Jump to content

கடவுளுக்கு நரபலி கொடுக்கப்பட்ட 227 சிறார்களின் பிணக்குவியல் கண்டெடுப்பு


Recommended Posts

500 à®à®£à¯à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®®à¯à®©à¯à®ªà¯ நரபலி à®à¯à®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à® 227 à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯

பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில் மிகப்பெரிய குழந்தைகளின் திரள் குழந்தைகள் பிணக்குவியலை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறார்களின் சடலங்கள் பெருவின் தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள கடலோர நகரமான ஹுவான்சாகோ அருகே கண்டெடுக்கப்பட்டன.

இந்த குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

சென்ற ஆண்டு இதே நாட்டின் இருவேறு பகுதிகளில் 200 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிறுவர்களின் பிணக்குவியலில் சிலரது முடி மற்றும் தோல் புதைக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பேசிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

500 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்ட 227 சிறார்கள்படத்தின் காப்புரிமைAFP

குழந்தைகள் ஈரமான வானிலையின் போது கொல்லப்பட்டு, கடலை நோக்கி புதைக்கப்பட்டுள்ளதால், கடவுள்களை திருப்திப்படுத்த அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-49505921

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவில் தான் நடந்திருக்கும் என் நினைத்துக் கொண்டு செய்தியை வாசித்தால், பெருவில்  நடந்திருக்கு. 
இப்போதும்... இப்படியான நரபலிகள், நடை பெறுவது கவலைக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரபலி கொடுக்கிறவங்களை பலியிட்டிருந்தால்.. கடவுள் குழந்தைகளை காப்பாற்றி இருக்கலாம். கடவுளும் ம்ம் முன்னு.. சும்மா இருந்திட்டார். கடவுளின் பெயரால்....................... கொலைவெறி பிடிச்சு அலையிற மனித மிருகங்களை கடவுளிடமே அனுப்பி வைப்பது நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இது இந்தியாவில் தான் நடந்திருக்கும் என் நினைத்துக் கொண்டு செய்தியை வாசித்தால், பெருவில்  நடந்திருக்கு. 
இப்போதும்... இப்படியான நரபலிகள், நடை பெறுவது கவலைக்குரியது.

சிறித்தம்பி! நரபலிக்கு முதலிடம் ஆபிரிக்காதான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.