று பெருமையாகச் சொன்ன ஆட்களையும் அமெரிக்காவில் கண்டிருக்கிறேன்! அதன் பிறகு அவர்கள் என் வீட்டுப் படி அண்டாதபடி செய்தும் இருக்கிறேன். 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

சகாரா அக்கா 
இருக்கிறது அந்த ஒன்றுதான் அதையும் விட சொன்னால்? எப்படி 
அறிவு வளர்ந்தால் சாதி மட்டுமில்லை ...பல மூடதனங்கள் 
பல காட்டுமிராண்டி பழக்கவழக்கங்கள் இல்லாமல் போகும்.
அறிவு வளரும்வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை....

எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது .....
கோப்பை கழுவும் தொழில் செய்பவர்கள் என்ன சாதி? 
யாரவது சாதி பற்றிய அறிவு உள்ளவர்கள் கூறினால் நன்று. 

ஒரு மனகஸ்டமான விடயம்.....
சாதியை பெருத்த நிறுவனங்களின் பணக்கார வர்க்கம்தான் 
ஒழிக்க போகிறது .... அவர்களும் ஆடம்பர வாழ்க்கைக்கு வழிகாட்டுவதுபோல காட்டி 
இன்னொரு விதமான மூளைச்சலவை செய்து நுகர்வு அடிமைகள் ஆக்கிகொள்வார்கள் 
என்பதுதான் கஷ்ட்டமான விடயம். அதுக்கு இதுவே இருந்து இருக்கலாம் என்று 50 வருடம் கழித்து 
சிந்தித்துக்கொண்டு இருப்போம்.

இப்போ இந்தியா மும்பாய் பெங்களுர்  கைதராபாத் போன்ற நகர்களில் இதை அவதானிக்கலாம் 
இளம் பெண்கள் என்ன சாதி என்று பார்ப்பது குறைவு ..... என்ன போன் ... என்ன கார் எவ்ளவு காசை எனக்காக 
மாதம் செலவழிப்பார் என்று பார்த்து படுத்துக்கொள்கிறார்கள் ... பின்பு திருமணம் என்று வரும்போது  ஊருக்கு போய்விடுகிறார்கள்  .... அதனால்தான் லட்ஷக்கணக்கான ஆபாச அந்தரங்க வீடியோக்கள் இன்டெர் நெட்டில்  நாளும் நாளும் தரவேற்றம் ஆகிறது. 
இளம் பெண்கள் பாலியல் பற்றிய அறிவை பெற்றுக்கொள்வதால் ..... இது சரிப்பட்டு வராது 
என்று தெரிந்து வண்டிக்கு ஏற்றால்போல் மாடு பிடித்து கொள்கிறார்கள். 
முன்புபோல் வாழைமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடலாம் எனும் எண்ணம் வாழ்வுக்கு உதாவது என்று தேர்நிது 
இளம்வயதில் என்றாலும் வண்டி ஓடுவோம் என்று திரிகிறார்கள்.

உங்கள் கதையில் வரும் பெண்ணும் ..... இப்போது வரையில் கதையுடன் நிற்கிறார்கள் என்று 
என்னால் நம்ப முடியாது அவருக்கு தேவையான தூரம்வரை பயணித்து இருப்பார் என்பதே எனது திண்ணம் 
 ........ இனி திருமணம் என்ற நிலை வரும்போது? என்ற இடத்தில்தான் இப்போ வண்டி நிற்கிறது என்பதுவே எனது எண்ணம் . 

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, Maruthankerny said:

உங்கள் கதையில் வரும் பெண்ணும் ..... இப்போது வரையில் கதையுடன் நிற்கிறார்கள் என்று 
என்னால் நம்ப முடியாது அவருக்கு தேவையான தூரம்வரை பயணித்து இருப்பார் என்பதே எனது திண்ணம் 
 ........ இனி திருமணம் என்ற நிலை வரும்போது? என்ற இடத்தில்தான் இப்போ வண்டி நிற்கிறது என்பதுவே எனது எண்ணம் . 

மன சஞ்சலத்துடன் தான் இதை எழுத வேண்டி இருக்கு , சாதியைப் பற்றி  முற்போக்குத்தனமாக கதைக்க வெளிக்கிட்டு விட்டு , முகம் தெரியாத அந்த பெண் அவருடைய ஆண் நண்பருடன் கதைக்கும் நிலை  தாண்டி அப்பாலும் சென்றிருப்பார்கள் என்று படு பிற்போக்குத் தனமாக உங்கள் வக்கிரபுத்தியை வெளிப்படுத்தி அல்லவா எழுதுகிறீர்கள்
அண்மைக் காலங்களில் யாழ் வெளியில் முற்போக்குத்த தனமாக சிந்திக்கிறோம் , எழுதுகிறோம் என்று பலரும்  , பொது வெளியில் பாவிக்க இயலாத வார்த்தைப் பிரயோகங்களை ( சைக்கோ , முட்டாள் etc ) யும், மற்றயவரின் தனிப்பட்ட பிரத்தியேக வளையத்துக்குள் சென்று இவர் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கருத்திடுவதும் , தனி ஒருவரின் பிரத்தியேக நம்பிக்கைகளை விமர்சிப்பதும் அதிகரித்துக் காணப்படுகிறது
மற்றயவரின் பிரத்தியேகங்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்…...
எமக்கென்று ஒரு தராதரத்தை பேணிக் கொள்வோம் ...…….  

