Jump to content

முன்மாதிரியாக திகழும் மட்டு. பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை


Recommended Posts

முன்­னணி ஆடை உற்­பத்தி நிறு­வ­ன­மான Brandix அதன் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லையை சூழ­லுக்கு இசை­வான தொழிற்­சா­லை­யாக சிறந்த முறையில் கட்­ட­மைத்து ஏனைய உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக தமது உற்­பத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.

image_9b842c58b7.jpg

தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் காணப்­படும் சிறந்த நிலைபேராண்மை அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை பின்­பற்­று­வதில் தொடர்ச்­சி­யாக முன்­னணி வகிக்கும் இந்­நி­று­வ­னத்தின் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லைக்கு உலகின் Net Zero Carbon என்ற அந்­தஸ்து இவ்­வாண்டு கிடைத்­துள்­ளது. அது மாத்­தி­ர­மின்றி இந்த தொழிற்­சாலை 2008 ஆம் ஆண்டு உலகின் முத­லா­வது Leed பிளாட்­டனம் என்ற சான்­றி­த­ழையும் பெற்­றுள்­ளது.

Brandix.png

இவ்­வாறு சிறப்­பம்­சங்கள் பல­வற்றை கொண்­டுள்ள  மட்­டக்­க­ளப்பு Brandix ஆடைத் தொழிற்­சா­லையை பார்­வை­யி­டு­வ­தற்­கான வாய்ப்பு அண்­மையில் எமக்குக் கிடைத்­தது. நாம் ஒரு குழு­வாக அங்கு சென்­றி­ருந்தோம். 

குறித்த   ஆடைத் தொழிற்­சாலை வளா­கத்­துக்குள் நுழைந்தபோது ஏனைய ஆடைத் தொழிற்­சா­லை­களைப் போல் அல்­லாது வித்­தி­யா­ச­மான ஒரு உணர்வு ஏற்­பட்­டது.  தொழிற்­சாலையைச் சுற்றி காற்­றோட்­ட­மான நல்ல இடை­வெளி, அழ­கிய மரங்கள், செடிகள், கொடி­க­ளென பார்ப்­ப­தற்கு பச்சை பசே­லென காட்­சி­ய­ளித்­தது.

அந்த ரம்மி­ய­மான காட்­சி­களை ரசித்­த­வாறே ஆடைத்தொழிற்­சா­லைக்குள் அடி­யெ­டுத்து வைத்தோம்.  தொழிற்­சா­லைக்­குள்ளே முதலில் நாம் சென்­றது பிர­தான கலந்­து­ரை­யாடல் அறைக்கே. அங்கு  எமக்கு சில விளக்­கங்­களும் ஆலோ­ச­னை­களும் வழங்­கப்­பட்­டன.  அதன் பின்னர் வழி­காட்டல் குழு­வொன்றின் ஊடாக உற்­பத்தி செயற்­பா­டுகள் இடம்பெறும் பகு­திக்கு அழைத்துச் செல்­லப்­பட்டோம்.

வியப்­பூட்டும் வகை­யிலான் அற்­பு­த­மான கட்­ட­மைப்பு ஏனைய ஆடைத் தொழிற்­சா­லை­களைப் போன்றே இங்கும் ஆடை­களின் ஒவ்­வொரு அங்­கங்­களும் தனித்­த­னி­யான பிரி­வி­னரால் தைக்­கப்­பட்டு இறு­தியில் ஆடை முழு­மை­யாக்­கப்­பட்டு ‍பொதி செய்­யப்­ப­டு­வதை காண­மு­டிந்­தது. ஆனால் எவ்­வித பர­ப­ரப்பும் பதற்­றமும் இன்றி ஊழி­யர்கள் தமது பணி­களை முன்­னெ­டுத்­த­வண்ணம் இருந்­தனர்.

