• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Posts

    • இலங்கையில் இன்னமும் சூரிய கலங்கள் மூலமாக, அல்லது காற்றடிகள்மூலமாக பெருமளவில் கொளவனவு செய்யக்கூடிய அளவில் தனியார் திட்ட்ங்கள் இன்னமும் அமுல் படுத்தப்படவில்லை। இந்தியாவின் தனியார் மின் வழங்கும் கம்பனிகளும் இன்னும் உருவாகவில்லை । இருந்தாலும் இலங்கையில் உள்ள தனியார் கொம்பனிகளிடம்  டீசலில் இயங்கும் பெரிய மின்பிறப்பாக்கிகள் இருக்கின்றன। இங்கும் பெரிய ஊழல்கள் காணப்படடாலும் வேறு வழிகள் இல்லை।  
    • நான் 12 வயது மட்டும் இந்த வெளிச்சத்தில் மண் வீட்டில் வாழ்ந்திருக்கிறேன்.
    • மக்கள் புலிகளினால்  பாதிக்கப்பட்டிருக்கலாம் , அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்। அதை  அந்த  மக்கள்தான் கூற வேண்டும்।  இருந்தாலும் புலிகளின் சித்தாந்தமோ அல்லது வேறு ஒரு சித்தாந்தமாகவோ இருக்கலாம்। தமிழ் மக்களின் அரசியல் தீர்வை அரசு வழங்குமாக இருந்தால் எந்த சித்தாந்தமும் தேவைப்படாது। எனவே அரசுதான் இதட்குரிய பதிலை வழங்க வேண்டும்। 
    • "வெள்ளை வான்" ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபர்களிடமிருந்து டி56 ரக துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற 44 இலட்ச கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://athavannews.com/வெள்ளை-வான்-ஊடக-சந்திப்ப-2/
    • இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சடடதரணிகள் ஆஜராவதை அரச சடடதரணி தடுக்க முட்படுவது ஒரு நீதியான செயல் இல்லை। முடிவு எதுவாக இருந்தாலும் அம்மக்கள் சார்பாக வாதாட உரிமை இருக்கின்றது।  இருந்தாலும் இது சம்பந்தமாக அங்குள்ள சிலரிடம் பேசியபோது அவர்கள் சில கருத்தை முன் வைத்தார்கள்। அதாவது தாங்கள் அறிந்த வரைக்கும் இப்போது சதொச இருந்த கட்டிடம்  முப்பது , நாட்பது வருடங்களாக காணப்படுவதாகவும் அதட்குள் யுத்தகாலத்தில் காணாமலக்கப்பட்டொர் புதைக்கப்பட்டிருக்க சந்தர்ப்பம் இல்லை என்றும் கூறினார்கள்। இருந்தாலும் மக்கள் கேட்டுக்கொண்டபடி இந்த பரிசோதனையை உறுதிப்படுத்த இரண்டாம் கருத்தையும்  (second opinion) பெற்றுக்கொள்வது சிறந்ததாக இருக்கும்।