Sign in to follow this  
கிருபன்

செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்!

Recommended Posts

செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

68791233_2283840551711355_69728797486533

செங்கலடி உறுகாமம் பிரதேசத்தில் உள்ள கிரவல் மண், மற்றும் மண் வளங்களை ஏற்றுவதற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு  செங்கலடி பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதனால் தங்களது பிரதேசத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவதுடன் உள்ளூர் வீதிகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும் எனவே அனைத்து கிரவல் மண் அகழ்வை நிறுத்துமாறு கோரி செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுமக்கள் ஆர்பாபட்டத்தில் ஈடுபட்டனர்.

68745923_2347601678891291_28299187884371

தமது உறுகாமம் பிரதேசத்தில் கிரவல் மண் அனுமதி பத்திரம் பெறுவதற்கு வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேறு பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு செங்கலடி பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் எமது பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு அனுமதி வழங்க மறுக்கிறார் இதனால் எமது வளம் வெளிமாவட்டங்களுக்கு செல்கிறது.

68750993_457455711777268_195384866811727

பிரதேச செயலாளரால் அனுமதி வழங்கப்பட்ட வர்கள் சட்டவிரோதமாக காடுகளை அழித்து கிரவல் மண்ணை அகழ்வதால் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

 இதேநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 

'நிறுத்து நிறுத்து மண் அகழ்வை நிறுத்து',

'அதிகரிகளே பாராபட்சம் வேண்டாம்',

 'எமது வளத்தை சூரையாடாதே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

69231135_571553313377019_862791157759449

காடுகளை அழித்து மண் அகழ்ப்படுவதால் காடுகளினுள் இருந்து தற்போது யானைகள் தமது கிராமத்திற்குள் வருவதாகவும் தாம் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்துவருவதாகவும் இதன்போது பொதுமக்கள் மக்கள் தெரிவித்தனர்.

...

 

https://www.virakesari.lk/article/63273

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இக் குழுக்கள் 99 வீதம் அடக்கப்பட்டு பலர் நாடு கடத்தப்பட்டு விட்டனர். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் குழு வன்முறை என்பது பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
  • எலக்சென் கிட்ட, கிட்ட வருத்தம் வரும், பின்பு சளிப்பிடிக்கும், நவம்பர் 16ம் திகதி குலைப்பனே அடிக்கும். எலக்சென் முடிய எல்லாம் பறந்திடும்.
  • ஒருத்தரும் மிச்சம் இருக்க மாட்டினம் 1900-2019 வரை அத்தனை தலைவர்களும், கிளர்ச்சியாளர்களும் 😂
  • கடஞ்சா, 1. வரலாறு எப்போதும் வெற்றியாளர்களால் உருவாக்கப்படுகிறது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவுக்கு உண்மை போலியான வரலாறு கட்டுகதை சொல்பவர்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதும். வரலாற்றை பற்றி இரு வேறுபட்ட வியாக்கியானங்கள் வருவது இயல்பு. அப்படி வரும் போது, எந்த பக்கம் அதிகம் சாட்சிகள் வைக்கப்பசுகிறன என்பதை வைத்தே நடுநிலையாளர் தம் முடிவை எடுப்பர். பல நண்பர்கள் சொல்லக் கேட்டேன். பாகிஸ்தானியர்கள் மத்தியில் இப்படி பேசிக்கொண்டார்கள் என்பதெல்லாம் உங்கள் subjective நம்பிக்கைக்கு உரமாகலாம் ஆனால் objective ஆக எடுபடாது.  2. கஸ்மீரின் வரலாறு என்ன. அ. இந்திய துணைக்கண்ட பிரிவினையின் போது தனிநாடு. தனிக்கொடி, தனி பிரதமர். ஆ. பாகிஸ்தான் பதான் ராணுவகுழு எனும் பெயரில் கஸ்மீரை ஆக்கிரமிக்க முனைந்தது. இ. இந்த நாடு தனது இறைமையை இந்தியாவோடு பகிர்ந்து ஏற்படுத்தபட்ட ஒப்பந்தமே கஸ்மீர்-இந்திய ஒப்பந்தம் (shared  sovereignty)  . இந்த ஒப்பந்தம் நிச்சயமாக இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் போலல்லாது கஸ்மீர் சிறப்பு அந்தஸ்து  பகுதி என்பதை ஏற்று, அதை இந்தியாவின் அரசியல் அமைப்பிலும் ஏற்றியது. இவை எல்லாம் அந்த நேரத்தில் இந்தியாவுடன் சேர்ந்தாலும் உங்கள் தனித்துவம் பேணப்படும் என்பதை உறுதி செய்ய கஸ்மீரிகளுக்கு வழங்கப்பட்ட guarantees. அந்த நேரத்தில் தனிநாடாக கஸ்மீர் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேர்ந்திருக்க முடியும். கஸ்மீரை தன்பக்கம் இழுக்க இந்தியா விரித்த வலையே சிறப்பு அந்தஸ்து. இந்த வலையில் கஸ்மீர் விழுந்த பின், மேலே லாரா சொன்னதுபோல் படிப்படியாக பிரதமரை நீக்கி, ஜனாதிபதியை நீக்கி, கஸ்மீரின் அந்தஸ்தை குறைத்து. ஈற்றில் இந்தியா, கஸ்மீரை லடாக், கஸ்மீர் எனத் துண்டாடி இப்போ, மாநில அந்தஸ்து கூட இலாத இரெண்டு யூனின் பகுதிகளாக்கி உள்ளது. இவ்வளவுத்துக்கும் காரணம் கஸ்மீரை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற அவாவும், கஸ்மீரை 1200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்து பெரும்பான்மை நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்ற இந்துதுவ கொள்கையும்தான். இதில் நேரு, சங்பரிவார் எல்லாரும் ஒரே மாதிரியான நரிகள்தான். ஈ. பாகிஸ்தான் மட்டும் என்ன திறமா? என்றால் இல்லை என்பதே பதில். இப்போ இந்திய ஆக்கிரமிப்பு கஸ்மீரில் இந்தியா செய்வதை எப்போதோ பாக் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் பாகிஸ்தான் செய்துவிட்டது. ஆக மொத்தம் - ஆங்கிலேயர் போனபின், தனிநாடாக வாழத் தலைப்பட்ட கஸ்மீரை, இந்தியாவும் பாகிஸ்தானும் கொள்ளை அடித்துள்ளார்கள். இதுதான் வரலாறு. உ. இந்த சங்கிகளை நம்பி நாம் இலங்கையில் ஏதும் நன்மை அடையலாம் என்பது என்னை பொறுத்தவரை, ஒருவித முகாந்திரமும், நண்பகத்தன்மையும் அற்ற மனப்பால். இவர்களை எங்கே, எப்படி வெட்டி ஆடவேண்டும் என்பது சிங்கள-பெளத்ததுக்கு அத்துப்படி.  
  • வயதுக்கு வந்த இருவர் தம்விருப்பபடி தம் திருமண நாளை கொண்டாடுவதற்கும். கதற கதற பச்சிளம் பிள்ளைகளின் உடலில் கூரிய ஆயுதங்கள பாய்சுவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. முதலாமதில் ஒரு. வெகுஜன நலனும் (public interest) இல்லை. இரெண்டாவதில் 100/100 வெகுஜன நலன் இருக்கிறது.