Jump to content

சாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் !

_21280_1566451447_15E2561D-B54C-4BA6-A708-17C8131E263E.jpeg

தேசிய போட்டி விளையாட்டு நிகழ்வுகளில் பங்குகொண்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய ரீதியான மல்யுத்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் தொடர்ச்சியான சாதனைகளை பதிவுசெய்துவருகின்றனர்.

இதன்கீழ் கடந்த 17,18ஆம் திகதிகளில் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற பாடசாலை மட்ட மற்றும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் கிழக்கு மாகாண ரீதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு வீரர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் மாணவன் சிவநாதன் அனோஜன் 20வயது 74 கிலோவுக்கான பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ளார்.

அதேபோன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடை சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக வீரர் எஸ். அபிநாத் 92கிலோவுக்கான பிரிவில் பங்குகொண்டு 03ஆம் இடத்தினைப்பெற்றுள்ளார்.

இவர்களுக்கான பயிற்சிகளை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ப.திருச்செல்வம் வழங்கியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமைசேர்த்த இந்த மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று வீரர்களை வரவேற்ற மாநகர முதல்வர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான சாதணைகளை மல்யுத்த வீரர்கள் தேசிய ரீதியில் மேற்கொண்டுவரும் நிலையில் வீரர்கள் பயிற்சிகளை செய்வதற்கு தனியான இடம் இல்லாத நிலை தொடர்பில் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினரும் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக முகாமையாளருமான தி.சிறிஸ்கந்தராஜா,மாநகரசபை உறுப்பினர்களான து.மதன்,ரகுநாதன்,வி.பூபாலராஜா, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபர் சண்டேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

http://www.battinaatham.net/description.php?art=21280

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.