Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடம் இதழ்

ஜெயமோகன்

thadam.jpg

விகடன் தடம் இதழ் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி,தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் அது ஒர் உச்சம்.

நான் தொடர்ச்சியாக வாசித்த ஒரே இதழ். பெரும்பாலும் இதழ்களில் எழுதியுமிருக்கிறேன். நான் தடம் இதழில் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை என நினைக்கிறேன். அவற்றைக் கேட்டு வாங்கிய கவிஞர் வெயில் அவர்களுக்கு நன்றி

இவ்வாறு பெரிய திட்டங்களுடன் தொடங்கப்படும் முயற்சிகள் நலிந்து நின்றுவிடுவது எப்போதுமே நிகழ்கிறது. நான் தொடர்புகொண்ட முயற்சியாகிய சுந்தர ராமசாமியின் ‘காலச்சுவடு’ நிறுத்தப்பட்டபோது அடைந்த உளச்சோர்வை நினைவுகூர்கிறேன். அதன்பின் என் ஊடகமாக அமைந்த சுபமங்களா நின்றது. இம்முயற்சிகளுக்கு முன்பு இடைநிலை இதழ்களாக இனி [எஸ்விராஜதுரை], புதுயுகம் பிறக்கிறது [வசந்தகுமார்] என பல முயற்சிகள் நின்றன. பல சிற்றிதழ்கள் நின்றன. நான் நடத்திய சொல்புதிதும் அவற்றில் ஒரு முயற்சி. ஒவ்வொரு முயற்சியின் தோல்வியும் மேலும் புதிய முயற்சிகள் தொடங்குவதை பலவகையில் தள்ளிப்போடுகிறது.

thadam2.jpg

ஒவ்வொரு தோல்வியும் காட்டுவது திரும்பத்திரும்ப தமிழ்ச்சூழலின் அக்கறையின்மையைத்தான். அரசியலையும் சினிமாவையும் மாய்ந்து மாய்ந்து விவாதிப்பார்கள். கலை, கலாச்சாரம் என பொங்குவார்கள். தமிழின் தொன்மை என தோள்தட்டுவார்கள். ஆனால் தமிழின்பொருட்டு நிகழும் எந்த முயற்சிக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார்கள். தடம் இதழைப் பார்த்ததுமே ‘ஐம்பதுரூபாய் அதிகம் சார், கட்டுப்படியாகலை’ என்று சொன்ன பலரை கண்டிருக்கிறேன். மாதம் லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டுபவர்கள் அவர்கள். ஒரு நல்ல காப்பியின் விலை. ஒரு முறை ஆட்டோவில் ஏறி இறங்குவதன் குறைந்தபட்ச கட்டணம். ஆனால் நம்மவர் உள்ளத்தில் கலை இலக்கியத்திற்கான விலை அதைவிடக்குறைவு தடம் போன்ற இதழை நம் கல்விநிலையங்களில் நூலகங்களில் வாங்கியிருந்தாலே பத்தாயிரம் பிரதிகள் விற்றிருக்கும்.

தடம் இதழ் நின்றதற்கான முதன்மைக்காரணம், அச்சில் படிப்பவர்கள் குறைவு என்பது. கடைகளில் கண்ணில்பட்டால்தான் வாங்கினார்கள். தேடிச்சென்று வாங்குவதில்லை. அப்படிச் சிலர் இடைநிலை இதழ்களை வாங்கிய காலம் ஒன்று இருந்தது, அது இன்றில்லை. இன்றைய வாசிப்பு செல்பேசித்திரையில் நிகழ்கிறது. என் கட்டுரைகளேகூட தடம் இதழில் வெளிவந்தபின் என் தளத்தில்  மீண்டும் வெளிவரும்போதுதான் எதிர்வினைகள் மிகுதியாக வருவது வழக்கம். இது ஒரு காலமாற்றத்தின் சித்திரம். உலகப்புகழ்பெற்ற இடைநிலை இதழ்களும், சிற்றிதழ்களும்கூட நின்றுகொண்டிருக்கின்றன.