 • Like 5

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, சாமானியன் said:

நீங்கள் எழுதியது நூறுவீதம் உண்மைதான் 
நான் எழுதும்போதே இதை யோசித்தேன் ..... இருந்தும் அதை எழுத காரணம் எழுத முன்பு.
உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 
எனது கருத்தில் மேலோட்ட்மாக நீங்கள் கூறும் அனைத்தும் இருக்கிறது. 

ஏன் எழுதினேன் என்றால்......
அந்த பெண் பண்புநிலையை எப்போதோ கடந்துவிட்டார் ..... காதல் என்ற மகத்தான உறவை ... என்ன விலை?
என்று விலைபேசிவிட்டார். "எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது" என்று இவர்தான் ஆணிடம் சென்று சொல்லி இருக்கிறார்.

"எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது" 
இந்த வரிகளின் வரைவிலக்கணத்தைத்தான்  அந்த பெண்ணின் பார்வையில். எனது கருத்தில்  .... அந்த குறித்த பெண்ணை பற்றிய எண்ணமாக இருக்கிறது.

நீங்கள் மீண்டும் ஒருமுறை எனது கருத்தை வாசியுங்கள் .... நான் கவனமாகவே எழுதினேன் "எனது எண்ணம்" "எனது நிலைப்பாடு" என்றுதான் எழுதினேன். அந்த பெண் அப்படிதான் என்று எழுதவில்லை. 
அப்படி எழுதியிருந்தால் கூட  இனி அது அவதூறு என்று ஆகிவிடப்போவதும் இல்லை 
சாதாரண "காதல்"  "அன்பு" "நேசிப்பு" இவற்றை அந்த பெண் அளவில் யாரும் அவதூறு செய்யமுடியாது.

அன்பை கொன்றுவிட்டு 
ஆச்சாரம் தேடியது அந்த பெண்தான்.
பாலியல் உறவு இருந்திருந்தால்  கூட இனி அது மிக சிறிய விடயம்தான் 
அதை கூட எதோ பதின்ம வயது கோளாறு என்று கடந்துவிடலாம். 

இவரிடம் சிக்கி உண்மையான காதலை கொண்ட (கொண்டிருந்தால்) அந்த ஆணின் நிலைமை என்ன? 

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, வல்வை சகாறா said:

நீ ஒரு குறிப்புச் சொல்லேன் அதை வச்சு நான் என்ன சாதி என்று சொல்றேன் என்றான். எனக்கும் தெரியாது வீட்ல கேட்டுச் சொல்றேன் என்றாள் அவள்.......  அவள் கேட்டு வருமட்டும் நாங்கள் எங்கள் அபிப்பிராயங்களைப் பதிவோமே.....

குறிப்புகளை அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தப்போகின்றீர்களா இல்லை அவைகள் மறைந்து போகின்ற போக்கில் போகட்டும் என்று விடப்போகின்றீர்களா என்பது தெரியவில்லை. 

1 hour ago, Maruthankerny said:

எப்படி 
அறிவு வளர்ந்தால் சாதி மட்டுமில்லை ...பல மூடதனங்கள் 
பல காட்டுமிராண்டி பழக்கவழக்கங்கள் இல்லாமல் போகும்.
அறிவு வளரும்வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை....

பிணங்களும் மலங்களும் கலந்த காசி கங்கையில் கங்கையில் எத்தனையோ  எஞ்சினீயர் டொக்டர் என்னும் நிறைய உயர் நிலை படித்தவர்கள் தினமும் முழுகி பாவத்தைக் கழுவுகின்றர்கள். அதை புனிதம் என்று அவர்கள் அறிவு சொல்லும்.

சாதிகள் இல்லை என்ற பாரதியார் வள்ளலார் போன்ற பலர் பின்னாளில் அவரவர் பிறந்த சாதிகளின் அடயாளமாக முன்நிறுத்தப்பட்டனர். சாதிச் சங்கங்களில் அவர்கள் உருவம் பயன்படுத்தப்படுகின்றது

தற்போதைய தகவல் தொழில்நுட்பத்திலும் சாதிகளுக்கு தனித்தனியான திருமண சேவை இணையங்கள் . தனித்தனியான முக நூல்கள் ருவிற்றர்கள் பிளாக்கர்கள் என சமூகவலைத்தளங்களை சாதீயம் பயன்படுத்துகின்றது.

