Sign in to follow this  
கிருபன்

நாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை

Recommended Posts

நாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம்  நானே  ஜனாதிபதி வேட்பாளராக   களமிறங்குவேன்.-சஜித் சூளுரை

(இராஜதுரை ஹஷான்)

அரச   சுகபோகங்களை  அனுபவிப்பதற்காக  ஆட்சியினை  கைப்பற்ற முனையவில்லை.  அதிகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிடினும்    மக்களோடு மக்களாகவே   வாழ்வேன்.எவரும்   சந்தேகம் கொள்ள வேண்டாம் . இம்முறை  ஜனாதிபதி தேர்தலில் நானே   ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக    போட்டியிடுவேன். பலமான  ஒரு  தலைமைத்துவத்தினையும் அதனை மையப்படுத்தி சிறந்த அரசியல்  நிர்வாகத்தையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்பேன்.  என   அமைச்சர்  சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

sajith.jpg

 மாத்தறை நகரில் இன்று  வெள்ளிக்கிழமை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 முன்னாள் ஜனாதிபதி   பிரேமதாஸ  ரணசிங்க  மக்களுடன் மக்களாகவே வாழ்ந்து    மக்களுக்காக உயிர் தியாகம் செய்தார். அந்நிலையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.அரச சுகபோகங்களை துறந்து மக்களுக்களுக்கு முழுமையாக சேவையாற்றுவேன்.   ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக  நானே   களமிறங்குவேன் நாட்டு மக்கள் அதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என்றார்.

https://www.virakesari.lk/article/63274

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இதை ஒருவகை de-humanizing என்றே நான் பார்கிரேன். ஒரு பகுதியினர்கு மனித உரிமைகளை மறுப்பதன் ஆரம்பம் அவர்களை மனிதர் இல்லை என சித்தரிப்பது. ஒன்றில் அவர்களை மனிதரிலும் கீழான விலங்குகளாக சித்தரிக்கலாம் (ஆபிரிக்க கறுபின அடிமைகளை மனிதருக்கும் குரங்கிற்கும் இடையேயான இனமாக சித்தரித்தது, இந்தியாவின் தெற்கே வாழும் இனக்கூட்டத்தை குரங்காக (அனுமான்) சித்தரித்தது). அல்லது அவர்களை பூஜிக்க வேண்டிய பொருளாக ஆக்கிவிடலாம். பூஜிக்க வேண்டியவள் பெண். அவள் எப்படி இருப்பாள்? எம் பெண் தெய்வங்களை போல, எத்தனை காமாந்திரனாக இருப்பினும்,  புருசனை தலையில் வைத்து தாசி வீட்டுக்கு காவிச் செல்வவாள். பூமாதா போல் எதையும் தாங்கும் பொறுமை உள்ளவள். சக்தி போல ஆயிரம் கரங்களால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வாள்.  அப்போ இப்படி தெய்வாம்சத்தோடு இல்லாமல், ரத்தமும், சதையும், மனித உணர்சிகளும், நன்மையும், தீமையும், பிணியும், மூப்பும் கலந்த பெண்? அவள் பெண்ணுக்கான இலக்கணத்தையே இழந்துவிட்டவள். அவள் பெண்ணே இல்லை. மனிதப்பிறவியே இல்லை. அவளை தெருவில் வைத்து நாயை கொல்லுவது போல கொல்லலாம். கொலை செய்துவிட்டு அவளின் பெயரை களங்கப்படுத்தி கொலையை நியாயமும் படுத்தலாம். ஏனெனில் அவள் மனித/பெண் க்கான இலக்கணத்தில் இருந்து தவறியவள். #இதுதான் சூட்சுமம்.      
    • கருவுற்ற சமயத்தில் தூங்கும்போது தாய்க்கு அதிக பாரம் இருக்கக் கூடாது கண்டியளோ? அதனால்தான் கருவின் ஆரோக்கியத்திற்கு இடதுபுறம் ஒருக்களித்து படுக்க சொல்வார்களென கேள்வி. இதுக்கு மேல் கேட்கப்படாது.  😜
    • படம்: தங்கப்பதுமை (1959) வரிகள்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இசை:விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடியோர்: ஜிக்கி& TMS இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே மங்கையர் குலமணியே மஞ்சள் முகந்தனிலே மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே! மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே! இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே! வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே! வள்ளுவன் வழியினிலே இனி வாழ்க்கை ரதம் செல்லுமே - திரு வள்ளுவன் வழியினிலே வாழ்க்கை ரதம் செல்லுமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே கண்களில் ஊறும் நீரும் - இனி நம் நிலைகாண நாணும் சுகம் கவிதை பாடிவரும் சுகம் கவிதை பாடிவரும் கவலைகள் மறையவே கொண்ட கடனும் தீரவே அன்னை அருளும் கூர்ந்தே காலமெனும் பந்தலில் - அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே காலமெனும் பந்தலில் - அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே