Jump to content

பாலக்காடு 2006 - வ.ஐ.ச.ஜெயபால‎‎ன்

Recommended Posts

பாலக்காடு 2006
ஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் த‎‎ன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்./ எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./
.
பெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன். 
.

.68409794_365087234158893_3969578688164397056_n.jpg?_nc_cat=104&_nc_oc=AQkuCeRwjeqMU0XDUtSJ9H-0i6pl_Eyv_d2vNpq1vCnNymiQwkmwFEqLmOsqXXefPcWXMAisiNfG6PAJoNXtoyo4&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=5a3c9139e34edfe24af5803da507a594&oe=5DCB51F3

பாலக்காடு 2006
வ.ஐ.ச.ஜெயபால‎‎ன்
.
வண்ன ஆடைகளை
வானெங்கும் வீசிவிட்டு
அம்மணச் செஞ் சூரிய‎ன்
அரபிக் கடல்‏ இறங்க
ஆகாச விளிம்பு பற்றும்.
நாமும்பகலி‎‎ன் பல்லக்குத் தூக்கி
களைத்துப்போய் ‏இருந்தோம்.
கிளர்ந்து கு‎‎ன்று தளுவும் முகிலி‎ன் ஈரக்கருங்கூந்தல் இரப்பர்காட்டில்சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது.
.
வா‎ன் நோக்கும் அறுவடைக்காரி
முதல் துளியையே
குருவி எச்சமாய் அருவருத்து
நச்சு வசவுகளை உமிழ்கிறாள்.
நாளை ‏அவளேவெட்கமி‎‎ன்றி
பொங்கலும் வைத்து
மழையே வா எனப் பாடுவாள்.‏
இது வாழ்வு.
. 
வானில் இரவு த‎ன்
இளம்பிறை மதுக் கிண்ணத்தை
உயர்த்தியாயிற்று.
எ‎ன்‎ தோழியோ பரபரக்கிறாள்.
இனி அவள் த‎‎ன் மனசின்
ஒப்பனைப் பெட்டி திறப்பாள்.
முகம் ததும்பும் நட்ப்பை
ஒட்டத் துடைத்து விட்டு
பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்.
எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள்
ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.
காலையே கிளம்புகிற பாவனையில்
தே‎ன் கமழும் மு‎ன்னிரவின்
தலையை மிதித்து எழுவாள்.
.
யுத்த த‎ந்திரங்களை அறிவே‎‎ன்.‏
இது தந்திர யுத்தம்.
ஆனாலும் வழக்கம்போல்
காலை விடியும்ஒப்பனைகளின்‎றி. 
. 
- 2006

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அபாரம்,

வார்த்தைகளின் சாரம்,

சொல்லும் செய்தியில் தெறிக்கிறது காரம்.

நான் நினைப்பதன் பிரகாரம்,

நீங்கள் மைண்ட்வாய்ஸ் என்று நினச்சு,

சத்தமா பேசீடீங்களோ? 😂😂

Link to comment
Share on other sites

5 hours ago, poet said:

ஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும்.

கூட இருக்கிறவங்க பகலில் நட்பாக நடித்தாலும் இரவில் ஆபத்தானவங்க என்றால் பெண்களுக்கு இருக்கும் ஒரேவழி அப்பிடியாதான் இருக்கும். 😂

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி goshan_che, உங்களைப்போன்ற கலை ஆர்வலர்கள்தான் எங்கள் ஊட்டமும் தேட்டமும். வாழிய பல்லாண்டு. 

திரு Gowin, ஆமால்ல, இதுதான் எப்பவும் நம்மைச் சுற்றி  அனுபவசாலிகள் வேணுமென்பது?

Link to comment
Share on other sites

5 minutes ago, poet said:

திரு Gowin, ஆமால்ல, இதுதான் எப்பவும் நம்மைச் சுற்றி  அனுபவசாலிகள் வேணுமென்பது?

ஆமாங்கோ.
சும்மா ஒரு கலாய்ப்புத்தான்.
சீரியஸா எடுக்காதிங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, poet said:

பாலக்காடு 2006
ஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் த‎‎ன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்./ எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./
.
பெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன். 
.

.68409794_365087234158893_3969578688164397056_n.jpg?_nc_cat=104&_nc_oc=AQkuCeRwjeqMU0XDUtSJ9H-0i6pl_Eyv_d2vNpq1vCnNymiQwkmwFEqLmOsqXXefPcWXMAisiNfG6PAJoNXtoyo4&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=5a3c9139e34edfe24af5803da507a594&oe=5DCB51F3

பாலக்காடு 2006
வ.ஐ.ச.ஜெயபால‎‎ன்
.
வண்ன ஆடைகளை
வானெங்கும் வீசிவிட்டு
அம்மணச் செஞ் சூரிய‎ன்
அரபிக் கடல்‏ இறங்க
ஆகாச விளிம்பு பற்றும்.
நாமும்பகலி‎‎ன் பல்லக்குத் தூக்கி
களைத்துப்போய் ‏இருந்தோம்.
கிளர்ந்து கு‎‎ன்று தளுவும் முகிலி‎ன் ஈரக்கருங்கூந்தல் இரப்பர்காட்டில்சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது.
.
வா‎ன் நோக்கும் அறுவடைக்காரி
முதல் துளியையே
குருவி எச்சமாய் அருவருத்து
நச்சு வசவுகளை உமிழ்கிறாள்.
நாளை ‏அவளேவெட்கமி‎‎ன்றி
பொங்கலும் வைத்து
மழையே வா எனப் பாடுவாள்.‏
இது வாழ்வு.
. 
வானில் இரவு த‎ன்
இளம்பிறை மதுக் கிண்ணத்தை
உயர்த்தியாயிற்று.
எ‎ன்‎ தோழியோ பரபரக்கிறாள்.
இனி அவள் த‎‎ன் மனசின்
ஒப்பனைப் பெட்டி திறப்பாள்.
முகம் ததும்பும் நட்ப்பை
ஒட்டத் துடைத்து விட்டு
பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்.
எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள்
ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.
காலையே கிளம்புகிற பாவனையில்
தே‎ன் கமழும் மு‎ன்னிரவின்
தலையை மிதித்து எழுவாள்.
.
யுத்த த‎ந்திரங்களை அறிவே‎‎ன்.‏
இது தந்திர யுத்தம்.
ஆனாலும் வழக்கம்போல்
காலை விடியும்ஒப்பனைகளின்‎றி. 

. 
- 2006

கவிஞரே....  மிக நீண்ட நாட்களின் பின்,  நல்லதொரு கவிதையை வாசித்தேன். :)

Link to comment
Share on other sites

வாத்துக்கள், மகிழ்ச்சி. நெடுநாட்களின் பின்னர் பரிசான உங்கள் அன்பான வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தருகிறது. நன்றி தமிழ் சிறி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.