• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
poet

பாலக்காடு 2006 - வ.ஐ.ச.ஜெயபால‎‎ன்

Recommended Posts

பாலக்காடு 2006
ஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் த‎‎ன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்./ எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./
.
பெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன். 
.

.68409794_365087234158893_3969578688164397056_n.jpg?_nc_cat=104&_nc_oc=AQkuCeRwjeqMU0XDUtSJ9H-0i6pl_Eyv_d2vNpq1vCnNymiQwkmwFEqLmOsqXXefPcWXMAisiNfG6PAJoNXtoyo4&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=5a3c9139e34edfe24af5803da507a594&oe=5DCB51F3


பாலக்காடு 2006
வ.ஐ.ச.ஜெயபால‎‎ன்
.
வண்ன ஆடைகளை
வானெங்கும் வீசிவிட்டு
அம்மணச் செஞ் சூரிய‎ன்
அரபிக் கடல்‏ இறங்க
ஆகாச விளிம்பு பற்றும்.
நாமும்பகலி‎‎ன் பல்லக்குத் தூக்கி
களைத்துப்போய் ‏இருந்தோம்.
கிளர்ந்து கு‎‎ன்று தளுவும் முகிலி‎ன் ஈரக்கருங்கூந்தல் இரப்பர்காட்டில்சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது.
.
வா‎ன் நோக்கும் அறுவடைக்காரி
முதல் துளியையே
குருவி எச்சமாய் அருவருத்து
நச்சு வசவுகளை உமிழ்கிறாள்.
நாளை ‏அவளேவெட்கமி‎‎ன்றி
பொங்கலும் வைத்து
மழையே வா எனப் பாடுவாள்.‏
இது வாழ்வு.
. 
வானில் இரவு த‎ன்
இளம்பிறை மதுக் கிண்ணத்தை
உயர்த்தியாயிற்று.
எ‎ன்‎ தோழியோ பரபரக்கிறாள்.
இனி அவள் த‎‎ன் மனசின்
ஒப்பனைப் பெட்டி திறப்பாள்.
முகம் ததும்பும் நட்ப்பை
ஒட்டத் துடைத்து விட்டு
பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்.
எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள்
ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.
காலையே கிளம்புகிற பாவனையில்
தே‎ன் கமழும் மு‎ன்னிரவின்
தலையை மிதித்து எழுவாள்.
.
யுத்த த‎ந்திரங்களை அறிவே‎‎ன்.‏
இது தந்திர யுத்தம்.
ஆனாலும் வழக்கம்போல்
காலை விடியும்ஒப்பனைகளின்‎றி. 
. 
- 2006

Edited by poet
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

கவிதை அபாரம்,

வார்த்தைகளின் சாரம்,

சொல்லும் செய்தியில் தெறிக்கிறது காரம்.

நான் நினைப்பதன் பிரகாரம்,

நீங்கள் மைண்ட்வாய்ஸ் என்று நினச்சு,

சத்தமா பேசீடீங்களோ? 😂😂

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, poet said:

ஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும்.

கூட இருக்கிறவங்க பகலில் நட்பாக நடித்தாலும் இரவில் ஆபத்தானவங்க என்றால் பெண்களுக்கு இருக்கும் ஒரேவழி அப்பிடியாதான் இருக்கும். 😂

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

மிகவும் நன்றி goshan_che, உங்களைப்போன்ற கலை ஆர்வலர்கள்தான் எங்கள் ஊட்டமும் தேட்டமும். வாழிய பல்லாண்டு. 

திரு Gowin, ஆமால்ல, இதுதான் எப்பவும் நம்மைச் சுற்றி  அனுபவசாலிகள் வேணுமென்பது?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, poet said:

திரு Gowin, ஆமால்ல, இதுதான் எப்பவும் நம்மைச் சுற்றி  அனுபவசாலிகள் வேணுமென்பது?

ஆமாங்கோ.
சும்மா ஒரு கலாய்ப்புத்தான்.
சீரியஸா எடுக்காதிங்கோ.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, poet said:

பாலக்காடு 2006
ஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் த‎‎ன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்./ எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./
.
பெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன். 
.

.68409794_365087234158893_3969578688164397056_n.jpg?_nc_cat=104&_nc_oc=AQkuCeRwjeqMU0XDUtSJ9H-0i6pl_Eyv_d2vNpq1vCnNymiQwkmwFEqLmOsqXXefPcWXMAisiNfG6PAJoNXtoyo4&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=5a3c9139e34edfe24af5803da507a594&oe=5DCB51F3