ஆனால் விகடனின் அமைப்புவல்லமை அதை ஒரு சிறிய இதழாக நீட்டித்திருக்க முடியும். அது ஏன் நின்றது? ஏனென்று சமூகஊடகங்களைப் பார்த்தால் தெரியும். தடம் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அதில் வெளிவந்த ஏதேனும் ஒரு செய்தியாவது, ஒரு கருத்தாவது, ஒரு படைப்பாவது குறைந்த அளவிலேனும் சமூக ஊடகங்களில் ‘டிரெண்ட்’ ஆகியிருக்கிறதா? சாதாரணமாகவேனும் விவாதிக்கப்பட்டிருக்கிறதா? தேடிப்பாருங்கள் , திகைப்பாக இருக்கும். விதிவிலக்கு நான் என் பேட்டியில் ஈழத்தில் இன அழித்தொழிப்பு நிகழ்கிறதா என்பதற்கு அளித்த பதில் சார்ந்து எழுந்த விவாதம்.. ஏனென்றால் அது என்னை வசைபாட ஒரு வாய்ப்பு. ஆனால் ஈழப்போர் பற்றி விதந்தும் நெகிழ்ந்தும் பேசப்பட்ட பலப்பல பக்கங்கள் தடம் இதழில் வெளிவந்துள்ளன. இந்த வசைபாடிகள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ அவற்றைச் சொன்ன பல கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றைப்பற்றி எவராவது விவாதித்திருக்கிறார்களா? பிறருக்கு அடையாளம் காட்டினார்களா?

இங்கே பேசப்பட்டவை அனைத்துமே அரசியல்காழ்ப்புநிலைகள், சினிமா ஆகியவற்றைப் பற்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘டிரெண்ட்டிங்’ விஷயங்கள் மட்டுமே. நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு பொதுவான பேசுபொருள் எங்கிருந்து எனத் தெரியாமல் கிளம்பி வரும்.  அத்தனைபேரும் அதையே பேசிப்பேசி சலித்து அப்படியே அடுத்ததற்குச் செல்வார்கள். தங்கள் தனிரசனையை, தங்கள் தனித்த பார்வையை, தங்கள் தேடல்களை எத்தனைபேர் முன்வைத்திருக்கிறார்கள்? முன்வைத்தவர்களுக்கு எத்தனை பேர் வாசகர்களாக வந்தனர்? இந்த செயற்கை ‘டிரெண்டிங்’ தான் இங்கே சீரிய ஊடகங்களை அழிக்கிறது. முன்பு மாலைமுரசுச்செய்தியாக அமைந்தவை இன்று மையச்செய்தியாக ஆகின்றன. அவற்றுக்கு அப்பாலுள்ள கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த எதுவும் கவனிக்கப்படுவதில்லை.

தடம் போன்ற இதழ்களின் பங்களிப்பு என்ன? இன்று நாடே ஓரிரு விஷயங்களைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறது. பேசவைக்கப்படுகிறது, அதற்கான கொள்கைகள் வியூகங்கள் நடைமுறைகள் அனைத்தையும் அருகிருந்து பார்த்திருக்கிறேன். அந்த பொதுப்போக்குக்கு அப்பால் உள்ள இலக்கியம், அரசியல்கோட்பாடு, பண்பாட்டுச் சிக்கல்களைப் பேசவே தடம் போன்ற இதழ்கள் முயல்கின்றன. ஆகவேதான் அவை மாற்று ஊடகங்கள் எனப்படுகின்றன.

இங்கூள்ள பொதுரசனை அங்கும் வெளியே உள்ள அரட்டையையே எதிர்பார்க்கும்.. அந்த அலைக்கு எதிராக நிலைகொள்ளவேண்டும். அதற்குத்தேவை அவ்வாறு பொதுப்போக்குகளுக்கு அப்பால் நின்றிருக்கும் தனித்தன்மை கொண்ட வாசகர்கள்  அத்தகைய ஒரு வாசகர்வட்டம் இங்கே உள்ளதா? உள்ளது என்பதுதான் என் வலைத்தளம் வழியாக நான் கண்டடைந்தது. இந்தத்தளம் இத்தனை வாசகர்களுடன் இத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என நான் எண்ணியதே இல்லை. ஆனால் அந்த வாசகர்களால் ஏன் தடம் பேணப்படவில்லை? அதற்குக்காரணம் தடம் இதழின் உள்ளடக்கம்  என்றோ அதன் கொள்கை  என்றோ எவரும் சொல்லமுடியாது.எல்லா கொள்கைகளுக்கும் இங்கே இடமுண்டு. இன்று தமிழில் எழுதும் ஏறத்தாழ அனைவருமே அதில் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள்

