Sign in to follow this  
ampanai

சவேந்திர சில்வாவின் நியமனம் மூலம் இலங்கை உலக நாடுகளிற்கு தெரிவித்துள்ள செய்தி என்ன?

Recommended Posts

சர்வதேச சமூகம் எடுக்ககூடிய நடவடிக்கைகளால் உருவாககூடிய விளைவுகள் குறித்து தான் அச்சப்படவில்லை என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கும் மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளவர்களிற்கும் தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து உலக தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

சவேந்திர சில்வாவின் நியமனம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் விடயம் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த நியமனம்  இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் முடிவிற்கு வந்துவிட்டதற்கான சமிக்ஞையே என உ உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகம் எடுக்ககூடிய நடவடிக்கைகளால் உருவாககூடிய விளைவுகள் குறித்து தான் அச்சப்படவில்லை என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கும் மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளவர்களிற்கும் தெரிவித்துள்ளது எனவும் உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

சவேந்திரசில்வாவின் நியமனத்திற்கு பல நாடுகளும் நபர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தமைக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பொறுப்புகூறல் நல்லாட்சி போன்றவற்றை மதிக்கும் நாடுகள் செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் தங்கள்நிலைப்பாட்டை வலுவாக உரத்த குரலில் தெரிவிக்கவேண்டும் என  உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

GTF-e1361071051831.jpg

சர்வதேச சமூகம் வெறுமனே இராஜதந்திர ரீதியில் அறிக்கைகளை விடுவதை விடுத்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் இலங்கையின் பங்குபெற்றலை நிறுத்தவேண்டும்,நாடுகள் இலங்கையுடனான இராணுவஒத்துழைப்பை இடைநிறுத்தவேண்டும்,சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களிற்கு எதிராக பயண சிறப்புரிமைகளை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/63307

Share this post


Link to post
Share on other sites

இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர 

(நா.தனுஜா)

கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டிற்குள் இராணுவத்திற்கும், தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் போரொன்று இடம்பெற்றதே தவிர, அது சர்வதேச மட்டத்திலான ஆயுதப் போரல்ல.

sarath.jpg 

எனவே இவ்விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட முடியாது. அதுபோன்று இதுவொரு உள்நாட்டு ஆயுதப்போர் என்பதால் இதனை மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாக மாத்திரம் அணுக முடியுமே தவிர,மனித உரிமைச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாது என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்திற்கு விசனம் தெரிவித்து கருத்துக்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்  என அவர் இதன்போது தெரவித்தார்.

https://www.virakesari.lk/article/63306

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..! இப்பொழுது புது வடிவில்..    
    • (ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக     பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய  அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும்  தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை      கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த  பகுதிக்கு  விஜயம்  செய்திருந்தார்.  சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில்  பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள்  படை வீரர்கள்  சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்த போராட்டத்திற்கு  இராணுவ வீரர்களின் உரிமைகளை  பாதுகாப்பதற்கான  தேசிய  இயக்கம், சிவில் சங்கங்கள்  உள்ளடங்கலாக 11  இற்கும்  அதிகமான அமைப்புக்கள் ஆதரவினை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65232
    • நான் இந்த விடயத்தில் கனேடிய சட்டம் என்ன முடிவுக்கு வருகிறது என்று அக்கறைப்படவில்லை! கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது: https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள். என் அக்கறையெல்லாம் இப்படியான ஒரு கொடூரக் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான்! இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி! மேலே சகாரா சொன்னதை விட நாம் எதுவும் மேலதிகமாகச் சொல்லி விடமுடியாது இது பற்றி! 
    • யாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற முறையில் கவலையாக இருந்தாலும் இது மிகவும் உண்மை. நான் சமீபத்தில் அங்கு போயிருந்த போது, இந்த நபரின் ஊழல் பற்றி சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அத்துடன் பாடசாலையின் பெயரும் இந்த நபரால் மிகவும் கெட்டிருந்தது
    • எனக்குத் தெரிந்த மட்டில் இந்த வழக்குக்கும் கடஞ்சா சொல்லும் வழக்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. கடஞ்சா சொல்வதை battered women syndrome என்பார்கள். தொடர் வன்முறையை எதிர்கொள்ளும் ஒருவர் திருப்பி அடிக்க, அது கைமோசமாகி கொலையில் முடிவது. ஒரு மாதம் முன்பு கூட ஒரு கணவனை கொன்ற வயதான மனைவியை விடுதலை செய்தார்கள். ஆனால் இது வெறி ஏற்றியபடி, பஸ்சுக்கு காத்திருந்து  செய்யப்பட்ட கொலை. ஆகவே இதை இப்படி முடிப்பது கடினம். மனநிலை பாதிப்பு என கூறி diminished responsibly எனச் சொல்லி murder ஐ manslaughter ஆக குறைக்கலாம். ஆனால் இப்படிச் செய்தால் மனநிலை மாறும் வரை (வாழ்நாள் பூராவும் கூட) ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிவரும். அதுக்கு மேர்டர் சார்ஜை ஒத்துகொண்டு 10 வருடத்தில் வெளியே வருவது பரவாயில்லை.