• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • மிருசுவில் படுகொலை - குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்!     [Tuesday 2020-01-21 08:00] யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை, வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள், அச்சுறுத்தும் வகையில் விவரங்களைச் சேகரித்துள்ளனர் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியே, பாதிக்கப்பட்டவர்களால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.       மிருசுவில் பகுதியில், 2000ஆம் ஆண்டு, 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் உள்ள நிலையில், தற்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட ஒருவரைத் தேடி, வெள்ளை வாகனமொன்றில் வந்த நால்வர், அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் அதேபோல, கடந்த 11ஆம் திகதி, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், படுகொலை நடந்த இடம், குடும்பத்தில் இறந்தவர்கள் யார் போன்ற தகவல்களை விசாரித்துள்ளதாகத் தெரியவருகின்றது. படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்திக்குப் பின்னரே, இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. https://www.seithy.com/breifNews.php?newsID=239485&category=TamilNews&language=tamil
    • சுரேஷ்  அனா, இந்த எழுபது வருடமாக இல்லாத சாபக்கேடா இப்போ வரப்போகுது। உங்களுக்கு தேவை எண்டால் சொல்லுங்கோ எதாவது செய்யிறோம்। அவன் அப்படி இவன் இப்படி எண்டு சும்மா புலுடா விடாதேயுங்கோ।
    • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்       உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேரை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இன்று ( 21) எடுத்துக் கொள்ளப்பட்டது. மேற்படி விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி பல மாதங்களிற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். மேற்குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான பிணை கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்று பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.   -திருகோணமலை நிருபர் பாருக்- http://tamil.adaderana.lk/news.php?nid=124795
    • தெரிவுக்குழு பெயர்ப் பட்டியல் இன்று சமர்ப்பிப்பு     நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று (21) பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இன்று (21) மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன், இன்றைய ஒழுங்குபத்திரத்தில் தெரிவுக்குழுக்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்களினதும் எதிர்க்கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களினதும் பெயர்ப்பட்டியல், நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சபாநாயகர் தலைமையிலான 17 பேரடங்கிய தெரிவுக் குழுக்களுக்கான பெயர்ப் பட்டியலுக்கான அனுமதி இன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தெரிவுக்குழு-பெயர்ப்-பட்டியல்-இன்று-சமர்ப்பிப்பு/150-244294
    • “என்னிடம் இன்னும் பல குரல் பதிவுகள் உண்டு“ – நாடாளுமன்றத்தில் மிரட்டிய ரஞ்சன் by : Yuganthini பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அவர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க  நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் கூறிய  விடயங்களை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை உருவாக்க வேண்டும். அப்போது ஆவணங்களுடன் அதில் முன்னிலையாவதற்கு தயாராக இருக்கின்றேன். மேலும் தன்னிடம் இருக்கும் குரல் பதிவுகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் குரல் பதிவுகள் இல்லை. ஆனாலும் ஆளும் தரப்பை சேர்ந்த மற்றும் முன்னாள் அரசியல் சார்ந்தவர்களின் குரல் பதிவுகளை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றேன். இந்த உலகில் பேசிய விடயங்களை மறைக்கும் பலர் இருக்கின்றனர். இத்தகையவர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே  தொலைபேசி மற்றும் முக்கிய கலந்துரையாடல்களை பதிவு செய்து கொண்டேன். மேலும் முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள், அமைச்சரவை அமைச்சர்களின் மனைவிமார்களின் குரல்பதிவுகள் என அனைத்து குரல் பதிவுகளையும் நாடாளுமன்றில் வெளிப்படுத்துவேன்” என குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/முன்னாள்-ஜனாதிபதிகள்-அம/