• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sasi_varnam

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்

Recommended Posts

படம் : அந்த ஒரு நிமிடம்(1985)

இசை: இளையராஜா

வரிகள்: வைரமுத்து

பாடியோர்: SPB & S ஜானகி

அலைகளில் மிதக்குது நிலவொன்று
குளிக்குது கை கொடு குளிக்கின்ற நிலவுக்கு
முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் உருகியதே ஆடை உருவியதே நீரும் சூடு ஏற

வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மறத்துடிச்சே நீச்சல் மறந்திருச்சே
கூச்சம் ஆகி போச்சே..... (வழி ஒண்ணும்)

முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
அய்யோ முன்னூறும் தாங்காது தந்தாலும் தகராறு
இவள் வசம் புது ரசம் இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி

ஓ புதுரசம் அழைக்குது
பழரசம் கொதிக்குது பாரடி.......
நானிங்கு நானில்லை நீ இன்றி ஆளில்லை
ஆடை காண வில்லை......... (அலைகளில்).

ஆணுக்கு ஆவேசம் ஹ ஹ வந்தாலே சந்தோசம்
உன்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்
வெயிலுக்கு நிழல்கொடு வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே

அய்யய்யோ இருக்குற வேட்டிய
கொடுத்துட்டு தவிப்பது பாவமே
பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே
நீரில் ஈரம் இல்லை...... (வழி ஒண்ணும்).

Share this post


Link to post
Share on other sites

படம்: பொறந்தவீடா புகுந்தவீடா(1993)

வரிகள்:வாலி

இசை: இளையராஜா

பாடியோர்: மனோ & சித்ரா

தொந்தரவு பண்ணாதீங்க

இப்ப மூனுபுள்ளை நாலுபுள்ளை ஆச்சு

உங்களுக்கு சேவை செஞ்சு இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு

பாலூத்தும் வெண்ணிலவு

அடி சூடேத்தும் முன்னிரவு இன்னைக்கு ஏத்துக்க நாளைக்கு போத்திக்க

வேணாம்மய்யா வம்பு வேணாம்மய்யா

ஹ்ஹான் தொந்தரவு பண்ணாதீங்க இப்ப மூனுபுள்ளை நாலுபுள்ளை ஆச்சு

ப்ச்.ஹேய் உங்களுக்கு சேவை செஞ்சு ஹான் இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு ச்சே

வேலைவெட்டி பாத்துபுட்டு
வீடுதிரும்பும் ஆம்பளைக்கு
வாட்டமெல்லாம் தீர்த்துவைக்க
வேற சுகந்தான் என்ன இருக்கு

அன்னாடந்தான் இந்த கூத்து
ஆகாதய்யா உன்னை தேத்து

ஹான்

கிண்ணாரந்தான் என்னைப்பார்த்து
போடாதய்யா மூக்கு வேர்த்து

நித்தம்தான் திங்கிறோம் சாப்பாடு
அத நிப்பாட்டி வைக்குற ஆள் யாரு.ஹ்ஹம்

சாப்பாடு போலவா சரசம் என்பது
அதுவேறுய்யா அட இதுவேறுய்யா
யோய்வ்.தொந்தரவு பண்ணாதீங்க

ம்...

இப்ப மூனுபுள்ளை நாலுபுள்ளை ஆச்சு

ஏய்

உங்களுக்கு சேவை செஞ்சு

ஹாஹ்.ஹம்

இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு

போடி..

மாலை கட்டி மேளங்கொட்டி தாலிமுடிஞ்ச மாமனுக்கு பேரு

சொல்ல நாலுபிள்ளை பெத்துயெடுத்தேன்

இன்னும் எதுக்கு பதினாறும்தான் பெத்து வாழ சொன்னாங்களே

நம்ம பாத்து செல்வங்கள பதினாறா சொன்னதுதான்

அந்த வாழ்த்து கிள்ளாடி பொம்பள நீதான்டி

பதில் நல்லாவே சொல்லுற யம்மாடி

சொன்னாலும் ஏறல சொகுசு மாறல நடக்காதய்யா

ஹான் அது கிடைக்காதய்யா தொந்தரவு பண்ணாதீங்க

ஹ்ஹூம் இப்ப மூனுபுள்ளை நாலுபுள்ளை ஆச்சு ஸ்... உங்களுக்கு சேவை செஞ்சு ஏய்..

இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு.

அட பாலூத்தும் வெண்ணிலவு .

அடி சூடேத்தும் முன்னிரவு இன்னைக்கு ஏத்துக்க

நாளைக்கு போத்திக்க வேணாம்மய்யா வம்பு வேணாம்மய்யா ஹ்ஹூம்

தொந்தரவு பண்ணாதீங்க

ஹே.ய் இப்ப மூனுபுள்ளை நாலுபுள்ளை ஆச்சு.

ஹஹ்ஹான் உங்களுக்கு சேவை செஞ்சு ப்ச் இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம் : நல்ல நாள் (1984 )

இசை: இளையராஜா

வரிகள்: வாலி

பாடியோர் : SPB & S ஜானகி

போடு தந்தானதாம் அடி தம்மாருதம் அதப்
போட்டாலே ப்ரம்மானந்தம் அட மாமா
ஏதோ ஏதோ மயக்கம்

போடு தந்தானதாம் அடி தம்மாருதம் அதப்
போட்டாலே ப்ரம்மானந்தம் அட மானே
ஏதோ ஏதோ மயக்கம்

மேலப்பாரு பாதாளம் கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம் மாறிப் போச்சு பூலோகம்

