Jump to content

சாதிப்பது வெறி... சாதி இப்போது வெறி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

பிரச்சனைக்கு காரணம் சாமத்திய வீட்டு பெண்ணின் பெற்றோர்கள் கலப்புத்திருமணம் செய்தவர்கள். அங்குவந்த உறவினர்களின் நீயா நானா பிரச்சனைதான் காரணம்.

தந்தை சீவல் தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவர்.
தாய் பறைமேளம் அடிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர்.

இது உண்மைச்சம்பவம்.🖐️
எனவே சாதிப்பிரச்சனை எங்கிருந்து உருவாகின்றது.அதை எங்கிருந்து அழிப்பது?

இது தான்   உண்மை  நிலையண்ணா

இந்தநிலையில்   எல்லோரும்   இருந்து  கொண்டு

பிராமணர்களையும்

வெள்ளாளர்களையும் கை  காட்டி

அவர்கள் தான் பிரச்சினை  என நழுவி  விடுவார்கள்

உண்மையில் அங்கு கூட கலப்புத்திருமணங்கள் நடந்திருக்கிறது

ஆனால் இவர்கள்  தான் வாள்  எடுத்து  வெட்டிப்போடுவது???

Link to comment
Share on other sites

15 hours ago, சாமானியன் said:

உயிர் வாழ் சீவராசிகள் அனைத்துமே குழு மனநிலை கொண்டவை தான் என நீங்கள் நம்பவில்லையா , ஒருவர் தன்னுடன் நன்கு ஒத்துப் போக்க கூடியவரை தான் விரும்பும் எந்த ஒரு நிலையிலும் அல்லது வளையத்தினுள்ளும் வைத்து தொடர்புகளை பேணிக் கொள்ள  நினைப்பது மிகவும் இயல்பானது இல்லையா , எவரொருவரும் தனது தனிப்பட்ட வாழ்வில் தெரிவு செய்வதில் உள்ள உரிமை அவரது தனித்துவத்தை பொறுத்ததல்லவா ,

முற்றிலும் உண்மை.

தன்னைச் சுற்றியிருப்பவைகள் அனைத்தும் தனக்குக் கீழாக அடிபணிந்து செயற்படுவதையே உயிரினங்கள் விரும்புவதை, இயற்கையின் படைப்பைக் கூர்ந்து கவனித்தால் தெரிந்துகொள்ளலாம். அதனால்தான் ஒன்றுடன் ஒன்று விளையாட்டாகவேனும் மோதிச் சண்டைபிடித்து தனது உடல் வல்லமையைக்காட்டி மற்றவைகளைக் தாழ்த்தித் தன்னை உயர்த்திக்கொள்ள முயல்வதைக் காணலாம். உடல்வலிமை இல்லையென்றால் இதனைச் சாதிக்கமுடியாது. ஆனாலும் அதில் ஆறறிவு கொண்ட மனிதன்மட்டும் அதிகமாகத் தனது உடலைவிடவும் அறிவைக்கொண்டே சாதிக்கமுயலும்போது மிகச் சுலபமாகக் கிடைத்த ஒரு வழிமுறைதான்  சாதி. அதனை அவன் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

சாதிக்குள் புகுத்தப்பட்டவர்களை வல்லமையாலோ, அறிவாலேயோ தாழ்த்திவிடும் சிரமம் ஏதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாதிவழியில் தங்களைத் தாங்களாகவே தாழ்த்திக்கொள்ளப் பழகிக்கொண்டு விடுவார்கள்.  

'வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்'. இப்படியே உயர்வும் தாழ்வும் மனிதன் உலகில் வாழும்வரை மாறி மாறி வந்து தொடரத்தான் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Paanch said:

அருமையான கருத்து அண்ணா

அனுபவம் எம்மை

களைப்படைய  வைத்து 

அதன்படியே  வாழ்ந்து விட்டுப்போகத்தான் விட்டு  விடுகிறது

வேற வழி???

