Jump to content

யாழ். புத்தகத் திருவிழா அடுத்த வருடம் பிரமாண்டமாக நடத்த முடிவு – ஆளுநர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ். புத்தகத் திருவிழா அடுத்த வருடம் பிரமாண்டமாக நடத்த முடிவு – ஆளுநர்

யாழ். புத்தகத்திருவிழா அடுத்த ஆண்டும் இதேபோன்று மிகப் பிரமாண்டமாய் நடத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ். புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வட மாகாண ஆளுநரின் எண்ணக்கருவிற்கு அமைய, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ கடந்த 27ஆம் திகதி ஆரம்பமானது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற யாழ். புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று இடம்பெற்ற போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் வழங்கி வைத்தார்.

இதில், ஓவியப் போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட ஐவருக்கும் மற்றும் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட 20 வெற்றியாளர்களுக்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் பரிசில்களை வழங்கி வைத்தார்.

அத்தோடு, புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்ட புத்தக விற்பனையாளர்களுடனும் அங்கு வருகை தந்த மக்களுடனும் அவர் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது அதிகளவிலான மக்கள் ஆர்வத்துடன் இந்த புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டமையினால் அடுத்த வருடமும் புத்தகத் திருவிழாவினை யாழ். மண்ணில் மிகப்பிரமாண்டமாய் நடத்தவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

30 தொகுதிகளாக பிரிக்கப்பட்ட இந்தப் புத்தகக் கண்காட்சி மண்டபத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளுர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் சிறுவர்களுக்கான ஓவியப்போட்டிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Jaffna-Books-Exibition-Suren-Ragavan-Visit-5.jpg

Jaffna-Books-Exibition-Suren-Ragavan-Visit-1.jpg

Jaffna-Books-Exibition-Suren-Ragavan-Visit-2.jpg

Jaffna-Books-Exibition-Suren-Ragavan-Visit-3.jpg

Jaffna-Books-Exibition-Suren-Ragavan-Visit-4.jpg

Jaffna-Books-Exibition-Suren-Ragavan-Visit-6.jpg

http://athavannews.com/யாழ்-புத்தகத்-திருவிழா-அ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.