Jump to content

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் இலங்கைத் தமிழ் யுவதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க சீரியல் உலகத்தில் நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும், அடுத்த நகைச்சுவை தொடரில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார்.

மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

17 வயதான இந்த யுவதி, பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார். கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே, இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது.

இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமான தமிழ்தான் எனது கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை எங்களை அழிக்க முயன்ற நாடு. நாங்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தோம்.  கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலை கவனிக்காமல் விட்டுவிட்டேன். 10 வருடங்களின் முன்னர் பெற்றோருடன், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.

போர்க்குற்றம் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்“ என தெரிவித்துள்ளார்.

https://www.pagetamil.com/72745/

 
Link to comment
Share on other sites

"ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமான தமிழ்தான் எனது கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எங்களை அழிக்க முயன்ற நாடு. நாங்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தோம்.  கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலை கவனிக்காமல் விட்டுவிட்டேன். 10 வருடங்களின் முன்னர் பெற்றோருடன், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். போர்க்குற்றம் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்“ என தெரிவித்துள்ளார்."

WOW!

தொடர்ந்தும் இதை உரக்க கூற வேண்டும்.

உணர்வை ஊட்டி வளர்த்த குடும்பத்திற்கு பாராட்டுக்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபலமானவர்கள் இதை கூறுவதை நாம் வரவேற்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வுக்கு வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மைத்திரேயி ராமகிருட்ணன்!! :299_bouquet:

On 8/29/2019 at 8:23 PM, விசுகு said:

ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி.

இலங்கை உங்களுடைய தாய்நாடு, அதில் சந்தேகமில்லை. இலங்கையில் பின்பு தோன்றிய சிறீலங்கா என்ற நாடுதான் எங்களை அழிக்க முயல்கிறது. அழித்தும் வருகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

வாழ்த்துக்கள் மைத்திரேயி ராமகிருட்ணன்!! :299_bouquet:

இலங்கை உங்களுடைய தாய்நாடு, அதில் சந்தேகமில்லை. இலங்கையில் பின்பு தோன்றிய சிறீலங்கா என்ற நாடுதான் எங்களை அழிக்க முயல்கிறது. அழித்தும் வருகிறது.

 

தமிழின...தேசிய  உணர்வை வெளிப்படுத்த  விட மாட்டியளே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

தமிழின...தேசிய  உணர்வை வெளிப்படுத்த  விட மாட்டியளே..

எப்போ தாயகத்தை விட்டு துரத்தப்பட்டு இங்கு வந்தேனோ அன்றிலிருந்து நான் எங்கும் சொல்வது தான்.  நான் சிறீலங்கன் இல்லை என் நாடு சிலோன் ஆக இருந்திருந்தால் இங்கு வரவேண்டிய எந்த தேவையும் எனக்கு கிடையாது என. தமிழ்த்தேசிய உணர்வு என்பதுக்குள் நாங்கள் வேறு வழியின்றி தள்ளப்பட்டோமே தவிர அதை நாமாக தூக்கிப்பிடித்தபடி அலைகிறோம் என்பது வரலாற்றை ஏளனம் செய்வதாகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.....!   👍

Link to comment
Share on other sites

16 hours ago, விசுகு said:

எப்போ தாயகத்தை விட்டு துரத்தப்பட்டு இங்கு வந்தேனோ அன்றிலிருந்து நான் எங்கும் சொல்வது தான்.  நான் சிறீலங்கன் இல்லை என் நாடு சிலோன் ஆக இருந்திருந்தால் இங்கு வரவேண்டிய எந்த தேவையும் எனக்கு கிடையாது என. தமிழ்த்தேசிய உணர்வு என்பதுக்குள் நாங்கள் வேறு வழியின்றி தள்ளப்பட்டோமே தவிர அதை நாமாக தூக்கிப்பிடித்தபடி அலைகிறோம் என்பது வரலாற்றை ஏளனம் செய்வதாகும் 