சதிகள் இல்லை என்பதை உணர அதிகப்படியான அறிவு தேவையில்லை. சாதிகளை ஒழிக்க தேவைப்படும் அளவை விட  அதிகமாகவே வளர்ந்துவிட்டது. 

சிகரெட் ,மற்றும்  போதைகளுக்கு அடிமையானபின் அதை அறிவைக்கொண்டும் விடமுடியாத நிலை  இருக்கின்றது அதுபோல இதுவும் ஒரு பிரச்சனை. மரபணு மூலம் பழகிய ஒரு போதைப் பழக்கம் போன்றது. அறிவால் இதுக்கு தீர்வு இருக்கா என்பது குழப்பமே.

உலகமயமாக்கலில் சாதிய இனங்கள் சமூகங்கள் சிதைந்து கலைந்து சில தலமுறைகள் கடந்து போகும் போது சாதியமும் காணாமல் போகும்.  வேறு பதிவுகளில் சொன்னது போல இனத்தின் முடிவும் சாதீய சமூக முரண்பாடுகளில் இருந்து விடுதலையும்  ஒரே புள்ளியில் இருக்கின்றது.

 • Like 7

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, சண்டமாருதன் said:

குறிப்புகளை அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தப்போகின்றீர்களா இல்லை அவைகள் மறைந்து போகின்ற போக்கில் போகட்டும் என்று விடப்போகின்றீர்களா என்பது தெரியவில்லை. 

பிணங்களும் மலங்களும் கலந்த காசி கங்கையில் கங்கையில் எத்தனையோ  எஞ்சினீயர் டொக்டர் என்னும் நிறைய உயர் நிலை படித்தவர்கள் தினமும் முழுகி பாவத்தைக் கழுவுகின்றர்கள். அதை புனிதம் என்று அவர்கள் அறிவு சொல்லும்.

சாதிகள் இல்லை என்ற பாரதியார் வள்ளலார் போன்ற பலர் பின்னாளில் அவரவர் பிறந்த சாதிகளின் அடயாளமாக முன்நிறுத்தப்பட்டனர். சாதிச் சங்கங்களில் அவர்கள் உருவம் பயன்படுத்தப்படுகின்றது

தற்போதைய தகவல் தொழில்நுட்பத்திலும் சாதிகளுக்கு தனித்தனியான திருமண சேவை இணையங்கள் . தனித்தனியான முக நூல்கள் ருவிற்றர்கள் பிளாக்கர்கள் என சமூகவலைத்தளங்களை சாதீயம் பயன்படுத்துகின்றது.

சதிகள் இல்லை என்பதை உணர அதிகப்படியான அறிவு தேவையில்லை. சாதிகளை ஒழிக்க தேவைப்படும் அளவை விட  அதிகமாகவே வளர்ந்துவிட்டது. 

சிகரெட் ,மற்றும்  போதைகளுக்கு அடிமையானபின் அதை அறிவைக்கொண்டும் விடமுடியாத நிலை  இருக்கின்றது அதுபோல இதுவும் ஒரு பிரச்சனை. மரபணு மூலம் பழகிய ஒரு போதைப் பழக்கம் போன்றது. அறிவால் இதுக்கு தீர்வு இருக்கா என்பது குழப்பமே.

உலகமயமாக்கலில் சாதிய இனங்கள் சமூகங்கள் சிதைந்து கலைந்து சில தலமுறைகள் கடந்து போகும் போது சாதியமும் காணாமல் போகும்.  வேறு பதிவுகளில் சொன்னது போல இனத்தின் முடிவும் சாதீய சமூக முரண்பாடுகளில் இருந்து விடுதலையும்  ஒரே புள்ளியில் இருக்கின்றது.

இவர்கள் (என்ஜினியர்) டொக்டர்மாரே தவிர 
அறிவுக்கும் இவர்களுக்கும் ஏதும் சம்மந்தம் இருப்பின் 
அந்த சாக்கடையில் போய்  விழுவார்களா?

இவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதுக்குத்தான் இப்போ நீட் தேர்வு 
முறையை கொண்டுவந்து பீகார் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 
ஹிந்தியில் பாசாகாதவர்களை    தெரியாத ஆங்கிலத்தில் பாஸ் ஆக்கி 
பல்கலைக்கு அனுப்ப போகிறார்கள்.