பாலக்காடு 2006
வ.ஐ.ச.ஜெயபால‎‎ன்
.
வண்ன ஆடைகளை
வானெங்கும் வீசிவிட்டு
அம்மணச் செஞ் சூரிய‎ன்
அரபிக் கடல்‏ இறங்க
ஆகாச விளிம்பு பற்றும்.
நாமும்பகலி‎‎ன் பல்லக்குத் தூக்கி
களைத்துப்போய் ‏இருந்தோம்.
கிளர்ந்து கு‎‎ன்று தளுவும் முகிலி‎ன் ஈரக்கருங்கூந்தல் இரப்பர்காட்டில்சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது.
.
வா‎ன் நோக்கும் அறுவடைக்காரி
முதல் துளியையே
குருவி எச்சமாய் அருவருத்து
நச்சு வசவுகளை உமிழ்கிறாள்.
நாளை ‏அவளேவெட்கமி‎‎ன்றி
பொங்கலும் வைத்து
மழையே வா எனப் பாடுவாள்.‏
இது வாழ்வு.
. 
வானில் இரவு த‎ன்
இளம்பிறை மதுக் கிண்ணத்தை
உயர்த்தியாயிற்று.
எ‎ன்‎ தோழியோ பரபரக்கிறாள்.
இனி அவள் த‎‎ன் மனசின்
ஒப்பனைப் பெட்டி திறப்பாள்.
முகம் ததும்பும் நட்ப்பை
ஒட்டத் துடைத்து விட்டு
பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்.
எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள்
ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.
காலையே கிளம்புகிற பாவனையில்
தே‎ன் கமழும் மு‎ன்னிரவின்
தலையை மிதித்து எழுவாள்.
.
யுத்த த‎ந்திரங்களை அறிவே‎‎ன்.‏
இது தந்திர யுத்தம்.
ஆனாலும் வழக்கம்போல்
காலை விடியும்ஒப்பனைகளின்‎றி. 

. 
- 2006

கவிஞரே....  மிக நீண்ட நாட்களின் பின்,  நல்லதொரு கவிதையை வாசித்தேன். :)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாத்துக்கள், மகிழ்ச்சி. நெடுநாட்களின் பின்னர் பரிசான உங்கள் அன்பான வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தருகிறது. நன்றி தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது – வி.மணிவண்ணன் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது. அதுதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரிவல் எடுத்துக் கூறியிருந்தேன்.இந்த நிலையிலேயே என்னை கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கட்சியின் மத்திய குழு எடுத்துள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதுதொடர்பில் கட்சியின் தலைமையினால் எனக்கு எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக தலைமையுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகின்றேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன் என நேற்று இரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15)     http://www.samakalam.com/செய்திகள்/நடந்து-முடிந்த-பொதுத்-தே/
  • நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: 'விரைவில் கொரோனாவுக்கு மருந்து, காஷ்மீரில் தேர்தல்' - முக்கிய தகவல்கள் - BBC News தமிழ் PIB  வேளாண் உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக 1 லட்சம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு கோடி வறியநிலை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.  ஆறு லட்சம் கிராமங்கள் இன்று ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வசதியைப் பெற்றுள்ளன. 2014 ஆண்டுக்கு முன்புவரை ஐந்து டஜன் கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக் ஃபைபர் இன்டர்நெட் வசதியைப் பெற்றுள்ளன.  விண்வெளி துறையை இந்தியா தனியார் துறை பங்களிப்பை வழங்க திறந்துவிட்டுள்ளது. இந்திய விண்வெளி வளரும்போது, நாம் மட்டுமின்றி நமது நட்பு நாடுகளும் அதன் மூலம் பலன் பெறும். இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்ற புதிய முறையை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அத்தகைய முறையில் ஏற்கெனவே 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது.  ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதன் வளர்ச்சிக்காக மிகச்சிறந்த ஒத்துழைப்பை சர்பாஞ்ச்கள் வழங்கி வருகிறார்கள். அங்கு விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . லடாக்கில் கார்பன் சமநிலையை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் லடாக்கியர்களுடன் சேர்ந்து புதுமையான வழிகளில் வளர்ச்சியை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியர்களின் தாரக மந்திரம் வோக்கல் ஃபார் லோக்கல் (உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது) என்றவாறு இருக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும். அதை செய்யாவிட்டால் அந்த பொருட்களுக்கு வாய்ப்பு குறைவதுடன் அந்த முயற்சி ஊக்கம் பெறாமல் போகலாம். இப்போது நாம் மேக் இன் இந்தியாவில் (இந்தியாவிலேயே தயாரிப்போம்) இருந்து மேக் ஃபார் (வோர்ல்ட் (உலகுக்காக தயாரிப்போம்) என்ற அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறோம்.   https://www.bbc.com/tamil/india-53788679  
  • பாடகர் எஸ்பிபிக்கு எக்மோ சிகிச்சை! மின்னம்பலம்   கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 13 இரவு முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனைவரும் எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அறிவிக்கையை எதிர்நோக்கித் திரை உலகமே காத்திருக்கிறது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பது தெரியவந்துள்ளது. Extracorporeal Membrane Oxygenation எனப்படும் இந்த கருவி, உடல்நிலை மோசமாக இருக்கும் நோயாளிகளுக்கு மூன்றாம் கட்டத்தில் சிகிச்சை அளிக்க உதவுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் செயல்படாதபோது, எக்மோ கருவி பயன்படுத்தப்படுகிறது. இது, பாதிக்கப்பட்டவரின் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட ரத்தத்தை மீண்டும் உடலுக்கு அனுப்புகிறது. இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இந்த கருவி உறுதிப்படுத்துகிறது. தற்போது இந்த கருவி மூலம் எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே எஸ்.பி.பி மகன் சரண், தனது தந்தையின் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.     https://minnambalam.com/public/2020/08/15/30/spb-health condition-ecmo-treatment
  • காரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்👍