உண்மைதான் விசுகு அவர்களே! உலக மக்கள் அனைவரையும் மனிதர்களாகப் பார்த்து மதித்து வந்ததுதான் தமிழர் மரபு. அதனால்தான் 'இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க' என்ற கூற்று தமிழரிடமிருந்து வெளிப்பட்டது. தமிழ் தேசியம் என்ற உணர்வுகள்கொண்டு பிறரை அந்நியராக எண்ணும் எண்ணம் அன்றே தமிழரிடம் இருந்திருக்குமானால்.... இன்று எங்கள் தீவு இலங்கை என்ற பெயர்மட்டுமே கொண்டு தமிழர் ஆட்சியின்கீழ் இருந்திருக்கும்,  

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து புகழ் பெற்ற ஈழத்துப் பெண்: தமிழிச்சி என்பதால் பெருமை கொள்கிறார்

On Jun 16, 2020

906469-maitreyiramakrishnan-msmarvel-cop

 

நெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து 18 வயதில் ஈழத்து பெண் ஒருவர் உலகப் புகழ் பெற்றுவிட்டார்.

அவர் பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan).மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர் ஈழத்திலிருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள்.

அவரது பள்ளிப்படிப்பு கனடாவில் தான். பள்ளியில் படித்த போதே நாடகங்களில் நடித்தும் ,சிலவற்றை எழுதி இயக்கியுமிருக்கிறார்.

ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் (Mindy Kaling) இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever).

அந்தத் தொடரின் வெற்றியை மின்னணு ஊடகங்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர்

 

 

.MV5BMWEyNGUxNjgtOTJkZC00YmIzLWJmMGItYzJm

பொதுவாக ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் முறையான நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள்தான் உள்ளேயே நுழைய முடியும். ஆனால் அப்படி எந்த ஒரு பயிற்சியும் பெறாத இவர், நடிப்புக்கான பல்வேறுபட்ட சோதனைகளைக் கடந்து இந்தத் தொடரில் நடிக்கத் தேர்வாகி இருக்கிறார்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருந்த இளம் நடிகைக்கான தேர்வுக்கு இவரது தோழிதான் விண்ணப்பித்திருந்தார். அவர் வற்புறுத்தலால் மைத்ரேயியும் விளையாட்டாகத்தான் விண்ணப்பித்திருந்தார்.

இதற்காக 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்து இருந்திருக்கிறார்கள். நம்பிக்கையற்றிருந்த மைத்ரேயிக்கு எழுத்துப் பிரதி அனுப்பி அதில் ஒரு பாத்திரத்தை தேர்வு செய்து வசனத்தைப் பேசி நடித்து வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள். விளையாட்டாகத்தான் அனுப்பினார்.

images-1-7.jpg

மீண்டும் இன்னொரு சமயத்தில் மற்றொரு பிரதி அனுப்பி அடுத்த கட்ட சோதனை. அதற்கும் வீடியோ அனுப்பி வைத்தார். இப்படி ஆறு பிரதிகளுக்கும் நடித்து அனுப்பி வைத்தார். எல்லாவற்றையும் நடித்து முடித்து அனுப்பிய பின், முடிவு பற்றி பெரும் கனவு எதுவும் இல்லாமல்தான் இருந்தார்.

ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் ஆயிரம் பேர் 2000 பேர் நீக்கப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு தேர்வானது , பிறகுதான் இவருக்கு தெரியுமாம்.

கடைசியாக நேரடித் தேர்விலும் கலந்து கொண்டார் மைத்ரேயி. பிறகு இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.எப்படியோ அவர்கள் செலவில் அமெரிக்கா சென்று வந்ததுதான் லாபம் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒருநாள் அழைப்பு வந்திருக்கிறது இவரால் நம்பவே முடியவில்லை.நடிக்கத் தேர்வாகி விட்டார். நடித்தும் விட்டார்.

906469-maitreyiramakrishnan-msmarvel-300

அந்தத் தொடரில் நடித்த அனுபவம் பற்றிக் கூறும்போது “அந்தப் படப்பிடிப்பை ஒரு பள்ளியின் வகுப்பறையில் இருப்பது போல்தான் நான் உணர்ந்தேன். பெரிய வித்தியாசமாக எனக்குப் படவில்லை .முதல்நாளே அடுத்தநாள் நடிக்கவுள்ள காட்சிக்கான பிரதிகளைக் கொடுத்துவிடுவார்கள்.

நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் .படப்பிடிப்பு நேரம் எப்போதும் நீட்டிக்கப்படாது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் சரியாக முடிந்துவிடும்.

நான் இரவெல்லாம் வசனங்களை மனப்பாடம் செய்தேன். கேமரா முன் இருக்கும் போது எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு காட்சி சரியாக வர வேண்டும் என்றால் அவர்கள் சமரசம் ஆக மாட்டார்கள். அப்படி ஒரு காட்சியை அவர்கள் 25 தடவை கூட எடுத்தனர். திருப்பித் திருப்பி எடுத்திருக்கிறார்கள் .வற்புறுத்தி நம்மை வேலை வாங்க மாட்டார்கள். ஆனால் இயல்பாக அந்தக் காட்சி வரவேண்டுமென்று பொறுமை காப்பார்கள்.”என்கிறார்.

ஹாலிவுட் வாய்ப்பு ,ஆங்கிலம் பேசவேண்டிய நடிகை என்ற வகையில் உங்களது பெயரை மாற்றி விடுவீர்களா? என்று கேட்ட போது ,”நான் கனடிய தமிழ்ப் பெண் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் மகள் நான்.அந்த அடையாளத்தை நான் இழக்க மாட்டேன் அதனால் என் பெயரை மாற்ற மாட்டேன். நான் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக இருந்தாலும் ஆங்கிலம் பேசி நடிப்பதாக இருந்தாலும்கூட என் பெயரை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன் “என்கிறார் தீர்மானமாக

download-26.jpg

தொடர் நடிப்பு அனுபவம் பற்றி மேலும் பேசும் போது, “அந்தத் தொடரில் நடித்த போது கூட இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய தமிழ் தம்பதிகளின் மகளாகத் தான் நடித்தேன். இப்படி நடிப்பதில் எனக்கு வித்தியாசம் ஒன்றும் இல்லை. அதே நேரம் நான் இலங்கைத் தமிழ் பேசி நடிப்பதைவிட இதை ஒரு சிறு சவாலாகவும் மகிழ்ச்சியாகவும்தான் உணர்ந்தேன்.

உச்சரிப்பு, நடை உடை ,பாவனையில் சிறு மாற்றம் அவ்வளவுதான். அமெரிக்க இந்திய தமிழ்ப்பெண் ஒருத்தி ஆங்கிலேயர்கள் படிக்கும் உயர்நிலைப்பள்ளியில் அடையாளச் சிக்கலுக்கு ஆளாவது , தன்னை நிரூபிக்கப் பாடுபடுவது என்று கதை போகிறது. அந்தப் பெண்ணுக்குத் தாயார் ,நண்பர்கள் என்று பிரச்சினைகள். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவள் என்ன செய்கிறாள் என்று செல்கிறது கதை.” என்கிறார்.

” நான் தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் உன்னதமான மொழி. . “என்று கூறும் மைத்ரேயி ராமகிருஷ்ணன், “தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நான் ஏதாவது செய்ய வேண்டும். நான் வாழும் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதில் நான் பெருமைப்படுகிறேன். என்னாலான எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்..” என்கிறார்.

மைத்ரேயி ராமகிருஷ்ணனைப் பின்தொடரும் ரசிகர்களாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை என பல்வேறு நாடுகளிலும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறார்கள்.

மரத்தின் கிளைகள் விண்ணை நோக்கிச் சென்றாலும் அதன் வேர்கள் இருப்பது மண்ணுக்குள்தான் என்பது போல உலக ரசிகர்களை கவர்ந்த போதிலும் மைத்ரேயி, தான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறார்.அவரை வாழ்த்துவோம்.

https://bit.ly/2YzzT7o

 

https://www.thaarakam.com/news/137515

Link to comment
Share on other sites

கலாச்சாரம்  என்ற போர்வைக்குள் தமிழ் பெண்பிள்ளைகளை பூட்டிவைக்க துடிக்கும்  வீணர்களின் பத்தாம்பசலித் தனங்களை உடைத்து தமிழருக்கு பெருமை சேர்தது  தமிழ் பெண் என்ற அடையாளத்துடன் நிமிர்ந்து வெற்றிநடை போடும் மைத்திரேயி  ராமகிருஷனனுக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, tulpen said:

கலாச்சாரம்  என்ற போர்வைக்குள் தமிழ் பெண்பிள்ளைகளை பூட்டிவைக்க துடிக்கும்  வீணர்களின் பத்தாம்பசலித் தனங்களை உடைத்து தமிழருக்கு பெருமை சேர்தது  தமிழ் பெண் என்ற அடையாளத்துடன் நிமிர்ந்து வெற்றிநடை போடும் மைத்திரேயி  ராமகிருஷனனுக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். 

