Jump to content

நாளை முற்பகல் முதல் 24 மணித்தியால வேலை நிறுத்தத்தில் வைத்தியர்கள்


Recommended Posts

(எம்.மனோசித்ரா)

அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கம்  நாடளாவிய ரீதியில் நாளை காலை 8 மணிமுதல் 24 மணித்தியால வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடபடவுள்ளனர். சுகாதாரத்துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை இரு வாரங்களில் நிவர்த்தி செய்து தருமாரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

எனினும் தற்போது இரண்டு வாரங்கள் கடந்திருந்தும் அரசாங்கத்தினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையின் காரணமாகவே நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், எனினும் அவை தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்நிலையிலேயே தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்ததாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/63120

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் ஸ்தம்பிதம் – மக்கள் அவதி!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் தரம் குறைந்த மருந்துகள் வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்தே இன்று (வியாழக்கிழமை) அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மன்னாரில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுகளில் எவ்வித பணிகளும் இடம்பெறவில்லை.

தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் திரும்பி செல்ல நேரிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

mannar-1-720x404.jpg

mannar2-720x404.jpg

இதேபோல் வவுனியாவிலும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் மாத்திரம் இயங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தூர இடத்திலிருந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் வந்த நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Vavuniya-3-8-720x405.jpg

Vavuniya-2-8-720x405.jpg

அதேபோல அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மலையக மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக குழந்தையுடன் வந்த தாய்மார்கள் மற்றும் முதியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு, ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கென வருகை தந்த நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், வைத்தியசாலையின் தாதிமார்களுக்கும் நோயாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் சில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Up-country-720x405.jpg

upcountry-720x405.jpg

http://athavannews.com/நாட்டின்-அனைத்து-வைத்திய/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.