Link to comment
Share on other sites

On 8/27/2019 at 4:26 PM, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த சிரட்டையில் தேநீரும் உணவும் கொடுத்து எத்தனை மனங்களை எங்களது முன்னோர்கள் நோகடித்திருப்பார்கள்?

On 8/27/2019 at 3:36 PM, பிரபா சிதம்பரநாதன் said:

மனிதர்களை அளவிடும் அளவுகோல்களாக இவை இன்னமும் இங்கே இருக்கும் போது   பின்பு எப்படி சக மனிதர்களை மதிக்கும் பண்பு   உருவாகும்? எவ்வாறு இந்த வேற்றுமைகளை இல்லாமல் செய்ய முடியும்?

எல்லாம் மாற்றத்திற்கு உட்படும்.  அதை நோக்கியே நாம் நகர்கின்றோம். ஒரு சமூகமாக ஒரு மதமாக ஒரு இனமாக ஒரு ஊராக இருக்கும் வரைதான் இவைகள் தொடரும். ஒருவரை ஒருவர் தெரியும் வரைதான் அவரது சாதியும் உயிர்வாழமுடியும். ஏனெனில் அதற்கு பிற அங்க அடயாளம் எதுவும் கிடையாது. வேறு இனங்கள் மதங்களோடு கலந்து பிற மொழிகளை தாய்மொழியாக்கி  பிறதேசங்கள் ஊர்களை வாழ்விடமாக்கி நகரும்போது சில தலமுறைகள் கடந்து யார் என்ன சாதி என்பது தெரியாது. இன்று சிங்களவர்களில் கணிசமானவர்கள் ஒருகாலத்தில் தமிழர்களே. அதேபோல் புலம்பெயர் தேசங்களில் கூட  தனித்தனி தீவுகளாகி கலைந்து சிதைந்து போகும் போது இந்த சாதீயம் சில தலமுறைகளில் காணாமல் போகும். அதனால் தான் இனத்தின் முடிவும் சாதீயத்தின் முடிவும் ஒரே புள்ளியில் இருப்பதாக அவ்வப்போது பதிவு செய்வதுண்டு. சாதீயம் என்பது  தன்னித்துக்குள் வேட்டையாடுவது.. அதிலிருந்து தப்பிபது இயல்பாக நடக்கும்.

சாதீயம் தன்னை விடுவிக்க இவ்வாறான ஒரு திசையில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இவ் இயக்கம் அடிப்படையில் தேசீயத்துக்கும் இன கட்டமைப்புக்கும் இன ஐக்கியத்துக்கும் எதிரானது. இதன் விழைவு அபாயகரமானது என்பதை வரலாறு எமக்கு கற்பித்துள்ளது இருந்தும்  இவ்வாறுதான் எமது பயணம் தொடரும்.  சாதீயம் அழியவேண்டுமானால் இனம் முற்றாக சிதையவேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர்வினை உருவாகும். அவைகள் ஏற்படுத்தும் விதிகள் இவை. அடிக்கடி சலித்துக்கொள்வோம் தமிழனுக்கு ஒற்றுமை இல்லை என்று. அதை என்னுமொரு கோணத்தில் பார்த்தால் ஒற்றுமை இல்லாமல் இருபதே நகர்வதே சரியானது. ஏனெனில் தமிழனாக இனமாக ஒற்றுமையாக இருக்கும்வரை சாதீய இறுக்கமும் இருக்கும். 

வினைகளும் எதிர்வினைகளும் இயற்கையானது. அதை வெல்லவேண்டுமானால்  அறிவும் மானுடநேயமும் அவசியம். அது சத்தியம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துக்கள் இந்த தலைப்பில் இருந்து சற்று விலகி மற்றையவர்களின் மனதை வருத்தப்பட வைத்துவிட்டேன் என நினைக்கிறேன்.. அப்படியாயின் மன்னிக்கவும்.  ஏற்கனவே சிறுக சிறுக அழியும் இனமாக இருக்கும் நாங்கள், இப்படி குழுக்களாக பிரியாமல், மூடத்தனமான கருத்துகளை எங்களது சந்ததிகளுக்கு கடத்தாமல் இருக்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம்..