ஒன்றுமே புரியலை  சாமி

நீங்க  எல்லா  திரிகளிலும் திண்ணையிலும் ஒன்றையே திரும்ப திரும்ப  வெட்டி  ஒட்டுகிறீர்களே???

என்ன தான் சொல்ல வாறீர்கள்????

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மைத்ரேயி ராமகிருஷ்ணன்: "சமூக ஊடக வெறுப்புகளை எதிர்கொள்ள என்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை"

  • ஃபெர்னாண்டோ துரதே
  • பிபிசி உலக சேவை
10 அக்டோபர் 2020
மைத்ரேயி ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

மைத்ரேயி ராமகிருஷ்ணன்

நெட்பிளிக்ஸ் தளத்தில் புகழ் பெற்ற இலங்கை தமிழ்ப் பெண்ணான மைத்ரேயி ராமகிருஷ்ணன், தான் சமூக வலைதளங்களில் எதிர்கொண்ட வெறுப்புகளை சமாளிக்க அதிகம் போராட வேண்டியிருந்ததாக கூறியிருக்கிறார். 

18 வயதான மைத்தேரியின் "Never I have I ever" என்ற நெட்பிளிக்ஸ் தொடர் பெரும் வெற்றியை பெற்றது. 2020ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் இதுவும் ஒன்று.

முதல் தலைமுறை இந்திய அமெரிக்க பெண்ணான இவரது பெற்றோர் கனடாவில் குடியேறியவர்கள்.

தொடர் வெளியான ஒரே இரவில் புகழ் பெற்ற மைத்ரேயி ராமகிருஷ்ணன், தான் சம்பாதித்த வெறுப்புகளையும், அதை சமாளிப்பது குறித்தும் பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார். 

"நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்த பிறகு, இதோ இதுபோன்ற நேர்காணல்கள் எல்லாம் அளிக்க தயாரானேன். ஆனால், சமூக வலைதளங்களில் இருந்த வெறுப்பு மற்றும் துன்புறுத்தல்களுக்கு என்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை" என்று கூறுகிறார் மைத்ரேயி.

சமூக ஊடகங்களில் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களில் இவரும் ஒருவர். 

"இதெல்லாம் நடக்கும் என்று தெரியும். ஏனெனில் அந்த மாதிரியான ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். அசிங்கமாக கமென்ட் செய்வது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் மிரட்டல்கள்… ஆனால், இதெல்லாம் உண்மையில் நடக்கும்போது, இது வேறு மாதிரியாக இருக்கிறது"

தனக்கு சமூக ஊடகங்களில் பல கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறுகிறார் மைத்ரேயி

பட மூலாதாரம், PLAN INTERNATIONAL

 
படக்குறிப்பு, 

தனக்கு சமூக ஊடகங்களில் பல கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறுகிறார் மைத்ரேயி

பல எதிர்மறையான கருத்துகளை எதிர்கொண்டு வந்த கனடா நாட்டு நடிகையான மைத்ரேயி, தற்போது சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேறி உள்ளார்.

"என் அனைத்து சமூக ஊடகப் பக்கங்களையுமே நான்தான் கவனிக்கிறேன். என் குரலை நான்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம்" என்கிறார் மைத்ரேயி. 

"சமூக ஊடகங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள்"

தன்னை போல பல பெண்களும் இதுபோன்ற போராட்டங்களை எதிர்கொள்வதை அறிந்திருக்கிறார் மைத்ரேயி. 

அதனால் பிளான் இன்டர்நேஷனல் என்ற குழந்தைகள் உரிமைகளுக்கான அரசு சாரா அமைப்பின் தூதராகியுள்ளார் அவர். இந்த அமைப்பு பாலின பாகுபாடு, துன்புறுத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இணையத்தில் இதுபோன்ற சூழல்களை சந்தித்தது குறித்து 20 நாடுகளை சேர்ந்த 15-22 வயதுக்குள்ளான சுமார் 14,000 சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் கலந்துகொண்டனர். 