.thadam-1.jpg

மிக எளிமையான காரணம்தான், தடம் இதழை அதை வாசித்தவர்கள் பணம்கொடுத்து வாங்கவில்லை. அதற்குக் காரணம் அறிவு, இலக்கியம், கலை என்னும்போது மட்டும் நமக்குள் வரும் கைச்சிக்கனம். அந்த இதழ் வெளிவந்து ஒரு அறிவுத்தரப்பாக, வெளியீட்டுத்தளமாக நிலைகொள்வது எல்லாருக்கும் நல்லது என நாம் உணரவில்லை. அதை நிலைநிறுத்த பிரக்ஞைபூர்வமாக ஏதும் செய்யவில்லை. நம் கலாச்சார அமைப்புக்கள் அதை ஆதரிக்கவில்லை.நம் உரையாடல்களில் அதை நாம் பேசவில்லை.

ஐம்பது ரூபாய் கொடுத்து பத்தாயிரம்பேர் வாங்கியிருந்தால் தடம் தொடர்ந்து நடந்திருக்கும். அது தொடராது என்றே நானும் எண்ணியிருந்தேன். அதை நடத்துவதற்குக் குறைந்தது இரண்டு ஊழியர்களாவது தேவை. அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் அளவுக்கேனும் அது பொருளீட்டவேண்டும். இங்கே எந்த ஒழுங்குமில்லாமல் வசதிப்பட்ட கால இடைவெளிகளுடன் சிற்றிதழ்கள் நடக்கின்றன. பல இதழ்கள் வந்து நின்றாலும் ஏதோ ஒன்று கண்ணுக்குப்படுகிறது. ஜெயமோகன்.இன் என்னும் இந்த இணையதளம் தடம் இதழைவிட அளவில் ஏழெட்டு மடங்கு பெரியது. ஆனால் சிற்றிதழ்கள் பெரும்பாலும் தனிநபர்களின் இலவச உழைப்பைச் சார்ந்து இயங்குபவை. நிதியிழப்பு கொண்டவை. என் தளமும் அவ்வாறே.

இந்தத்தளம் நண்பர்களின் நன்கொடையாலும் இலவச உழைப்பாலும் நடைபெறுகிறது. இன்று வருகையாளர் அதிகம் என்பதனால் இதை நடத்துவதற்கான செலவும் அதிகம். அதை நண்பர்கள் அளிக்கிறார்கள். அவ்வப்போது சிறு கட்டணம் அல்லது நன்கொடை வைப்போம் என எவரேனும் சொல்வார்கள். அழகிய அச்சில், வண்ணப்பக்கங்களுடன், கையில் எடுத்து பார்க்கத்தக்கதாக, பலர் படிக்கத்தக்கதாக, மேஜையில் போடத்தக்கதாக தடம் போன்ற ஓர் இதழ் வரும்போது மாதம் ஐம்பதுரூபாய்க்கு யோசிக்கும் தமிழர்கள் இணையதளத்திற்கா பணம்கட்டுவார்கள் என்று நான் கேட்டதுண்டு. மெனக்கெட்டு அதை பிடிஎஃப் எடுத்து உலவவிட்டு பணம்கட்டாதீர், வாங்காதீர் என பிரச்சாரம் செய்வார்கள். தங்களால் முடிந்த சேவை

தடம் நின்றுவிட்டது மீண்டும் நம்மையே நமக்கு காட்டுகிறது. அரைநூற்றாண்டாக ஒவ்வொரு சீரிய கலையிலக்கிய முயற்சி தோற்கடிக்கப்படுகையிலும் எழும் அதே பெருமூச்சுதான் எஞ்சுகிறது

 

https://www.jeyamohan.in/125507#.XWojWC3TVR4

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/31/2019 at 5:41 PM, கிருபன் said:

ஈழத்தில் இன அழித்தொழிப்பு நிகழ்கிறதா என்பதற்கு அளித்த பதில் சார்ந்து எழுந்த விவாதம்.. ஏனென்றால் அது என்னை வசைபாட ஒரு வாய்ப்பு

அது வசைபாடு அல்ல ,ஒர் அழிக்கப்பட்ட /அழிக்கப்படுகிற இனத்தில் இருப்பவனுக்குதான் இன அழிப்பின்  தாக்கம்  புரியும்....இலக்கியவாதிகள் செய்திகளை படித்து எழுதுவதைவிட அந்த மண்னில் வாழ்ந்து அனுபவித்து இன அழிப்பு பற்றி கருத்து சொன்னால் நல்லது.....ஜெயமோகன் கஸ்மீரிலும் இன அழிப்பு நடைபெறவில்லை என்றே சொல்வார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாத்தையின் தோசைப் பிரச்சினை கடைசியில் என்னவாயிற்று , உந்த ஆளை இலக்கியத்திற்காகவன்றி தோசைக்காகவே என்னால் அடையாளம் காண முடிகின்றது , அது என்னுடைய ' தகுதியை ' காட்டி நிற்கின்றது போலும்  …..😀

 

On ‎8‎/‎31‎/‎2019 at 5:41 PM, கிருபன் said:

.

