Jump to content

''தமிழ் ஒளி ஒளி பரப்பு தடை...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிரிஎன் தொலைக்காட்சி சட்டத்துக்கு புறம்பானது என்ற சிஎஸ்ஏ யின் அறிவிப்பு

Le Conseil a saisi le procureur de la République de la diffusion illégale de la chaîne tamoule Tamil Television Network, chaîne établie en France mais n'ayant pas fait l'objet d'un conventionnement par le CSA, contrairement aux dispositions de l'article 78 de la loi du 30 septembre 1986 modifiée.

Le Conseil a informé de cette décision le Premier ministre, le ministre de la Justice, le ministre des Affaires étrangères, le ministre de la Culture et de la Communication, l'ambassadeur du Sri Lanka en France et le président de la société Globecast France.

மேலே பிரெஞ்சிலுள்ளதன் ஆங்கில வடிவம் - உதவி கூகிள் :(

The Council seized the public prosecutor of the illegal diffusion of the chain tamoule Tamil Television Network, chain established in France but not having been the subject of a conventionality by the SCA, contrary to the provisions of article 78 of the law of modified September 30, 1986.

The Council informed of this decision the Prime Minister, the Minister for Justice, the Foreign Minister, the Minister for the Culture and Transport, the ambassador of Sri Lanka in France and the president of the company Globecast France.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜரோப்பிய வாசகர்களே, கொஞ்சம் பொறுமையாக இருந்து ரிரிஎன்னுக்கு ஆதரவு குடுங்கள். அது வரும் வரை சூரியத்தொலைக்காட்சிக்கு செல்ல வேண்டாம். அவுஸ்திரெலியாவிலும் முன்பு ஈழத்தமிழர்களின் தொலைக்காட்சியான சிகரம் தொலைக்காட்சி தவிர்க்க முடியாத காரணங்களினால் நிற்பாட்டப்பட்டது. பின்பு அதற்குப் பதிலாக மிகவிரைவில் 'தரிசனம்' என்ற ஈழத்தமிழர்களின் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டு தாயகச் செய்திகளை அவுஸ்திரெலியா , நியூசிலாந்து மக்களுக்கு தருகிறது. சிகரம் தொலைக்காட்சி நிற்கப்பட்டபோது சிலர் சன் தொலைக்காட்சிக்கு மாறினார்கள். அவர்களிடம் கதைக்கும் போது' ஈழத்தில் நடக்கிறது என்ன என்று தெரியாமல்' தமிழகத்தில் பீடி கடத்துபவர்களையும் புலிகள் என்று பொய்யான கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள்.அகவே சற்றுப் பொறுங்கள். மிகவிரைவில் ரி.ரி.என் வரும். அதற்கு ஆதரவைக் குடுங்கள்.

Link to comment
Share on other sites

[

இன்று உலக ஊடகர் தினம் 03.05.2007 அனால் அது தமிழருக்கு இல்லை.

ஒரு இனத்தின் பலமாக அதன் சார்பான ஆணித்தரமான கருத்துக்களை சொல்லி வந்த தமிழ் தொலைக்காட்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தான் தமிழருக்கான ஊடகர் தினப் பரிசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசாங்கமானது இலங்கையில் செய்தித் தணிக்கை மூலம் தமிழ் ஊடகங்களை முடக்கி, ஊடக சுதந்திரத்தை நசுக்குவதுடன், ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதும், அவர்களை அச்சுறுத்துவதும் தொடர்கின்றன.

தற்போது உறவுப்பாலம் அமைத்துவரும் புலம்பெயர்ந்தோர் இடையேயான ஊடகங்களை முடக்குவதிலும் சிறிலங்கா அக்கறை செலுத்தி வருகின்றது.

இதன் வெளிப்பாடாகத்தான் பிரான்சில் ரி.ரி.என். இடை நிறுத்தமானதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் தமிழீழத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழீழ தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பை தாம் நிறுத்தி உள்ளதாக அமெரிக்க நிறுவனமான இன்ரல் சற் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் தொலைக்காட்சி இணையத்தின் இடைநிறுத்தம் பற்றி ஊடகச் செயற்பாட்டாளர் கி.பி.அரவிந்தன் எம்மிடம் கூறியதாவது:

கட்டாரில் இருந்து ஒளிபரப்பாகும் அல்ஜசீரா தொலைக்காட்சியும் ஐரோப்பாவில் இப்படியான பல தடைகளுக்கு முகம் கொடுத்ததனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேற்கத்தைய ஐனநாயகம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் இதனை ஆச்சரியத்துடன் நோக்க மாட்டார்கள். தற்போதைய இடைநிறுத்தத்தின் உள்நோக்கம் பற்றி சமூக ஆர்வலர்கள், தமிழ் ஊடகச் செயற்பாட்டாளர்கள் தெளிவாக அறிய முயற்சிக்க வேண்டும்.

அத்துடன் இந்நிலைபற்றி அனைத்துலக ஊடகச் சுதந்திர செயற்பாட்டளுக்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவும் முயற்சிக்க வேண்டும். அனைத்துலக அளவில் தமிழ்த் தேசிய அடையாள திரட்சியை சிதைப்பதற்கு இவ்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நவீன தொழில்நுட்பம் விரல்நுனியில் இணைக்கும் வசதியையும் தந்துள்ளது என்பதையும் நாம் மறந்துவிடுதல் கூடாது என்றார்.

- புதினம்

தமிழ் தொலைக்காட்சி இணைய! நேயர்களுக்கு!

தமிழ் தொலைக்காட்சி இணையத்தின் தொலைக்காட்சி சேவை தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொலைக்காட்சி சேவையைச் சீரமைப்பதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை உரிய நேரத்தில் அறியத் தருகிறோம்.

தங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி கூறுவதுடன் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.

நிர்வாகம்!

http://www.tvttn.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.