Sign in to follow this  
ampanai

பிக்குகளால் தமிழர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பெரிய தலையிடிதான்-கூட்டமைப்பிடம் மனந்திறந்த ஜனாதிபதி

Recommended Posts

பௌத்த பிக்குகளால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது என கூட்டமைப்பினரிடம் மனந்திறந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது. 

தொல்பொருள் திணைக்களம், வனஜீவ ராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது, காணிகள் விடுவிக்கப்படாதது, பௌத்த பிக்குகளால் கன்னியா, நீரா வியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்து கூட்டமைப்பு தரப்பு விரிவாக குறிப்பிட்டது.

இதை கேட்டுக் கொண்டிருந்த மைத்திரி, “பௌத்த பிக்குகளால் தமிழர்களிற்கு மட்டு மல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது. இங்கு பிரச்சினைகளை தந்து கொண்டிருக்கிறார்கள்“ என்றார்.     

http://valampurii.lk/valampurii/content.php?id=19318&ctype=news

Share this post


Link to post
Share on other sites

தொல்பொருள், வனஜீவராசிகள் திணைக்களத்தால் தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்-ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துரைத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மாலை இடம் பெற்ற சந்திப்பின்போதே குறித்த விடயம் எடுத்துரைக்கப்பட்டதாக தமிழரசு கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இதனுடன் காணிகள் விடுவிக் கப்படாமை மற்றும் பௌத்த தேரர்களால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறல்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாமை காரணமாக இந்த பேச்சுவார்த்தை மீண்டும் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சித்தார்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19315&ctype=news

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள்-ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர், பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள், அத்துமீறிய குடியேற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

http://valampurii.lk/valampurii/content.php?id=19316&ctype=news

 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ampanai said:

பௌத்த பிக்குகளால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது என கூட்டமைப்பினரிடம் மனந்திறந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

மைத்திரிக்கும் பிரச்சினை என்டு தெரிஞ்சு சம்பந்தனுக்கு உச்சி குளிர்ந்திருக்கும்!
இதை நம்பி தமிழன் இன்னொருக்கா ஏமாறுவானா என்டு சம்பந்தன் பேராசைக் கனவு காண  தொடங்கியிருப்பார்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this