Jump to content

‘சிவரூபனுக்கு மன, உடல் ரீதியாக பாதிப்பு’


Recommended Posts

-எஸ்.நிதர்ஷன்

 

வைத்திய அதிகாரி சிவரூபனுக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு, அவரது குடும்பத்தினரால், நேற்று (27) மாலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில், சிவரூபனை எவ்வித அடிப்படை காரணங்களுமின்றி, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, அவரை மாலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறையில் அடைத்து காலையில் மீண்டும் விசாரணைக்காக அழைத்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை நாளாந்தம் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறையில் அடைத்திருக்கும் போது, அங்கு பலரும் அவரை பார்த்து விமர்சிப்பதாகவும் இது அவரது வைத்திய தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அவருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்விகாரத்தில், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தலையிட வேண்டுமெனவும், அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சிவரூபனுக்கு-மன-உடல்-ரீதியாக-பாதிப்பு/71-237495

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

அவரை நாளாந்தம் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறையில் அடைத்திருக்கும் போது, அங்கு பலரும் அவரை பார்த்து விமர்சிப்பதாகவும் இது அவரது வைத்திய தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அவருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொறிலங்கா அரச காடைத்தனம்!

Link to comment
Share on other sites

சிங்கள இனவாத, மதவாத, பயங்கரவாத அரசு தன்னை உலகிற்கு நல்லவனாக காட்டவும், போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கவும் தொடர்ந்து தமிழின உணர்வார்களை பல வகையிலும் அழித்தவண்ணம் உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே அங்கு நடந்தது என்னவென்று யாருக்காவது தெரியுமா? சிங்களப் பேரினவாதம் கூறுவதுபோல இந்தத் தமிழர் உண்மையாகவே புலிகளின் மீளுருவாக்கத்திற்கு உதவினாரா? அல்லது கோத்தா விசுவமடுவில் தானே உருவாக்கிய புலிகள் மீது தனது ராணுவத்தை ஏவிவிட்டு நடத்திய இன்னொரு வீர விளையாட்டா இதுவும்? ஏன் இந்தக் கைது இப்போது நடக்கவேண்டும்? தேர்தலை முன்னிட்டு, கோத்தாவை ஜனாதிபதியாக்கும் நோக்கிலா?? 

Link to comment
Share on other sites

மக்கள் போராடியதை பார்த்தால்  வைத்திய சேவையை  செவ்வனே செய்தவர். போர்குற்றம் தொடர்பாக இவரும் ஒரு முக்கிய சாட்சி என அறியப்படுகிறது. சாட்சிகளை அழிப்பதில் சிங்களம் கட்சி வேறுபாடின்றி செயற்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

17 minutes ago, ரஞ்சித் said:

உண்மையிலேயே அங்கு நடந்தது என்னவென்று யாருக்காவது தெரியுமா? சிங்களப் பேரினவாதம் கூறுவதுபோல இந்தத் தமிழர் உண்மையாகவே புலிகளின் மீளுருவாக்கத்திற்கு உதவினாரா? அல்லது கோத்தா விசுவமடுவில் தானே உருவாக்கிய புலிகள் மீது தனது ராணுவத்தை ஏவிவிட்டு நடத்திய இன்னொரு வீர விளையாட்டா இதுவும்? ஏன் இந்தக் கைது இப்போது நடக்கவேண்டும்? தேர்தலை முன்னிட்டு, கோத்தாவை ஜனாதிபதியாக்கும் நோக்கிலா?? 

நானும் இவ்வாறுதான் நினைக்கின்றேன். மூவர் மீது தாக்குதல் நடத்த இருந்தனர்  என்று சொல்லியுள்ளனர் என்பதால் மூவரில் கோத்தாவையும் உள்ளடக்கி சிங்கள மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரிக்கும் திட்டமாக இது இருக்கலாம். சிங்கள மக்களின் முழு வாக்குகளையும் (95% ஆயினும்) பெற்றால் மட்டுமே வெல்வது சாத்தியம் என்பதால் எந்த எல்லைக்கும் செல்ல முயல்வார்கள்.

Link to comment
Share on other sites

பளை சட்ட வைத்தியருடன் தொடர்புகளை பேணிய மேலும் இருவர் கைது

பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பளை சட்ட வைத்தியர் சிவரூபனுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் குறித்த இருவரையும் பளையில் வைத்து கைதுசெய்துள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் கடந்த 18 ஆம் திகதி பளை சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யபட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வைத்தியருடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மூவரை கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனுடன் தொடர்பிலேயே இன்றைய தினம் பளை பகுதியில் வைத்து மேலும் இருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/63626

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.