போதைக்கு அடிமையாதல் என்பது சிறுக சிறுக தொடங்கி 
பின் அவர்களாலேயே வெளி வர முடியாத ஒரு ஒன்று 

இவர்கள் அப்படி என்று பார்க்கும் பார்வை சரியா தவறா என்று எனக்கு கொஞ்சம் 
குழப்பமாக இருக்கிறது.  இவர்கள் ஒரு மமதையில் திரிகிறார்கள் என்றுதான் கூறமுடியும்.
இங்கு யாழ் களத்தில் கூட இப்பிடியானவர்களை பார்க்க கூடியதாக இருக்கிறது 
போதைக்கு அடிமையானவர்கள் ... அதை தவறு என்று உணர்கிறார்கள்  ஆனால் வெளியேற முடியாது 
இருக்கிறார்கள். இவர்கள் அப்பிடி இல்லையே ....
இவர்களுடைய மதத்தில் இருக்கும் காட்டுமிராண்டி தனத்தை படம் எடுத்து போட்டாலும் 
ஏன் கிறிஸ்தவம் முஸ்லீம் எல்லாம் சரியா இருக்கா? என்று சண்டைக்கு போகிறார்கள் தவிர 
இப்படியான காட்டுமிராண்டி தனம் இந்தளவில் முன்னேறிய உலகில் ஒரு சமூகத்துக்கு தேவையா? 
என்று சிந்திக்க தெரியவில்லையே? 

பார்ப்பான சமூகத்தின் சாதிவெறி வேறு ...
அது பொய் புரட்டுகளை பரப்பி அடுத்தவனை சுரண்டுவது ஆகும் 
இது ... இவர்களையும் அவன் சூத்திரர் என்றுதான் சொல்கிறான் ...
கத்தோலிக்கத்துக்கு தொடர்பில்லாத பிரிடிஷ் காரன்  தனக்கு பாதுகாப்புக்கு 
காலனி நாடுகளில் கத்தோலிக்கத்தை பரப்பி மக்களை முட்டாள் ஆக்கியதுபோல்தான் 
பார்ப்பான் இவர்களையும் ஆக்கி இருக்கிறான்  

 • Like 4

Share this post

Link to post
Share on other sites
On 8/20/2019 at 7:35 AM, வல்வை சகாறா said:

சில விடயங்கள் எல்லோரும் ஒருமித்துப் பேச வேண்டும். சாபங்கள் தொலைகிறதா பார்ப்போம்.

எங்களை சுற்றி இருக்கும் மூடத்தனமான நம்பிக்கைகள், மதவாதம், இனவாதம், ஏழை பணக்காரன் மற்றும் இந்த சாதி போன்ற பல சாபங்கள் அழிய வேண்டும் என்பதுதான் ஆசை.. ஆனால் மேற் கூறிய சாபங்களுடன் இன்னமும் வேறு சாபங்கள்(அந்தஸ்து- நீங்கள் வசிக்கும் suburbனை வைத்து மதிக்கபடுகிறது, உங்களின் நண்பரகள் வட்டம், பிள்ளைகள் படிக்கும் பாடசால etc) சேர்வதுதான் உண்மை..

காதலிக்கும் போது தெரியாத சாதி, பின்பு பெரிதாக தெரிவது மட்டுமல்லாது, பிள்ளைகளின் முன்பும் விமர்சிக்கப்படுகிறது, அவர்களின் மனதிலும் அது வலுவாக விதைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த suburb அந்தஸ்தும் சாதியோடு சேர்ந்து இங்கே கொடிகட்டி பறக்கிறது..அந்த சூழ்நிலையில் வளர்க்கபடும் பிள்ளைகளிடமும் இந்த அகங்காரம் தானாகவே இவை சேர்ந்துவிடும்..

மனிதர்களை அளவிடும் அளவுகோல்களாக இவை இன்னமும் இங்கே இருக்கும் போது   பின்பு எப்படி சக மனிதர்களை மதிக்கும் பண்பு   உருவாகும்? எவ்வாறு இந்த வேற்றுமைகளை இல்லாமல் செய்ய முடியும்?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

என்னைப் பொறுத்த வரை அந்த பையன் அந்த பெண்ணிடம் மாட்டி தனது வாழ்க்கையை தொலைக்காமல் விட்டால் சரி.. 

Share this post

Link to post
Share on other sites

92-E8-A30-F-B359-4-E8-B-ABFC-942-AE9-FBA

இந்த சிரட்டையில் தேநீரும் உணவும் கொடுத்து எத்தனை மனங்களை எங்களது முன்னோர்கள் நோகடித்திருப்பார்கள்?

மனிதர்களின் அறிவு வளர வளர அவர்களின் பண்பும் மனித நேயமும்தான் வளர வேண்டும் ஆனால் இங்கே வளர்வதோ அகங்காரம், சுயநலம், சாதி அந்தஸ்து.. 

சில வேளைகளில் நான் நினைப்பது நாங்கள் கற்காலத்தை நோக்கி செல்கிறோமா என்று?

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

92-E8-A30-F-B359-4-E8-B-ABFC-942-AE9-FBA

இந்த சிரட்டையில் தேநீரும் உணவும் கொடுத்து எத்தனை மனங்களை எங்களது முன்னோர்கள் நோகடித்திருப்பார்கள்?