இதில் கலந்துகொண்ட 58 சதவீதம் பேர் தாங்கள் சமூக ஊடகங்களில் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக கூறுகின்றனர். 

"சமூக ஊடகங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள்"

பட மூலாதாரம், GETTY IMAGES

 

10ல் எட்டுக்கும் மேற்பட்டோர், தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது, இனவெறியை வெளிப்படுத்துவது அல்லது பாலியல் துன்புறுத்தல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர். 

"இது சரியானது அல்ல" என்கிறார் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.

"இணைய வசதி என்பது நம்மிடம் இருக்கும் அற்புதமான ஒரு கருவி. ஒரு விஷயத்திற்கு விடை கண்டுபிடிக்கவும், உலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. ஆனால், இதில் ஏற்படும் துன்புறுத்தல்களை மறுக்க முடியாது. பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் பல அழுத்தங்களின் பட்டியலில் இதுவும் சேர்கிறது" என்று அவர் கூறுகிறார். 

சமூக ஊடகங்களை விட்டு விலகும் பெண்கள்

ஆன்லைன் துன்புறுத்தல்களால் ஐந்தில் ஒரு இளம் பெண், சமூக ஊடகம் பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும், அல்லது பயன்பாட்டு நேரத்தை பெரிதும் குறைத்துக் கொள்வதாகவும் பிளான் இன்டர்நேஷனல் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

மேலும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில்தான் அதிகளவில் பெண்கள் மீதான தாக்குதல்கள் நடப்பதும் தெரிய வந்துள்ளது. 

"டிஜிட்டல் மயமாக மாறிவரும் இந்த உலகில், ஆன்லைன் தளத்தில் இருந்து பெண்களை துறத்துவது அவர்களுக்கு ஏற்படும் வீழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இவை பெண்கள் மீதான நேரடி தாக்குதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பெண்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கும் மிரட்டல்களாகும்" என்கிறார் பிளான் இன்டர்நேஷனலின் தலைமை செயல் அதிகாரி ஏனே-பிர்கிட்டே.

பாலியல் துன்புறுத்தல் மிரட்டல்கள்

சமூக ஊடகங்களுக்கு புதிதாக வருபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்கிறார் உகாண்டா நாட்டை சேர்ந்த 20 வயதான கேத்தி.

கேத்தி

பட மூலாதாரம், PLAN INTERNATIONAL 

 
படக்குறிப்பு, 

கேத்தி

மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். ஒரு டெய்லராக இருக்கும் அவருக்கு, தன்னை திசை திருப்பிக் கொள்ள சமூக ஊடகங்கள் பயன்படுகிறது.

ஆன்லைனில் தான் சந்தித்த ஒரு நபருடனான அனுபவங்களை கேத்தி அந்த கணக்கெடுப்பின் போது பகிர்ந்து கொண்டார். 

பேஸ்புக்கில் ஒருவர் என் இன்பாக்ஸில் வந்து 'வணக்கம்' என்று செய்தி அனுப்பினார். நானும் அவருக்கு வணக்கம் என்று அனுப்பினேன். அவர் நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டார். அதற்கும் நான் பதில் அளித்தேன். 

ஆனால், அதற்கு அடுத்த நாள் நான் எழுந்து பார்த்தபோது, "என் இன்பாக்சில் அவர் நிர்வாண படங்கள் அனுப்பியிருந்தார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது" என்கிறார் கேத்தி. 

சமூக ஊடகங்களில் நடக்கும் இதுபோன்ற பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப்பையும் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் இதுகுறித்து கூறுகையில், துன்புறுத்தல்கள், பாலியல் வல்லுறவு மிரட்டல்கள் ஆகியவற்றை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது. 

"சிறுமிகளையும் பெண்களையும் எங்கள் செயலிகளில் பாதுகாப்பது இருப்பது முக்கியம்."

இதுதொடர்பாக அரசாங்கங்களும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று பிரசாரக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

https://www.bbc.com/tamil/global-54482918

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.