Sign in to follow this  
ampanai

பாராளுமன்றத்துக்கு உங்களை அனுப்பி வைத்ததால் தமிழருக்கு என்ன நன்மை

Recommended Posts

2019-08-21 12:29:31

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்தமை குறித்து ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் தமது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்து வதுதான் ஜனாதிபதி மைத்திரியின் நோக்கம். அந்த அடிப்படையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடந்த கால நடவடிக் கைகள் அமைந்துள்ளன.

ஜனாதிபதியும் பிரதமரும் நமக்குச் சமன். இருவரையும் வைத்துக் கொண்டு எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான் எங்கள் இராஜதந்திரம் என்று நினைக்காமல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு எம்பிக்கள் போல கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கெண்டமை தமிழினத்துக்கு ஈனமாகி விட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­வை எதிர்த்துப் போட்டியிட்டவர் மைத்திரிபால சிறிசேன.

தமிழ் மக்களின் வாக்குகளே அவரை ஜனாதிபதியாக்கியது. அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமிழ் மக்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர்களும் கூட்டமைப்பினரே. நிலைமை இதுவாக இருக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான முழு ஆதரவையும் வழங்கி வருகின்றவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே, ஆக, ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் ஆகியோருடன் நல்லதொரு உறவைப்பேணி எங்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும்.

ஆனால் அதனைச் செய்யாமல், ஜனாதிபதி மைத்திரியை ஓரங்கட்டி பிரதமர் ரணில் விக் கிரமசிங்க நினைத்தால் எல்லாம் செய்யலாம் என்பதுபோல கூட்டமைப்பினர் நடந்து கொண்டனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் கூட கிடப்பில் போடு மளவுக்கு நிலைமை இருந்தது. பிரதமரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இப்போது கூட சவேந்திர சில்வாவை இரா ணுவத் தளபதியாக நியமிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கிறது. அதனைத் தடுப்பதைக் கூட பிரதமரால் செய்ய முடியாது.  

நிலைமை இதுவாக இருந்தபோதிலும் ஜனாதிபதி மைத்திரியின் உறவை உதறித் தள்ளி விட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசுவாசிகளாகக் கூட்டமைப்பு எம்.பிகள் (இதில் விதிவிலக்கானவர்களும் உண்டு) இருந்தனர் எனும்போது சம்பந்தர் ஐயாவுக்குத் தேவைப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி வேறு எதற்காகவுமல்ல என்பது தெளிவாகிறது.

ஆக, கூட்டமைப்பினரைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக்கிய தமிழ் மக்களுக்கு அவர்களால் எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை

http://valampurii.lk/valampurii/content.php?id=19293&ctype=news

Share this post


Link to post
Share on other sites
42 minutes ago, ampanai said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தி எனக்கு அதிர்சியாக உள்ளது .🤣