மனிதர்களின் அறிவு வளர வளர அவர்களின் பண்பும் மனித நேயமும்தான் வளர வேண்டும் ஆனால் இங்கே வளர்வதோ அகங்காரம், சுயநலம், சாதி அந்தஸ்து.. 

சில வேளைகளில் நான் நினைப்பது நாங்கள் கற்காலத்தை நோக்கி செல்கிறோமா என்று?

சகோதரி ,

உங்கள் ஆதங்கம் புரிகின்றது .

நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த வழக்கம் நான் சிறு வயதில் கண்டிருக்கிறேன் - அதன் தாற்பரியம் புரியாத வேளை,  அதன்  பின்னர் எவ்வளவோ நடந்தேறி விட்டது .இவையெல்லாம் வழக்கொழிந்து விட்டது என நினைக்கின்றேன்அகம்,  புலம் இரண்டிலுமே

உயிர் வாழ் சீவராசிகள் அனைத்துமே குழு மனநிலை கொண்டவை தான் என நீங்கள் நம்பவில்லையா , ஒருவர் தன்னுடன் நன்கு ஒத்துப் போக்க கூடியவரை தான் விரும்பும் எந்த ஒரு நிலையிலும் அல்லது வளையத்தினுள்ளும் வைத்து தொடர்புகளை பேணிக் கொள்ள  நினைப்பது மிகவும் இயல்பானது இல்லையா , எவரொருவரும் தனது தனிப்பட்ட வாழ்வில் தெரிவு செய்வதில் உள்ள உரிமை அவரது தனித்துவத்தை பொறுத்ததல்லவா , இதைப் பற்றி வேறொருவர் ஏன் அலட்டிக் கொள்ள   வேண்டும்।  

எனக்கு பிராமண நண்பர்கள் இருக்கிறார்கள் , வீட்டில் விருந்து வைக்கும் போது மற்றயவர்களுடன்  அவர்களையும் அழைப்பேன் , மேசையில் சகல விதமான மாமிச உணவுகளுடன் மரக்கறி வகைகளும் இருக்கும் , மகிழ்ச்சியாக கலந்து கொண்டு தமக்கு வேண்டிய  மரக்கறி உணவை ருசித்து செல்வார்கள் , தொழில் ரீதியாவும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் உண்டு , பிள்ளைகளும் மிகுந்த சிநேகிதமாக இருக்கிறார்கள் - இதற்காகக் அவர்களுடன் போய் திருமண உறவு கொள்வோமா என கேட்கப் போவதில்லை ,அந்த விடயத்தில் எமக்கு தோதாக நல்ல விதமாக அமையக் கூடிய திறமான வேறு தெரிவுகள் இருக்கின்றன - இதற்கு ஏன் சாதி முலாம் பூச வேண்டும்.

சிறுவர்கள் பொம்மையை விளையாடும் போது எப்போதுமே ஒப்பிட்டுத் தான் பார்ப்பார்கள் , சரியான முறையில் கையாண்டால் இது மன நல   அடிப்படையில் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்    ஒன்று.

இதே மாதிரி தான் இந்த sub-urb  விடயமும். இந்த வகையான சம்பாஷணைகள் பிள்ளைகளுக்கு - சரியான வழியில் கையாண்டால் - தங்கள்  ஒப்பீட்டளவில் மேன்மையான இடத்தில் செட்டில் பண்ண வேண்டும் என்ற மோட்டிவேஷன் இருக்கும் - இது ஆரோக்கியமான விடயமில்லையா ..

ஒன்றுமே செய்யாமல் நாம் இருப்போம் , நல்லவை எல்லாம் தானாகவே வந்து சேர வேண்டும் என்ற மனப் பான்மையை விட்டு விட்டு ,  குறிக்கோட்களை அமைத்து    அவற்றை  அடையும் முயற்சிகளை கொள்ளுவோமா…

வாத்தியாரின் பாட்டு ஒன்று ஞாபகம் வருகிறது  " விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் ,உன் போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் "

Share this post

Link to post
Share on other sites

இதில் இன்னுமொரு தற்கால நடை முறையையும் பார்க்கலாம்
அண்மைக் காலங்களில் புலம் பெயர் தேசங்களில் எமது இளவல்களிடையே நடைபெறும் திருமண பந்தங்களில் கணிசமானவை வேறு இனத்தவருடனானது। ( கவனிக்க - வேறு சாதிக்   குழுமம் என்று அடையாளப் படுத்தி வைத்திருப்பவர்களுடன் அல்ல ).   
 