 

ஒவ்வொரு தோல்வியும் காட்டுவது திரும்பத்திரும்ப தமிழ்ச்சூழலின் அக்கறையின்மையைத்தான். .

தடம் போன்ற இதழை நம் கல்விநிலையங்களில் நூலகங்களில் வாங்கியிருந்தாலே பத்தாயிரம் பிரதிகள் விற்றிருக்கும்.

தடம் இதழ் நின்றதற்கான முதன்மைக்காரணம், அச்சில் படிப்பவர்கள் குறைவு என்பது.

. இன்றைய வாசிப்பு செல்பேசித்திரையில் நிகழ்கிறது. என் கட்டுரைகளேகூட தடம் பேசவில்லை.

தடம் நின்றுவிட்டது மீண்டும் நம்மையே நமக்கு காட்டுகிறது. அரைநூற்றாண்டாக ஒவ்வொரு சீரிய கலையிலக்கிய முயற்சி தோற்கடிக்கப்படுகையிலும் எழும் அதே பெருமூச்சுதான் எஞ்சுகிறது

 

https://www.jeyamohan.in/125507#.XWojWC3TVR4

 

 

மற்றைய மொழிகளில் இந்த விடயம் எப்படி இருக்கின்றது , எல்லா இடங்களிலும் இன்று மின்திரை வாசிப்பு தான் முன்னணியில் இருக்கும்  என நினைக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது மட்டுமல்ல

ஆர். அபிலாஷ்
 
இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது என்னை பெரிதாய்ஆச்சரியப்படுத்துவதில்லைஉங்களையும் தான்
ஒவ்வொரு இதழ் தொடங்கப்படும் போதும் அதன் நிறுவனர் / ஆசிரியருக்கு ஒரு கணக்கு இருக்கும்இலக்குதேவையின்பொருட்டான கணக்குகள் இருக்கும்சிற்றிதழென்றால் அதுகுழுநடவடிக்கையின் நீட்சியாகவே இருக்க முடியும்குழுநடவடிக்கையென்றால் அரசியல் நடவடிக்கை அல்லஇலக்கிய ஆர்வம்கொண்டோர் சில கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து இதழ்ஒன்றை நடத்துவதுஅதன் வழி நாம் நம்பும் வகையில் இலக்கியதடமொன்றை அமைக்க முயல்வதுஅந்த குழு உடையும் போதோஉறுப்பினர்கள் ஆர்வம் இழக்கும் போதோ இதழ் நின்று போகும்நானேஇரு சிறுபத்திரிகைகளை நண்பர்களுடன் இணைந்து சில மாதங்களில்இருந்து ஒன்றரை வருடம் வரை நடத்தி இருக்கிறேன்இதைப் படிக்கும்உங்களில் சிலர் கூட செய்திருக்க கூடும்நீங்கள் இணைய இதழாகவேநடத்தினால் கூட அன்றாட வாழ்க்கையின் கட்டாயங்களுக்கு மத்தியில்அதை செய்வது ஒரு கட்டத்தில் உங்களை சோர்ந்து போகவே செய்யும்
இது பணம் சம்மந்தப்பட்டது மட்டுமில்லையாராவது லாபமோவருமானமோ இல்லை என்பதற்காக குடிசிகரெட் போன்றகேளிக்கைகளை நிறுத்தியதாக கேட்டிருக்கிறீர்களாசூதாடிகள்என்றாவது நிறுத்தி இருக்கிறார்களாஇலக்கிய நாட்டத்திலும் இன்பம்உண்டுஅதிலும் ஒரு மெல்லிய போதை உண்டுஆனால் அதை தக்கவைக்க முடியாமல் பண்ணுவது அதன் தீவிரமும் எண்ண / உணர்வுக்குவிப்பும்ஒரு சிறுபத்திரிகையை ஒருவர் நடத்துவதோஅல்லது குறைந்த பட்சம் அதை படிப்பதில் சிலர் நினைப்பது போலவாசிப்பு ஆர்வம் சம்மந்தமாக அல்லஅது அவரை ஆட்கொள்ளும் ஒருலட்சியம்ஒரு கனவுவெட்டவெளியில் புயல் முன்பு போய் நின்றுஉறுதியை நிரூபிப்பது போலத் தான் இலக்கியத்தில் இருப்பதுவெறுமனே இலக்கிய பத்திரிகை ஒன்றை புரட்டிப் பார்த்து அது குறித்துசிந்திப்பவர்களைக் கூட நான் இவ்வாறே பார்க்கிறேன்நமது அன்றாடவாழ்க்கை சற்றே லகுவாக இருந்துஇப்படி புயலிடம் ஒப்புக் கொடுக்கும்திராணியை தந்தால் தான் நீங்கள் இலக்கியவாதியாக நிலைக்கமுடியும்அல்லாவிடில் அன்றாடத்தை முழுக்க புறக்கணிக்க வேண்டும்
 