இரண்டாவதாக, சண்டமாருதன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபா சக்தியின் விரிவான கட்டுரை ஒன்று எந்த சமரசமுமில்லாமல் அக்குவேறு ஆணிவேறாக அலசுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் படத்துடன்.. 😢

D1YxTxRU8AE0lPy.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/28/2019 at 10:12 PM, சண்டமாருதன் said:

எல்லாம் மாற்றத்திற்கு உட்படும்.  அதை நோக்கியே நாம் நகர்கின்றோம். ஒரு சமூகமாக ஒரு மதமாக ஒரு இனமாக ஒரு ஊராக இருக்கும் வரைதான் இவைகள் தொடரும். ஒருவரை ஒருவர் தெரியும் வரைதான் அவரது சாதியும் உயிர்வாழமுடியும். ஏனெனில் அதற்கு பிற அங்க அடயாளம் எதுவும் கிடையாது. வேறு இனங்கள் மதங்களோடு கலந்து பிற மொழிகளை தாய்மொழியாக்கி  பிறதேசங்கள் ஊர்களை வாழ்விடமாக்கி நகரும்போது சில தலமுறைகள் கடந்து யார் என்ன சாதி என்பது தெரியாது. இன்று சிங்களவர்களில் கணிசமானவர்கள் ஒருகாலத்தில் தமிழர்களே. அதேபோல் புலம்பெயர் தேசங்களில் கூட  தனித்தனி தீவுகளாகி கலைந்து சிதைந்து போகும் போது இந்த சாதீயம் சில தலமுறைகளில் காணாமல் போகும். அதனால் தான் இனத்தின் முடிவும் சாதீயத்தின் முடிவும் ஒரே புள்ளியில் இருப்பதாக அவ்வப்போது பதிவு செய்வதுண்டு. சாதீயம் என்பது  தன்னித்துக்குள் வேட்டையாடுவது.. அதிலிருந்து தப்பிபது இயல்பாக நடக்கும்.

சாதீயம் தன்னை விடுவிக்க இவ்வாறான ஒரு திசையில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இவ் இயக்கம் அடிப்படையில் தேசீயத்துக்கும் இன கட்டமைப்புக்கும் இன ஐக்கியத்துக்கும் எதிரானது. இதன் விழைவு அபாயகரமானது என்பதை வரலாறு எமக்கு கற்பித்துள்ளது இருந்தும்  இவ்வாறுதான் எமது பயணம் தொடரும்.  சாதீயம் அழியவேண்டுமானால் இனம் முற்றாக சிதையவேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர்வினை உருவாகும். அவைகள் ஏற்படுத்தும் விதிகள் இவை. அடிக்கடி சலித்துக்கொள்வோம் தமிழனுக்கு ஒற்றுமை இல்லை என்று. அதை என்னுமொரு கோணத்தில் பார்த்தால் ஒற்றுமை இல்லாமல் இருபதே நகர்வதே சரியானது. ஏனெனில் தமிழனாக இனமாக ஒற்றுமையாக இருக்கும்வரை சாதீய இறுக்கமும் இருக்கும். 

வினைகளும் எதிர்வினைகளும் இயற்கையானது. அதை வெல்லவேண்டுமானால்  அறிவும் மானுடநேயமும் அவசியம். அது சத்தியம் இல்லை. 

அப்பட்டமான உண்மை சண்ட மாருதன். ஆனால் கசப்பாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/19/2019 at 6:00 PM, வல்வை சகாறா said:

கவனிப்பு 1.

புலம்பெயர்ந்த நாடு (கனடா)

அவனுக்கு அவளைப் பிடித்திருந்தது. அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது.

பல்கலைக்கழகம் முதலாம் வருடம் முடிந்து இரண்டாம் வருடம் ஒரே துறை

நட்பு, சிறிது கால அவகாசத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் திருட்டுத்தனமாக இரசிப்பு, சின்னச் சின்ன பரிசுப்பரிமாற்றங்கள்... வாய்கள் பேச கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது....

