• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

யாழில் ஆரம்பமான எழுக தமிழ் 2019 பரப்புரை;விக்னேஸ்வரன்,சுரேஷ் களத்தில்

Recommended Posts

எழுக தமிழ்  பரப்புரை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையிலேயே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் இன்று காலை பரப்புரைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் ஈபீஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

http://thinakkural.lk/article/33088

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மக்கள் ஒன்றுபட்டாலே இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற முடியும்-முன்னணியும் எம்முடன் இணைவார்கள் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியீடு

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சி.வி.விக் னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டின் தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

தற்போது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகப் பலரும் பிரயத்தனத்துடன் செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.

ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தை வெளியிட்டால் தான் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்.

தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையினை ஏற்கும் எந்த கட்சியும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். கொள்கைகள் என்பது வருங்கால தமிழ் மக்கள் பற்றிய தொன்றாகும்.

ஆகையால் அதனை எவ்வாறு அமை க்க வேண்டும். அரசியல் ரீதியாக எவ்வா றான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது எமது மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து எழுக தமிழ் பேரணியில் பேசவுள்ளோம்.

இதேவேளை கொள்கைரீதியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்முடன் சேர்ந்தவர்கள்.  சில தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது விடுபட்டு நிற்கின்றனர். எதிர்வரும் காலத்தில் அவர்களும் எம்முடன் வந்து இணைவார்கள் என நம்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.          