தடம்” போன்ற வெகுஜன நிறுவனங்களின் இலக்கிய இதழ்கள் குறித்துஒரு ஐயம் எனக்கு என்றுமே உண்டுஇதே போன்ற பளபளப்பானவண்ணத்தாள்களில் அதிக செலவுடன் அச்சிடப்படும் இலக்கியஇதழ்கள் சிலவற்றில் முன்பு நான் வேலை செய்து விரைவிலே இதழ்நிறுத்தப்பட்டதும் வேலையையும் இழந்திருக்கிறேன் என்பதால் இந்தமுயற்சிகளின் “வணிக நோக்கத்தை” அனுபவ ரீதியாக புரிந்துகொண்டிருக்கிறேன். “தடத்தின்” பின்னணி விபரங்களை அறியேன்என்பதால் நான் இங்கு அது நிறுத்தப்படுவது குறித்து கருத்து சொல்லவிரும்பவில்லை. (இது போன்ற சந்தர்பங்களில் ஊகங்களைவிநியோகித்து நாம் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை.) 
 
தடத்தின்” நோக்கம் எதுவாகினும் அதன் இலக்கிய “தடத்தை” பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்நல்ல கட்டுரைகள்கதைகள்கவிதைகள்பேட்டிகள் என தரமான இலக்கியத்தை அது நமக்குஅளித்திருக்கிறது. (சில படைப்புகள் அலுப்பு தந்தன என அதைவிமர்சிப்பது ஒரு பெண்ணை முகம் அழகு தான்ஆனால் காலில் உள்ளமயிர்கள் அருவருப்பு என சொல்வதைப் போலஒரு பெண் என்றால்எல்லாமும் தான்.) “தடத்தில்” வரும் கருத்துக்களுக்கு இங்குஉடனடியாக ஒரு தாக்கம்அதிர்வு ஏற்படுவதையும் கவனித்திருக்கிறேன்(தமிழ் ஹிந்துவைப் போல). ஆகையால் அது நடத்தியவர்களைமுதலீடுபண்ணியவர்களைஆசிரியர் குழுவில் இருந்தவர்களை பாராட்டுவோம்அவர்களுக்கு நன்றி சொல்வோம்எதிர்காலத்திலும் எந்த ஒரு இலக்கியஇதழ் விழுந்தாலும் நாம் அதை தொட்டு வணங்க வேண்டும்எச்சில்உமிழக் கூடாதுஇந்த இறுதி விசயத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லிமுடிக்கிறேன்.
 