அவர்­க­ளுக்­கான விசேட அறி­வித்­தல்கள் மற்றும் அறி­வு­றுத்­தல்கள் ஒலி­பெ­ருக்கி மூல­மாக வழங்­கப்­பட்­டன. ஒரு ஆடையின் ஒவ்­வொரு பகு­தியும் மற்­றொரு தரப்­பி­னரின் உற்­பத்தி செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருப்­பதால் ஆரம்பம் முதல் இறு­தி­வ­ரை­யான சகல தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் தொடர்­புகள் பேணப்­பட வேண்டும். அதனை இல­கு­ப­டுத்­து­வ­தற்­காக பொது­வான டிஜிட்டல் திரையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. 

அதில்  நாளொன்­றுக்கு தேவை­யான மொத்த மூலப்­பொ­ருட்கள் மற்றும் ஒவ்­வொரு பகு­தி­யி­லி­ருந்தும் தயா­ரிக்­கப்­பட வேண்­டிய அள­வுகள் போன்­றன குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும். அதே­போன்று ஒவ்­வொரு மணித்­தி­யா­லமும் ஒவ்­வொரு பிரிவிலிருந்து தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அங்­கங்கள் பற்­றிய தர­வுகள் பதி­வா­கிக்­கொண்டே இருக்கும். அதைக்  கருத்­திற்­கொண்டு ஊழி­யர்கள் தமது பணி­யினை முன்­னெ­டுப்­ப­தையும் காண­மு­டிந்­தது.

பின்னர் முழு­மை­யாக்­கப்­பட்ட ஆடைகள் பரி­சோ­திக்­கப்­பட்டு தர­மற்­ற­வைகள் நிரா­க­ரிக்­கப்­பட்டு தர­மா­னவை பொதி செய்­யப்­பட்டு வாடிக்­கை­யாளர் பரி­சோ­த­னைக்­காக கள­ஞ்சி­ய­சா­லையில் வைக்­கப்­ப­டு­கி­றது. இறு­தியில் அவற்றில் சில­வற்றை வாடிக்­கை­யாளர் பரி­சோ­தித்து தரம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதும் அவை ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. 

நிறு­வ­னத்தின் உற்­பத்தி மற்று சிக்­கனம், சூழ­லுக்கு இசை­வான செயற்­பா­டுகள் குறித்து நிறுவனத்தின் விசேட வேலைத்திட்டத்துக்கான சிரேஷ்ட பொதுமுகாமையாளர் ஹேமிந்த ஜயவர்த்தன விளக்­க­ம­ளித்தார்.

உற்­பத்தி நட­வ­டிக்­கை­களின்போது மின்­சா­ரத்தை சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்­காக குறைந்த வலுவில் இயங்­கக்கூ­டிய தையல் இயந்­தி­ரங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. மட்­டக்­க­ளப்பு தொழிற்­சா­லையில் நாம் 1800 தையல் இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்­து­கின்றோம். இவை தின­சரி 16 மணி நேரம் இயங்­கு­கின்­றன. இவை அனைத்­துக்கும் Clutch மோட்­டர்­க­ளுக்கு பதி­லாக குறைந்த வலுவில் இயங்கும் VSD Servo மோட்­டர்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. உற்­பத்தி காலப்­ப­கு­தியில், Clutch மோட்­டர்கள் தொடர்ச்­சி­யாக இயங்­கு­கின்­றன. Servo  மோட்­டர்கள் ஊசி இயங்கும் காலப்­ப­கு­தியில் மாத்­தி­ரமே இயங்­கு­கின்­றன. ஊசி இயக்கம் செயற்­பாட்டு நேரத்தின் 17வீதத்தை மாத்­தி­ரமே கொண்­டுள்­ளது. Clutch மோட்­ட­ருடன் ஒப்­பி­டு­கையில்  Servo மோட்­ட­ரினால் 68-–73 வீத வலுவை சேமித்துக் கொள்ள முடி­கி­றது.

