• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • சென்னையில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் கே எல் ராகுல் களமிறங்கினார். 6 ரன் எடுத்திருந்தபோது, கே.எல். ராகுல் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் காட்ரல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம்புகுந்த கேப்டன் விராட் கோலியும் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், காட்ரல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவுடன், சிரேயாஸ் ஐயர் கரம் கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இந்நிலையில் ரோஹித் ஷர்மா 36 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோசப் வீசிய பந்தில் பொலார்டிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சியளித்தார். இதன்பின்னர் சிரேயாஸ் ஐயரும், ரிசப் பந்தும் ஜோடி சேர்ந்தனர். https://www.polimernews.com/dnews/92927/சென்னை-ஒருநாள்போட்டி...இந்திய-அணிபேட்டிங்...!
    • தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற சாட்டுதலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கட்சியிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு விலக்கப்பட்டவர்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/71104
    • இந்த வருடம் இலங்கை மின்சார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதென, மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நட்டத்தில் இயங்கும் 19க்கும் அதிகமான அரச நிறுவனங்களை இலாபம் மீட்டும் நிறுவனமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-மனசர-சபயல-8000-கட-ரபய-நடடம/175-242458  
    • ‘மணல் அகழ்வால் வடக்கின் சூழல் பாதிப்பு’ மணல் அகழ்வால், பாரிய சூழலியல் பிரச்சினைக்குள் வடக்கு மாகாண தள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், இன்று (15) தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், மணல் ஏற்றிச் செல்லும் வழித்தட அனுமதியை அரசாங்கத்தால் அவசியமற்றதாக பிரகடனம் செய்தமையால், வடக்கு மாகாணம் பாரிய சூழலியல் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் கூறினார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மணல்-அகழ்வால்-வடக்கின்-சூழல்-பாதிப்பு/71-242464