அராத்துகேபிள் சங்கர் போன்றோர் இந்த இதழை கவைக்கு உதவாதவீண முயற்சி என பேஸ்புக்கில் சித்தரித்து எள்ளி நகையாடுவதன்காரணம் இதழ் மீதான அவர்களின் ஒவ்வாமை அல்லதீவிரமான எந்தஒன்றின்கடுமையான மனக்குவிப்பைஅறிவுழைப்பை கோரும் எதன்மீதும் அவர்கள் கொண்டுள்ள ஒருவித அச்சத்தை தான் தான் இதுகாட்டுகிறதுஇணையத்தில் பரவலாக பகிரப்படும் உடனடிவாசிப்புக்கான எழுத்துக்கள் மட்டுமே வாழ்க்கையை நிறைவு செய்யாது. ( அராத்து இதை “போஸ்ட்மாடர்னிசம்” என்றெல்லாம்நியாயப்படுத்துவது வேடிக்கைபின்நவீனத்துவத்தின் தத்துவப்பின்புலத்தை அறிந்தால் அதை அவ்வாறு அவர் வெற்று கேளிக்கைக்கானமாற்றுச்சொல்லாக பயன்படுத்த மாட்டார்.) இதை அவர்களும்அறிவார்கள்ஆனால் அந்த புரிதலில் இருந்து தப்பிச் செல்ல விரும்பும்எஸ்கேபிஸ்டுகள் இவர்கள்பேய் நேரில் வந்தால் கூட சிரித்துகைகுலுக்கி கொள்வார்கள்ஆனால் தம் மனம் இசையிலோஇலக்கியத்திலோ கலையிலோ தெரியாமல் சில நொடிகள் ஆழமாகலயித்து விட்டால் உடனடியாக அந்த இடத்தை விட்டே ஓடி வந்துவிடுவார்கள் என நினைக்கிறேன்இருவரும் வெளிப்படுத்தும் இந்தஇலக்கிய விரோதம் ஒரு சுயவிரோதம் தான்ஒரு காகிதம் காற்றில்படபடத்துக் கொண்டே இருக்கிறதுஅது தன்னை சுற்றி அமைதியாகவீற்றிருக்கும் பொருட்களைக் கண்டு எள்ளி நகையாடுகிறது. “பார் நான்எடையற்று எவ்வளவு ஜாலியாக இருக்கிறேன்” என சீண்டுகிறதுஆனால்அப்படி எடையின்றி இருப்பதே தான் பறந்து காணாமல் போய்விடுவோமோ எனும் பதற்றத்தை அவர்களுக்குள் உண்டு பண்ணுகிறதுஅதுவே காற்றில் படபடக்க வைக்கிறதுதாம் உள்ளுக்குள் நிலையின்றிபடபடக்க பக்கத்தில் உள்ளவர்கள் மீது கோபம் திரும்புகிறதுஇந்தகோபம் இலக்கியம் வாசிப்பவனை நோக்கி  “பேட்டிக் கொடுத்துபோட்டோ போட்டதினால் ஒரு காப்பி வாங்கியவர்கள்”, “கதை கட்டுரைவெளியாகி தானும் ஒர் ”முக்கிய” மானவர்களில் முக்கியமானவர் என்றுசொல்லிக் கொள்ள” முனைபவன்,
இலக்கியத்துக்காகவே உயிர்வாழ்பவன் என்று வெளிப்படுத்திக்கொள்ளும் சூடோ மனப்பான்மை கொண்டவர்கள்.” என்றெல்லாம் காறிஉமிழ வைக்கிறது.
 இப்படி யோசிக்கும் படி தள்ளப்படுவது ஒரு பரிதாப நிலை என்பதேஉண்மை.
 
வெகுஜன துய்ப்புக்கு பயன்படாத எதுவும் தேவையில்லை என்பதேஇவர்கள் சொல்வதன் சாராம்சம்எனில் நீங்கள் இன்று கொண்டாடும்எந்த படைப்பாளியும் இசைக்கலைஞனும் சினிமா படைப்பாளியும்தோன்றியிருக்க முடியாதேவெகுஜன துய்ப்பின் உரத்தைகாலங்காலமாக அளிப்பது தீவிரமான கலை செயல்பாடுகள் தாம்தீவிரமான, “நான்கு பேர் மட்டும் புழங்கும்” கலை முயற்சிகள்அழித்தொழிக்கப்பட்டால் அதற்கடுத்து அழிவது வெகுஜனகலைகளாகவே இருக்கும்
 
 
ஆகையால் இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது இலக்கிய இதழ்கள்நிறுத்தப்படுவது மட்டுமல்ல (நான் தடத்தை மட்டுமே சொல்லவில்லை). அது நம் மொழி வெளிப்பாட்டின் அடிவேர் ஒன்றை அசைப்பதுமரம் வேறுவேர் வேறு அல்லமரத்தின் கிளைகளில் அமர்ந்து வேடிக்கைபார்ப்பவர்கள்கனிகளை உண்பவர்கள்விழுதுகளில் ஊசலாடுபவர்கள்இதையும் யோசிக்க வேண்டும்
 

 

http://thiruttusavi.blogspot.com/2019/08/blog-post_29.html?m=1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து என்ன ஆகும்?