இதற்கு முக்கிய காரணம் எம்மிடையே தனிப்பட்ட ரீதியில் பேணிக் கொள்ள விரும்பும் தெரிவுகள்।
இதில் பாதிக்கப் படுவதாக தோற்றம் பெறும் குழுவினர் , தம் குழுமத்தை சேர்ந்த அகத்தில் வதியும் இளவல்களுக்கு ஏன் தமது பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்கக் கூடாது ।    தமது குழுவினரும் முன்னேறிய மாதிரி இருக்குமே.
ஆனால் செய்ய மாட்டார்கள்; ஊரில் பிறந்து வளர்ந்ததுகளுடன்,  இங்கேயே வளர்ந்த எமது பிள்ளைகளால் சரிக்கட்ட இயலாது என்று. இதற்கு சமாந்தரமான ஒரு நிலைப் பாடு தானே வேறு விதமான சமூக ,தனிப்பட்ட தெரிவுகளை கொண்டவர்களுடன் தனிப்பட்ட நெருங்கிய தொடர்புகளை பேண முயற்சிப்பது….

" தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்னுமாம் "  

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, சாமானியன் said:

நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த வழக்கம் நான் சிறு வயதில் கண்டிருக்கிறேன் - அதன் தாற்பரியம் புரியாத வேளை,  அதன்  பின்னர் எவ்வளவோ நடந்தேறி விட்டது .இவையெல்லாம் வழக்கொழிந்து விட்டது என நினைக்கின்றேன்அகம்,  புலம் இரண்டிலுமே

உண்மைதான்.. இதே போன்ற சில பழக்கங்கள் மட்டுமே இப்பொழுது இல்லை..

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, சாமானியன் said:

ஒருவர் தன்னுடன் நன்கு ஒத்துப் போக்க கூடியவரை தான் விரும்பும் எந்த ஒரு நிலையிலும் அல்லது வளையத்தினுள்ளும் வைத்து தொடர்புகளை பேணிக் கொள்ள  நினைப்பது மிகவும் இயல்பானது இல்லையா , எவரொருவரும் தனது தனிப்பட்ட வாழ்வில் தெரிவு செய்வதில் உள்ள உரிமை அவரது தனித்துவத்தை பொறுத்ததல்லவா , இதைப் பற்றி வேறொருவர் ஏன் அலட்டிக் கொள்ள   வேண்டும்

அவரவர் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும், யாருடன் இருக்க வேண்டும் என்பதில் தலையிட மற்றவர்களுக்கு உரிமை இல்லை..அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்படி ஒரு குழுவாக இருப்பவர்கள் மற்றையவர்களும் தனித்துவமானவர்கள் என்ற மனபாங்கு இருக்க வேண்டும்..அவர்களையும் மதித்து நடக்க வேண்டும்,  அதை விடுத்து.. தாங்கள் மேலானவர்கள், அவர்களுடைய நட்பு வேண்டும் என்றால் அவர்களை போல, அவர்களின் கோட்டிற்குள்தான் இருக்க வேண்டும் என நினைப்பது சரியா?  

Edited by பிரபா சிதம்பரநாதன்

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவரவர் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும், யாருடன் இருக்க வேண்டும் என்பதில் தலையிட மற்றவர்களுக்கு உரிமை இல்லை..

கூட்டுக் குடும்பவாழ்க்கை என்ற மரபுவழியில் உரிமை இருந்தது. தற்போது அது மாற்றம்கொண்டு வருவது தெரிகிறது.

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் கூறிய படி இந்த மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் சிறுவர்களை பெற்றோர்கள் சரியான முறையில் கையாண்டால் மட்டுமே அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். ஆனால் பெரும்பான்மையான பெற்றோர்களே ஏதோவொரு வகையில் இந்த ஒப்பிட்டுப்பார்த்தலுக்கு உடந்தையாகும் போது சிறுவர்களை திருத்துவதா அல்லது பெற்றவர்களை திருத்துவதா? 

இரண்டு உதாரணங்களை இங்கே தருகிறேன் .. முதலாவது ஒரு தாய் தனது மகளிடம் கூறுவது. இரண்டாவது இரு சிறுவர்களின் சம்பாஷனை..

“ you got a house in Hills district, so you have to maintain your standards” 

” my parents told me not to  play with you because you aren’t rich..”

இதில் யாரை திருத்துவது..?

இரண்டவதாக, இந்த suburb விஷயம், இது எந்த வகையில் motivationனாக இருக்கும்? 

Edited by பிரபா சிதம்பரநாதன்

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, சாமானியன் said:

ஒன்றுமே செய்யாமல் நாம் இருப்போம் , நல்லவை எல்லாம் தானாகவே வந்து சேர வேண்டும் என்ற மனப் பான்மையை விட்டு விட்டு ,  குறிக்கோட்களை அமைத்து    அவற்றை  அடையும் முயற்சிகளை கொள்ளுவோமா…

வாத்தியாரின் பாட்டு ஒன்று ஞாபகம் வருகிறது  " விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் ,உன் போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் "

சரியாகத்தான் கூறினீர்கள்.. அத்தோடு மனிதர்கள் எல்லோரும் ஏதோவொரு வகையில் தனித்துவமானவர்கள், ஒவ்வொருவருடைய குறிக்கோள்களும் வேறானவை என்பதையும் மதித்து நடந்தால் சரி..

Share this post

Link to post
Share on other sites

இந்தத் திரியில் கருத்தெழுதியதற்காக வருந்துகிறேன். இதுபற்றிக் கருத்தாடுவதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.

Edited by ரஞ்சித்
misinterpretation

Share this post

Link to post
Share on other sites
57 minutes ago, Paanch said:

கூட்டுக் குடும்பவாழ்க்கை என்ற மரபுவழியில் உரிமை இருந்தது. தற்போது அது மாற்றம்கொண்டு வருவது தெரிகிறது

இருக்கலாம் .. ஆனால் அந்த உரிமை ஒரு வரையறைக்குள் இருந்தால் மட்டுமே அந்த கூட்டு குடும்பத்தின் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அதிகரிக்கும்..

எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.. 

Share this post

Link to post
Share on other sites

சாதியம்  ஒழியணும் என்பது உண்மை

வரவேற்கத்தக்கது

ஆனால்  தமிழருடைய

நாடி  நரம்பு ரத்தம் என  ஊறிப்போயுள்ள இந்த  வெறியை

எதை  வைத்தும் முற்றாக ஒழித்துவிட  முடியாது என்பது  என்  அனுபவம்  தரும்  பாடம்.

திருமணங்கள் மூலம்  இதை  சாதிக்கலாம்  என 

வல்வை சகாறா  சொல்ல  வருகிறார்  என நினைக்கின்றேன்

வாய்ப்பில்லை

ஒன்றைவிட மற்றொன்று உயர்வென

ஒவ்வொரு  சாதியினரும் படிநிலை பார்க்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள

இந்த  சாதி  அமைப்பில்

வேண்டுமானால்  இன்னொருத்தர் 

நான்  உயர்ந்து  விட்டேன்  என கொலரை  தூக்கிவிட  வேண்டுமானால்  திருமணங்கள்  உதவலாம்

அண்மையில் பிரான்சிலே இது போன்ற  ஒரு சாதி தாண்டிய திருமணம் நடைபெற்றது

அதில் கலந்து கொண்ட எனது  நண்பரிடம் பெண் வீட்டை சார்ந்த  ஒருவர்  சொன்னாராம்

பார்த்தீர்களா

உங்களுடைய  ஆட்களுடன் நாங்களும் சரி  சமமாக  வேட்டி  கட்டி ஒன்றாக நின்றதை  என.😥

Edited by விசுகு
 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, விசுகு said:

வணக்கம் விசுகர்!
இதை விட சுருக்கமாக விளக்கம் யாரும் தரமுடியாது. அதற்கு அனுபவம் வேண்டும். இந்த விடயத்தில் உங்களிடம் நிறையவே அனுபவம் உள்ளது போல் தெரிகின்றது.நான் ஊரில் சாதிப்பிரச்சனைக்கு  மிண்டு கொடுத்து இளவயதிலையே என் முதுகெலும்பை உடைத்துவிட்டார்கள்.செய்தவர்கள் வேறு யாருமல்ல. என் உறவினர்கள் தான். என்னை சொந்தம் என்று சொல்லவே வெட்கப்பட்டார்கள்.அது ஒரு புறம் இருக்கட்டும்.

சாதி ஒழிப்பை திருமணத்தில் இருந்து ஆரம்பிப்பதா? சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சாமத்திய வீட்டுசடங்கில் உறவினர்களுக்குள் நடந்த கண்ணியமற்ற வார்த்தை பிரயோகங்களால் அந்த சுபகாரியமே சஞ்சலப்பட்டு விட்டது. உறவினர் பாதிப்பேர் இடைநடுவில் வெளிநடப்பு சென்று விட்டனர்.