திடீரென ஒருநாள்

தனித்துப் பேசும் சந்தர்ப்பம் உருவானது. உன்னை எனக்குப் பிடிக்கும்.. என்னை உனக்குப் பிடிக்குமா என்று பெண் தன்னை வெளிப்படுத்தி அவனைத் திக்கு முக்காட வைத்து நீ என்ன சாதி என்றாள். அவனும் நான் ஆண் சாதி என்றான் கம்பீரமாக... அது எனக்குத் தெரியும்தானே உன்ர சாதி என்ன சொல்லு உன்னை எங்க வீட்டில் அறிமுகப்படுத்த சாதி முக்கியம் என்றாள். எனக்குப் புரியவில்லையே என்றான் அவன் அப்பாவித்தனமாக...

ஊரில நீ உயர்சாதியா..?.........நீ உயர் சாதி என்றால்தான் உன்னை என் வீட்டில் அறிமுகப்படுத்த முடியும். எனக்குத் தெரியாது என்றான் அவன். எப்படிச் சாதியை அறிவது என் வீட்டில் சாதி பற்றி யாரும் கதைப்பதில்லை என்றான். நீ ஒரு குறிப்புச் சொல்லேன் அதை வச்சு நான் என்ன சாதி என்று சொல்றேன் என்றான். எனக்கும் தெரியாது வீட்ல கேட்டுச் சொல்றேன் என்றாள் அவள்.......  அவள் கேட்டு வருமட்டும் நாங்கள் எங்கள் அபிப்பிராயங்களைப் பதிவோமே.....

அவள் வீட்டில் இது பற்றிய கேள்வி பதில்கள்... முன்னோர்கள் கடைப்பிடித்தது நாங்களும் அப்படித்தான் என்ற மொக்கை முடிச்சுகளுடன் அப்பெண் பிள்ளையின் விருப்பிற்கு நிபந்தனை இட்டனர் பெற்றோர். எங்கள் சாதியாக இருந்தால் மாத்திரமே என்ற அழுத்தம் அதிகம் இருந்தது. நிச்சயமாக அவன் வேறு என்பதை அவளின் குடும்பம் ஊர் , விபரம், இருப்பு என்பதை வைத்து உறுதிப்படுத்திக் கொண்டனர். மகளுக்கு முழுமையான மறுப்பை உருவாக்கி முடக்கினர். பெற்றோர் மீதான நம்பிக்கை, பற்றுதல் கால ஓட்டத்தில் அவனிடமிருந்து அவளை விலத்தி நகர்ந்தது. பல்கலைக்கழகத்தில் மனப்போராட்டங்களுடனாக விடுபட்டுக் கொண்டார்கள். இருவரும் வெவ்வேறு தொழில்களில் நட்பு வெளி முழுமையாக அஸ்தமனமானது. பெண்ணுக்கான வரன் தேடலில் பெற்றோர் மும்முரமாக ஈடுபட்டனர். அப்பிள்ளையின் கல்வித்தகைமைக்கு தகுந்தாற்போல் வரனை அவர்களின் குழுமத்திற்குள் தெரிவு செய்ய முடியாமல் அப்பெண்ணின் கல்வி மற்றும் தொழில் தகைமைகளுக்கு முற்றிலும் ஒவ்வாத ஒருவரைத் தெரிவு செய்து மணமுடித்து வைத்தனர். இன்று அப்பெண்ணின் மணவாழ்வு விவாகரத்தில் நிற்கிறது. அப்பெண்பிள்ளையின் வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கிறது. மறுபடியும் அதே குழுமத்திற்குள்ளான தேடலை பெற்றோர் முன்னெடுத்து இருக்கிறார்கள். பேசாமடந்தையான அப்பெண் என்னிடம் பேசினார். இந்த சமூகவெளியில் தனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என்பதே அது.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.