• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

அமெ­ரிக்க நாட்­ட­வரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டு சென்ற யாழ் இளைஞர்கள்

Recommended Posts

யாழ்ப்­பா­ணம், கோண்­டா­வில் பகு­தி­யில் அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வ­ரி­டமிருந்து பணம் பறிக்­கப்­பட்­டுள்­ளதாக கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­துக்கு அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வர் சுற்­றுப்­ப­ய­ணம் வந்­துள்­ளார். அவர் நேற்று மதி­யம் கோண்­டா­வில் பகு­தி­யில் சென்றுள்ளார்.

அப்­போது மோட்டார் சைக்கிளில் அவ­ரைப் பின்­தொ­டர்ந்து சென்ற இளை­ஞர்­கள் இரு­வர் அவ­ரி­டம் இருந்து 300 டொல­ரைப் பறித்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்ளதாக  கூறப்­ப­டு­கின்­றது.

அதை­ய­டுத்து அந்த அமெ­ரிக்க நாட்­ட­வர் கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ளார். முறைப்­பாட்டை அடுத்­துப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

https://www.virakesari.lk/article/63094

Share this post


Link to post
Share on other sites

இருக்கிற பெயரையும் கெடுக்கிறதுக்குத்தான் 

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, Maruthankerny said:

இருக்கிற பெயரையும் கெடுக்கிறதுக்குத்தான் 

எனக்கென்னவோ

EPRLF   ஞாபகம்  வந்து  தொலைக்குது??

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, விசுகு said:

எனக்கென்னவோ

EPRLF   ஞாபகம்  வந்து  தொலைக்குது??

உண்மைதான்.... இப்பிடி எதையேனும் மனதுக்குள் திணித்து விட்டால் எங்கள் மனநிம்மதி தொலையாது இருக்கும். 

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, ampanai said:

யாழ்ப்­பா­ணம், கோண்­டா­வில் பகு­தி­யில் அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வ­ரி­டமிருந்து பணம் பறிக்­கப்­பட்­டுள்­ளதாக கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­துக்கு அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வர் சுற்­றுப்­ப­ய­ணம் வந்­துள்­ளார். அவர் நேற்று மதி­யம் கோண்­டா­வில் பகு­தி­யில் சென்றுள்ளார்.

அப்­போது மோட்டார் சைக்கிளில் அவ­ரைப் பின்­தொ­டர்ந்து சென்ற இளை­ஞர்­கள் இரு­வர் அவ­ரி­டம் இருந்து 300 டொல­ரைப் பறித்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்ளதாக  கூறப்­ப­டு­கின்­றது.

அதை­ய­டுத்து அந்த அமெ­ரிக்க நாட்­ட­வர் கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ளார். முறைப்­பாட்டை அடுத்­துப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இதனை வாசிக்க... கால் சட்டை, கழண்டு  விழுந்த மாதிரி உணர்வு ஏற்பட்டது. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சீனாக்காரன் செய்த முகமூடியை அணியலாமா? சீனாக்காரன் வைரஸையும் அவிழ்த்துவிட்டு தன்ர முகமூடியையும் விக்கப்போறான் போல இருக்கு.
  • யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் விகாரைக்கு கலசம்   -எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு, இன்று (27), காலை 6.15 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, குறித்த பல்கலைக்கழக வளாகத்தில், ஏனைய வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நான்கு வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கு தலா ஒரு ஏக்கர் காணி வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏனைய வணக்கஸ்தலங்களை அமைப்பதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் இன்று வரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென, பல்கலைக்கழக சமூகத்தால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு வணக்கஸ்தலங்களும் சம அளவு உயரத்தைக் கொண்டதாக அமைய வேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் ஏற்பாடாகும். இந்த நிலையில், இந்து வணக்கஸ்தலம் அமைப்பதற்கு எவ்வகையான தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படாததாலும் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலைக் கட்டுவதற்கான இழுபறி நிலை காணப்படுகின்றமையாலுமே, குறித்த வணக்கஸ்தலம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, கிறிஸ்தவ வணக்கஸ்தலம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க மறைமாவட்டம் செய்திருந்தது. குறித்த ஏற்பாடுகளில் ஏற்பட்ட தாமதம் தொடர்பிலும் பொதுவான நிலைப்பாடு எடுப்பது தொடர்பிலும், தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டேனியல் செ.தியாகராஜா, பல்கலைக்கழகப் பீடாதிபதி ஏ.அற்புதராஜாவுடன் பேசியிருந்தார். எனினும், குறித்த வணக்கஸ்தலத்துக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், கிறிஸ்தவ வணக்கஸ்தலத்தை பொது வழிபாட்டுக்கமைவாக நிர்மாணிப்பதற்கு தென்னிந்திய திருச்சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கமென, பேராயர் தெரிவித்திருந்தார். அதேபோன்று, இஸ்லாமிய வணக்க ஸ்தலத்தை அமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பௌத்த மாணவர்களின் முயற்சியாலும் சமயம் சார்ந்தவர்களின் செயற்பாடுகளாலும், விகாரை அமைக்கப்பட்டு, கலசம் வைக்கும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/யழ-பலகலககழக-வளகததல-வகரகக-கலசம/72-244585
  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை     சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களையும் முகக்கவசத்தை அணிந்துகொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறுகின்றது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கடடநயகக-வமன-நலயததல-வசட-சதன/150-244603