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சவூதி அரேபியாவிற்கு இராணுவ படைகளை அனுப்ப  ட்ரம்ப் தீர்மானம் சவூதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து சவூதி அரேபியாவின் விமான, ஏவுகணை தாக்குதல் கட்டமைப்பின் பாதுகாப்புக்கு தமது நாட்டின்  இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளார். சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவூதி அரேபிய பாதுகாப் புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. சவூதி அரேபியாவில் அரம்கோ நிறு வனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த 14 ஆம் திகதி ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத் தினர். ரியாத் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டின் பாதுக்காப்புத்துறை செய்தித் தொடர்பாளர், துர்க்கி அல்-மால்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை வெளியிட்டார். இந்நிலையிலேயே அமெரிக்க தானது  இராணுவ படைகளை சவூதி அரேபியாவிற்கு  அனுப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/65239
  • காலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள் பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த பல ஆயி­ரக்­க­ணக்­கான பாடசாலை மாண­வர்கள் கால­நிலை மாற்­றத்தைத் தடுக்க அர­சுகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி முன்­னெ­டுத்த போராட்டம் நேற்று  உல­கெங்கும் தொடங்­கி­யது. அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, தென்­கொ­ரியா, இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் பல மாண­வர்கள் இந்தப் புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் கலந்து கொள்­கின்­றனர். நியூ­யோர்க்கில் நடை­பெறும் புவி வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதிர் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பேர­ணியில் கலந்­து­கொள்ள கிட்­டத்­தட்ட 10 இலட்சம் பாடசாலை மாண­வர்கள் தங்கள் வகுப்­பு­களை புறக்­க­ணிக்க உள்­ள­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன. உல­கெங்­கிலும் நடை­பெறும் இந்தப் பாடசாலை புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் பல மில்­லியன் மாண­வர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சுவீடனைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக அர­சுகள் நட­வ­டிக்­கை எடுக்கக் கோரி தங்கள் நாட்டின் பாரா­ளு­மன்றம் முன் வாரம்தோறும் இதற்­காக போராட்டம் நடத்தி வந்தார். சமூக வலைத்­த­ளங்கள் மூலம் கடந்த சில மாதங்­க­ளா­கவே இந்தப் போராட்டம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டது. மேலும், இந்த ஆண்­டுக்­கான நோபல் அமைதிப் பரி­சுக்கு கிரேட்டா தன்பர்க் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார். முன்­ன­தாக, 2017இல் கையெ­ழுத்­தி­டப்­பட்ட பரிஸ் கால­நிலை ஒப்­பந்­தத்தில், தொழில் வளர்ச்சி தொடங்­கிய கால­கட்­டத்தில் நில­விய வெப்­ப­நி­லை­யை­விட இரண்டு பாகை செல்­ஸியஸ் (2.0C) வெப்­பத்­துக்கு மிகாமல், புவி வெப்­ப­ம­ய­மா­தலைக் கட்டுப்படுத்த 200இற்கும் மேலான உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.   https://www.virakesari.lk/article/65248
  • நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்… September 21, 2019   மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் பெண்தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்ற நிலையில், குறித்த கிராமத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். இந்தப் பெண்கள் மத்தியில் நுண் நிதி கடன் தொடர்பாகவும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி தொடர்பாக தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட வீதி நாடகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் தேவன் பிட்டி மீனவ சங்க கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் போது நிதி நிறுவனம் அரச அனுமதி பெற்ற நிறுவனமா? என்பது தொடர்பாக எவ்வாறு அறிவது என்பது தொடர்பாகவும் பெரும் கடன்களை சரியான விதத்தில் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. குறித்த பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சட்ட ரீதியாக மேற்கொள்ளவதற்கான சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் பெண் தலைமைத்துவ குடும்பத்தலைவிகளின் கருத்துக்களும் பெறப்பட்டது. அதன் போது கருத்து தெரிவித்த பெண்கள் அரசாங்கம் இதற்கான மாற்று நிதி கருத்திட்டத்தை கொண்டு வந்தால் மாத்திரமே தாங்கள் கடன் தொல்லைகளில் இருந்து விடு படமுடியும் எனவும் அத்துடன் அரசாங்கமே இனி வரும் நாட்காளில் இலகுவழி மூலம் கடன் வழங்க முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.     http://globaltamilnews.net/2019/130871/
  • யாழ்.இந்துக்கல்லூரி அதிபர் விளக்கமறியலில் September 20, 2019 மயூரப்பிரியன்   யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனை ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில்  முற்படுத்தி வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் உத்தரவு பெறப்பட்டது. அத்துடன் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்று ஊழலில் ஈடுபட்டார் என்று அந்தக் கல்லூரியின் அதிபர் சதா நிர்மலன் இன்று நண்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி சாட்டுதல்களை புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு அதிகாரிகள், இன்று மாலை பருத்தித்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்துவதால் அதிபருக்கு சாதகமான நிலை ஏற்படும். என்ற காரணத்தால் சிறப்பு அனுமதியின் கீழ் பருத்தித்துறை காவல்துறையினர்  ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சதா நிர்மலன் முற்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #யாழ் #இந்துக்கல்லூரி #அதிபர் #விளக்கமறியல்   http://globaltamilnews.net/2019/130861/  
  • இதை ஒருவகை de-humanizing என்றே நான் பார்கிரேன். ஒரு பகுதியினர்கு மனித உரிமைகளை மறுப்பதன் ஆரம்பம் அவர்களை மனிதர் இல்லை என சித்தரிப்பது. ஒன்றில் அவர்களை மனிதரிலும் கீழான விலங்குகளாக சித்தரிக்கலாம் (ஆபிரிக்க கறுபின அடிமைகளை மனிதருக்கும் குரங்கிற்கும் இடையேயான இனமாக சித்தரித்தது, இந்தியாவின் தெற்கே வாழும் இனக்கூட்டத்தை குரங்காக (அனுமான்) சித்தரித்தது). அல்லது அவர்களை பூஜிக்க வேண்டிய பொருளாக ஆக்கிவிடலாம். பூஜிக்க வேண்டியவள் பெண். அவள் எப்படி இருப்பாள்? எம் பெண் தெய்வங்களை போல, எத்தனை காமாந்திரனாக இருப்பினும்,  புருசனை தலையில் வைத்து தாசி வீட்டுக்கு காவிச் செல்வவாள். பூமாதா போல் எதையும் தாங்கும் பொறுமை உள்ளவள். சக்தி போல ஆயிரம் கரங்களால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வாள்.  அப்போ இப்படி தெய்வாம்சத்தோடு இல்லாமல், ரத்தமும், சதையும், மனித உணர்சிகளும், நன்மையும், தீமையும், பிணியும், மூப்பும் கலந்த பெண்? அவள் பெண்ணுக்கான இலக்கணத்தையே இழந்துவிட்டவள். அவள் பெண்ணே இல்லை. மனிதப்பிறவியே இல்லை. அவளை தெருவில் வைத்து நாயை கொல்லுவது போல கொல்லலாம். கொலை செய்துவிட்டு அவளின் பெயரை களங்கப்படுத்தி கொலையை நியாயமும் படுத்தலாம். ஏனெனில் அவள் மனித/பெண் க்கான இலக்கணத்தில் இருந்து தவறியவள். #இதுதான் சூட்சுமம்.