வாயு சேமிப்பு சாத­னங்கள் (Air Saving Devices) தைக்­கப்­பட்ட ஆடை­களில் சுருக்­கங்­களை அகற்­று­வது என்­பது புதிய செயற்­பாட்டு தேவை­யாக அமைந்­துள்­ளது. இதற்­காக அழுத்­தப்­பட்ட வாயு தொடர்ச்­சி­யாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. உள்­ளக அணி­யினால் புத்­தாக்­க­மான வாயு சேமிப்பு சாதனம் ஒன்று வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னூ­டாக அழுத்­தப்­பட்ட வாயு விர­யத்தை 40 வீதத்­துக்கு மேல் குறைத்துக்கொள்­கின்றோம். 

அதே­போன்று கழிவு நூல்­களை மீள பயன்­ப­டுத்­து­வ­தற்­காக   எஞ்­சிய நூல்­களை வேறாக்கி அவற்றை சேமித்து வைக்­கின்றோம். இந்த நூல்­களை புதிய அலங்­கா­ரங்கள் அறி­முகம் செய்யும்போது மீள பயன்­ப­டுத்­து­கின்றோம். கழிவு நீர் வடி­கட்ட நாம் கழி­வுநீர் சுத்­தி­க­ரிப்பு பகு­தி­யொன்றை நிறு­வி­யுள்ளோம். அத­னூ­டாக வடி­கட்­டப்­பட்ட நீரை மீள்­சு­ழற்­சிக்­குட்­ப­டுத்தி  கழி­வ­றைகள் மற்றும் விவ­சாய தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­கின்றோம். அதே­  போ­ன்று தொழிற்­சா­லையில் காணப்­படும் நீர் தூய்­மை­யாக்கல் கட்­ட­மைப்­பி­னூ­டாக சகல ஊழி­யர்­க­ளுக்கும் சுத்­த­மா­னதும் பாது­காப்­பா­ன­து­மான குடி­நீரை வழங்கி வரு­கின்றோம்.

உணவுக் கழிவு உர­மாக்கல் செயற்­பா­டு­களும் இங்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது . 24  மணி நேர காலப்­ப­கு­தி­யினுள் உணவு கழி­வு­க­ளி­லி­ருந்து கொம்போஸ்ட் உரம் உர­மாக்கல் இயந்­தி­ரத்­தி­னூ­டாக  தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. இந்த உரம் உள்­ளக உரத் தேவைக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதுடன் ஊழி­யர்­க­ளது தேவைக்­கா­கவும் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கின்­றது.

உணவுத் தட்­டு­களை கழுவும்போது நீரின் அளவை  குறைத்துக் கொள்ள dishwasher  பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இத­னூ­டாக நீரின் வீண் விரயம் தடுக்­கப்­ப­டு­கி­றது. அத்­தோடு தட்­டு­களை கழு­வு­வ­தற்கு  கொதி நீரை பெற்றுக்கொள்­வ­தற்­காக solar hot water  கட்டமைப்பை நாம் பயன்படுத்துகின்றோம். 

நீரை மேலும் சிக்கனமாக பயன்படுத்த நவீன குழாய் பொருத்திகளை  தொழிற்சாலை வளாகத்தில் பொருத்தியுள்ளோம். பாரம்பரிய நீர் பொருத்திகளுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய பொருத்திகள் ஊடாக 53 வீதமான நீரை சேமிக்க முடிகிறது என எமக்கு விளக்கமளித்தார்.

தொழிற்சாலையின் கூரைப்பகுதியில் சோலா பெனல்கள் பொருத்தப்பட்டு சூரிய சக்தி மூலமாக மின்சாரம் சேமிக்கப்பட்டு தொழிற்சாலை தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பல்வேறு முன்மாதிரியான செயற்பாடுகளை மட்டக்களப்பு  Brandix ஆடைத் தொழிற்சாலையில் எம்மால் காண முடிந்தது. இதுபோன்று சகல நிறுவனங்களும் சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி தமது உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

- எம்.நேசமணி-

https://www.virakesari.lk/article/63532

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.