அடி உச்சந்தலை கொதிக்குது உஷ்ணத்தாலே
அடடா உச்சந்தலை கொதிக்குது உஷ்ணத்தாலே

இப்போ என்னாச்சு ஏதாச்சு
ஒண்ணாக மனம் துடிக்கும் (போடு)

பாதிதானே மேலாக்கு போட்டு ஆடும் பல்லாக்கு
ஆதி அந்தம் பாக்க பாக்க ஆச தீய உண்டாக்கு

சின்ன முத்துச்சரம் அணைச்சிக்க பத்து தரம்
சின்ன சின்ன முத்துச்சரம் அணைச்சிக்க பத்து தரம்
விரல் பட்டாலும் தொட்டாலும் கட்டாயம் கிளுகிளுப்பு (போடு)

டிஸ்கி :

கேப்டன்ர  றான்ஸ பார்க்க கண் கோடி வேண்டும்..👌

Share this post


Link to post
Share on other sites

 

படம்: இந்திரன் சந்திரன்(1989)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, சித்ரா

வரிகள் : வாலி 

காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ
ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
ஆத்தாடி கண்பார்வை என் மீதா உனை நெருங்கிட
காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ

தினமும் தினமும் தவிப்பதோ சிறிது உறங்க மடி கொடு
தழுவ தழுவ தடுப்பதோ அழகு முழுவதும் அளந்திடு

மருவி மருவி அணைப்பதோ வயதும் மனதும் துடிப்பதேன்
இதுவும் மதுவும் கொடுப்பதோ சபலம் உனக்கு பிறப்பதேன்
தென்றலும்  தீண்டினாலே புஷ்பமே நோகுமா
காதல் ஒரு போதை ஆகும் கன்னி பூவும் தாங்குமா
அள்ளினால் கிள்ளினால் என் மடி ஏந்தினால் வாடுமோ மடல்
ஓ காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ
ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
ஆத்தாடி கண்பார்வை என் மீதா உனை நெருங்கிட
காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ

அமுத மழையை பொழியவே சிவந்த உதடு அழைக்குதே
வரவும் தொடவும் பருவமே விருந்து வழங்கும் அணைப்பிலே
மனமும் உடம்பும் கனியுமோ இரவு முழுதும் விரல் தொட
மதுர மதுர சுவைகளோ பருகும் பொழுது இனித்திட
தேனிலே ஊறும் இந்த பூ மடல் போதுமா
தென்னையின் கள்ளும்  இந்த பூ உதட்டில் ஊறுமா
மெல்லவே கொண்டு போ மன்னவா பெண் மகள் மேனியோர் மலர்

காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ
ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
ஆத்தாடி கண்பார்வை என் மீதா உனை நெருங்கிட
காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ.

Share this post


Link to post
Share on other sites

படம் : ராஜரிஷி(1985)

இசை : இளையராஜா

வரிகள் : புலமைபித்தன் 

பாடியோர்: மலேசியா வாசுதேவன் & S ஜானகி 

பெண்:  ஆ... ஆ... ஆ... மா  தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே ..

மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்.

தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே ..

செவ்விதழோ இது தேன் கனிக் கோவை...

ஆ... ஆ... ஆ... ஆ..செவ்விதழோ இது தேன் கனிக் கோவை.. 

தேவா உன் பானமுதம் தேவா உன் பானமுதம்..

சேயிழை நூலிடை மின்னல் தோரணம் ..

காமனின் கோயிலில் நானே கோபுரம்..

தேனூறும் ஆகாய கங்கை சலசல சலவென வருகிறதே வழிகிறதே ஆ... ஆ... மடியினில் நீராடு..

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே..

தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி...ஆ... ஆ... ஆ...

தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி..

நான் அங்கே தங்கையினால்..

ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும்.

ஞனியின் ஐம்புலன் என்னில் சங்கமம்

தியாகமும் யோகமும் என்ன நாடகம்..

ஆண் ஆ... ஆ...ஆ... ஆ...

பெண்: பிரம்மாவின் கை வண்ணம் நானே

இளமையில் ஒருமையில் தனிமையிலே..

விக்கிறதே ஒரு முறை பாராயோ..

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே..

அந்தி மா கலையில் இந்த மேகலைகள்..

அசையும் அசைவிலே இசைவிலே இடை ஒடிய ஒடிய ..

நடைகள் பயிலும் மயில் இது தானே..

ஆண்:தத்த ஜம்த தக தகிட ஜம்த தக தகதீம்த தகதீம்த தக தாம் தக

பெண்:தீயிலே மரகதம் இதழில் சோம பானம்

ஆண் தகிட தாம் தகிட தாம் தகிட தாம

பெண்:நித்தம் பரிமாற வரவா தலைவா

ஆண்:ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

பெண்:ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

ஆண்:தாம்த தக தாம்த தக தீம்தக பெண்:இளைய தேகம் இரவு நேரம் விரக தாபம் எரியுதே

ஆண் :தகிட ஜம்த திகிட ஜம்த

பெண்:முகிலிலான குழலும் உந்தன் உறவு தேடி அலையுதே ஆண்: தகிட ஜம்த திகிட

பெண்: தவம் அது கலைவது தெரிகிறது அருள் கொடு மா தேவா..

ஆண்:அருகினில் மாதே வா பெண்: மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்..

தவமும் தனமும் சுகமும் என் வசம்..

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே.

டிஸ்கி :

மா துறவை நீ அறிவாய் (பெரும் துறவு)
மாதுறவை ஏன் மறந்தாய்(மாது + உறவு)
அருள்கொடு மா தேவா (பெரும் தேவன்)
அருகினில் மாதே வா (பெண்ணே வா)
அந்திமாகலையில் இந்த மேனகைகள் அசையும் அசைவிலே இசைவிலே இடை ஒடிய ஒடிய..☺️

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.