http://valampurii.lk/valampurii/content.php?id=19314&ctype=news

Share this post


Link to post
Share on other sites

தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகளை அடகு வைச்சு சித்தார்த்தன் பின்கதவால வாங்கின காசுகளை எண்ணிக் கொண்டு இருப்பதால ஆளை களத்துல காணேல.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அடிக்கடி தொடர்ந்து எழுந்து நின்றாலும் தமிழுக்கு கால் வலித்து முழங்கால் பிரச்சனைகள் வரலாம்  என்பதை ஏற்பாடாளர்கள் உணரந்து நடப்பது நல்லது.  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கொரோனா வைரஸ்: காற்று வழியாக பரவுவது என்றால் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி? 24 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்மை காலம் வரை கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு, அந்த வைரஸ் இருக்கும் பரப்புகளுடனான தொடர்புகளே தொற்று பரவ ஒரே அறிவியல் ரீதியிலான காரணமாக உலக சுகாதார நிறுவனம் கருதி வந்தது. ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் குமிழிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக இதுவரை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த காரணத்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நன்றாக கைகழுவுவதை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பது தொடர்பாக சில அறிவியல் ஆதாரங்கள் வெளிவந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. மேற்கூறிய ஆதாரம் உறுதி செய்யப்பட்டால் உள்ளரங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் மாற்றம் செய்யவேண்டிவரும். காற்று வழியாக பரவல் என்றால் என்ன? காற்றில் சில மணி நேரங்களாக உலாவும் மிகச்சிறிய பொருட்களில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவை நாம் சுவாசிக்கும்போது காற்று வழியாக வைரஸ் பரவுவது சாத்தியமாகிறது. பெரும் பரப்பில் இந்த மிக சிறு துளிகள் பரவக்கூடும். காற்று வழியாக பரவும் தொற்றுநோய்களுக்கு காசநோய் மற்றும் நிமோனியா ஆகியவை உதாரணங்கள். கூட்டம் அதிகமுள்ள மற்றும் முற்றிலும் மூடப்பட்டதாக உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்று வெளியிடப்பட்ட அறிவியல் ஆதாரத்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைEPA காற்றில் எவ்வளவு நேரம் வைரஸ் நீடிக்கும்? செயற்கை முறையில் காற்றில் தூவப்பட்ட கொரோனா வைரஸால் குறைந்தது 3 மணி நேரம் காற்றில் உயிர்ப்புடன் நீடித்திருக்க முடிகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், பரிசோதனை கூடங்களில் நடக்கும் ஆய்வின் முடிவுகளுக்கு இயல்பான நடப்பு சூழல்களில் நடப்பவைக்கும் மாற்றங்கள் இருக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதி விரைவில் பரவும் வைரஸாக அறியப்படும் கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் அருகேயுள்ள ஒரு நகரில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் ஒருவரால், அவர் கலந்து கொண்ட நிகழ்வில் அவருடன் பாடிய குறைந்தது 45 பேருக்கு இந்த தொற்று பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு தொற்று பரவியவர்களில் பலர் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடித்துள்ளனர். இதேபோன்று ஒரு சம்பவம் கடந்த ஜனவரி மாதத்தில் சீனாவிலும் நடந்துள்ளது. அங்குள்ள உணவுவிடுதியில் உணவருந்திய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலமாக அவர் உணவருந்திய சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 9 பேருக்கு இந்த தொற்று பரவியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் 6 மீட்டர் இடைவெளியில் இருந்தார் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம் Pandemic என்றால் என்ன? முறையாக கை கழுவுதல் எப்படி? கொரோனா வைரஸை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? எந்த ஒரு தொற்றும், அது பரவும் விதத்தை வைத்துதான் அந்த தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கமுடியும். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப் மூலம் 20 வினாடிகளுக்கு கைகழுவதையும், சமூக இடைவெளியையும் உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய வழிகாட்டுதல் பரிந்துரைத்துள்ளது. ஆனால் காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டால் இந்த வழிமுறைகளை கொண்டு மட்டும் கட்டுப்படுத்த இயலாது. காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படும் புதிய ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு தற்போதைய வழிகாட்டுதல்களில், உலக சுகாதார நிறுவனம் எந்த மாற்றமும் செய்யவில்லை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இது உறுதி செய்யப்பட்டால், முகக்கவசம் பயன்படுத்துதல் இன்னமும் பரந்த அளவில் செயல்படுத்தப்படலாம். அதேபோன்று பார்கள், உணவு விடுதிகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகிய இடங்களில் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம். ஆனால், இது உறுதி செய்யப்பட்டால் குளிர்சாதன வசதி பொருத்திய இடங்களிலும் மிக கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வழிகாட்டுதல்களில் மாற்றம் செய்ய உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்தது ஏன்? அண்மையில் 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு உலக சுகாதார நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில், காற்று வழியாக வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதால், கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களை ஐ.நா. முகமை மேம்படுத்த வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டனர். 'இந்த புதிய ஆதாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'' என உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டவரும், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியல் ஆராய்ச்சியாளருமான ஜோஸ் ஜிம்னேஷ் தெரிவித்துள்ளார். ''இது நிச்சயம் உலக சுகாதார நிறுவனத்தை தாக்கி நாங்கள் அனுப்பிய கடிதம் அல்ல. இது ஓர் அறிவியல் விவாதம்; ஆனால் நாங்கள் பலமுறை இது குறித்து விளக்கியும் அவர்கள் இது குறித்து கேட்க மறுப்பதால் , இதனை பொது மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின் தலைவரான பெனிடேட்டா அலிகிரான்சி கூறுகையில், கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று தெரிவித்தார். அதேவேளையில், இந்த புதிய ஆதாரங்கள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், இது குறித்து மேலும் விரிவான மதிப்பீடு தேவை என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹேமேன் என்ற மற்றொரு ஆலோசகர், மேலும் விரிவான ஆராய்ச்சிகள் மூலம் மேலும் தகவல்களை தங்களின் முகமை எதிர்பார்ப்பதாகவும், அவற்றை கொண்டு இந்த வைரஸை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/science-53359917
  • அதைதான் நானும் ஏதிர்பார்க்கின்றேன், நல்லதொரு புதிய தலைமுறை புதிய சிந்தனைகளுடன் உருவாக வேண்டும். அங்குள்ள இளைய தலைமுறை யோசித்து ஒன்று சேர்ந்தால் இந்த நேரம், நல்லதொரு மாற்றம் வரும்
  • முதலில் பிள்ளைகளுக்கு சமைக்க தெரியாது என்றால் குடுப்பத்தை என்யோய் பண்ணித் தான் உண்ண வேண்டும். இரண்டாவது.. நீங்களும் மிமா😀 ஆகும் காலம் ஒன்று இருக்கிறது...சரி விடுங்க..
  • முதற் கடற்கரும்புலிகளின் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் வல்வெட்டித்துறைக் கடலில் 10.07.1990 அன்று காவியமான முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது, 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர். இக்கடற்கரும்புலி மாவீரர்கள் தொடங்கி வைத்த வழியினில் தமிழீழக் கடற்பரப்பிலும், அதற்கு அப்பாலும் சிறிலங்கா கடற்படையின் பல கடற்கலங்களை மூழ்கடித்தும், ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரை அழித்தும் 200 வரையான கடற்கரும்புலிகள் தமிழீழ விடுதலைப் போருக்கு வலுச்சேர்ந்து தம்மை ஆகுதியாக்கிக் கொண்டனர். தமிழீழ விடுதலைக்காய் தம்மை வெடியாக்கி, வரலாறாகிய கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.