Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகலினியின் “A CITY WITHOUT WALLS” கவிதை நூல் வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி அகலினி எழுதிய “A CITY WITHOUT WALLS” (சுவர்களற்ற ஒரு நகரம்) ஆங்கிலக் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா இன்று (27) பிற்பகல் 03.30 மணிக்கு, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் துளசி முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் மொழிவழக்கு யாவுமே ஆங்கில மொழி பயன்படுத்துகையில் நடைபெற்றன.

இதன்போது வரவேற்புரையினை நூலாசிரியர் அகலினியின் தாயார் ரஞ்சிதமலர் வழங்கினார். ஆசியுரையினை எழுத்தாளர் அருட்பணி அன்புராசா (அமதி) அடிகளார் வழங்கினார். தலைமை உரையினைத் தொடர்ந்து பெண் படைப்பாளினி வெற்றிச்செல்வி வெளியீட்டுரை நிகழ்த்தினார்.

நூலினை அகலினியின் பெற்றோர் நந்தகுமார் ரஞ்சினிதேவி இணையர் வெளியிட, முதற்பிரதியினை ‘இயற்கை வழி இயற்கை’ அமைப்பினைச் சேர்ந்த குலசிங்கம் வசீகரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர மேயர் ஆர்னோல்ட் பிரதி பெற்றார். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் நூலினைப் பெற்றனர்.

இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் நூலாய்வுரை நிகழ்த்தினார். சிறப்புரையினை சமூகச் செயற்பாட்டாளரும், இலங்கை வங்கியின் ஊர்காவற்றுறை கிளை முகாமையாளருமான ரேனோல்ட் எட்வேர்ட் ஆற்றினார். ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை ‘A CITY WITHOUT WALLS’ நூலின் ஆசிரியர் அகலினி வழங்கினார்.FB_IMG_1566914434990.jpg?zoom=1.10249994

FB_IMG_1566914423016.jpg?zoom=1.10249994

FB_IMG_1566914414383.jpg?zoom=1.10249994

FB_IMG_1566914404721.jpg?zoom=1.10249994

https://newuthayan.com/story/19/அகலினியின்-a-city-without-walls-கவிதை-நூல்.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அகலினியின் முயற்சிக்கு பாராட்டுக்கள். இவ்வாறான முயற்சிகளை எழுத்தாளர்களை மாணவர் நிலையில் இருந்தே ஊக்குவிற்க்கவேண்டும். 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.