Jump to content

நினைவேந்தல்


Recommended Posts

ஆர்.ஜெயஸ்ரீராம்

1990 ஆண்டு காலப் பகுதியில், சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில் நலன்புரி முகாமில் வைத்து, வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு கோரல் நிகழ்வு, சித்தாண்டி முருகன் கோயில் முன்றலில், இன்று (23)  நடைபெற்றது.

 

பிரதேசத்தின் சிவில் அமைப்புகள்,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் ஆகியோர் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மரநடுகையும் இடம்பெற்றது.

image_8408ff031c.jpg

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சர்வமதப் பெரியார்களிடம் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரையும் ஏற்பாட்டாளர்கள் கையளித்தனர்.

1990 ஆண்டு காலப் பகுதிகளில் இடம்பெற்ற கொடுரமான யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில் நலன்புரி முகாமில் தஞ்சமடைந்தனர்.

அவ்வேளையில் ஆவணி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில், திடிர் சுற்றி வளைப்புகளை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர், முகாமில் தஞ்சம் புகுந்த இளைஞர்கள், மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட 99 பேரை கைதுசெய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமான இராணுவ முகமாகக் கருதப்பட்ட முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/நினைவேந்தல்/73-237264

image_87326cc305.jpg

image_4906218780.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.