பிரச்சனைக்கு காரணம் சாமத்திய வீட்டு பெண்ணின் பெற்றோர்கள் கலப்புத்திருமணம் செய்தவர்கள். அங்குவந்த உறவினர்களின் நீயா நானா பிரச்சனைதான் காரணம்.
தந்தை சீவல் தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவர்.
தாய் பறைமேளம் அடிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர்.
இது உண்மைச்சம்பவம்.🖐️
எனவே சாதிப்பிரச்சனை எங்கிருந்து உருவாகின்றது.அதை எங்கிருந்து அழிப்பது?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • ஏனுங்க அம்மணி மினுமினுக்குது தாவணி எங்கே கிளம்பி போகிறிங்கிலாக்கு பட்டணத்துக்கு சினிமா மொத ஆட்டத்துக்கு போறேனுங்கோ ஆகட்டும் அது சரி ஊருக்குள்ள உங்களப்பத்தி ஏதோ பேசிக்கிட்டாங்கோ நீங்கள் யாரையோ காதலிக்கிறதாகவும் சீக்கிரம் அவரையே கண்ணாலம் செய்துகிறதாகவும் அது அம்புட்டும் உண்மையாங்க ? அப்படியெல்லாம் எதுவுமில்லிங்க முச்சுட்டும் புரளிங்க மக்க இப்படியெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் பேசி ஊர்குடியை கெடுப்பதாலே பலர் வாழ்வில் இழப்புகள் மட்டுமே மிஞ்சுமுங்க நேரங்கணக்க பேசிக்கிட்டிருந்ததால தாமதமாயிடுச்சிங்க படம் முடிச்சிடுங்கோ நான் போயி வாறேனுங்கோ எனக் கூறி வறப்பிலே ஓடினால் அம்மணி…….
  • காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை மக்கள் எதிர்பார்ப்பது வழக்கமானதே. நிலைமைகள் மாறும் போது பெயர்களும் அதற்கு தக மாற்றம் அடைகின்றன. தமிழ் பிரேதச செயலர் பதவியில் இருப்பதால் அவர் தமிழ் பேசும் மக்களுடன் உரையாடி அவர்களின் எதிர்பார்ப்பின் படி செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
  • இரண்டாம் நாள் அண்மையில் இருந்த அரண்மணையைப் பார்க்கப் போயிருந்தோம். அது பார்க்கவேண்டிய இடமா என்று கேட்பீர்கள். கடடாயம் பார்க்கவேண்டிய இடம் இல்லை. ஆனால் நாம் தங்கியிருந்த விடுதிக்கு அண்மையில் இருந்ததனால் அதையும் பார்த்துவிடுவோம் என்று எண்ணி சென்றோம். நடந்து செல்லும் தூரம்தான். அரண்மனைக்கு கிட்டச் செல்லச் செல்ல வழிகாட்டிகள் பேரம் பேசுவது அதிகரிக்க நாமே போய்க்கொள்கிறோம் என்றுவிட்டு ஒருவருக்குப் 10 டொலேர்ஸ் நுழைவுச் சீட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டோம். அங்கங்கே ஆட்கள் சுத்தப்படுத்தும் வேலை கட்டடவேலை என்று செய்துகொண்டிருந்தார்கள். அந்நாட்டு ராஜா இறந்துவிட்டார். ராணியார் மட்டுமே இப்போது உயிருடன் இருப்பதாகக் கூறினர். அரண்மனை வளாகத்தினுள் சென்றால் தெற்குப் பகுதியில் சில்வர் பக்கோரா ஏற்று அழைக்கப்படும் பெளத்த விகாரை ஒன்று உண்டு.அதனுள்  தங்கத்தினால் ஆன புத்தர் சிலைகள், ஆபரணங்கள் என்பன பேணப்படுகின்றன என்றும் 5000 இற்கும் மேற்பட்ட வெள்ளி ஓடுகளினால் வேயப்பட்ட கூரை அது என்று கூறினாலும் எம்மால் அவற்றைப் பார்க்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் புத்தரின் முகங்கள் தான். அதன் ஒருபுறம் பெரிய ஏரி ஒன்று அமைந்திருந்தாலும் அரண்மனை பெரு மதிலால் சூழப்பட்டுப் பாதுகாப்புடன் இருப்பதனால் ஏரி கண்ணுக்குத் தெரியவில்லை. இன்னொருபுறம் அரசரின் சிம்மாசன அரிகாணப்படுகிறது. தங்கத்தினால் ஆன இருக்கைகள், மின் விளக்குகள், அலங்கார பொருட்களுடன் காணப்படுகின்றது. தூரத்திலிருந்து அவற்றைப் பார்க்க முடியும். மறுபக்கம் போனால் கம்போடியா மன்னரின் உத்தியோகபூர்வ இல்லமான கெமரின் அரண்மனை காணப்படுகின்றது. இன்னொரு பக்கத்தில் சாம்பல் நிறத் தூபிகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றைப் பார்த்தால் தமிழர்களின் கோவில்த் தூபிகளின் அமைப்பைப் போன்றே இருக்கின்றது. சில கோபுர நுனியை பிள்ளையாரே அலங்கரித்தபடி இருந்தார்.   மதிய நேரம் என்பதால் கொளுத்தும் வெய்யிலில் இருக்கும் சிலமுறை நிழல்களிலும் கட்டட நிழலிலும் பார்வையாளர்கள் ஒதுங்கி நிற்கின்றனர். இரு பெரிய நாகலிங்கப் பூ மரங்கள் பூக்களுடன் மனதை மயக்குகின்றன. மலசலகூடங்கள் உடனுக்குடன் சுத்தமாகக் கழுவித் துடைத்தபடி நன்றாகவே இருக்கிறது. அங்கங்கே இளைப்பாறுவதற்கு சில இடங்களை அமைத்திருந்தனர். அங்கு போய் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு உணவகத்துக்குப் போக ஆயத்தமானோம்.