வா. மணிகண்டன்

விகடன் குழுமத்திலிருந்து தடம், சுட்டி உட்பட நான்கு இதழ்களை நிறுத்திவிட்டார்கள். விகடன் குழுமத்தின் பத்திரிக்கைகள் என்பதால் இந்தச் செய்தி சமூக வலைத்தளப் பரப்பில் ஓரளவுக்கு கவனம் பெற்றிருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களில் பல அச்சு இதழ்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அப்படி நிறுத்தப்பட்ட பத்திரிக்கைகளும் இதழ்களும் எந்தச் சலனத்தையும் எங்கேயும் உருவாக்குவதில்லை.  எதுவுமே நடக்காதது போல இந்த உலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

தடம் நின்று போவதாலும் அல்லது வேறு சில பத்திரிக்கைகள் நின்று போவதாலும்  ‘இலக்கியமே காலி’ என்றெல்லாம் எதுவுமில்லை என்றாலும் கூட ஒரு முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதத்தை நாம் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். இலக்கியம், வியாபாரம், கார்போரேட் என்ற எல்லாவிதமான விமர்சனங்களையும், விவாதங்களையும், சச்சரவுகளையும் தாண்டி கடந்த சில பத்து ஆண்டுகளாக உயர்ந்து வந்த வாசகர்களின் எண்ணிக்கை இனிமேல் படிப்படியாகக் குறையும் என்றுதான் அனுமானிக்க வேண்டியிருக்கிறது. அது எந்தவிதமான வாசகர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்- வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைகிறது. அவர்களை மல்ட்டி மீடியா கபளீகரம் செய்கிறது.

இது இலக்கியம் அல்லது அச்சு ஊடகம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. எழுத்து சார்ந்த பிரச்சினை. மிகப்பெரிய அரக்கனாக எழுந்து நிற்கும் மல்ட்டி மீடியாவின் முன்பாக எழுத்து நடுங்கி சுருண்டு போகிறதோ என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. Text Vs Multimedia என்னும் போரில் வீழ்கிற தளபதிகளாகத்தான் இத்தகைய பத்திரிக்கைகள் விழுவதயும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பொதுவாக, வாசிப்பு என்பது சற்றே பொறுமை தேவைப்படுகிற செயல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒரு தகவலைத் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வாசிக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது. ஆனால் எழுத்து வழியாகவே ஒன்றைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற சூழலை இப்பொழுது தொழில்நுட்பம் அடித்து துவம்சம் செய்துவிட்டது. பல கிராமத்துப் பள்ளிகளில் கூட ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்துவிட்டன. QR கோடு கொண்டு திரையில் பாடம் நடத்துகிறார்கள். நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு iPad கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் கூகிளிலும், யூடியூப்பிலும் பாடங்களைப் படிக்கிறார்கள். எழுத்தின் அவசியம் பள்ளிகளிலேயே குறையத் தொடங்கிவிட்டது. 

வளரும் தலைமுறை என்று மட்டுமில்லை. வயதில் மூத்தவர்களும் அப்படித்தான். எழுத்துக் கூட்டி படிப்பதற்கான பொறுமையை பலரும் இழந்துவிட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேருந்து நிலையத்தில் அல்லது ரயிலில் அல்லது இழவு வீட்டில் கூட கவனித்துப் பார்த்தால் பத்துப் பேரில் எட்டுப் பேர்களாவது கண்களை செல்போனில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் செல்போனில் கூட வாசிப்பதில்லை. உருட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஸ்வைப்பிங் மட்டும்தான். அதுவும் நிழற்படங்கள் அல்லது சலனப்படங்கள் மட்டும்தான். எனக்குத் தெரிந்து அம்மா, மாமனார், தாய் மாமன் என்று அறுபதைத் தாண்டிய பலரும் யூடியூப் வீடியோக்களிலும் வாட்ஸாப் வீடியோக்களிலும்தான் தலையைக் கொடுக்கிறார்கள் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருக்கிறது. 

வாசிப்பு மீதான ஆர்வம் குறைந்துவிட்ட அல்லது வாசித்தால்தான் ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலும் என்கிற அவசியம் இல்லாத ஒரு சூழலில் அச்சுத்துறை மட்டுமில்லை- எழுத்தின் எந்த வடிவமும் அடி வாங்கத்தான் செய்யும். எழுத்தில் வாசிப்பதை விட ஒரு வீடியோவில் பார்த்துவிட்டுப் போய்விடலாம் என்கிற மனநிலை வந்த பிறகு ஏன் எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? 

வார இதழ்களில் கூட பல சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் எப்பொழுதோ வந்துவிட்டது. நிறையப் படங்கள், துணுக்குகள் என்று எழுத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துவிட்டார்கள். செய்தித்தாள்களுக்கு வேறொரு பிரச்சினை- எந்தச் செய்திக்கும் ஒரு நாள் காத்திருக்க வேண்டியதில்லை. உடனுக்குடன் தெரிந்து விடுகிறது. அடுத்த நாள் செய்தித்தாள் அச்சாகி வந்ததைப் பார்த்துத்தான் செய்தியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. அதே போல, கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான புத்தகக் கண்காட்சிகள் மிக இலாபம் ஈட்டித் தந்தன. இப்பொழுது எந்த ஊரிலும் எந்தப் புத்தகக் கண்காட்சியிலும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு விற்பனை இல்லை என்கிறார்கள். ஒரு வருடம், இரு வருடங்கள் என்றால் சரியாகிவிடக் கூடும் என்று சொல்லலாம். தொடர்ச்சியாக பல வருடங்களாக மந்தமாகவே இருக்கிறதென்றால் உள்ளூர வேறு என்னவோ ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் இல்லையா?

இப்படி பல்வேறு நெருக்கடிகளும் இன்னல்களும் எழுத்தை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. வாசிக்கக் கூடியவர்களின் பரப்பு பனிப்பாறைகளைப் போல சுருங்கி வருகிறது.

ஃபேஸ்புக்கில் எழுத்துக்குத் தரும் முக்கியத்துவத்தைவிட படங்களுக்குத் தான் தருகிறார்கள். வெறும் 140 எழுத்துகள்தான் என்பதால் ட்விட்டர் தப்பித்திருக்கிறது. இணையப் பத்திரிக்கைகளும் வீடியோ கண்டெண்ட்டைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன. ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் ‘அடித்த கணவன்... மனைவி என்ன செய்தால் தெரியுமா?’ என்று கொக்கி போட்டு உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பிலும் கூட ஆன்லைன் பாடங்கள் முழுக்கவும் வீடியோ கண்டெண்ட்டாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த வேகத்தில் போனால் அடுத்த சில பத்தாண்டுகளில் எழுத்துகள் வாசகப்பரப்பில் தலைப்புகளுக்கும், அதிகபட்சமாக சப்டைட்டிலுக்கும் மட்டுமே தேவைப்படக் கூடிய வஸ்தாக மாறிவிடக் கூடும். 

எழுத்து தமக்கான முக்கியத்துவத்தை இழப்பதனால் என்ன விதமான இழப்புகள் உண்டாகக் கூடும் என்று பெரிய அளவில் யோசிக்க முடியவில்லை. காலமும் தொழில்நுட்பமும் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமது வேகத்தில் ஓடி வர முடியாத எல்லாவற்றையும் அவை வீசி எறிந்துவிடும். டிஜிட்டல் பிரிண்டிங் வந்த பிறகு சுவரில் சித்திரம் எழுதுகிறவர்கள் காணாமல் போனது போல, ஆட்டோமொபைல் வந்த பிறகு மாட்டு வண்டி செய்யும் ஆசாரிகள் மறைந்ததைப் போல, கம்யூட்டர் பூட்டுகள் வந்த பிறகு திண்டுக்கல் பூட்டுகள் மரியாதை இழந்தைதப் போல, மண்சட்டிகள் இல்லாமல் போனதைப் போல, அமேசான் எரிவதைப் போல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நம்மால் என்ன செய்துவிட முடியும்? 

 

http://www.nisaptham.com/2019/08/blog-post_31.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 5:47 AM, கிருபன் said:

காலமும் தொழில்நுட்பமும் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமது வேகத்தில் ஓடி வர முடியாத எல்லாவற்றையும் அவை வீசி எறிந்துவிடும். டிஜிட்டல் பிரிண்டிங் வந்த பிறகு சுவரில் சித்திரம் எழுதுகிறவர்கள் காணாமல் போனது போல, ஆட்டோமொபைல் வந்த பிறகு மாட்டு வண்டி செய்யும் ஆசாரிகள் மறைந்ததைப் போல, கம்யூட்டர் பூட்டுகள் வந்த பிறகு திண்டுக்கல் பூட்டுகள் மரியாதை இழந்தைதப் போல, மண்சட்டிகள் இல்லாமல் போனதைப் போல, அமேசான் எரிவதைப் போல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நம்மால் என்ன செய்துவிட முடியும்? 

 

நம்ம ஜெயமோகனுக்கு இது தெரியாமல் போய்விட்டதே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.